என் மலர்
சினிமா செய்திகள்
- பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் 'கேடி - தி டெவில்'.
- இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் 'கேடி - தி டெவில்'. காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

கேடி தி டெவில்
1970-களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் ஏற்படுத்தியுள்ளது.

கேடி தி டெவில் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா, சத்யவதி எனும் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா கூறியதாவது, "ராஜ்யங்களுக்கு இடையே நடக்கும் ஒரு மாபெரும் போரை பற்றிய கதை தான் 'கேடி தி டெவில்'. ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் ஒரு 'சத்யவதி' தேவை. இந்த 'கேடி' போர்க்களத்தில் நானும் ஒரு அதிசக்தி வாய்ந்த கதாப்பாத்திரத்தில் சத்தியவதியாக நடிப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி" என்று கூறினார்.
- இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
- சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

கிரிக்கெட் விளையாட்டை நேரில் பார்த்த அனிருத்
இந்நிலையில் இந்த போட்டியை இசையமைப்பாளர் அனிருத் நேரில் சென்று பார்த்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் கோவை குணா.
- இவர் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.
சின்னைத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடியனாக அறிமுகமானவர் கோவை குணா (60). பல குரல்கள் மூலம் மக்களை மகிழ்வித்த இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த ஒரு வார காலமாக உடல் நிலை சரியில்லாமல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கோவை குணா
இதையடுத்து நேற்று மாலை 4 மணி அளவில் அவரது உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து இவர் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கோவை குணாவின் உடல் கோவை, கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
- தொடர்ந்து இரண்டு வருடங்களாக வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
- வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில், உழவர்களுக்கு பல பயனுள்ள பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வணக்கம்.
வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு.

நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை
நீர் நிலைகள் சீரமைப்பு மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது. இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது.
ஆனால் அவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது.
இதுப் போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால் அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
- 1981-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ’டிக் டிக் டிக்’.
- இந்த படத்தில் கதாநாயகிகள் ராதா, மாதவி, ஸ்வப்னா ஆகியோர் நீச்சல் உடையில் நடித்திருந்தனர்.
தமிழ் திரைத்துறையில் இன்று நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது என்பது வெகு சாதாரணமான நிகழ்வாக இருக்கிறது. ஆனால் 1980-களில் இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கதாநாயகிகள் இல்லாமல் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கென்று தனியாக நடிகைகள் இருப்பார்கள். அவர்கள் ஒரு பாடலுக்கு வந்து நடனம் ஆடுவது பெரிய விஷயமாகப் பேசப்படும். அந்த கட்டுப்பாடான நேரத்தில் 1981-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 'டிக் டிக் டிக்' திரைப்படத்தில் கதாநாயகிகள் ராதா, மாதவி, ஸ்வப்னா ஆகியோரை நீச்சல் உடையில் நடிக்க வைத்து அதிரடி செய்திருப்பார்.

நடிகை ராதா பகிர்ந்த புகைப்படம்
கமல்ஹாசனை சுற்றி நிற்கும் மூன்று கதாநாயகிகளின் இந்த போட்டோ அன்றைய நாளில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப் புகைப்படத்தைத் தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்த ராதா நினைவுகளை எழுதியிருக்கிறார். அதில், அன்றைய நாளில் எங்களுக்கு இது வேலையாகத் தெரிந்தாலும் இப்போது நினைத்துப் பார்த்தால் அது போராட்டமான காலமாகவே தெரிகிறது. எனக்குப் பிடித்த நினைவுகளில் இதுவும் ஒன்று. மாதவி எங்களைவிட இதில் உணர்வுப்பூர்வமாக இருந்ததை மறக்க முடியாது. எங்களுக்காக வாணி கணபதி இந்த அழகான ஆடைகளை வடிவமைத்திருந்தார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
- கேரளாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆர்யா பார்வதி.
- டெலிவிஷன் தொடர்களில் நடித்து வந்த ஆர்யா பார்வதி பின்னர் சினிமாவிலும் நடிக்க தொடங்கினார்.
கேரளாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆர்யா பார்வதி. மலையாள டெலிவிஷன் தொடர்களில் நடித்து பிரபலமான இவர் கல்லூரியில் படிக்கும் போதே மோகினியாட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் வெற்றி பெற்றவர். டெலிவிஷன் தொடர்களில் நடித்து வந்த ஆர்யா பார்வதி பின்னர் சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்றார்.
நடிகை ஆர்யா பார்வதியின் தாயாருக்கு 47 வயதாகிறது. சமீபத்தில் இவருக்கு அழகான குழந்தை பிறந்தது. இது ஊடகங்களில் வெளியானதும், நடிகை ஆர்யா பார்வதியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகள் சினிமாவில் நடிகையாக கலக்கி வரும் நிலையில் அவரது தாயாருக்கு குழந்தை பிறந்துள்ளதே என்று பலரும் வியப்புடன் கருத்து தெரிவித்தனர்.
நடிகை ஆர்யா பார்வதியின் தாயாருக்கு குழந்தை பிறந்தது பற்றியும், அதனை விமர்சித்தும், ஆதரித்தும் பலர் இணையத்தில் கருத்து பதிவிட்டுவந்ததற்கு நடிகை ஆர்யா பார்வதி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் தாயாரின் வயிற்றில் சாய்ந்திருக்கும் புகைப்படத்தை தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதில் முதலில் அதிர்ச்சி அடைந்த நான், இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

கர்ப்பிணி தாயாருடன் நடிகை ஆர்யா பார்வதி
அந்த பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:- எனது தாயார் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும் இதனை என்னிடம் சொல்ல அப்பாவும், அம்மாவும் தயங்கினர். இந்த விஷயத்தை நான் எப்படி எடுத்து கொள்வேன் என்று குழப்பம் அடைந்தனர். ஆனால் இதனை என்னிடம் சொல்லாமல் நீண்ட நாள் மறைக்க முடியாது என்பதால் அவர்கள் அதனை தயக்கத்துடன் என்னிடம் தெரிவித்தனர்.
என் பெற்றோர் இந்த விஷயத்தை கூறியதும் முதலில் எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதன்பின்பு எதார்த்தத்தை புரிந்து கொண்டேன். இதற்காக நான் ஏன் வெட்கப்பட வேண்டும் என என்னை நானே கேட்டுக்கொண்டேன். எனது தயக்கம் உடைந்ததும் அடுத்து எனக்கு வர இருக்கும் சகோதரனை வரவேற்க தயாராகிவிட்டேன். இப்போது எனக்கு இளைய சகோதரன் வந்து விட்டான்.மகிழ்ச்சியாக இருக்கிறது, என கருத்து பதிவிட்டுள்ளார். தனது தாயாருக்கு குழந்தை பிறந்த தகவலையும், அதனை தான் முதலில் ஏற்க தயங்கி பின்னர் அதனை ஏற்றுக்கொண்டதையும் தயக்கமின்றி நடிகை ஆர்யா பார்வதி பொதுவெளியில் கூறியிருப்பதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.சமூக வலைதளங்களிலும் இதற்கு பாராட்டு குவிந்து வருகிறது.
- பிரபல பாடகரான டி.எம்.சவுந்தர ராஜன் கடந்த 2013-ஆம் ஆண்டு காலமானார்.
- இவரது நூற்றாண்டு விழா வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பிரபல பாடகரான டி.எம்.சவுந்தர ராஜன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், நாகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இவர் திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான தனித்தனி குரலில் பாடி அவர்களின் முகத்தை ரசிகர்களின் கண்முன் நிறுத்தும் திறமை கொண்டவர்.

டி.எம்.சவுந்தர ராஜன்
இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் படங்களுக்கும் பாடல்கள் பாடியுள்ளார். பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் 2500-க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், டி.எம்.சவுந்தர ராஜனின் 100-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் வெளிவட்ட சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படுகிறது. இதன் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வரும் 24-ஆம் தேதி அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாக சைதன்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கஸ்டடி’.
- இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

கஸ்டடி
'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

கஸ்டடி போஸ்டர்
இந்நிலையில், இன்று யுகாதியை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. கையில் துப்பாக்கியுடன் கீர்த்தி ஷெட்டியை அணைத்து பிடித்தபடி நாக சைதன்யா நிற்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Let us welcome Ugadi with full enthusiasm, hope, and love. Team #Custody Wishes you all a #HappyUgadi
— venkat prabhu (@vp_offl) March 22, 2023
Fight for what you love with high spirit #CustodyOnMay12@chay_akkineni @realsarathkumar @thearvindswami @IamKrithiShetty @ilaiyaraaja @thisisysr @SS_Screens @jungleemusicSTH pic.twitter.com/7a6ogmUU7t
- 'கவலை வேண்டாம்' படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.
- 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் யாஷிகா பிரபலமானார்.
2016-ஆம் ஆண்டு வெளியான 'கவலை வேண்டாம்' படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பின்னர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

யாஷிகா ஆனந்த்
அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்ததன் மூலம், படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. இதனிடையே எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு, ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.

யாஷிகா ஆனந்த்
சமூக வலைதளங்களிலும் யாஷிகா ஆனந்த் சுறுசுறுப்பாக இருப்பவர். ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி பல ஏடாகூடமான கேள்விக்கு பதிலளித்தும் உள்ளார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் யாஷிகா தற்போது புதிய கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
Good evening ❤️?✨? #twitterfam #loveu pic.twitter.com/fTyiTmrElV
— Yashika Anand (@iamyashikaanand) March 21, 2023
- திருமண நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பு மணமேடையில் நடிகை ஆஷா சரத் நடனம் ஆடினார்.
- நடிகை ஆஷா சரத் ஆடும் காட்சிகளை பார்த்த பலரும் அதனை வைரலாக்கி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆஷா சரத்.
தமிழில் கமல் நடித்த 'பாபநாசம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதுபோல 'தூங்கா வனம்' உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.
இவரது மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர்.
திருமண நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பு மணமேடையில் நடிகை ஆஷா சரத் நடனம் ஆடினார்.
விருந்தினர்களை வரவேற்கும் விதத்தில் நடந்த இந்த நடனத்தை திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் கைதட்டி பாராட்டினர்.
இதற்கிடையே திருமண விழாவின் வீடியோவை சமீபத்தில் நடிகை ஆஷா சரத் வெளியிட்டார்.
அதில் நடிகை ஆஷா சரத் ஆடும் காட்சிகளை பார்த்த பலரும் அதனை வைரலாக்கி வருகின்றனர். மகளின் திருமணத்தில் தாய் நடனம் ஆடியதற்கு பாராட்டும் குவிகிறது.
- விஜய்யின் பத்ரி, கமலின் தெனாலி, ரஜினிகாந்த்தின் படையப்பா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் லாவண்யா தேவி.
- இவர் தொழிலதிபர் பிரசன்னா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
1997 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியவம்சம் படத்தில் சொப்னா என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை லாவண்யா தேவி. அதன்பின்னர் விஜய்யின் பத்ரி, கமலின் தெனாலி, ரஜினிகாந்த்தின் படையப்பா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சின்னத்திரை சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் லாவண்யா, தற்போது அருவி சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 44 வயதாகும் லாவண்யா தேவி, தொழிலதிபர் பிரசன்னா என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இவரின் திருமணம் திருப்பதியில் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் லாவண்யாவுடன் பணியாற்றும் சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடியனாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்த கோவை குணா நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.
- இவரின் மறைவுக்கு மதுரை முத்து உருக்கமாக பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
சின்னைத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடியனாக அறிமுகமானவர் கோவை குணா (வயது 60). பல குரல்கள் மூலம் மக்களை மகிழ்வித்த இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த ஒரு வார காலமாக உடல் நிலை சரியில்லாமல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவரது உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து உயிரிழந்தார். இவரின் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது. கோவை குணாவின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கோவை குணா
இந்நிலையில் கோவை குணா உடன் இணைந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்காற்றிய மதுரை முத்து இரங்கல் தெரிவித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "20 ஆண்டுகளில் எத்தனையோ கலைஞர்களை பார்த்து விட்டேன் நீங்கள்தான் நம்பர் ஒன். இன்னும் எத்தனை பல குரல் கலைஞர்கள் வந்தாலும் கோவை குணாவிற்கு நிகராகாது. இவரும் நானும் கலக்கப்போவது யாரு பாகம் ஒன்றில் வெற்றியாளராக வந்தாலும். எல்லா கலைஞர்களையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார். என் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது. இளநீரைப் போன்று தூய்மையான அன்பிற்கு உகந்த மனிதர். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
கோவை குணா கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் முதல் சீசன் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.






