என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பிரபல பாடகி வாணி ஜெயராம் சமீபத்தில் அவரது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
    • இவரது உடல் 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

    வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் 1974 -ஆம் ஆண்டு ஆண்டு வெளியான 'தீர்க்க சுமங்கலி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். 'வீட்டுக்குவந்த மருமகள்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்' முதலான படங்களில் பாடியிருந்தாலும் 'தீர்க்கசுமங்கலி' படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது.

    தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

    இவர் சமீபத்தில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார். இவரது உடல் காவல்துறை சார்பில் 10 காவலர்கள் 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடியதும் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இதேபோல் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாரிமுத்து, தங்கவேலு, சீனிவாசன், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா ஆகி யோரது மறைவுக்கு இரங்கல் குறிப்புகளும் கொண்டு வரப்பட்டன. இவர்கள் மறைவுற்ற செய்தியை இப்பேரவைக்கு வருத்தத்துடன் தெரிவிப்ப தாக சபாநாயகர் அப்பாவு கூறினார். மறைந்த உறுப்பினர்களின் மறைவால் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் இப்பேரவை தெரிவித்துக் கொள்வதாக கூறி உறுப்பினர்கள் அனைவரும் 2 மணித்துளிகள் எழுந்து நின்று அமைதிகாத்தனர்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.


    லியோ

    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத் தனது காட்சிகளை முடித்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


    லியோ படக்குழு

    இதையடுத்து நேற்று முன்தினம் 'லியோ' படக்குழுவினர் தங்கியிருந்த ஹோட்டல் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் படக்குழுவினர் அவசர அவசரமாக வெளியேறினர். அப்போது வெளியே வந்தவர்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பிரியா ஆனந்த், கதாசிரியர் ரத்தினகுமார் ஆகியோருடன் நடிகர் கதிரும் வெளியேறினார்.


    லியோ படக்குழுவினருடன் நடிகர் கதிர்

    இதுவரை கதிர் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்புகள் எதுவும் வெளிவராத நிலையில் தற்போது அவர் 'லியோ' படக்குழுவினருடன் தங்கியிருப்பது இப்படத்தில் அவர் நடிப்பதை உறுதி செய்துள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

    நடிகர் கதிர், விஜய்யுடன் 'பிகில்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • கடந்த ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.


    ரிஷப் ஷெட்டி பதிவு

    கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து நேற்று யுகாதி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் ரிஷப் ஷெட்டி 'காந்தாரா -2' திரைப்படத்தின் கதை எழுதும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.
    • இப்படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ள சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ அண்மையில் வெளியானது. டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

     

    சொப்பன சுந்தரி - மான் கராத்தே

    சொப்பன சுந்தரி - மான் கராத்தே


    இந்நிலையில் சொப்பன சுந்தரி படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தின் போஸ்டர் போன்று உள்ளதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் வீட்டு வேலைக்காரி ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.
    • அதன்பின்னர் ரஜினி, தனுஷ் வீடுகளிலும் நகைகள் திருடப்பட்டதா என்றும் போலீசார் விசாரணை நடித்தி வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் இருந்த நகைகள் சிறிது சிறிதாக திருடப்பட்டுள்ளதாகவும், இதில் வீட்டு வேலைக்காரி ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசனுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக தேனாம்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் ஐஸ்வர்யாவின் வீட்டில் கூட்டு சேர்ந்து அவர்கள் கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஐஸ்வர்யா போலீசில் அளித்திருந்த புகாரில் குறிப்பிப்பட்டிருந்ததை விட கூடுதல் நகைகள் வேலைக்கார பெண் ஈஸ்வரி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

    100 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், வீட்டு பத்திரம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றி இருந்தனர். ஐஸ்வர்யாவின் வீட்டில் திருடிய நகைகளை விற்று தனது கணவர் அங்க முத்துவுக்கு அதிக முதலீட்டில் காய்கறி கடையை வைத்துக் கொடுத்த ஈஸ்வரி 2-வது மகளுக்கு மளிகை கடை வைத்து கொடுத்துள்ளார். முதல் மகளுக்கு திருமணம் செய்து வைத்திருப்பதுடன் சோழிங்கநல்லூரில் சுமார் 9 லட்சத்துக்கு நிலம் வாங்கி போட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


    ரஜினி - ஐஸ்வர்யா - தனுஷ்
    ரஜினி - ஐஸ்வர்யா - தனுஷ்

    இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது என்று கணவர் அங்கமுத்து, ஈஸ்வரியிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது அவர் தான் ஐஸ்வர்யா ரஜினியின் பினாமி என்றும் நாம் இருக்கும் வீடு கூட அவருடையது தான் என்றும் கூறி பந்தாகாட்டி ஏமாற்றி உள்ளார். இதைப்பற்றி வெளியில் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் என்றும் குடும்பத்தாரை ஏமாற்றி உள்ளார்.

    ஐஸ்வர்யாவின் லாக்கரில் இருந்து ஈஸ்வரி திருடிய நகைகளில் பெரும்பாலானவை ரஜினி சீதனமாக கொடுத்தவை ஆகும். இதுதவிர தனுஷ், ஐஸ்வர்யாவை திருமணம் செய்யும் போதும் சில நகைகளை பரிசாக வழங்கி இருக்கிறார். இப்படி கடந்த 18 ஆண்டுகளாக தான் சேகரித்த நகைகளையே ஐஸ்வர்யா லாக்கரில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.

    அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இந்த நகைகளை அணிந்து செல்லாமல் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே எடுத்து அணிவதை வழக்கமாக வைத்திருந்தார். இதையே சாதகமாக்கி ஐஸ்வர்யா, லாக்கர் சாவியை எடுத்து திறந்து நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக வாரி சுருட்டி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஐஸ்வர்யா வீட்டில் திருடப்பட்டதாக கூறப்பட்ட நகைகளை விட கூடுதல் நகைகளை ஈஸ்வரியின் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலைக்கார பெண் ஈஸ்வரி, ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரது வீடுகளுக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது இருவரது வீடுகளிலும் அவர் நகைகளை திருடி இருக்கலாமோ? என்கிற சந்தேகம் வலுத்துள்ளது.

    இதுதொடர்பாக ஈஸ்வரியிடம் மேலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகு ஈஸ்வரியின் கைவரிசை பற்றி மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'.
    • 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

    ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

     

    புதிய தோற்றத்தில் தனுஷ்

    புதிய தோற்றத்தில் தனுஷ்


    மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலானது. இப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்ரு ரசிகர்களை கவர்ந்தது.


    படக்குழு வெளியிட்ட கிளிம்ஸ் வீடியோ
    படக்குழு வெளியிட்ட கிளிம்ஸ் வீடியோ

    இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், இதில் இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டது உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் படக்குழு பெரிய அளவில் காட்சியை பதிவு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

     

    நெல்சன் -  ரஜினி - அனிருத்

    நெல்சன் -  ரஜினி - அனிருத்


    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஜெயிலர் படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலானது. அதில், இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற ஜெயிலராகவும், ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாகவும், வசந்த் ரவி ஐபிஎஸ் அதிகாரியாகவும், தமன்னா மற்றும் சுனில் சினிமா நடிகர்களாகவும் நடித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியது. மேலும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் நிறைவு பெறவுள்ளதாகவும் இதில் கலகலப்பான ரஜினியை எதிர்பார்க்கலாம் எனவும் தகவல் வெளியானது.


    வசந்த் ரவி - ரம்யா கிருஷ்ணன்
    வசந்த் ரவி - ரம்யா கிருஷ்ணன்

    இந்நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருவதாகவும், இதற்காக ரஜினி கேரளாவில் உள்ள கொச்சிக்கு விமானத்தில் சென்றுள்ளதாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது. படப்பிடிப்பு முடிந்த பின்னர் ரஜினி சென்னை திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.

    • இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கருமேகங்கள் கலைகின்றன.
    • இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கி வரும் படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

     

    வைரமுத்து - தங்கர் பச்சான் -  சித்ரா,  

    வைரமுத்து - தங்கர் பச்சான் -  சித்ரா,  


    இப்படத்தின் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையில் பின்னணி பாடகி சித்ரா பாடி உள்ளார். இந்த பாடல் பதிவு சென்னையில் நடந்தது. இதுகுறித்து வைரமுத்து கூறும்போது, "39 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய 'பூஜைக்கேத்த பூவிது' பாடலை பாடிய அதே பாடகி சித்ராவை பாடல் பதிவில் சந்தித்தேன். அதே குரல். அதே கனிவு, அதே பணிவு'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

    தங்கர் பச்சான் கூறும்போது, "நான் ஒளிப்பதிவாளனாக அறிமுகமாகிய (மலைச்சாரல்-1990) திரைப்படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதினார். அப்படத்தில் பாடகி சித்ராவும் பாடினார். எனது இயக்கத்தில் தற்போது 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்திலும் மூவருமே இணைந்து பணியாற்றுகின்றோம். தொடர்ந்து திரைக்கலையுலகில் மூவருமே பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது'' என்றார். 

    • மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி.
    • இவர் 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    மலையாள திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வரும் அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர், சர்வம் தாளமயம், தீதும் நன்றும், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்தார். 'சூரரைப்போற்று' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்த இவருக்கு அந்த படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது.


    ரஜினிகாந்த் -அபர்ணா பாலமுரளி

    கடந்த ஆண்டு வெளியான 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார். இந்நிலையில், நடிகை அபர்ணா பாலமுரளி விமானத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • தொடர்ந்து இரண்டு வருடங்களாக வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
    • வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில், உழவர்களுக்கு பல பயனுள்ள பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து, வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வணக்கம்.

    வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு.

    நீர் நிலைகள் சீரமைப்பு மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது. இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது.


    நடிகர் கார்த்தி வெளியிட்ட அறிக்கை

    ஆனால் அவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

    இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது. இதுப் போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால் அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    நடிகர் கார்த்தியின் பதிவிற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இணையப் பக்கத்தில், "அன்பின் கார்த்தி, உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம்! உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்கு நன்றி எனச் 'சொல்ல மாட்டேன்'; இன்னும் பல திட்டங்கள் தீட்டி உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண 'செயலாற்றுவோம்'! " என்று பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பத்து தல

    இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


    பத்து தல

    இந்நிலையில், 'பத்து தல' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சியாக அறிவித்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


    • பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் 'கேடி - தி டெவில்'.
    • இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் 'கேடி - தி டெவில்'. காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    கேடி தி டெவில்

    1970-களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் ஏற்படுத்தியுள்ளது.


    கேடி தி டெவில் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா, சத்யவதி எனும் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா கூறியதாவது, "ராஜ்யங்களுக்கு இடையே நடக்கும் ஒரு மாபெரும் போரை பற்றிய கதை தான் 'கேடி தி டெவில்'. ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் ஒரு 'சத்யவதி' தேவை.  இந்த 'கேடி' போர்க்களத்தில் நானும் ஒரு அதிசக்தி வாய்ந்த கதாப்பாத்திரத்தில் சத்தியவதியாக நடிப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி" என்று கூறினார்.

    ×