கேப்டன் மில்லர் படப்பிடிப்பிடிப்பில் தீவிரம் காட்டும் படக்குழு

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'.'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
கேப்டன் மில்லர் படப்பிடிப்பிடிப்பில் தீவிரம் காட்டும் படக்குழு
Published on

ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

புதிய தோற்றத்தில் தனுஷ்
புதிய தோற்றத்தில் தனுஷ்

புதிய தோற்றத்தில் தனுஷ்

மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலானது. இப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்ரு ரசிகர்களை கவர்ந்தது.

படக்குழு வெளியிட்ட கிளிம்ஸ் வீடியோ
படக்குழு வெளியிட்ட கிளிம்ஸ் வீடியோ

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், இதில் இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டது உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் படக்குழு பெரிய அளவில் காட்சியை பதிவு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com