சிவகார்த்திகேயன் ஸ்டைலில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் சொப்பன சுந்தரி பட போஸ்டர்

எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.இப்படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் ஸ்டைலில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் சொப்பன சுந்தரி பட போஸ்டர்
Published on

லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ள சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ அண்மையில் வெளியானது. டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

சொப்பன சுந்தரி - மான் கராத்தே
சொப்பன சுந்தரி - மான் கராத்தே

சொப்பன சுந்தரி - மான் கராத்தே

இந்நிலையில் சொப்பன சுந்தரி படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தின் போஸ்டர் போன்று உள்ளதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com