என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார்.
    • சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 3:15 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார்.

    சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 3:15 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று காலை 10 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளது.

    • நடிகர் சூரி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘விடுதலை’.
    • இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படம் வருகிற மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதையடுத்து 'விடுதலை' படத்தின் கதாநாயகன் சூரி மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். 'விடுதலை' படம் குறித்தும் அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், இயக்குனர் வெற்றிமாறனுக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், நம்மிடம் இப்படி ஒரு திறமை இருக்கிறது என்பதை நாம் கண்டுபிடிப்பதற்கு முன்பு இன்னொருவர் கண்டுபிடிக்கிறது பெரிய விஷயம். என்னிடம் இருக்கிற இந்த குமரேசனை கண்டுபிடித்ததற்கு வெற்றிமாறன் அண்ணாவிற்கு பெரிய நன்றி. இதற்கான தகுதியை ஏற்படுத்திய எனக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.




    • பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்சி.
    • இவர் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார்.

    ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்சிக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றன. பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தற்போது தமிழில் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார்.


    டாப்சி  

    இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியொன்றில் டாப்சி கலந்து கொண்டார். அப்போது அவர் கவர்ச்சியான ஆடை அணிந்து கழுத்தில் மகாலட்சுமி அம்மன் உருவத்துடன் கூடிய நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


    அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் டாப்சி

    கவர்ச்சி ஆடையில் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை எப்படி அணியலாம் என்று வலைத்தளத்தில் அவருக்கு எதிராக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இந்து கடவுளை அவமதித்து விட்டதாகவும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • ’பொன்னியின் செல்வன் -2’ படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
    • இப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.


    பொன்னியின் செல்வன்

    இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.


    படக்குழு வெளியிட்ட வீடியோ

    இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரமின் தோற்றம் வடிவமைக்கப்பட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் டிரைலர் விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


    • விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'லியோ'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.


    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லியோ' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. காஷ்மீர் படப்பிடிப்பு குறித்து தொழில்நுட்ப பணியாளர்கள் தங்களது கருத்துகளை பகிரும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.




    • இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரெய்டு’.
    • இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

    வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விக்ரம் பிரபு அடுத்ததாக 'ரெய்டு' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.


    ரெய்டு

    ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ், எம் ஸ்டூடியோஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    ரெய்டு

    அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டீசரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



    • ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியிருந்த திரைப்படம் ‘தலைவி’.
    • இப்படத்தில் கங்கனா ரணாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவான படம் 'தலைவி'. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்திருந்தார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்தார். மேலும், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.



    ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்தப் படத்தை விப்ரி மோஷன் பிக்சர்ஸ், கர்மா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் விஷ்ணுவர்தன் இந்தூரி, ஷைலேஷ் ஆர் சிங் ஆகியோர் தயாரித்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் விநியோக உரிமையை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் பெற்றது.



    இந்நிலையில் படத்தின் விநியோக உரிமைக்காக செலுத்திய முன்பணம் ரூ.6 கோடியை திருப்பித் தரும்படி, அந்த நிறுவனம் படத் தயாரிப்பாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது. கடந்த ஒன்றரை வருடங்களாகக் கேட்டும் பதில் ஏதும் வராததால், ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
    • இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



    மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து யாஷிகாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலத்தில் காரை ஓட்டி வந்தது யாஷிகா தான் என்பது உறுதி செய்யப்பட்டது. யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் அவருடைய வாக்குமூலத்தில் தெரியவந்தது.



    தொடர்ந்து படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று முன்தினம் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலையில் இவர் ஆஜராகாததால் வரும் 25-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் என்டிஆர்30.
    • இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

    ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கொரடலா சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.


    என்டிஆர்30

    என்டிஆர்30


    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக ஆர்.ஆர்.ஆர். படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் கேஜிஎஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் கலந்துக் கொண்டனர். மேலும் ராஜமவுலி கிளாப் போர்ட் அடித்து படத்தை தொடங்கி வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இந்த படத்தில் சமந்தா-விஜய் தேவரகொண்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.


    குஷி படக்குழு

    இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து மகளிர் தினத்தையொட்டி சமந்தா இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்திருந்தது.


    குஷி போஸ்டர்

    இந்நிலையில், 'குஷி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • 95-வது ஆஸ்காரில் சிறந்த ஆவணக் குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் விருது வென்றது.
    • சில தினங்களுக்கு முன்பு இந்த ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலாக - நாட்டு நாட்டு - கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கர் விருதை வென்றனர்.

     

    ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் படக்குழு

    ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் படக்குழு


    நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையை மையப்படுத்தி உருவாகி இருந்தது. ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியனரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.


    ஆஸ்கர் வென்ற இயக்குனரை கௌரவித்த முதலமைச்சர்
    ஆஸ்கர் வென்ற இயக்குனரை கௌரவித்த முதலமைச்சர்


    மேலும் ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.


    ஆஸ்கர் விருதுடன் பொம்மன் - பெள்ளி
    ஆஸ்கர் விருதுடன் பொம்மன் - பெள்ளி


    இந்நிலையில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியனர் ஆஸ்கர் விருதை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை நெட்ஃப்லிக்ஸ் நிறுவனம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    • பிரபல பாடகி வாணி ஜெயராம் சமீபத்தில் அவரது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
    • இவரது உடல் 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

    வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் 1974 -ஆம் ஆண்டு ஆண்டு வெளியான 'தீர்க்க சுமங்கலி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். 'வீட்டுக்குவந்த மருமகள்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்' முதலான படங்களில் பாடியிருந்தாலும் 'தீர்க்கசுமங்கலி' படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது.

    தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

    இவர் சமீபத்தில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார். இவரது உடல் காவல்துறை சார்பில் 10 காவலர்கள் 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடியதும் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இதேபோல் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாரிமுத்து, தங்கவேலு, சீனிவாசன், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா ஆகி யோரது மறைவுக்கு இரங்கல் குறிப்புகளும் கொண்டு வரப்பட்டன. இவர்கள் மறைவுற்ற செய்தியை இப்பேரவைக்கு வருத்தத்துடன் தெரிவிப்ப தாக சபாநாயகர் அப்பாவு கூறினார். மறைந்த உறுப்பினர்களின் மறைவால் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் இப்பேரவை தெரிவித்துக் கொள்வதாக கூறி உறுப்பினர்கள் அனைவரும் 2 மணித்துளிகள் எழுந்து நின்று அமைதிகாத்தனர்.

    ×