ஆஸ்கர் விருதுடன் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் பொம்மன், பெள்ளி தம்பதியினர்.. வைரலாகும் புகைப்படம்

95-வது ஆஸ்காரில் சிறந்த ஆவணக் குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் விருது வென்றது.சில தினங்களுக்கு முன்பு இந்த ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் - பொம்மன் - பெள்ளி
தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் - பொம்மன் - பெள்ளி
Published on

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலாக - நாட்டு நாட்டு - கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கர் விருதை வென்றனர்.

ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் படக்குழு
ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் படக்குழு

ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் படக்குழு

நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையை மையப்படுத்தி உருவாகி இருந்தது. ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியனரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஆஸ்கர் வென்ற இயக்குனரை கௌரவித்த முதலமைச்சர்
ஆஸ்கர் வென்ற இயக்குனரை கௌரவித்த முதலமைச்சர்

மேலும் ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.

ஆஸ்கர் விருதுடன் பொம்மன் - பெள்ளி
ஆஸ்கர் விருதுடன் பொம்மன் - பெள்ளி

இந்நிலையில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியனர் ஆஸ்கர் விருதை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை நெட்ஃப்லிக்ஸ் நிறுவனம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com