சின்னத்திரை நடிகர் கோவை குணாவின் உடல் நல்லடக்கம்

சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் கோவை குணா.இவர் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.
கோவை குணா
கோவை குணா
Published on

சின்னைத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடியனாக அறிமுகமானவர் கோவை குணா (60). பல குரல்கள் மூலம் மக்களை மகிழ்வித்த இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த ஒரு வார காலமாக உடல் நிலை சரியில்லாமல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கோவை குணா

இதையடுத்து நேற்று மாலை 4 மணி அளவில் அவரது உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து இவர் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கோவை குணாவின் உடல் கோவை, கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com