என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • இப்படத்தை இயக்குநர் சித்திக் இயக்கி இருந்தார்.
    • இப்படத்தில் ராஜ்கிரண், மித்ரா குரியன், வடிவேலு மற்றும் ரோஜா ஆகியோர் நடித்து இருந்தனர்.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'சச்சின்', 'ப்ரண்ட்ஸ்', இயக்குநர் சேரனின் 'ஆட்டோகிராப்' சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    அந்த வகையில், 2011-ம் ஆண்டு விஜய், அசின் நடிப்பில் வெளியான 'காவலன்' படம் வருகிற 5-ந்தேதி மீண்டும் வெளியாக உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

    2010-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாடி கார்டின் ரீமேக் படமாக 'காவலன்' வெளியானது. இப்படத்தை இயக்குநர் சித்திக் இயக்கி இருந்தார். இப்படத்தில் ராஜ்கிரண், மித்ரா குரியன், வடிவேலு மற்றும் ரோஜா ஆகியோர் நடித்து இருந்தனர்.

    'காவலன்' படம் மீண்டும் வெளியாக உள்ளதால் விஜய் ரசிர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 



    • நண்பன் விஷ்ணு, கெளஷிக் பணிபுரியும் நிறுவனத்தில் டீம் லீடராகிறான்.
    • காதல் மோதலுடன் கமர்ஷியலாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்.

    நாயகன் கெளஷிக் உட்பட நான்கு பேர் சென்னையிலுள்ள ஒரு பூங்காவில் சந்தித்துப் பழகி நட்பாகிறார்கள். பூங்கா மூலம் கிடைத்த நண்பன் விஷ்ணு, கெளஷிக் பணிபுரியும் நிறுவனத்தில் டீம் லீடராகிறான். ஒரு கட்டத்தில் அந்த விஷ்ணுவை கெளஷிக் கடுமையாக தாக்குகிறான். நட்பில் விரிசல் ஏற்படுகிறது. அது மட்டுல்லாது பூங்காவுக்கு தன் காதலியுடன் வந்து போய்க் கொண்டிருக்கும் இன்னொரு இளைஞனையும் கெளஷிக் அடிக்கிறார்.

    இறுதியில் கெளஷிக் அவர்கள் மீது அப்படி என்னதான் கோபம்? எதற்காக அப்படி நடந்துகொள்கிறார்? நண்பர்களுக்குள் உருவான பிரச்சனை தீர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கெளஷிக், காதல், கோபம் என நடிப்பில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் ஆரா, காதலுக்குத் தேவையான மயக்கம், கிறக்கம், நடனம் என தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

    பிராணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்ரீதேவி, ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன், கோவிந்தராஜ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    நட்பு, உறவு, சந்தோஷத்தை பூங்காக்களில் சுற்றித்திரிகிற மனிதர்கள் மூலம் பெற முடியும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். இதில் காதல் மோதலுடன் கமர்ஷியலாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். திரைக்கதை வழுவில்லாமல் நகர்த்தி இருக்கிறார்.

    அகமது விக்கியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆர்.ஹெச்.அசோக்கின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். 

    மாலைமலர் ரேட்டிங் : 2 / 5

    • மிருகங்கள் எல்லாம் சேர்ந்து மனிதர்களை போல வீடு வாசல், வேலை என ஒரு நகரத்தில் வாழந்தால் எப்படி இருக்கும்.
    • உலகிலேயே மிக சோம்பேறியான ஸ்லோத் மிருகங்கள் ஜூடோபியாவில் அரசு அதிகாரிகளாக வேலை செய்கின்றன.

    மிருகங்கள் எல்லாம் சேர்ந்து மனிதர்களை போல வீடு வாசல், வேலை என ஒரு நகரத்தில் வாழந்தால் எப்படி இருக்கும். அந்த நகரம் தான் 'ஜூடோபியா'

    2016இல் வெளியான முதல் பாகத்தில் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு காவல்துறை வேளையில் சேர முயல் குடும்பத்தை சேர்ந்த ஜூடி ஹாப்ஸ் செல்கிறாள்.

    அங்கு ஒரு திருட்டு நரி (நிக் வைல்ட்) உதவியுடன் ஒரு வழக்கின் மர்மங்களை ஜூடி ஹாப்ஸ் கண்டுபிடிப்பதே கதை. இறுதியில் நிக் வைல்டும் காவல் அதிகாரி ஆகிவிடுகிறான்.

    இந்நிலையில் 'ஜூடோபியா 2' படத்தின் கதை முதல் பாகத்திலிருந்து தொடர்கிறது. காவல் துறையில் பார்ட்னர்களாக இருந்து வரும் ஜூடி ஹாப்ஸ் மற்றும் நிக் வைல்ட் இருவரிடையே பிரிவு ஏற்படுகிறது.

    ஜூடி ஒரு பாம்பு ஜூடோபியாவில் ஊடுருவியதாக சந்தேகிக்கிறாள். ஜூடோபியா ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பாம்புகள் அங்கு வந்தது என அவள் கூறியதை யாரும் நம்பவில்லை.

    ஆனால் ஜூடி நிக்கை சம்மதிக்க வைத்து அவனுடன் சேர்ந்த இதுகுறித்து விசாரணையை தொடங்குகிறாள்.

    இதற்கிடையில், ஜூடோபியாவின் நிறுவனர்களான லிங்க்ஸ்லி என்ற சிங்கக் குடும்பம் ஒரு விருந்து வைக்கிறது. இந்த விருந்தின்போது ஒரு திருட்டு நடக்கிறது. பாம்பு ஏன் ஊருக்குள் வந்தது, அதற்கும் இந்த திருட்டுக்கும் என்ன தொடர்பு, ஜூடியும், நிக்கும் ஒற்றுமையாக இந்த மர்மத்தை அவிழ்த்தார்களா என்பதே மீதிக்கதை.

    நடிகர்கள்: படம் அனிமேஷன் என்பதால் டப்பிங் கலைஞர்கள் கையில் தான் கதாபாத்திரங்களின் உயிர் உள்ளது. மேலும் முதல் படத்தை போல காமெடி வசனங்கள், சம்பவங்களுக்கு பஞ்சமில்லை.

    இயக்கம்: அனிமேஷன் காட்சியமைப்புகள் ஜூட்டோபியாவுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன.கதை மீதான பார்வையாளரின் நம்பிக்கையை நிறுவுகின்றன. ஒவ்வொரு சிறிய காட்சியும் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் அமர்க்களப்படுகிறது.

    நகரில் மனிதர்களை போல வெவ்வேறு பணிகளை செய்யும் வெவ்வேறு விலங்குகளை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக உலகிலேயே மிக சோம்பேறியான ஸ்லோத் மிருகங்கள் ஜூடோபியாவில் அரசு அதிகாரிகளாக வேலை செய்வது அங்கு கள எதார்த்தம் போலும். மேலும் மிருகங்களுக்கு இடையே இருக்கும் முரண்களை வைத்து நகைச்சுவை, சமூக கட்டமைப்பு, வர்க்க பேதங்கள் என அசல் நவநாகரீக மனித நகரங்களை கண் முன் கொண்டு வந்ததற்கு பாராட்டுகள்.

    நிக், ஜூடி இடையே ஏற்படும் சச்சரவுகள், சண்டை என இருந்தாலும், இருவருக்கும் உள்ள கெமிஸ்ரிக்கு 100 மார்க் கொடுக்கலாம்.

    மொத்தத்தில் கத்தி, துப்பாக்கி, சிவப்பு பெயிண்ட் (ரத்தம்) என கண்களை புண்ணாக்கும் படங்களுக்கு மத்தியில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் செல்ல ஏதுவான டிசம்பர் ட்ரீட் இந்த 'ஜூடோபியா 2' 

    மாலைமலர் ரேட்டிங் : 3.5 / 5

    • மூளை (அறிவு) கம்மியாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்.
    • ரசிகர்கள் அவர்களின் பெற்றோரையும், கடவுளையுமே கொண்டாட வேண்டும்.

    சென்னை வடபழனியில் Fanly எனும் செயலியின் அறிமுக விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், உலக செஸ் சாம்பியன்ஷிப் குகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்,

    "மூளை (அறிவு) கம்மியாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன். மூளை அதிகமாக இருந்தால், நான் இயக்குநர்களை எல்லாம் தொல்லை செய்ய ஆரம்பித்திருப்பேன். அதனால் மூளை கம்மியாக இருப்பதே நல்லதுதான். என்னை கொண்டாடும் ரசிகர்கள் எனக்கு வேண்டாம். தங்கள் பெற்றோரையும், கடவுளையுமே அவர்கள் கொண்டாட வேண்டும். என்னிடம் நண்பனாக, குடும்பமாக பழகக்கூடிய ரசிகர்கள் இருக்கவேண்டும் என்பதுதான் எனது ஆசை.

    அதனால்தான் நான் அனைவரையும் 'ஃபிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' என சொல்லிக்கொண்டே இருக்கிறேன். நான் என் ரசிகர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பேன். இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் கவனம் பெறுவதற்காகவே நிறைய வதந்திகளை பரப்புகின்றனர்" என தெரிவித்தார்.   

    தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. 

    90களில் வலம் வந்த கதாநாயகிகள் பலர் திருமணமாகி சொந்த ஊரில் செட்டில் ஆகிவிட்டனர்.

    1990 கால கட்டத்தில் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த வெளி மாநில கதாநாயகிகள் பலர் திருமணமாகி சொந்த ஊரில் செட்டில் ஆகிவிட்டனர்.

    ரூபினி- 1987 முதல் 1994 வரை ரஜினி, கமல் மற்றும் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த ரூபினி 1995ம் ஆண்டு மோகன் குமார் என்பவரை திருமணம் செய்தார். அவருக்கு அனிஷா ரயானா என்ற மகள் உள்ளார்.

    மும்பையில் வசித்து வரும் ரூபினி இயற்கை மருத்துவராகவும், மகளுடன் இணைந்து நடனபயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறார்.

    சிவரஞ்சனி: 1990-1999 வரை தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் கதாநாய–கியாக ஜொலித்து வந்தவர் சிவரஞ்சனி. பூனைக்கண் அழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சிவரஞ்சனி மனசார வாழ்த்துங்களேன், தலைவாசல், தங்கமனசுக்காரன், சின்ன மாப்ளே, பொன் விலங்கு உள்பட பல படங்களில் நடித்தார். மெதுவா தந்தி அடிசாமி என அரவிந்தசாமியுடன் அவர் ஆடிய நடனம் ரசிகர்களை இருக்கையில் ஏறி ஆட வைத்தது.

    சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போதே நடிகர் ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ரோஷன், ரோகன் என்ற 2 மகன்களும், மேதா என்ற மகளும் உள்ளனர்.

    ரோஷன் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது. மகள் மேதா கனடாவில் படித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய சிவரஞ்சனி குடும்பத்துடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். அவரது தந்தையும், தாயாரும் அவருடன் வசித்து வருகிறார்கள்.

    ரவளி: 1995-ம் ஆண்டு வெளியான திருமூர்த்தி படத்தில் விஜயகாந்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவளி தொடர்ந்து சத்யராஜ், பார்த்திபன், நெப்போலியன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.

    2007-ம் ஆண்டு நீலிகிருஷ்ணா என்பவரை ரவளி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    செங்குருவி, செங்குருவி என்ற பாடலுக்கு விஜயகாந்துடன் ஆடி பாடிய ரவளி தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் தோற்றமளிக்கிறார். கணவர் மற்றும் மகள்களுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.

    நக்மா: நக்மா... தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி திரையுலக ரசிகர்கள் மறக்க முடியாதவர். சினிமாவில் இருந்து விலகிய நக்மா மும்பையில் வசித்து வருகிறார். அரசியல் மற்றும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.

    மோகினி: வா வா அன்பே... தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு... அங்கே சென்று அன்பை சொல்லு என ஈரமான ரோஜாவில் இடம் பெற்ற பாடலில் மோகினியின் காந்த கண் அழகு இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத வகையில் இருந்து வருகிறது.

    தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழியில் பல படங்களில் பிசியாக நடித்து வந்த மோகினி கடந்த 2006ம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார்.

    தஞ்சாவூரில் ஸ்ரீனிவாசன் ஐயங்கார்-சுந்தரி ஆகியோருக்கு மகளாக பிறந்த மோகினி கிறிஸ்தவ மதத்திற்கு மாறி கிறிஸ்தவ போதகராக இருந்து வருகிறார்.

    மந்த்ரா: பிரியம் என்ற படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மந்த்ரா. தொடர்ந்து லவ்டுடே, ரெட்டை ஜடை வயசு, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்காகவுரி உள்பட பல படங்களில் நடித்து ஒரு கலக்கு கலக்கியவர் மந்த்ரா. சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருந்த மந்த்ரா, நிவாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    அவருக்கு ஒரு மகள் இருக்கிறார் திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த மந்த்ரா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஐதராபாத்தில் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    மாளவிகா: கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு, வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல்களால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் மாளவிகா. 2007-ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 38 வயதாகும் மாளவிகாவுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். உடல் கட்டுகோப்பு விஷயத்தில் அக்கறை கொண்ட மாளவிகா யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பகிர்ந்து ஆரோக்கியத்திற்கு ஊக்கம் அளித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஒரு படத்தில் தற்போது நடித்துள்ளார்.

    வன்முறை சூழ்ந்த ரவுடிகளின் வாழ்க்கையின் மறுபக்கத்தை சொல்லும் கதை "ப்ரைடே".

    மைம் கோபிக்கு அடியாளாக இருப்பவர் நாயகன் அனிஷ் மாசிலாமணி. அனிஷ் மற்றும் கே.பி.ஒய் தீனா சேர்ந்து ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அப்போது, தீனா எதிர்பாராதவிதமாக எதிரி கும்பலிடம் மாட்டும்போது, அனிஷ் மாசிலாமணி அவரை காப்பாற்றி இருவரும் ஒரு இடத்தில் தஞ்சம் அடைகின்றனர்.

    தன்னை கொலை செய்ய முயன்றவர்களை அடியாட்களுடன் தேடி வருகிறார்கள். ஒரு பக்கம் இப்படி இருக்க, மறுபக்கம் தீனாவும் அனிஷ் மாசிலாணியுடன் இருந்துக் கொண்டே அவரை கொலை செய்ய திட்டமிடுபவருக்கு உதவுகிறார்.

    இறுதியில், அனிஷ் மாசிலாமணி யாரை, எதற்காக கொலை செய்ய முயன்றார்? தீனா ஏன் அதற்கு உதவுகிறார்? இதில் இருந்து அனிஷ் மாசிலாமணி தப்பித்தாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக் கடை..

    நடிகர்கள்

    கே.பி.ஒய் தீனா எளிமையான கதாபாத்திரத்தில் நடித்து 2ம் பாதியில் கதையின் திருப்புமுனையாக இருக்கிறார். நடிகர் அனிஷ் மாசிலாமணி அளவான நடிப்பு மூலம் ரவுடி கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். மைம் கோபி தனது அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    இயக்கம்

    படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஹரி வெங்கடேஷ், வன்முறை சூழ்ந்த ரவுடிகளின் மறுபக்கத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார் ஹரி வெங்கடேஷ். ஒரு சாதாரண கதையை சுவாரஸ்யமாக எடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அது இயக்குனருக்கு கைக்கொடுக்கவில்லை.

    இசை

    படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பலம்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஜானி கதைக்களத்தின் பயங்கரத்தை பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு.

    ரேட்டிங்- 1.5/5

    • தனுஷ் - ஆனந்த் எல் ராய் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்"
    • இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது.

    பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

    பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெட்ரா படம் 'ராஞ்சனா'. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒரு கிளாசிக்.

    இந்நிலையில் தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein).

    இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான இப்படம் பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், தேரே இஸ்க் மேன் இந்தி திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களில் ரூ. 50.95 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்தி மொழியில் மட்டும் தான் இந்த வசூல் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார் சமந்தா
    • சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.

    தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த சமந்தா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.

    இந்த நிலையில் சமந்தாவுக்கும், தி பேமிலி மேன் 2 இயக்குநர் ராஜ் நிடிமொருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியானது.

    தி பேமிலி மேன் 2' மற்றும் 'சிட்டாடெல்: ஹனி பன்னி திரைப்படதில் நடித்த சமந்தா அந்த சமயத்தில் அந்த படங்களின் இயக்குநரான ராஜ் நிடிமொருவுடன் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், நடிகை சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிடிமொருவும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    • 'ஆண் பாவம் பொல்லாதது' படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • ராம் லீலா படத்தின் மூலம் வர்திகா கதாநாயகியாக அறிமுகமாகிறார்

    2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்த 'ஆண் பாவம் பொல்லாதது' படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், நடிகர் ரியோ ராஜ் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

    இந்த படத்திற்கு "ராம் லீலா" என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் வர்திகா கதாநாயகியாக அறிமுகமாகிறார்

    • இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது.

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குநர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

    அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.

    இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது. இருப்பினும் இப்படம் வெளியாவது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில், 'கொம்புசீவி' படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று அருண் விஜயின் 'ரெட்ட தல' படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 




    • நிகழ்வில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து இந்த தர்காவுக்கு மக்கள் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

    மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி 469-வது ஆண்டாக கந்தூரி விழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு 7.30 மணியளவில் நாகை யாஹூசைன் பள்ளிவாசல் தெருவில் இருந்து புறப்பட்டது. முன்னதாக சிறப்பு துவா ஓதப்பட்டு புறப்பட்ட சந்தனக்கூடு, அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள், செட்டிபல்லக்கு, சாம்பிராணி சட்டி, பெரிய ரதம், சின்னரதம் உள்ளிட்ட அலங்கார ரதங்களுடன் நாகையின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

    ஊர்வலத்திற்கு முன்பாக பலர் பாரம்பரிய நடனம் ஆடியபடி சென்றனர். வழிநெடுகிலும் உள்ளூர், வெளியூர், பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளானோர் நின்று சந்தனக்கூடு ஊர்வலத்தை கண்டு களித்தனர். இன்று அதிகாலை ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசுவதற்காக நாகூர் தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தது. இந்நிகழ்வில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இதனிடையே, உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் சந்தனம் பூசும் வைபவம் விழாவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆட்டோவில் வந்தார். அதனை தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சமாதியில் நீண்ட நேரம் காத்திருந்து வழிபட்டார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
    • இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் தற்போது இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் புதிய படத்தில் ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    'ஓஹோ எந்தன் பேபி' பட இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. போஸ்டரில் அடையாளம் தெரியாத அளவுக்கு வயதான தோற்றத்துடன் ஜி.டி.நாயுடுவின் உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் மாதவன் காணப்பட்டார். இப்படத்தை வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் மாதவன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.



    இந்த நிலையில், 'ஜி.டி.என்' படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பை தடையின்றி முடித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×