என் மலர்
அமெரிக்கா
- இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியாது.
- அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.
வாஷிங்டன்:
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக சந்திரன் வரும். அப்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டு முதல் சூரிய கிரகணம் என கூறப்படுகிறது.
இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்கமுடியாது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்க நாடுகளில் சூரிய கிரணக்கத்தை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், முழு சூரிய கிரகணம் அமெரிக்காவில் தெரிந்தது. இந்த நிகழ்வை டல்லாஸ், இண்டியானாபோலிஸ், கிளீவ்லேண்ட் மற்றும் நியூயார்க்கின் பஃபலோ ஆகிய நகர மக்கள் கண்டு களித்தனர். மேலும் கனடா, மெக்சிகோவிலும் சூரிய கிரகணம் தெரிந்தது. இதுதொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
- காட்டுப்பகுதியில் கோல்பிரிங்க்ஸ் பிளென்டி தனது காரில் பிணமாக கிடந்தார்.
- இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர் கோல்பிரிங்க்ஸ் பிளென்டி (வயது 27). எல்லோஸ்டோன் ஸ்பின் ஆப் தொடரில் நடித்து பிரபலமானவர். கன்சாஸ் பகுதியில் வசித்து வந்த அவர் நான்கு நாட்களுக்கு முன்பு திடீரென்று மாயமானார்.
இந்த நிலையில் அங்குள்ள காட்டுப்பகுதியில் கோல்பிரிங்க்ஸ் பிளென்டி தனது காரில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். கோல்பிரிங்க்ஸ் மீது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் நடிகரை கைது செய்ய போலீசார் அங்கு சென்றனர். அப்போதுதான் கோல்பிரிங்க்ஸ் மாயமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தைபாய் என்ற 99 வயது பெண்ணுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
- வயது என்பது வெறும் எண் என்று சொல்கிறார்கள்.
அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பலர் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்து கிடக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த தைபாய் என்ற 99 வயது பெண்ணுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, வயது என்பது வெறும் எண் என்று சொல்கிறார்கள். அதை உண்மையாக்கும் வகையில் எங்கள் ஆர்லாண்டோ அலுவலகத்தில் புதிய அமெரிக்க குடிமகனாக மாறிய 99 வயதான இந்தியாவைச் சேர்ந்த தைபாய் உள்ளார்.அவர் உற்சாகமாக இருந்தார். அவர் தனது மகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்று தெரிவித்துள்ளது.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான கிரீசின் மரியா சக்காரி, அமெரிக்காவின் காலின்சுடன் மோதினார்.
இதில் காலின்ஸ் 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலா, ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினாவை சந்தித்தார்.
இதில் முதல் செட்டை கசட்கினா 6-4 என கைப்பற்றினார். அடுத்த செட்டை பெகுலா 6-4 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கசட்கினா 7-6 (7-5) என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நள்ளிரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் காலின்ஸ், ரஷியாவின் கசட்கினாவை சந்திக்கிறார்.
- வழக்கு விசாரணை முடிவில் டிவைன் சுமித்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
- 22 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி இந்தியாவின் ஆந்திராவை சேர்ந்த மாணவர் சரத்பாபு புல்லுரு உள்பட 2 பேரை மைக்கேல் டிவைன் சுமித் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த வழக்கு விசாரணை முடிவில் டிவைன் சுமித்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மெக்அலெஸ்ட ரில் உள்ள ஒக்லஹோமா மாநில சிறைச்சாலையில் டிவைன் சுமித்துக்கு ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- அமெரிக்காவின் கிறிஸ்டியன் பர்க் பகுதியை சேர்ந்தவர் மிரியம் லாங்க்.
- மெகா மில்லியன் லாட்டரியை வாங்குவதற்கு பதிலாக பவர் பால் லாட்டரி பொத்தானை தவறுதலாக அழுத்தினார்.
லாட்டரி பரிசு மூலம் ஒரே நாளில் ஒருவர் கோடீஸ்வரர் ஆக முடியும். அமெரிக்காவில் லாட்டரி சீட்டுகளை வாங்கி கோடிக்கணக்கான ரூபாய்களை வென்ற பெண்கள் பலர் உள்ளனர். இந்நிலையில் ஒரு பெண் தவறுதலாக பொத்தானை அழுத்தி ரூ.8 கோடி பரிசு வென்ற சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் கிறிஸ்டியன் பர்க் பகுதியை சேர்ந்தவர் மிரியம் லாங்க். இந்த பெண் கடந்த மாதம் 18-ந்தேதி மெகா மில்லியன் லாட்டரி சீட்டு வாங்க பிளாஸ்பெர்க் பகுதியில் உள்ள ஒரு விற்பனையகத்துக்கு சென்றார். அங்கு வெர்ஜினியா லாட்டரி வாங்குவதற்காக பல விருப்பங்கள் உள்ளன. ஆனால் முதல் முறையாக லாட்டரி வாங்க மிரியம் லாங்க் லாட்டரி விற்பனை எந்திரத்தில் வாங்கும் பணியை தொடங்கினார்.
அவர் மெகா மில்லியன் லாட்டரியை வாங்குவதற்கு பதிலாக பவர் பால் லாட்டரி பொத்தானை தவறுதலாக அழுத்தினார். பவர் பால் டிக்கெட் எண் பொருந்தும் சீட்டானது, அதிகபட்ச எண்ணிக்கையுடன் பொருந்துபவர் பரிசை வெல்வார்.
இந்நிலையில் மிரியம் லாங்க், தவறாக பவர் பால் லாட்டரி பொத்தானை அழுத்திய நிலையில், அவருக்கு 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) பரிசு கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியில் திளைத்த மிரியம் லாங்க் கூறுகையில், இந்த லாட்டரியை வாங்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் நான் தவறுதலாக பொத்தானை அழுத்தினேன். பவர் பால் லாட்டரி சீட்டு வந்தது. அதனால் தவிர்க்க முடியாமல் அதை தேர்ந்தெடுத்தேன் என்றார்.
- மார்க் ஜுகர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளார்.
- எலான் மஸ்க்கை தோற்கடித்து இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
வாஷிங்டன்:
உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளார். எலான் மஸ்க்கை தோற்கடித்து இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி மார்க் ஜுகர்பெர்க் 187 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்காரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். எலான் மஸ்க் 181 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 4-வது இடம் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் பெர்னார்டு அர்னால்டும், 2வது இடத்தில் ஜெப் பசோசும் உள்ளனர்.
டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் மார்ச் மாதம் வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போது அவர் 4-வது இடத்திற்கு சரிந்துள்ளார். அவரது நிகர மதிப்பு $48.4 பில்லியனாகக் குறைந்துள்ளது. ஜுகர்பெர்க்கின் நிகர மதிப்பு $58.9 பில்லியன் அதிகரித்துள்ளது.
ஜுகர்பெர்க் நவம்பர் 2020க்குப் பிறகு முதன்முறையாக எலான் மஸ்க்கை முந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான கிரீசின் மரியா சக்காரி, ரஷியாவின் வெரோனிகா உடன் மோதினார்.
இதில் மரியா சக்காரி 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ், பெல்ஜிய வீராங்கனை எலைஸ் மெர்டன்சுடன் மோதினார். இதில் காலின்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் மரியா சக்காரி, காலின்சுடன் மோதுகிறார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலா, ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினாவை சந்திக்கிறார்.
- இந்திய மாணவர் மரணத்துக்கு காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.
- பிப்ரவரி மாதம் இந்திய வம்சாவளி மாணவர் சமீர்காமத் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:
இந்தியாவை சேர்ந்த மாணவர் உமா சத்யசாய் காடே என்பவர் அமெரிக்காவின் ஒகியோவின் கிளீவ்லேண்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவர் உமா சத்யசாய் உயிரிழந்திருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் எக்ஸ் வலைதளத்தில் கூறும்போது, ஒகியோவின் கிளீவ்லேண்டில் இந்திய மாணவர் உமா சத்யசாய் காடேவின் துரதிருஷ்டவசமான மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.
அவரது குடும்பத்தினருடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. மாணவர் உமா சத்யசாயின் உடலை விரைவில் இந்தியாவுக்கு அனுப்புவது உள்பட அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்திய மாணவர் மரணத்துக்கு காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் 10-வது சம்பவம் இதுவாகும். கடந்த மாதம் கொல்கத்தா நடன கலைஞர் அமர்நாத் கோஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்த ஆந்திர மாணவர், வனப்பகுதியில் பிணமாக கிடந்தார்.
அதே போல் பிப்ரவரி மாதம் இந்திய வம்சாவளி மாணவர் சமீர்காமத் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இந்திய புலம்பெயர்ந்தோரை தொடர்பு கொண்டுள்ளது.
- இதுவரை எந்த ஒரு இந்தியரும் காயமடையவில்லை.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், நியூயார்க் நகரத்திலும் 4.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின்போது, புரூக்ளின் கட்டிடங்கள் குலுங்கின. அலமாரி கதவுகள் மற்றும் சாதனங்கள் குலுங்கின.
நிலநடுக்கம் எதிரொலியால், நியூயார்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்று வந்த காசாவின் நிலைமை குறித்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
பிலடெல்பியாவில் இருந்து நியூயார்க் வரையிலும், கிழக்கு நோக்கி லாங் ஐலேண்ட் வரையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நிலநடுக்கம் குறித்து, ஐகானிக் எம்பயர் ஸ்டேட் பில்டிங் அதன் எக்ஸ் பக்கத்தில், "நான் நன்றாக இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், " நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இந்திய புலம்பெயர்ந்தோரை தொடர்பு கொண்டுள்ளது. இதுவரை எந்த ஒரு இந்தியரும் காயமடையவில்லை. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்திய- அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த எவரும் தயவுசெய்து madad.newyork@mea.gov.in என்கிற முகவரியில் எங்களை தொடர்புக் கொள்ளலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தையை சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கிரீசின் மரியா சக்காரி, ஆஸ்திரேலிய வீராங்கனை அஸ்த்ரா ஷர்மா உடன் மோதினார்.
இதில் மரியா சக்காரியா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் மரியா சக்காரி ரஷியாவின் வெரோனிகா உடன் மோத உள்ளார்.
- உயிரியல் பூங்காவில் விலங்குகளின் நிலைமை குறித்து கவலை தெரிவித்து பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.
- தொடர்ந்து பூங்கா நிர்வாகம் பதில் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டது.
அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் உயிரியல் பூங்காவில் காளி என்று பெயரிடப்பட்ட துருவ கரடி ஒன்று சமதளபரப்பில் பனிக்கட்டி மீது படுத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
உயிரியல் பூங்காவில் விலங்குகளின் நிலைமை குறித்து கவலை தெரிவித்து பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து பூங்கா நிர்வாகம் பதில் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் துருவ கரடி பனியால் ஆன படுக்கையில் வசதியாக ஓய்வு எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
??DEVELOPING: People are concerned about the living conditions in the Saint Louis zoo after this photo of a polar bear lying on ice began going viral. A visitor of the zoo took this photo yesterday and began to raise concerns. pic.twitter.com/VjnJ5eH5ni
— Dom Lucre | Breaker of Narratives (@dom_lucre) April 1, 2024






