99 வயதில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய பெண்

தைபாய் என்ற 99 வயது பெண்ணுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.வயது என்பது வெறும் எண் என்று சொல்கிறார்கள்.
99 வயதில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய பெண்
Published on: 

அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பலர் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்து கிடக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த தைபாய் என்ற 99 வயது பெண்ணுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, வயது என்பது வெறும் எண் என்று சொல்கிறார்கள். அதை உண்மையாக்கும் வகையில் எங்கள் ஆர்லாண்டோ அலுவலகத்தில் புதிய அமெரிக்க குடிமகனாக மாறிய 99 வயதான இந்தியாவைச் சேர்ந்த தைபாய் உள்ளார்.அவர் உற்சாகமாக இருந்தார். அவர் தனது மகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்று தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com