என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • பொம்மைகளுடன் பலதார உறவில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    • ஹாலோவின் பொருட்கள் விற்கும் தளத்தில் பார்த்த பொம்மைகளுடன் காதலில் விழுந்துள்ளார்.

    பொம்மைகள் மீது பெண்களுக்கு அதிக ஆசை இருப்பதை காண முடியும். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பொம்மைகள் மீதான காதலால் பொம்மைகளை திருமணம் செய்து கொண்டு வாழ்வதாக சமூக வலைதளங்களில் அடையாளப்படுத்தி இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.

    அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் பெலிசிட்டி காட்லெக் என்ற 25 வயது பெண் தன்னை பொருட்கள் மீதான ஈர்ப்பாளர் என்று கூறி உள்ள அவர், பொம்மைகளுடன் பலதார உறவில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர் ஹாலோவின் பொருட்கள் விற்கும் தளத்தில் பார்த்த பொம்மைகளுடன் காதலில் விழுந்துள்ளார். இந்நிலையில் 6 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் பேய் பொம்மையான கெல்லி ரோஸியுடன் முதல் திருமணத்தை மேற்கொண்ட பெலிசிட்டி தற்போது ராபர்ட் என்ற ஆண் பொம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், இவரின் துணையுடன் 10 பொம்மை குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரேச்சல் லூனா, பில்லி என தற்போது 10 பொம்மை குழந்கைள் இருப்பதாக கூறி உள்ள பெலிசிட்டி, ராபர்ட்டை திருமணம் செய்து கொண்டதால் கெல்லி பொறாமை கொள்ள மாட்டாள் எனவும், அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

    • இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம் என்றார் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த வாரம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 ராணுவ தளபதிகள் உள்பட 9 பேர் பலியானார்கள். இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள ஈரான், தக்க பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்துள்ளது.

    இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல் வெளியானது. மேலும், இவ்விவகாரத்தில் ஒதுங்கி இருக்குமாறு அமெரிக்காவிடம் ஈரான் தெரிவித்தது. இதற்கிடையே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம். அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன், அதுவும் குறிப்பாக தற்போதுள்ள திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் அதிபராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது என தெரிவித்தார்.

    • அமெரிக்கா-இந்தியா உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாகி உள்ளது.
    • அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வா்த்தகம் அதிகரித்துள்ளது.

    வாஷிங்டன்:

    ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த அமெரிக்க பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழு மூத்த உறுப்பினரான பிராட் சொ்மன், இந்தியா-அமெரிக்கா உறவின் மேம்பாட்டுக்காக கடந்த 28 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறாா்.

    இந்நிலையில், 'பிடிஐ' செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    'பிரதமா் மோடி இந்தியாவின் முகமாகிவிட்டாா். அவரது ஆட்சியில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தைக் காண்கிறோம்.

    ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு தலைவருக்கும் அவா்களுக்கென சவால்கள் உள்ளன. ஒரு நாட்டின் வெற்றி ஒரு தலைவரை மட்டும் பொறுத்ததில்லை. இந்தியாவில் 130 கோடி மக்கள் உள்ளனா். அவா்கள் அனைவரும் இணைந்து இந்தியாவை மிகவும் வெற்றிகரமான நாடாக மாற்ற முயற்சிக்கின்றனா்.

    அமெரிக்கா-இந்தியா உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாகி உள்ளது. ராணுவ உளவுப் பகிா்வு மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியை சுதந்திரமாகவும் அமைதியாகவும் வைத்திருக்க முயற்சி செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலம் மிகப்பெரிய கூட்டு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளுடன் பாதுகாப்பு துறையில் நமது உறவு வலுவாகியிருப்பது தெளிவாக தெரிகிறது. அதேசமயம், ரஷியாவுடன் இந்தியா பாதுகாப்பு உறவைத் தொடர்கிறது. இது அமெரிக்கா-இந்தியா உறவில் சவாலாக இருக்கிறது.

    அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வா்த்தகம் அதிகரித்துள்ளது. ஜனநாயகம் மற்றும் சட்ட ஆட்சி நிறுவப்படாத நாடுகளை விட வணிகம் செய்வதற்கான சிறந்த இடமாக இந்தியா உள்ளது குறித்து துறை சாா்ந்த பலரிடம் நான் கேட்டறிந்துள்ளேன்.

    நியாயமான மற்றும் நோ்மையான நீதிமன்ற அமைப்பை அணுகுவது வணிகத்தின் வெற்றிக்கு முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி, வேறு சில நாடுகள் வழங்காத சலுகைகளை இந்தியா வழங்குகிறது. நமது இருதரப்பு வா்த்தக உறவை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

    அமெரிக்காவில் தொழில்முனைவோா்கள் நிறைந்த லாஸ் ஏஞ்சல்சில் இந்திய துணைத் தூதரகம் அமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

    இந்திய வம்சாவளி அமெரிக்கா்கள் சிறந்த கல்வியறிவு பெற்றவா்கள். அமெரிக்காவில் வசிக்கும் மற்றவா்களைவிட அதிக வருமானம் பெறுபவா்களாக விளங்குகின்றனா்.

    இவ்வாறு பிராட்செர்மன் கூறினார்.

    • இங்கிலாந்து நாட்டு பணத்தின் தாள்களான 5,10,20 மற்றும் 50 பவுண்டுகளில் மன்னரின் படம் அச்சிடப்பட்டுள்ளன.
    • மறைந்த ராணி எலிசபெத் படத்துடன் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பண நோட்டுகளுக்கு பாதிப்பு இருக்காது.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லசின் படத்துடன் இங்கிலாந்து பணமான பவுண்டு வெளியாகும் என இங்கிலாந்து வங்கி அறிவித்தது.

    இந்தநிலையில் மன்னர் சார்லஸ் படத்துடன் கூடிய இங்கிலாந்து நாட்டின் பவுண்டு தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. இங்கிலாந்து வங்கியின் கவர்னர் ஆண்ட்ரூ பெய்லி பக்கிங்காம் அரண்மனைக்கு நேரடியாக சென்று மன்னர் சார்லசிடம் அதனை காட்டி ஒப்புதலை பெற்றார்.

    இங்கிலாந்து நாட்டு பணத்தின் தாள்களான 5,10,20 மற்றும் 50 பவுண்டுகளில் மன்னரின் படம் அச்சிடப்பட்டுள்ளன. வரும் ஜூன் மாதம் முதல் புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த ராணி எலிசபெத் படத்துடன் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பண நோட்டுகளுக்கு பாதிப்பு இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.

    • 12-வது துகளை விஞ்ஞானி ஹிக்ஸ் கண்டுபிடித்தார்.
    • எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றார்.

    லண்டன்:

    இங்கிலாந்தை சேர்ந்த பிரபல வானியல் மற்றும் தத்துவார்த்த இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் (வயது 94). வானியல் ஆராய்ச்சியில் இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. பெரு வெடிப்பின்போது அணுக்கள் ஒன்றோடு ஒன்று இணைவதற்கு காரணியாக அமைந்த பொருளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மூத்த விஞ்ஞானிகளில் ஒருவராக இருந்தார்.

    ஆராய்ச்சி முடிவில் அணுக்களின் ஒட்டுப்பொருளானது 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன. 12-வது துகளை விஞ்ஞானி ஹிக்ஸ் கண்டுபிடித்தார். அது 'ஹிக்ஸ் போசன்' துகள் என்றும் 'கடவுள் துகள்' என கூறப்பட்டது. இதற்காக பீட்டர் ஹிக்ஸ் 2013-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். இந்த ஆராய்ச்சி பல்வேறு கேள்விகளுக்கான விடை தந்தது. எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றார்.

    இந்தநிலையில் முதுமை காரணமாக பீட்டர் ஹிக்ஸ் எடின்பெர்க்கில் உள்ள தனது வீட்டில் இறந்தார். அவருடைய மறைவுக்கு நாசா உள்ளிட்ட விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன.

    • மகனை சரியாக கவனிக்கவில்லை என்றும் அவர்களது அலட்சியத்தால் ஈதன் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
    • வீட்டில் பாதுகாப்பற்ற துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஆக்ஸ்போர்டு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி ஈதன் கிரம்ப்ளே என்ற 15 வயது மாணவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.

    இந்த வழக்கில் தற்போது 17 வயதாகும் ஈதன் கிரம்ப்ளேவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே ஈதனின் தந்தை ஜேம்ஸ் கிரம்ப்ளே, தாய் ஜெனிபர் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. மகனை சரியாக கவனிக்கவில்லை என்றும் அவர்களது அலட்சியத்தால் ஈதன் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    விசாரணையின்போது புதிதாக வாங்கிய துப்பாக்கியை வீட்டில் பத்திரப்படுத்தவில்லை என்றும், தங்கள் மகனின் மனநலம் மோசமடைந்து வருவதற்கான அறிகுறிகளைப் பற்றி அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    வீட்டில் பாதுகாப்பற்ற துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் மாணவன் ஈதன் தனது வீட்டு பாடத்தின்போது ஒரு துப்பாக்கி, ஒரு தோட்டா, காயமடைந்த நபரின் படங்களை வரைந்துள்ளார்.

    இதையும் பெற்றோர் கவனிக்க தவறிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கில் ஜேம்ஸ் கிரம்ப்ளே, ஜெனிபருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தடுக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறவிட்டதாக நீதிபதி தெரிவித்தார். அமெரிக்காவில் முதல் முறையாக துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவனின் பெற்றோருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குலுக்கலின் போது தம்பதி வாங்கிய தலா 1 லாட்டரி சீட்டுக்கு 1 மில்லியன் டாலர் வீதம் 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.17 கோடி) கிடைத்துள்ளது.
    • பெரும் மகிழ்ச்சி அடைந்த அந்த தம்பதியினர் சிறப்பான வருவாய் தரும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

    அமெரிக்காவில் உள்ள மேலி லேண்ட் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் பவர் பால் குலுக்கலில் பங்கேற்றுள்ளனர். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் ஒரே மாதிரியான தொடர் வரிசை கொண்ட 2 லாட்டரி சீட்டுகளை தேர்வு செய்து வாங்கி உள்ளனர்.

    இந்நிலையில் குலுக்கலின் போது அந்த தம்பதி வாங்கிய தலா 1 லாட்டரி சீட்டுக்கு 1 மில்லியன் டாலர் வீதம் 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.17 கோடி) கிடைத்துள்ளது. முதலில் கணவர், தான் வாங்கிய சீட்டுக்கு தான் பரிசு கிடைத்துள்ளதாக கருதி உள்ளார். ஆனால் அதே எண்ணில் அவரது மனைவியும் லாட்டரி வாங்கி இருந்ததால் அந்த தம்பதிக்கு இரட்டை ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.

    இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த அந்த தம்பதியினர் சிறப்பான வருவாய் தரும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

    • பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட நபர்களை இந்திய உளவுத்துறையினர் பாகிஸ்தான் மண்ணில் சுட்டுக் கொன்றதாக பத்திரிகை குற்றச்சாட்டு.
    • இது தவறானது மற்றும் இந்தியாவிற்கு எதிராக செய்யப்படும் பொய் பிரசாரம் என இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

    பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்ட நபர்களை இந்திய உளவுத்துறையினர் பாகிஸ்தான் மண்ணில் சுட்டுக்கொன்றதாக பிரிட்டன் பத்திரிகை ஒன்று பரபரப்பு குற்ற்சாட்டு ஒன்றை வெளியிட்டிருந்தது.

    "இது தவறானது மற்றும் இந்தியாவிற்கு எதிராக செய்யப்படும் பொய் பிரசாரம்'' என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த செய்திக்கு கடந்த வாரம் தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், "இந்த விவகாரம் குறித்து மீடியா தகவல்களை பார்த்தோம். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எங்களிடம் எந்த கருத்தும் இல்லை. இந்த சூழ்நிலையில் நாங்கள் தலையிட போவதில்லை. ஆனால், இருதரப்பினரையும் பதற்றத்தை தணிக்கவும், பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் ஊக்கப்படுத்துகிறோம்" என்றார்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பிரச்சனையில் மற்ற நாடுகள் கருத்து கூறுவதை இந்தியா விரும்புவதில்லை. காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்தார், இந்த தங்களுடைய நாட்டின் உள்விவகாரம் என இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை காலின்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    வாஷிங்டன்:

    சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் காலின்ஸ், ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினாவுடன் மோதினார்.

    இதில் காலின்ஸ் 6-2, 6-1 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.

    • இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியாது.
    • அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.

    வாஷிங்டன்:

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக சந்திரன் வரும். அப்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டு முதல் சூரிய கிரகணம் என கூறப்படுகிறது.

    இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்கமுடியாது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்க நாடுகளில் சூரிய கிரணக்கத்தை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், முழு சூரிய கிரகணம் அமெரிக்காவில் தெரிந்தது. இந்த நிகழ்வை டல்லாஸ், இண்டியானாபோலிஸ், கிளீவ்லேண்ட் மற்றும் நியூயார்க்கின் பஃபலோ ஆகிய நகர மக்கள் கண்டு களித்தனர். மேலும் கனடா, மெக்சிகோவிலும் சூரிய கிரகணம் தெரிந்தது. இதுதொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

    • காட்டுப்பகுதியில் கோல்பிரிங்க்ஸ் பிளென்டி தனது காரில் பிணமாக கிடந்தார்.
    • இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர் கோல்பிரிங்க்ஸ் பிளென்டி (வயது 27). எல்லோஸ்டோன் ஸ்பின் ஆப் தொடரில் நடித்து பிரபலமானவர். கன்சாஸ் பகுதியில் வசித்து வந்த அவர் நான்கு நாட்களுக்கு முன்பு திடீரென்று மாயமானார்.

    இந்த நிலையில் அங்குள்ள காட்டுப்பகுதியில் கோல்பிரிங்க்ஸ் பிளென்டி தனது காரில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். கோல்பிரிங்க்ஸ் மீது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் நடிகரை கைது செய்ய போலீசார் அங்கு சென்றனர். அப்போதுதான் கோல்பிரிங்க்ஸ் மாயமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தைபாய் என்ற 99 வயது பெண்ணுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
    • வயது என்பது வெறும் எண் என்று சொல்கிறார்கள்.

    அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பலர் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்து கிடக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த தைபாய் என்ற 99 வயது பெண்ணுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, வயது என்பது வெறும் எண் என்று சொல்கிறார்கள். அதை உண்மையாக்கும் வகையில் எங்கள் ஆர்லாண்டோ அலுவலகத்தில் புதிய அமெரிக்க குடிமகனாக மாறிய 99 வயதான இந்தியாவைச் சேர்ந்த தைபாய் உள்ளார்.அவர் உற்சாகமாக இருந்தார். அவர் தனது மகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்று தெரிவித்துள்ளது.

    ×