search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "banknotes"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மூன்றாம் மன்னர் சார்லஸ் உருவப்படம் கொண்ட பிரிட்டன் நோட்டுகள் நேற்று முதல் புழக்கத்திற்கு வந்தன.
    • பண பயன்பாடு குறைந்து வரும் நேரத்தில் தேவை அதிகரிப்பதற்காக மட்டுமே அச்சிடப்படும்.

    பிரிட்டனில் மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த கரன்சி நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

    ராணி எலிசபெத் மறைவுக்குப் பிறகு பிரிட்டன் அரசராக சார்லஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில், அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன.

    மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த 10, 20 மற்றும் 50 பவுண்டு கரன்சி நோட்டுக்களை இங்கிலாந்து வங்கி வெளியிட்டுள்ளது.

    பிரிட்டனில் மூன்றாம் மன்னர் சார்லஸிடம் பாங்க் ஆப் இங்கிலாந்து பிரதிநிதிகளால் அவரது உருவப்படம் கொண்ட முதல் செட் கரன்சி நோட்டுகள் நேற்று வழங்கப்பட்டன.

    மூன்றாம் மன்னர் சார்லஸ் உருவப்படம் கொண்ட பிரிட்டன் நோட்டுகள் நேற்று முதல் புழக்கத்திற்கு வந்தன. இருப்பினும் அன்றாட பண பரிவர்த்தனைக்கு அவை சில காலத்திற்கு அரிதாகவே இருக்கும்.

    இதுதொடர்பாக இங்கிலாந்து வங்கி கூறுகையில்,

    இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவம் கொண்ட நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகள் அச்சிடப்படும் அல்லது பண பயன்பாடு குறைந்து வரும் நேரத்தில் தேவை அதிகரிப்பதற்காக மட்டுமே அச்சிடப்படும்.

    புதிய நோட்டுகளுடன் இணைந்து இரண்டாம் எலிசபெத் மகாராணி உருவப்படம் அச்சிடப்பட்ட நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும். சில காலத்தில் அன்றாட பண பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படுபவற்றில் பெரும்பகுதியாக இருக்கும்.

    வரும் வாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் அலுவலகக் கிளைகளில் இருந்தும் அவை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

    • இங்கிலாந்து நாட்டு பணத்தின் தாள்களான 5,10,20 மற்றும் 50 பவுண்டுகளில் மன்னரின் படம் அச்சிடப்பட்டுள்ளன.
    • மறைந்த ராணி எலிசபெத் படத்துடன் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பண நோட்டுகளுக்கு பாதிப்பு இருக்காது.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லசின் படத்துடன் இங்கிலாந்து பணமான பவுண்டு வெளியாகும் என இங்கிலாந்து வங்கி அறிவித்தது.

    இந்தநிலையில் மன்னர் சார்லஸ் படத்துடன் கூடிய இங்கிலாந்து நாட்டின் பவுண்டு தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. இங்கிலாந்து வங்கியின் கவர்னர் ஆண்ட்ரூ பெய்லி பக்கிங்காம் அரண்மனைக்கு நேரடியாக சென்று மன்னர் சார்லசிடம் அதனை காட்டி ஒப்புதலை பெற்றார்.

    இங்கிலாந்து நாட்டு பணத்தின் தாள்களான 5,10,20 மற்றும் 50 பவுண்டுகளில் மன்னரின் படம் அச்சிடப்பட்டுள்ளன. வரும் ஜூன் மாதம் முதல் புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த ராணி எலிசபெத் படத்துடன் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பண நோட்டுகளுக்கு பாதிப்பு இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.

    திருவாரூர் வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு 500 ரூபாய் கள்ள நோட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர்:

    சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் செல்வராஜ், திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    திருவாரூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி கிளையில் இருந்து கடந்த 15-ந் தேதிக்கு முன்பாக சென்னை இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பணத்தில், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 10 எண்ணிக்கையில் இருந்தது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கள்ள நோட்டுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் பேரில் திருவாரூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவாரூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி கிளையில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட பணத்தில், கள்ள நோட்டுகள் சென்று இருப்பது உண்மை என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் குற்ற வழக்கு தொடர்புதுறை உதவி இயக்குனரிடம் இருந்து கள்ள நோட்டு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யலாம் என கருத்துரு பெறப்பட்டது. இதனை தொடர்ந்து திருவாரூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராசு, கள்ள நோட்டு சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்தார். கள்ள நோட்டுகள் அந்த வங்கிக்கு எவ்வாறு வந்தது? யாருடைய கணக்கில் இருந்து செலுத்தப்பட்டது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
    ×