தொடர்புக்கு: 8754422764

சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலி வேட்டை

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8-ம் நாளை முன்னிட்டு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பதிவு: ஜனவரி 22, 2022 15:01

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் வேடுபறி உற்சவம்

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் நடைபெறும் இராப்பத்து நிகழ்ச்சியில் 8-ம் நாளான நேற்று திருவாபரணங்கள் சாற்றப்பட்டு சாமி புறப்பாடு நடைபெற்றது.

பதிவு: ஜனவரி 22, 2022 14:46

சுசீந்திரம் கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு புதிய சிலை பிரதிஷ்டை

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந் தேதி காலை 10.30 மணிக்கு புதிய சண்டிகேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

பதிவு: ஜனவரி 22, 2022 14:27

முருகனிடம் திருஊடல் நடத்திய தெய்வானை

தைப்பூச நிறைவு நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் புதுச்சேரி சப்பரத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பதிவு: ஜனவரி 22, 2022 13:18

தைப்பூச திருவிழா நிறைவாக பழனி முருகன் கோவிலில் தெப்ப உற்சவம்

பழனியில் தைப்பூச திருவிழா நிறைவு நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை எழுந்தருளிய சப்பரத்தை கோவில் பணியாளர்கள் தூக்கி தொட்டியில் 3 முறை வலம் வந்தனர்.

பதிவு: ஜனவரி 22, 2022 13:08

திருச்செந்தூர் கோவிலில் இன்று பக்தர்களின்றி நடைபெற்ற தை உத்திர வருஷாபிஷேக விழா

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமை வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

பதிவு: ஜனவரி 22, 2022 12:21

வடபழனி முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

நாளை (ஞாயிற்றுக் கிழமை) முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இதையடுத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

அப்டேட்: ஜனவரி 22, 2022 14:37
பதிவு: ஜனவரி 22, 2022 12:09

அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் சாமி தரிசனம் செய்ய தடை

கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் நாளை வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்டேட்: ஜனவரி 22, 2022 11:59
பதிவு: ஜனவரி 22, 2022 11:58

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

சட்டநாதர் கோவிலிலிருந்து கரகம் எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

பதிவு: ஜனவரி 22, 2022 11:25

ராமேசுவரம் கோவில் ரத வீதி, பிரகாரம் வெறிச்சோடியது

கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக அதிகமான பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் ரதவீதி சாலை மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

பதிவு: ஜனவரி 22, 2022 11:19

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஸ்ரீயாகம்

50 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீயாகம் தொடங்கியது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த யாகம் வருகிற 27-ந்தேதி வரை டி.வி.யில் ஒளிபரப்பப்படுகிறது.

பதிவு: ஜனவரி 22, 2022 10:21

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சாமிக்கு பால், இளநீர், சந்தனம், திருநீறு, தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.

பதிவு: ஜனவரி 22, 2022 09:27

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா தெப்ப உற்சவம்

நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

பதிவு: ஜனவரி 21, 2022 14:28

குற்றாலம்- ஆழ்வார்குறிச்சி கோவில்களில் தெப்பத் திருவிழா

குற்றாலம், ஆழ்வார்குறிச்சி கோவில்களில் தெப்பத் திருவிழா நடந்தது. தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமிகள் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பதிவு: ஜனவரி 21, 2022 14:13

கும்பகோணம் ஜலசந்திரமாரியம்மன் கோவில் குடமுழுக்கு

28 ஆண்டுகளுக்கு பிறகு கும்பகோணம் ஜலசந்திரமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

பதிவு: ஜனவரி 21, 2022 13:28

மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மண்டல உற்சவம் தொடக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மண்டல உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம் 27-ந் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.

பதிவு: ஜனவரி 21, 2022 12:19

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தை அமாவாசை திருவிழா நாளை தொடங்குகிறது

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தை அமாவாசை திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

பதிவு: ஜனவரி 21, 2022 11:28

இன்று முதல் 3 நாட்களுக்கு திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

பதிவு: ஜனவரி 21, 2022 11:21

கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலில் கொடியேற்றம்

வருகிற 28-ந்தேதி தேர்பவனி நடைபெற இருந்த நிலையில், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக பழனி முருகன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பதிவு: ஜனவரி 21, 2022 11:18

வள்ளலார் சித்தி பெற்ற இடத்தில் திருஅறை தரிசனம்

வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: ஜனவரி 21, 2022 10:32

14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த தொண்டரீஸ்வரர் கோவிலில் பாலாலயம்

14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த தொண்டரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகளை மேற்கொள்ள பாலாலயம் நடந்தது.

பதிவு: ஜனவரி 21, 2022 10:28

More