என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    வாட்ஸ்அப் செயலியில் கஸ்டம் வால்பேப்பர் உள்பட பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.


    வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்கும் அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய அப்டேட் வாட்ஸ்அப்பில் கஸ்டம் வால்பேப்பர், ஸ்டிக்கர், எமோஜி என பல்வேறு வசதிகளை வழங்குகிறது.

    அதன்படி பயனர்கள் வால்பேப்பர் கேலரியில் இருக்கும் படங்களை வெவ்வேறு சாட்களில் வால்பேப்பராக செட் செய்து கொள்ளலாம். இத்துடன் தற்போதைய டூடுள் வால்பேப்பர்களின் நிறமும் புது அப்டேட்டில் மாற்றப்பட்டு இருக்கிறது.

     வாட்ஸ்அப்

    வால்பேப்பர் சார்ந்த மாற்றங்கள் மட்டுமின்றி ஸ்டிக்கர்களை டெக்ஸ்ட் மற்றும் எமோஜி மூலம் தேடும் வசதியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வாட்ஸ்அப் உலக சுகாதார மையத்தின் Together at Home ஸ்டிக்கர் பேக் ஒன்றை செயலியில் வழங்கி உள்ளது. 

    இந்த ஸ்டிக்கர் பேக் பயனர்களை கொரோனாவைரஸ் பரவல் காலக்கட்டத்தில் வீட்டினுள் இருக்க வலியுறுத்தும் ஸ்டிக்கர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் கஸ்டம் வால்பேப்பர் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு ஒவ்வொரு சாட்களுக்கும் பிரத்யேக வால்பேப்பர்களை செட் செய்து கொள்ள வழி செய்கிறது. 

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    ஸ்மார்ட்போன் சந்தையில் 2021 ஆண்டு 5ஜி மொபைல் போன்கள் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கும். சாம்சங், ரியல்மி, சியோமி மற்றும் இதர நிறுவனங்கள் குறைந்த விலை 5ஜி மாடல்களை அறிமுகம் செய்வதில் முக்கிய பங்காற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கேலக்ஸி ஏ42 5ஜி மாடல் சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இது தற்சமயம் ஐரோப்பிய சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது.

     கேலக்ஸி ஏ32 5ஜி

    புதிய ஸ்மார்ட்போனின் CAD ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அதன்படி புதிய சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என்றும் இவை ஒவ்வொன்றும் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் மற்ற மாடல்களில் காணப்படுவதை போன்று பெரிய கேமரா பம்ப் கொண்டிருக்காது. எனினும், கேமரா சென்சார்களுடன் எல்இடி பிளாஷ் வழங்கப்படுகிறது. இத்துடன் கேமராக்கள் அருகில் சென்சார் ஒன்று காணப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் இன்பினிட்டி வி நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், AMOLED ஸ்கிரீன், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 
    ஸ்டப்கூல் நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் புதிய வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்து இருக்கிறது.

    ஸ்டப்கூல் நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் புதிய வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வயர்லெஸ் சார்ஜர் WC310 என அழைக்கப்படுகிறது. 

    அளவில் மிக மெல்லியதாக உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய வயர்லெஸ் சார்ஜர் அனைத்து வித Qi வசதி கொண்ட சாதனங்களை அதிகபட்சம் 10வாட் திறனில் சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

    இதுதவிர இந்த வயர்லெஸ் சார்ஜரில் டெம்பரேச்சர் ப்ரோடெக்ஷன், ஷார்ட் சர்கியூட் ப்ரோடெக்ஷன் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. 6.4எம்எம் அளவு கொண்டுள்ள வயர்லெஸ் சார்ஜர் ஸ்மார்ட்போன்களை எந்த கோணத்தில் இருந்தாலும் சார்ஜ் செய்யும்.

     ஸ்டப்கூல் வயர்லெஸ் சார்ஜர்

    ஸ்மார்ட்போன்கள் அதிகபட்சம் 6 எம்எம் தடிமனாக இருக்கும் கேஸ் கொண்டிருந்தாலும், இந்த சார்ஜர் ஸ்மார்ட்போன்களை எளிதில் சார்ஜ் செய்யும். ஸ்மார்ட்போனில் சார்ஜ் ஆகும் விவரம் சார்ஜிங் பேடில் இருக்கும் ரிங் எல்இடி-யில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

    இந்த சார்ஜரில் மொத்தம் 5 வாட், 7.5 வாட் மற்றும் 10 வாட் என மூன்றுவித அவுட்புட்கள் உள்ளன. ஐபோன் 8 துவங்கி ஐபோன் 12 வரையிலான மாடல்களை 7.5 வாட் திறன் கொண்டு சார்ஜ் செய்யும். இதுதவிர Qi வசதி கொண்ட பெரும்பான்மை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை 10 வாட் திறனில் சார்ஜ் செய்கிறது.

    இந்தியாவில் புதிய ஸ்டப்கூல் WC310 விலை ரூ. 1999 ஆகும். எனினும், அமேசான் தளத்தில் அறிமுக சலுகையாக இது ரூ. 849 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போனின் விலை திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா சி3 ஸ்மார்ட்போனின் விலையை ரூ. 1000 வரை குறைத்து இருக்கிறது. விலை குறைப்பின் படி நோக்கியா சி3 பேஸ் வேரியண்ட் 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி மாடல் விலையை குறைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    விலை குறைப்பின் படி நோக்கியா சி3 விலை ரூ. 6999 முதல் துவங்குகிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி நோக்கியா சி3 மாடல் விலை ரூ. 500, 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு இருக்கிறது. 

    இந்தியாவில் நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் நார்டிக் புளூ மற்றும் சேண்ட் நிறங்களில் கிடைக்கிறது. 

     நோக்கியா சி3

    நோக்கியா சி3 சிறப்பம்சங்கள்

    - 5.99 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 டிஸ்ப்ளே
    - 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் பிராசஸர்
    - ஐஎம்ஜி8322 ஜிபியு 
    - 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
    - மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
    - 3040 எம்ஏஹெச் பேட்டரி
    இத்தாலி நாட்டு ஒழுங்குமுறை ஆணையம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்து இருக்கிறது.


    இத்தாலி நாட்டின் ஒழுங்குமுறை ஆணையம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.879008769) அபராதம் விதித்து இருக்கிறது. 

    புதிய ஐபோன்களில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கியது பற்றி தவறான தகவல்களை விளம்பரப்படுத்திய காரணத்திற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. 

    ஐபோன் மாடல்களில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி குறிப்பிட்ட காலநிலைகளில் மட்டும் வேலை செய்யும் என்பதை ஆப்பிள் தெளிவாக விவரிக்கவில்லை என இத்தாலி நாட்டின் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து உள்ளது.  

     ஐபோன் 11
     
    ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ்எஸ் பிளஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கான விளம்பரங்களில் ஆப்பிள் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி பற்றி தெளிவாக விவரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஐபோன்களில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி இருப்பதாக தெரிவித்து, திரவங்களால் சேதமடைந்தால் வாரண்டி பொருந்தாது என பொறுப்புத்துறப்பில் தெரிவித்து இருப்பது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயல் என இத்தாலி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு எஸ்இ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில், தற்சமயம் ஒன்பிளஸ் நார்டு எஸ்இ மாடலின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு எஸ்இ மாடல் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் நார்டு எஸ்இ மாடல் அடுத்த ஆண்டின் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. எனினும், புதிய நார்டு எஸ்இ பற்றி ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

     ஒன்பிளஸ் நார்டு

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு எஸ்இ மாடலில் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் 65 வாட் பாஸ்ட் சார்ஜர் விவரங்கள் டியுவி சான்றளிக்கும் வலைதளத்தில் வெளியானது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் நார்டு எஸ்இ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் நார்டு எஸ்இ மாடலில் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு என்100 மற்றும் என்10 5ஜி ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்டன. எனினும், இரு மாடல்கள் மற்ற சந்தைகளில் வெளியிடுவது பற்றி ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பாஜி கேம் முன்பதிவு துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    இந்தியாவில் பப்ஜி மொபைல் உள்பட 118 செயலிகளுக்கு செப்டம்பர் மாத வாக்கில் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த என்கோர் கேம்ஸ் நிறுவனம் பப்ஜி மொபைல் கேமிற்கு மாற்றாக பாஜி எனும் கேமை வெளியிடுவதாக அறிவித்து இருந்தது. 

    அறிவிக்கப்பட்டது முதல் இந்தியாவில் பாஜி கேம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. இந்நிலையில், பாஜி கேமிற்கான முன்பதிவு கூகுள் பிளே ஸ்டோரில் துவங்கி உள்ளது. முன்பதிவு விவரங்களுடன் கேம் கதைக்களம் மற்றும் கேம்பிளே படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.

     பாஜி

    பாஜி கேம்பிளே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், வெளியீட்டின் போது இந்த கேமில் பேட்டிள் ராயல் மோட் வழங்கப்படாது என பாஜி இணை நிறுவனர் விஷால் கோண்டல் தெரிவித்து இருந்தார்.

    ஜாப்ரா நிறுவனம் இந்திய சந்தையில் பிரீமியம் விலையில் புதிய இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஜாப்ரா பிராண்டின் எலைட் 85டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய இயர்பட்ஸ் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் சிப்செட் வழங்கப்பட்டு உள்ளது. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

    இந்த இயர்பட்ஸ் கியூஐ சான்று பெற்ற வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. புதிய இயர்பட் ஒவ்வொன்றும் அதிகபட்சம் 5.5 மணி நேர பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. மேலும் இத்துடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 25 மணி நேர பேக்கப் கிடைக்கும். 

     ஜாப்ரா எலைட் 85டி

    செமி ஓபன் டிசைன் கொண்டிருக்கும் இந்த இயர்போன்களில் 12 எம்எம் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இரு்கின்றன. இதன் வடிவமைப்பு காதுகளில் சவுகரிய அனுபவத்தை வழங்குகின்றன. இதன் வடிவம் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    இதில் உள்ள பிரத்யேக நாய்ஸ் கேன்சலேஷன் சிப் சிறப்பான நாய்ஸ் கேன்சலேஷன் வசதியினை வழங்குகிறது. இதில் உள்ள HearThrough Mode கொண்டு வெளிப்புற சத்தத்தை இயர்பட்கள் வழியே கேட்க முடியும். 

    இந்திய சந்தையில் ஜாப்ரா எல்டை 85டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது டைட்டானியம் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விற்பனை இன்று (டிசம்பர் 1) அமேசான் தளத்தில் துவங்குகிறது. 
    பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்ட புது நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் முந்தைய மாடலை விட வேகமான பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6.4 இன்ச் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

     நோக்கியா 5.3

    நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிமுகமான நோக்கியா 5.3 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். நோக்கியா 5.3 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் புதிய மாடலில் மேம்பட்ட பிராசஸர் வழங்கப்படலாம்.

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் புளூ மற்றும் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20 ஆயிரம் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் எப்ஹெச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, 16 எம்பி பன்ச் ஹோல் கேமரா, ஸ்னாப்டிராகன் 750ஜி 5ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் பிளாஸ்டிக் பாடி, ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

     மோட்டோ ஜி 5ஜி

    மோட்டோ ஜி 5ஜி சிறப்பம்சங்கள்

    - 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD 20:9 டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
    - அட்ரினோ 619 GPU
    - 6 ஜிபி LPPDDR4x ரேம்
    - 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 10
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, PDAF
    - 8 எம்பி 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ,  வைபை 6 802.11 ac, ப்ளூடூத் 5.1, GPS
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 20 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் 

    மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் வொல்கானிக் கிரே மற்றும் புராஸ்டெட் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 20,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 7 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

    சோனி நிறுவனத்தின் புதிய பிளே ஸ்டேஷன் 5 இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    சோனி நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் 5 கேமிங் கன்சோலை உலகின் பல்வேறு நாடுகளில் வெளியிட்டுவிட்டது. எனினும், இதன் இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது. 

    இதுகுறித்து வெளியான தகவல்களில் சோனி தனது பிளே ஸ்டேஷன் 5 கன்சோலை இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. எனினும், பிஎஸ்5 இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என சோனி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

     சோனி பிஎஸ்5

    பிஎஸ்5 இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்திய வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டதும் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என சோனி நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.

    இந்திய வெளியீட்டிற்கு முன் சோனி இந்தியாவில் எத்தனை பிஎஸ்5 யூனிட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிக்க வேண்டும் என தெரிகிறது. தற்போதைய தகவல்களின் படி முதற்கட்டமாக 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பிஎஸ்5 யூனிட்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். 

    எக்ஸ் ரே மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் தொழில்நுட்பம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு நுரையீரல் எக்ஸ் ரே புகைப்படங்களை கொண்டு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும். 

    டீப்கொவிட் எக்ஸ்ஆர் (DeepCOVID-XR) என அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பம் மெஷின் லெர்னிங் அல்காரிதம் மூலம் இயங்குகிறது. இந்த தொழில்நுட்பம் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை பத்து மடங்கு வேகமாகவும், அதிக துல்லியமாகவும் கண்டறிகிறது.

     கோப்புப்படம்

    இதுபற்றிய ஆய்வு கட்டுரை ரேடியாலஜி இதழில் வெளியாகி இருக்கிறது. இது கொரோனா தவிர வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மருத்துவர்கள் பயன்படுத்தலாம் என இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கும் ஆய்வு குழு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

    இந்த தொழில்நுட்பம் பாதிப்பு இருக்கிறதா என்பதை எளிதில் கண்டறிவதால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை விரைவில் தனிமைப்படுத்தி, அடுத்தக்கட்ட சிகிச்சையளிக்க முடியும்.
    ×