என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    இந்திய டெலிகாம் சந்தையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 38 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்று அசத்தி இருக்கிறது.


    இந்திய டெலிகாம் சந்தையில் செப்டம்பர் 2020 மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் ஜியோவை விட அதிக வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. எனினும், இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் அதிக மாற்றம் ஏற்படவில்லை. 

    ஏர்டெல் நிறுவனம் ஜியோவை விட அதிக வாடிக்கையாளர்களை பெற்று இருப்பது இரண்டாவது முறை ஆகும். இதே காலக்கட்டத்தில் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களை இழந்து இருப்பதாக டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     கோப்புப்படம்

    டிராய் அறிக்கையின் படி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.17 சதவீதம் அதிகரித்து தற்சமயம் 32.66 கோடியாக இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 0.36 சதவீத வளர்ச்சி பெற்று 40.04 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. 

    இதே காலக்கட்டத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து தற்சமயம் 29.5 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. மேலும் டெலிகாம் சந்தையில் 35.19 சதவீத பங்குகளுடன் ரிலையன்ஸ் ஜியோ முன்னணியில் இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 28.44 சதவீத பங்குகளையும், வோடபோன் ஐடியா நிறுவனம் 27.73 சதவீதம், பி.எஸ்.என்.எல். நிறுவனம் 10.36 சதவீதம், எம்.டி.என்.எல். நிறுவனம் 0.29 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. 
    குவாட் கேமரா சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.


    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ பூவா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் இன் டிஸ்ப்ளே, 8 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் டெக்னோ பூவா ஸ்மார்ட்போன் ஹை ஒஎஸ் 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது.

     டெக்னோ பூவா

    புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் ஏஐ கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    கனெக்டிவிடிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டு இருக்கின்றன. டெக்னோ பூவா ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    டெக்னோ பூவா ஸ்மார்ட்போன் ஸ்பீடு பர்ப்பிள், டேசில் பிளாக் மற்றும் மேஜிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4ஜிபி + 64ஜிபி விலை ரூ. 9,999 என்றும், 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 11 ஆம் தேதி துவங்குகிறது.
    ஒன்யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஒன்யுஐ 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்க துவங்கி இருக்கிறது. இந்த அப்டேட் முற்றிலும் புதிய வடிவமைப்பு, அதிக கஸ்டமைசேஷன் ஆப்ஷன், அன்றாட அம்சங்களில் மாற்றங்கள் உள்ளிட்டவைகளை வழங்குகிறது.

    மென்பொருள் அனுபவத்தில் சாம்சங் அதிகப்படியான மாற்றங்களை செய்து இருக்கிறது. இது மிக எளிமையாகவும், நேர்த்தியாகவும் உள்ளது. ஹோம் ஸ்கிரீன், லாக் ஸ்கிரீன், நோட்டிபிகேஷன், குவிக் பேனல் உள்ளிட்டவை முன்பை விட மேம்படுத்தப்பட்டு தெளிவாக விவரங்களை வழங்குகிறது.

     ஒன் யுஐ 3

    அனிமேஷன் மற்றும் மோஷன் எபெக்ட்கள் மென்மையாக்கப்பட்டு, லாக் ஸ்கிரீன் பேட் அவுட் சுத்தமாக இருக்கிறது. இத்துடன் டாகிள் செய்வது அதிகளவு நேர்த்தியான அனுபவத்தை வழங்குகிறது. 

    சாம்சங்கின் ஒன்யுஐ 3 அப்டேட் இன்று முதல் கொரியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தைகளில் கேலக்ஸி எஸ்20 சாதனங்களுக்கு வழங்கப்படுகிறது. சில வாரங்களில் இந்த அப்டேட் மேலும் சில சந்தைகள் மற்றும் கேலக்ஸி நோட் 20, இசட் போல்டு 2, இசட் ப்ளிப், நோட் 10, போல்டு மற்றும் எஸ்10 சீரிஸ் போன்ற மாடல்களுக்கு வழங்கப்படலாம்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் உருவாகி வருகிறது.

    சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் விவரங்ள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    அதன்படி புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் என்றும் இது ஜனவரி 14 ஆம் தேதி மற்ற இரு கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்21 சீரிசில் கேலக்ஸி எஸ்21 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடல் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.

    தற்போதைய தகவல்களின் படி கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் SM-G991U எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டின் போதே ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் லஹியானா எனும் குறியீட்டு பெயர் கொண்ட பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்த பிராசஸர் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் ஆக இருக்கும் என தெரிகிறது. புதிய ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு அறிமுகமான ஸ்னாப்டிராகன் 865 பிராசஸரின் மேம்பட்ட சிப்செட் ஆகும்.

    ஆப்பிள் நிறுவனம் சிலிகான் பிராசஸர் கொண்ட இரண்டு புதிய மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் மேக்புக் ப்ரோ 13 மாடலினை ஆப்பிள் சிலிகான் பிராசஸருடன் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் தோற்றத்தில் பழைய மேக்புக் ப்ரோ போன்றே காட்சியளித்தது. இது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 

    இந்நிலையில், ஆப்பிள் வல்லுநர் மிங் சி கியூ வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இரண்டு புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் உருவாக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவற்றின் வெளிப்புற வடிவமைப்பு புதிதாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

     மேக்புக் ப்ரோ

    மேலும் புதிய மேக்புக் ப்ரோ மாடல்களில் மினி எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவற்றில் ஆப்பிள் சிலிகான் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய மேக்புக் ப்ரோ மாடல் 2021 ஆண்டு வாக்கில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

    மேக்புக் ப்ரோ வரிசையில் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட மேக்புக் ஏர் மாடல் 2022 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. 2022 ஆண்டு வாக்கில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 2.8 கோடி மினி எல்இடி சாதனங்களை விநியோகம் செய்யும் என கியோ கணித்து இருக்கிறார். 

    2021 ஆண்டில் மினி எல்இடி டிஸ்ப்ளேவுடன் மேக்புக் ப்ரோ மற்றும் ஐபேட் ப்ரோ சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இவை அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகமாகும் என தெரிகிறது.
    பப்ஜி மொபைல் கேமிற்கு மாற்றான இந்திய கேம் ஃபாஜி கூகுள் பிளே ஸ்டோர் முன்பதிவில் அசத்தி இருக்கிறது.


    பப்ஜி மொபைல் கேமிற்கு மாற்றாக உருவாகி வரும் ஃபாஜி கூகுள் பிளே ஸ்டோரில் முன்பதிவு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிமான முன்பதிவுகளை பெற்று அசத்தி இருக்கிறது. 

    இதுவரை ஃபாஜி கேம் விளையாட பிளே ஸ்டோரில் சுமார் 10.6 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக இந்த கேமை உருவாக்கி வரும் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

     ஃபாஜி

    ஃபாஜி கேமினை என் கோர் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் செப்டம்பர் மாத வாக்கில் தடை செய்யப்பட்டது. அதன்பின் ஃபாஜி கேமிற்கான அறிவிப்பு வெளியானது.

    கூகுள் பிளே ஸ்டோரில் ஃபாஜி கேமிற்கு முன்பதிவு செய்வோருக்கு, கேம் எப்போது டவுன்லோட் செய்ய கிடைக்கும், கேமின் அளவு, எந்தெந்த சாதனங்களில் விளையாட முடியும் என்ற தகவல்கள் நோட்டிபிகேஷன் மூலம் அனுப்பப்படுகிறது.

    ஃபாஜி கேம்பிளே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், வெளியீட்டின் போது இந்த கேமில் பேட்டிள் ராயல் மோட் வழங்கப்படாது என பாஜி இணை நிறுவனர் விஷால் கோண்டல் தெரிவித்து இருந்தார்.

    இன்பினிக்ஸ் நிறுவனம் அதிரடி அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    இன்பினிக்ஸ் நிறுவனம் ஜீரோ 8ஐ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.85 இன்ச் FHD பிளஸ் டூயல் பின் ஹோல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இதில் 16 எம்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர், லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 எக்ஸ்ஒஎஸ் 7.0, வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ சிறப்பம்சங்கள்

    - 6.85 இன்ச் 2460x1080 பிக்சல் 20.5:9 FHD+ LCD ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர்
    - 800MHz மாலி-G76 3EEMC4 GPU
    - 8 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் 
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ்ஒஎஸ் 7.0
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
    - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு கேமரா
    - 2 எம்பி டெப்த் சென்சார் 
    - ஏஐ கேமரா, குவாட் எல்இடி பிளாஷ்
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - 8 எம்பி 105° அல்ட்ரா வைடு கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 4500 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ ஸ்மார்ட்போன் சில்வர் டைமண்ட் மற்றும் பிளாக் டைமண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 9 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.
    வி நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் சலுகை கட்டணங்களில் இந்தியாவில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.


    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது என்ட்ரி லெவல் போஸ்ட்பெயிட் சலுகை விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ரூ. 598 மற்றும் ரூ. 749 ரெட் போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு பொருந்தும். இரு சலுகைகளின் விலையும் ரூ. 50 அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இரு சலுகைகளும் ஒற்றை போஸ்ட்பெயிட் சலுகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்படுகின்றன. வி ரூ. 598 சலுகையில் இரு இணைப்புகளையும், ரூ. 749 சலுகையில் மூன்று இணைப்புகள் வரை பயன்படுத்த முடியும். புதிய விலை உயர்வு மை வி வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டது.

     கோப்புப்படம்

    வி அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி வி ரூ. 598 சலுகை விலை ரூ. 649 என்றும், ரூ. 749 சலுகை விலை ரூ. 799 என்றும் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. ரூ. 749 சலுகையில் 80 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் பிரைமரி இணைப்பிற்கு 50 ஜிபி டேட்டாவும், இரண்டாவது இணைப்பிற்கு 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    ரூ. 799 போஸ்ட்பெயிட் சலுகையில் 120 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் பிரைமரி இணைப்பிற்கு 60 ஜிபி டேட்டா, இரண்டாவது இணைப்புகளுக்கு முறையே 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    என்ட்ரி லெவல் போஸ்ட்பெயிட் சலுகைகளில் வி பிரைமரி இணைப்பிற்கு 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஒவர் வசதியை வழங்குகிறது. இரண்டாவது இணைப்புகளுக்கு 50 ஜிபி வரை டேட்டா ரோல் ஒவர் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் லிக்விட் கூலிங் வசதி கொண்ட ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டம் பற்றி சமீபத்திய யூடியூப் உரையாடலின் போது தெரிவித்தார். இதில் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் மற்றும் இன் நோட் 1 மற்றும் இன் 1பி  விற்பனை விவரங்கள் பற்றிய தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

    மேலும் இன் சீரிஸ் போன்கள் விரைவில் ஆப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறார். தற்சமயம் இரு ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் வலைதளங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

     இன் ஸ்மார்ட்போன்

    இதுதவிர மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 6 ஜிபி ரேம், அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருதாக தெரிவித்தார். மேலும் இன் நோட் 1 மாடலின் பட்ஜெட் வேரியண்ட் பற்றி வெளியான தகவல்களில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. புதிய இன் நோட் 1 மாடல் வைடுவைன் எல்1 வசதியுடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ டூ எஸ்டி ரெசல்யூஷனிற்கு நிறுத்துகிறது. எனினும், விரைவில் இந்த வசதி அப்டேட் மூலம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்தது. தற்சமயம் ரெட்மி நோட் 9 சீரிஸ் 5ஜி மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 

    இதுபற்றிய விவரங்கள் கூகுள் பிளே கன்சோலில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் எம்ஐ 10ஐ எனும் பெயரில் அறிமுகமாகும் என தெரிகிறது. சியோமி எம்ஐ 10ஐ மாடல் இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல் உண்மையாகும் பட்சத்தில் சியோமி எம்ஐ 10ஐ மாடல் இந்தியாவின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. சீன சந்தையில் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடல் இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

     ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி

    ஸ்மார்ட்போன் சந்தையின் மிட் ரேன்ஜ் பிரிவில் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். பிரைமரி சென்சாருடன் 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. 

    இத்துடன் 6.67 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 4800 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சார்ஜிங், பக்கவாட்டில் கைரேகை சென்சார், என்எப்சி வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் 2020 ஆண்டின் 15 சிறந்த செயலிகள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஆப்பிள் நிறுவனம் ஆப் ஸ்டோர் 2020 ஆண்டிற்கான சிறந்த செயலிகள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் வாழ்க்கை முறையை எளிமையாக்கும், ஆரோக்கிய அம்சங்கள் நிறைந்த செயலிகள், கேம்கள் இடம்பெற்று இருக்கின்றன.

    செயலிகள் மற்றும் கேம்கள் அதிக தரம், வித்தியாச வடிவமைப்பு, பயன்பாட்டு முறை மற்றும் புதுவித தொழில்நுட்பத்தின் பயன்பாடு என பல்வேறு அடிப்படையை கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்பட்டு உள்ளன. கூடுதலாக கலாச்சார நன்மை, உதவும் நிலை மற்றும் முக்கியத்துவம் போன்றவற்றையும் கொண்டு தேர்வு செய்யப்பட்டன.

     சிறந்த செயலிகள்

    2020 ஆண்டின் சிறந்த செயலிகள்

    - இந்த ஆண்டின் சிறந்த ஐபோன் ஆப்: வாக்அவுட் (Wakeout!)
    - இந்த ஆண்டின் சிறந்த ஐபேட் ஆப்: ஜூம் (Zoom)
    - இந்த ஆண்டின் சிறந்த மேக் ஆப்: ஃபென்டாஸ்டிக்கல் (Fantastical)
    - இந்த ஆண்டின் சிறந்த ஆப்பிள் டிவி ஆப்: டிஸ்னி பிளஸ்(Disney+)
    - இந்த ஆண்டின் சிறந்த ஆப்பிள் வாட்ச் ஆப்: என்டெல் (Endel)

    2020 ஆண்டின் சிறந்த செயலிகள்

    இந்த ஆண்டின் சிறந்த ஐபோன் கேம் : கென்ஷின் இம்பேக்ட் (Genshin Impact)
    இந்த ஆண்டின் சிறந்த ஐபேட் கேம்: லெஜண்ட்ஸ் ஆப் ரனெடெர்ரா (Legends of Runeterra)
    இந்த ஆண்டின் சிறந்த மேக் கேம்: டிஸ்கோ எலிசியம் (Disco Elysium)
    இந்த ஆண்டின் சிறந்த ஆப்பிள் டிவி கேம்: டன்டரா டிரையல்ஸ் ஆப் பியர் (Dandara Trials of Fear)
    இந்த ஆண்டின் சிறந்த ஆப்பிள் ஆர்கேட் கேம்: ஸ்னீகி சஸ்குவாட்ச் (Sneaky Sasquatch)

    விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.

    விவோ நிறுவனம் தனது வி20 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய விவோ வி20 ப்ரோ மாடலில் 6.44 இன்ச் FHD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 765ஜி 5டி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் 44 எம்பி செல்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் ஏஜி மேட் கிளாஸ் கொண்ட ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட்வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

     விவோ வி20 ப்ரோ

    விவோ வி20 ப்ரோ சிறப்பம்சங்கள்

    - 6.44 இன்ச் எப்ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
    - ஸ்னாப்டிராகன் 765ஜி  பிராசஸர்
    - அட்ரினோ 620 GPU
    - 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 44 எம்பி செல்பி கேமரா
    - 8 எம்பி அல்ட்ரா வைடு செல்பி கேமரா சென்சார்
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 64 எம்பி பிரைமரி கேமரா
    - 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ்
    - 2 எம்பி மோனோ சென்சார் 
    - பன்டச் ஒஎஸ்11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
    - 5ஜி SA, 5ஜி NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 29,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ப்ளிப்கார்ட், அமேசான், விவோ ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
    ×