என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    விவோ நிறுவனத்தின் வை51 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய விவோ வை51 ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    விவோ வை51 சிறப்பம்சங்கள்

    6.59 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே
    குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
    8 ஜிபி ரேம்
    128 ஜிபி மெமரி
    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    டூயல் சிம் ஸ்லாட்
    48 எம்பி பிரைமரி கேமரா
    8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
    2 எம்பி மேக்ரோ கேமரா
    16 எம்பி செல்பி கேமரா
    பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    5000 எம்ஏஹெச் பேட்டரி
    18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி

    புதிய விவோ வை51 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டைட்டானியம் சபையர் மற்றும் க்ரிஸ்டல் சிம்பனி நிறங்களில் கிடைக்கிறது.

    சியோமி நிறுவனத்தின் புதிய Mi QLED டிவி 4கே மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.


    சியோமி நிறுவனம் தனது Mi QLED டிவி 4கே மாடலைஇந்தியாவில் டிசம்பர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த டிவி ஃப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர எம்ஐ வலைதளம் மற்றும் எம்ஐ ஸ்டோர்களிலும் இந்த டிவி கிடைக்கும்.

    முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சியோமி நிறுவனம் பல்வேறு QLED டிவி மாடல்களை எம்ஐ டிவி 5 ப்ரோ சீரிசில் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய 55 இன்ச் QLED டிவி 4கே மாடலை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வெளியிட சியோமி திட்டமிட்டுள்ளது.

    டீசர்களின் படி புதிய டிவி குவாண்டம் டாட் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் இது டால்பி விஷன், ஹெச்டிஆர் 10 பிளஸ், டால்பி ஆடியோ, டிடிஎஸ் ஹெச்டி மற்றும் ஹெச்டிஎம்ஐ 2.1 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த டிவி ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம் சார்ந்த சியோமி பேட்ச்வால் தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது.

    இந்தியாவில் ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    இந்தியாவில் ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1500 குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு ஆப்லைன் சந்தையில் அமலாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் ரூ. 22,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    தற்சமயம் விலை குறைப்பின் படி இந்த ஸ்மார்ட்போன் ரூ. 21,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நாடு முழுக்க ஆப்லைன் விற்பனை மையங்களில் அமலாகி இருப்பதாக கூறப்படுகிறது.

     ஒப்போ எப்17 ப்ரோ

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எப்17 ப்ரோ மாடலில் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் அமைப்பில் 16 எம்பி + 2 எம்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

    இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர் ஒஎஸ் 7.2 ஒஎஸ், 4015 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 30 வாட் வூக் 4.0 பிளாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
    விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெற்று இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    விவோ நிறுவனம் வி20 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. அறிமுகமான போது ஆண்ட்ராய்டு 10 சார்ந்த பன்டச் ஒஎஸ்11 இயங்குதளம் கொண்டிருந்தது. தற்சமயம் விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ வி20 ப்ரோ மாடலில் 6.44 இன்ச் FHD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 765ஜி 5டி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     விவோ வி20 ப்ரோ

    இத்துடன் 44 எம்பி செல்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் ஏஜி மேட் கிளாஸ் கொண்ட ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட்வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. 

    மேலும் 44 எம்பி செல்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

    ஐஒஎஸ் 14.2 அப்டேட் இன்ஸ்டால் செய்ததும் ஐபோனில் அந்த கோளாறு ஏற்படுவதாக பயனர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.


    ஐபோன்களை புதிய ஐஒஎஸ் 14.2 தளத்திற்கு அப்டேட் செய்வோருக்கு பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிய ஒஎஸ் அப்டேட் செய்தவர்களில் பலர் இந்த பிரச்சினை குறித்து சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த கோளாறு ஐபோன் XR, ஐபோன் XS, ஐபோன் எக்ஸ், ஐபோன் 7 மற்றும் ஐபோன் எஸ்இ 2020 உள்ளிட்ட மாடல்களில் ஏற்படுவதாக தெரிகிறது. ஐபோன் மட்டுமின்றி ஐபேட் ஒஎஸ் 14.2 அப்டேட் செய்தவர்களுக்கும் இதேபோன்று பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவதாக தெரிவித்து இருக்கின்றனர். 

     ஐஒஎஸ் 14

    பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போகும் கோளாறை சரி செய்யும் அப்டேட் வழங்குவது பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஐஒஎஸ் 14.2 இன்ஸ்டால் செய்தவர்களில் பலருக்கு 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை பேட்டரி தீர்ந்து போவதாக கூறப்படுகிறது.
    எல்ஜி நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகின்றன.


    எல்ஜி நிறுவனத்தின் கே42 மற்றும் கே52 ஸ்மார்ட்போன்கள் இந்திய பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கின்றன. இரு மாடல்களும் LM-K420YMW மற்றும் LM-K520YMW மாடல் நம்பர் கொண்டிருக்கின்றன. இவை எல்ஜி கே42 மற்றும் எல்ஜி கே52 பெயர்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    இந்திய பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதால் இவை விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் ஏற்கனவே மத்திய அமெரிக்காவிலும் எல்ஜி கே52 ஸ்மார்ட்போன் ஐரோப்பாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கட்-அவுட், மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

     எல்ஜி கே42

    இத்துடன் 3D சவுண்ட் என்ஜின், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட், 4000 எம்ஏஹெச் பேட்டரி, MIL-STD-810G சான்று வழங்கப்பட்டு இருக்கிறது.

    எல்ஜி கே52 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் புல் விஷன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 4 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
    பிட்பிட் சென்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் இசிஜி அம்சம் சீராக இயங்காததால் பயனர்களுக்கு வேறு யூனிட்கள் வழங்கப்படுகின்றன.
    பிட்பிட் சென்ஸ் ஸ்மார்ட்வாட்ச் பயனர்கள் தங்களது வாட்ச் இசிஜி அம்சம் சீராக இயங்கவில்லை என குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக பிட்பிட் நிறுவனம் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு புதிய யூனிட்களை வழங்குவதாக கூறப்படுகிறது.

    இசிஜி அம்ச குறைபாடு ஹார்டுவேர் சார்ந்த ஒன்று எனவும், இது சிறு எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டும் ஏற்படுவதாக பிட்பிட் தெரிவித்து இருக்கிறது. எனினும், எதனால் இந்த கோளாறு ஏற்படுகிறது என பிட்பிட் சரியாக தெரிவிக்கவில்லை.

    பிட்பிட் சென்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இசிஜி வசதியுடன் அறிமுகமான பிட்பிட்  நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஆகும். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த பிரச்சினை 900 யூனிட்களில் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கு பின் எதிர்காலத்தில் அறிமுகமாகும் பிட்பிட் சென்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் இந்த பிரச்சினை ஏற்படாது என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும் வேறு எந்த பிட்பிட் சாதனத்திலும் இதுபோன்ற பிரச்சினை ஏற்படாது என்றும் தெரிவித்து இருக்கிறது.
    சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு மூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக கூறப்படுகிறது.


    சாம்சங் நிறுவனம் 2021 ஆண்டில் மொத்தம் மூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை கேலக்ஸி இசட் ப்ளிப் 2, கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் போல்டு லைட் மாடல்கள் என்றும் கூறப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி இசட் போல்டு 3 மாடலில் முதல் முறையாக அன்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே நாட்ச் 7.6 இன்ச்களில் இருந்து 7 இன்ச் ஆக குறைக்கப்பட்டு இரண்டாவது டிஸ்ப்ளே 4 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி இசட் ப்ளிப் 2 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் இன்டெர்னல் டிஸ்ப்ளே, 3 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே டிசைன் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. எனினும், இதுபோன்ற டிஸ்ப்ளே வழங்கப்படாது என்றே தெரிகிறது.

    கேலக்ஸி இசட் போல்டு லைட் ஸ்மார்ட்போன் இசட் போல்டு 3 மாடலில் உள்ள டிஸ்ப்ளே அம்சங்களுடன், சற்றே குறைந்த ஹார்டுவேர் மற்றும் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே போன்று அன்டர் டிஸ்ப்ளே கேமராவும் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படாது என கூறப்படுகிறது.
    செப்டம்பர் மாதத்தில் அதிக பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை இணைத்ததில் ஜியோ பைபர் முன்னணியில் இருந்தது.


    மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் செப்டம்பர் 2020 மாதம் வரையிலான காலக்கட்டத்தில் டாப் 5 பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் வையர்டு மற்றும் வயர்லெஸ் சேவை சேர்க்கப்பட்டு உள்ளது.

    டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பிஎஸ்என்எல் நிறுவனம் வையர்டு பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்களில் முதலிடம் பிடித்து இருக்கிறது. பிஎஸ்என்எல் சேவை சுமார் 78 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. வயர்லெஸ் பிரிவில் ஜியோ சுமார் 40.41 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது.

     கோப்புப்படம்

    வயர்லெஸ் பிரிவில் 4ஜி சிம் மற்றும் மொபைல் ஹாட்ஸ்பாட் டாங்கிள் உள்ளிட்டவை அடங்கும். அதன்படி வையர்டு மற்றும் வயர்லெஸ் பிராட்பேண்ட் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 55.85 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. செப்டம்பர் 2020 மாதத்தில் மட்டும் ஜியோ பைபர் சேவையில் மூன்று லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

    செப்டம்பர் 30 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் டாப் 5 வையர்டு பிராண்ட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் பிஎஸ்என்எல், பாரதி ஏர்டெல், அட்ரியா கன்வெர்ஜன்ஸ் டெக்னாலஜிஸ் (ACT), ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஹாத்வே கேபிள் உள்ளிட்டவை முறையே இடம்பெற்று இருக்கின்றன.

    இதேபோன்று வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவை நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா, பி.எஸ்.என்.எல். மற்றும் டிகோனா உள்ளிட்டவை முறையே முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. எனினும், புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறலாம் என கூறப்படுகிறது.

    தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் சோதனை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அறிமுகமாக சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் விலை ரூ. 4 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. 

    புதிய ஸ்மார்ட்போன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2ஜி பீச்சர் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 கோடி வாடிக்கையாளர்களிடம் புதிய ஸ்மார்ட்போனினை விற்பனை செய்ய ஜியோ இலக்கு நிர்ணயித்து உள்ளதாக கூறப்படுகிறது.

    இதேபோன்று ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை குவால்காம் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக குவால்காம் வென்ச்சர்ஸ் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் 0.15 சதவீத பங்குகளை வாங்க முதலீடு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பேஸ்புக் மீது அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.


    அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர்.

    இதனிடையே அமெரிக்க நிறுவனங்கள் தகுதி வாய்ந்த அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்காமல் குறைவான ஊதியத்தில் எச்1 பி விசாதாரர்களை பணியமர்த்தி வருவதாக ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனால் எச்1 பி விசா பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் விதித்து வருகிறது.

    இந்த நிலையில் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களை புறக்கணித்துவிட்டு வெளிநாட்டினருக்கு முன்னுரிமை அளிப்பதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

    இதுகுறித்து டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தகுதி வாய்ந்த அமெரிக்க தொழிலாளர்களுக்கு மாற்றாக எச் 1 பி விசா போன்ற தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காக பேஸ்புக் நிறுவனம் வேண்டுமென்றே ஒரு பணியமர்த்தல் முறையை உருவாக்கியது. இது தொடர்பாக அமெரிக்க நீதித்துறை 2 ஆண்டுகள் நடத்திய விசாரணைக்கு பிறகு அந்த நிறுவனத்தின் மீது தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்றார்.

    இந்த வழக்கில், ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த அமெரிக்க தொழிலாளர்களை கருத்தில் கொள்ளாமல் தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கு பதவிகளை ஒதுக்குவதன் மூலம் வேண்டுமென்றே மற்றும் பரவலாக சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக பேஸ்புக் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.

    மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 8 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த தகவல் மோட்டோ ட்விட்டர் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போனிற்கென ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேக வலைப்பக்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அறிமுக தேதி, நேரம் மட்டும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     மோட்டோ ஜி9 பவர்

    ஐரோப்பிய சந்தையில் மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1640 பிக்சல் IPS டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போனில் 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    கனெக்டிவிட்டிக்கும் வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 4ஜி எல்டிஇ உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இதன் விலை 199 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 17,400 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ×