search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள்
    X
    ஆப்பிள்

    ஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட புதிய மேக்புக் ப்ரோ வெளியீட்டு விவரம்

    ஆப்பிள் நிறுவனம் சிலிகான் பிராசஸர் கொண்ட இரண்டு புதிய மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் மேக்புக் ப்ரோ 13 மாடலினை ஆப்பிள் சிலிகான் பிராசஸருடன் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் தோற்றத்தில் பழைய மேக்புக் ப்ரோ போன்றே காட்சியளித்தது. இது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 

    இந்நிலையில், ஆப்பிள் வல்லுநர் மிங் சி கியூ வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இரண்டு புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் உருவாக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவற்றின் வெளிப்புற வடிவமைப்பு புதிதாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

     மேக்புக் ப்ரோ

    மேலும் புதிய மேக்புக் ப்ரோ மாடல்களில் மினி எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவற்றில் ஆப்பிள் சிலிகான் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய மேக்புக் ப்ரோ மாடல் 2021 ஆண்டு வாக்கில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

    மேக்புக் ப்ரோ வரிசையில் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட மேக்புக் ஏர் மாடல் 2022 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. 2022 ஆண்டு வாக்கில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 2.8 கோடி மினி எல்இடி சாதனங்களை விநியோகம் செய்யும் என கியோ கணித்து இருக்கிறார். 

    2021 ஆண்டில் மினி எல்இடி டிஸ்ப்ளேவுடன் மேக்புக் ப்ரோ மற்றும் ஐபேட் ப்ரோ சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இவை அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகமாகும் என தெரிகிறது.
    Next Story
    ×