search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "covid"

    • கொரோனா தொற்றுநோயை விட பறவைக் காய்ச்சல் ஆபத்தானது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
    • அமெரிக்காவின் 4 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    அன்டார்டிகாவில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 500-க்கும் மேற்பட்ட பென்குயின்கள் இறந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் ஃபெடரேஷன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், பென்குயின்களின் இறப்புக்கு பறவைக் காய்ச்சல் வைரஸ் காரணமாக இருக்கலாம். கடந்த ஒரு சில ஆண்டாகவே இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

    இதுகுறித்து அறிய அங்கிருந்து சேகரித்து வரப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பறவைக் காய்ச்சல் தொற்றுநோய் மிக தீவிரமானது. இது கொரோனா தொற்று நோயை விட 100 மடங்கு மோசமாக பரவுகிறது என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    2003 முதல் பறவைக் காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 100 நோயாளிகளில் 52 பேர் இறந்துள்ளனர். இதனால் இறப்பு விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    அமெரிக்காவின் 4 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் மனிதர் ஒருவர் இந்தத் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • கான்வே ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
    • நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆண்ட்ரே ஆடம்சுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் மோதும் நான்காவது 20 ஓவர் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி வீரர் கான்வேவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அணியில் அவருக்கு பதில் சாட்போவ்ஸ் சேர்க்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. அதே போல் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆண்ட்ரே ஆடம்சுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    • 1.1 சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
    • பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1200-ஐ கடந்துவிட்டது.

    இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி நாடு முழுக்க கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 840 ஆக இருந்த நிலையில், நேற்று 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 556 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த டிசம்பர் மாதத்தில் 100-க்கும் கீழ் குறைந்தது. எனினும், கடந்த சில நாட்கள் மற்றும் வாரங்களில் இந்த எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது. புதிதாக உருவாகி இருக்கும் கொரோனா ஜே.என். 1 வகை தொற்று மற்றும் குளிர்காலம் உள்ளிட்டவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

    இதனால் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 800-இல் இருந்து 4 ஆயிரத்து 500 ஆக அதிகரித்தது. எனினும், புதிதாக கொரோனா மூலம் பாதிக்கப்படுவோருக்கு தொற்றின் தீவிரம் குறைவாகவே இருந்துள்ளது. புதிய வகை தொற்று மூலம் பாதிக்கப்பட்ட பத்து பேர்களில் 1.1 சதவீதம் பேருக்கு மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

    புது வகை தொற்று குறித்து சுகாதார துறை வட்டாரங்கள் கூறும் போது, "17 மாநிலங்களில் ஜே.என். 1 வகை தொற்று மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1200-ஐ கடந்துவிட்ட போதிலும், இதுகுறித்து அதிகம் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை," என தெரிவிக்கப்பட்டது. 

    • டெல்லியில் ஜேஎன்- 1 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
    • புதிய வகை தொற்று லேசானது, இதனால் மக்கள் கடுமையாக நோய்வாய்ப்படுவதில்லை.

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஜேஎன் 1 என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், டெல்லியில் நேற்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இதன் மூலம் நாடு முழுக்க டிசம்பர் 26-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கொரோனா ஜே.என்.1 வகை மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்து இருப்பதாக சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    டெல்லியில் ஜேஎன்- 1 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, டெல்லியில் ஜேஎன்1 புதிய பாதிப்பு இல்லை என டெல்லி சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ் உறுதிப்படுத்தினார். 

    இதுகுறித்து அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில்," பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். நேற்று, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 636 சோதனைகளை மேற்கொண்டோம். மூன்று மரபணு வரிசைமுறை முடிவுகள் நேற்று வந்தன. அவற்றில் இரண்டு பழைய ஓமிக்ரான் வகைகள் மற்றும் ஒன்று ஜே.என்.1 ஆகும்.

    புதிய வகை தொற்று லேசானது, இதனால் மக்கள் கடுமையாக நோய்வாய்ப்படுவதில்லை.

    டெல்லியில் தற்போது ஜேஎன்-1 வகை புதி பாதிப்பு இல்லை.

    மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 692 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த  எண்ணிக்கையில் நான்கு அதிகரித்து, 4,097 ஐ எட்டியுள்ளது என்று சுகாதார அமைச்சக தரவு தெரிவித்துள்ளது.

    • கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்.
    • சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆய்வு.

    இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு புதிய வகை கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே. பால் தெரிவித்துள்ளார். கோவாவில் 19 பேருக்கும், மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் ஒருவருக்கும் கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

     


    "புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மத்திய மற்றும் மாநில அளவில் முறையான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்," என்று மந்திரி மாண்டவியா தெரிவித்தார்.

    கொரோனா இன்னும் நிறைவுபெறாத நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் மற்றும் அதன் தீவிரம் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் ஆகும். கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநில அரசுகள் விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • எட்டு நாட்களில் மட்டும் 825 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.
    • கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90 சதவீதம் அதிகரிப்பு.

    கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் அம்மாநிலத்தில் 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மட்டும் 825 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  

    கடந்த நவம்பர் மாதம் கொரோனா மூலம் ஒருவர் உயிரிழந்த நிலையில், டிசம்பரில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு கொண்டவர்கள் உயிரிழப்பது மிகவும் அரிதாகி இருக்கும் நிலையில், பாதிப்பின் தீவிரம் மிகவும் குறைவான நிலையிலேயே உள்ளது.

     


    "தற்போது கொரோனா பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வருகிறது என்ற போதிலும், அதன் தீவிரம் குறைவாக இருப்பதால், நிலைமை கட்டுக்குள்ளாகவே இருக்கிறது. எனினும், வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே உடல்நல பாதிப்பு கொண்டவர்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது," என மருத்துவர் முகமது நியாஸ் தெரிவித்து உள்ளார். 

    • ஒமிக்ரான் வேரியண்டின் புதிய XBB வகை கொரோனா திரிபு மூலம் அந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • கொரோனா தொற்றின் போது ஒரே நாளில் அதிகபட்சமாக சுமார் 3.7 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டது.

    சீனாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வேரியண்டை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகாரிகள் வேகமாக மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் மாத வாக்கில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை அடையும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் முதலே, ஒமிக்ரான் வேரியண்டின் புதிய XBB வகை கொரோனா திரிபு மூலம் அந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 4 கோடி பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வாரத்திற்கு அதிகபட்சம் 6.5 கோடி பேரை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

    சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஜீரோ கொவிட் திட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அந்நாட்டில் ஏற்படும் மிகப்பெரும் கொரோனா அலை இது ஆகும். முன்னதாக ஏற்பட்ட கொரோனா தொற்றின் போது ஒரே நாளில் அதிகபட்சமாக சுமார் 3.7 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் அந்நாட்டு சுகாதார துறை ஸ்தம்பித்தது.

    புதிய XBB திரிபு ஒமிக்ரான் BA.2.75 மற்றும் BJ.1 ஆகியவற்றின் ஹைப்ரிட் வேரியண்ட் ஆகும். இது BA.2.75 வேரியண்டை விட அதிவேகமாக பரவுவதோடு, நோய் எதிர்ப்பு திறனை வீரியம் கொண்டு அழிக்கும் திறன் கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு மண்டலம் XBB திரிபை கண்டறிய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். புதிய திரிபு வேகமாக செயல்பட்டு ஒருவருக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

    கொரோனா தொற்றின் புதிய திரிபு தேசத்தில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படும் நிலையில், இதனை எதிர்கொள்ள சீனா தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • நாட்டின் தலைநகரில் கடந்த 15 நாட்களாக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • டெல்லியில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 26,578 ஆக உயர்ந்துள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாட்டின் தலைநகரில் கடந்த 15 நாட்களாக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    டெல்லியில் இன்று (கடந்த 24 மணி) நேரத்தில் 1,767 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இது நேற்றை விட 15 சதவீதம் அதிகமாகும். நேற்றைய எண்ணிக்கை 1,537ஆக இருந்தது. மேலும், புதிய இறப்பு எண்ணிக்கையுடன், டெல்லியில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 26,578 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், கொரோனாவை சமாளிப்பதற்கான தயார் நிலையைக் கண்டறிய கடந்த 11ம் தேதி அன்று டெல்லி மருத்துவமனைகளில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒமைக்ரானின் துணை மாறுபாடு எக்ஸ்பிபி.1.16 வகை தொற்றும் பாதிப்பு அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வலியுறுத்தல்.
    • கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றார்.

    மும்பை:

    உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில் இந்தி திரையுல சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    79 வயதான அமிதாப் பச்சனுக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அமிதாப், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு கூர்ந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    எனினும் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளாரா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல்முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    ×