என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஆப்பிள் நிறுவனம் தனது 2021 ஐபேட் ப்ரோ உயர் ரக மாடல்களில் அதிவேக 5ஜி வசதி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஐபேட் ப்ரோ மாடல்களில் 5ஜி எம்எம்வேவ் தொழில்நுட்பத்தை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொழில்நுட்பம் அதிவேக இணைய இணைப்புகளை வழங்கும் திறன் கொண்டது.

    இதற்கென ஆப்பிள் சொந்தமாக எம்எம்வேவ் AiP (Antenna in Package) உருவாக்கி வருவதாகவும், இதனை ஐபோன் மட்டுமின்றி பல்வேறு இதர சாதனங்களிலும் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் இந்த தொழில்நுட்பம் அமெரிக்கர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 12 யூனிட்களில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது.

     5ஜி

    எனினும், அடுத்த ஆண்டு வாக்கில் இந்த தொழில்நுட்பம் பெருமளவு சாதனங்களில் வழங்கப்படலாம் என தெரிகிறது. அதன்படி 2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் எம்எம்வேவ் வசதி கொண்ட 5ஜி நெட்வொர்க் திறன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    முந்தைய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐபேட் ப்ரோ மாடல்களில் OLED ரக டிஸ்ப்ளேக்களை வழங்க இருப்பதாக கூறப்பட்டது. புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.


    விவோ நிறுவனம் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் விவோ வை1எஸ் என அழைக்கப்படுகிறது. இது ஆப்லைன் சந்தைக்கென வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும் இது ஜியோ வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக சலுகைகளை வழங்குகிறது.

    புதிய விவோ வை1எஸ் ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் புல்வியூ ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா பேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

     விவோ வை1எஸ்

    விவோ வை1எஸ் சிறப்பம்சங்கள்

    - 6.22 இன்ச் புல்வியூ ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
    - மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
    - 2 ஜிபி ரேம்
    - 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் 
    - 13 எம்பி பிரைமரி கேமரா
    - 5 எம்பி செல்பி கேமரா பேஸ் அன்லாக்
    - கிரேடியன்ட் பினிஷ்
    - 4030 எம்ஏஹெச் பேட்டரி
    - டூயல் சிம் ஸ்லாட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - எப்எம் ரேடியோ, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி

    விவோ வை1எஸ் ஸ்மார்ட்போன் ஆலிவ் பிளாக் மற்றும் அரோரா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ பயனர்களுக்கு ரூ. 4550 மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு அதிக வாய்ஸ் கால் நிமிடங்களை வழங்கும் சலுகைகளை பார்ப்போம்.


    ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளில் மற்ற நெட்வொர்க் எண்களுடன் வாய்ஸ் கால் செய்ய பேர் யூசேஜ் பாலிசி நடைமுறையை கடைப்பிடித்து வருகிறது. ஜியோவில் இருந்து ஜியோ எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. 

    எனினும், ஜியோ நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 3000 நிமிடங்கள் வரை வாய்ஸ் கால் வழங்கும் சலுகைகள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

     கோப்புப்படம்

    ரிலையன்ஸ் ஜியோ ரூ. 555 பிரீபெயிட் சலுகையில் 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    ஜியோ ரூ. 599 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 3000 நிமிட வாய்ஸ் கால் வசதி வழங்கப்படுகிறது. ரூ. 777 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

    இத்துடன் 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால், ஜியோ எண்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளிலும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    ஜியோ ரூ. 999 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இந்த சலுகை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் மொத்தம் 252 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    ரெட்மி பிராண்டின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ரெட்மி பிராண்டு தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. 

    ரெட்மி வாட்ச் மாடல் சதுரங்க வடிவம் கொண்ட டயல், வலது புறத்தில் பட்டன், 5 ஏடிஎம் சான்றுடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், 120 வாட்ச் பேஸ்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. 

     ரெட்மி வாட்ச்

    மேலும் 7 ஸ்போர்ட் மோட்கள், என்எப்சி வசதி, அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் இதர செயலிகளுக்கான நோட்டிபிகேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ரெட்மி வாட்ச் மாடலில் 230 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி அதிகபட்சம் 12 நாட்கள் வரை பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    சீன சந்தையில் ரெட்மி வாட்ச் மாடல் விலை RMB 269 இந்திய மதிப்பில் ரூ. 3,018 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரெட்மி வாட்ச் எலிகண்ட் பிளாக், இன்க் புளூ மற்றும் ஐவரி வைட் நிறங்களில் கிடைக்கிறது. முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகி இருக்கும் ரெட்மி வாட்ச் மற்ற சந்தைகளில் வெளியாவது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், டூயல் பிரைமரி கேமரா, மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 5 எம்பி செல்பி கேமரா, 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     நோக்கியா 2.4

    நோக்கியா 2.4 சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
    - மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
    - 3 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10
    - கைரேகை சென்சார்
    - 13 எம்பி பிரைமரி கேமரா
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 5 எம்பி செல்பி கேமரா
    - 4ஜி, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
    - 4500 எம்ஏஹெச் பேட்டரி
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மாடல் விலை ரூ. 10,399 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.

    புதிய நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் விற்பனை நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் டஸ்க், ஜோர்டு மற்றும் சார்கோல் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    விவோ நிறுவனம் உலகின் மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.


    விவோ நிறுவனம் தனது வி20 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் டிசம்பர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    புதிய வி20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது. மேலும் இது உலகின் மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போன் என விவோ தெரிவித்து இருக்கிறது.

     விவோ வி20 ப்ரோ

    விவோ வி20 ப்ரோ சிறப்பம்சங்கள்

    - 6.44 இன்ச் எப்ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
    - 44 எம்பி செல்பி கேமரா
    - 8 எம்பி அல்ட்ரா வைடு செல்பி கேமரா சென்சார்
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 64 எம்பி பிரைமரி கேமரா
    - 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ்
    - 2 எம்பி மோனோ சென்சார் 
    - பன்டச் ஒஎஸ்11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் விவோ எனர்ஜி கார்டியன் பிளாஷ்சார்ஜ் தொழில்நுட்பம்

    பப்ஜி மொபைல் இந்தியா வெளியீடு பற்றி மைக்ரோசாப்ட் அஸ்யூர் கொடுத்த அப்டேட் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    இந்திய கேமிங் சந்தையில் பப்ஜி மொபைல் மீண்டும் வெளியாக இருப்பது பயனர்கள் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை இந்த கேமின் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த கேம் விரைவில் வெளியாகலாம் என்ற வாக்கில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    பப்ஜி மொபைல் இந்தியாவில் மீண்டும் வெளியிட கேமர்களின் தரவுகளை மைக்ரோசாப்ட் அஸ்யூர் பிளாட்பார்மில் இந்திய எல்லைக்குள் சேமிக்கப்பட இருக்கின்றன. இதன் காரணமாக பலர் பப்ஜி மொபைல் இந்திய வெளியீட்டு தேதியை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் கேட்க தொடங்கினர். 

     மைக்ரோசாப்ட் அஸ்யூர்

    சிலர் மைக்ரோசாப்ட் அஸ்யூர் சமூக வலைதள பக்கங்களை டேக் செய்து இதே கேள்வியை எழுப்பினர். பயனர் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், மைக்ரோசாப்ட் அஸ்யூர் - பப்ஜி மொபைல் இந்திய வெளியீட்டிற்கு இதுவரை சரியான தேதி குறிக்கப்படவில்லை என தெரிவித்து இருக்கிறது. 

    மேலும் இந்த கேம் வெளியீட்டு விவரங்களை பப்ஜி மொபைல் இந்தியா பிரத்யேக வலைதளத்தில் அறிந்து கொள்ள முடியும் என்றும் மைக்ரோசாப்ட் அஸ்யூர் தெரிவித்து உள்ளது.
    ட்விட்டரில் மீண்டும் புளூ டிக் வெரிபிகேஷன் வழங்கப்பட்டு வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ட்விட்டர் தளத்தில் பயனாளர்களிடையே வெரிபிகேஷன் டிக் பெறுவதற்கு அதிக போட்டி இருந்து வந்தது. எனினும், புளூ டிக் வெரிபிகேஷன் சேவை 2017 ஆம் ஆண்டு வாக்கில் நிறுத்தப்பட்டது. புளூ டிக் முக்கியத்துவம் அனைவரும் அறிந்த ஒன்றே. பிரபலங்களுக்கு புளூ டிக் வெரிபிகேஷன் கொண்டு நலம் விரும்பிகளை அதிகரித்து கொள்ள முடியும். 

    இந்நிலையில், ட்விட்டர் புளூ டிக் வெரிபிகேஷன் சேவை 2021 ஆண்டு துவக்கத்தில் மீண்டும் துவங்கப்பட இருப்பதாக அறிவித்து உள்ளது. இம்முறை வெரிபிகேஷன் சேவையில் அதிக மாற்றங்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

     கோப்புப்படம்

    புளூ டிக் வெரிபிகேஷன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் கிடைக்கும். புளூ டிக் பெறுவதற்கான விதிமுறைகளில் ட்விட்டர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. புதிய விதிமுறைகளின் படி ஏற்கனவே புளூ டிக் வைத்திருப்பவர்களிடம் இருந்தும் புளூ டிக் பறிக்கப்பட இருக்கிறது.

    புதிய வெரிபிகேஷன் வழிமுறைகள் பற்றி பயனர்கள் கருத்து தெரிவிக்கலாம் என ட்விட்டர் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான கருத்துக்களை பயனர்கள் டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் சமர்பிக்கலாம்.   
    போக்கோ பிராண்டு சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளதாக அறிவித்து இருக்கிறது.


    சியோமியின் துணை பிராண்டாக அறிமுகமான போக்கோ பிராண்டு ஜனவரி மாத வாக்கில் போக்கோ பிராண்டு இனி தனி பிராண்டாக செயல்படும் என அறிவித்தது. இந்நிலையில் போக்கோ முற்றிலும் தனி பிராண்டு என்பதை மீண்டும் அறிவித்து இருக்கிறது.

    2018 ஆம் ஆண்டு போக்கோ எப்1 மாடலுடன் போக்கோ பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் விற்பனையில் சுமார் 22 லட்சம் யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனையாகி அசத்தியது. பிளாக்ஷிப் அம்சங்கள் நிறைந்த போக்கோ எப்1 மாடலை தொடர்ந்து போக்கோ பிராண்டு மிட் ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.

     போக்கோ ஸ்மார்ட்போன்

    இந்நிலையில் போக்கோ பிராண்டின் மொத்த ஸ்மார்ட்போன்கள் விற்பனை சர்வதேச சந்தையை உள்ளடக்கி சுமார் 60 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்து இருப்பதாக போக்கோ அறிவித்து உள்ளது. உலகம் முழுக்க 35 சந்தைகளில் போக்கோ பிராண்டு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.

    சர்வதேச சந்தையில் போக்கோ பிராண்டிங்கில் போக்கோ எப்1, எப்2 ப்ரோ, போக்கோ எக்ஸ்3, போக்கோ எம்3 போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. போக்கோ பிராண்டின் சமீபத்திய ஸ்மார்ட்போன் போக்கோ எம்3 ஆகும். இது போக்கோ எம்2 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடல் என கூறப்படுகிறது.

    புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் XT2125 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நியோ எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், மூன்று கேமரா சென்சார், இருவித ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

     மோட்டோ ஸ்மார்ட்போன்

    மோட்டோரோலா நியோ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

    - 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2520 பிக்சல் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
    - ஆண்ட்ராய்டு 11
    - 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
    - 64 எம்பி பிரைமரி கேமரா
    - 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - பன்ச் ஹோல் 16 எம்பி சென்சார்
    - யுஎஸ்பி டைப் சி
    - வைபை, ப்ளூடூத் 5 
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - பாஸ்ட் சார்ஜிங் வசதி

    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 9 5ஜி மற்றும் ரெட்மி நோட் 9 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.


    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 9 5ஜி மற்றும் ரெட்மி நோட் 9 4ஜி ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் டாப் எண்ட் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 108 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4820 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 9 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 6.53 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

     ரெட்மி நோட் 9 5ஜி

    இதில் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இவற்றுடன் ரெட்மி நோட் 9 4ஜி வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 6.53 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    சீன சந்தையில் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடல் துவக்க விலை 1599 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 17,940 என்றும் ரெட்மி நோட் 9 5ஜி மாடல் துவக்க விலை 1299 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 14,575 என்றும் ரெட்மி நோட் 9 4ஜி மாடல் 999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 11,210 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் கர்வ்டு கேமிங் மாணிட்டர் சீரிஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் ஒடிசி ஜி9 49 இன்ச் மற்றும் ஜி7 32 இன்ச், 27 இன்ச் உலகின் முதல் 1000ஆர் கேமிங் மாணிட்டர்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாணிட்டர்கள் டியுவி ரெயின்லாந்து ஐ கம்பர்ட் சான்று பெற்று இருக்கிறது. 

    49 இன்ச் ஒடிசி மாணிட்டர் உலகின் முதல் டூயல் குவாட் ஹை டெபனிஷன் மாணிட்டர் ஆகும். இதில் க்ரிஸ்டல் க்ளியர் QLED பிக்சர் குவாலிட்டி கொண்டுள்ளது. ஜி9 டிவி மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் கிளாஸி வைட் வெளிப்புறம் வழங்கப்பட்டு இருக்கிறது.

     சாம்சங் கேமிங் மாணிட்டர்

    சாம்சங் ஒடிசி ஜி7 மாடல் மெல்லிய வடிவமைப்பு, மேட் பிளாக் வெளிப்புறம் கொண்டிருக்கிறது. இதன் முன்புற பெசலில் டைனமிக் ஷேப் மற்றும் லைட்டிங் வழங்கப்பட்டு உள்ளது. 

    இந்தியாவில் சாம்சங் ஒடிசி ஜி7 32 இன்ச் மற்றும் 27 இன்ச் மாடல்கள் விலை ரூ.49 ஆயிரம் என்றும் ஜி9 49 இன்ச் மாடல் விலை ரூ. 1,99,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ×