என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    இந்தியாவில் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஒப்போ எப்17, ஏ15, ஏ12 மற்றும் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. 

    இம்முறை ஒப்போ ஸ்மார்ட்போன்கள் விலை அதிகபட்சம் ரூ. 2 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சந்தையில் ஏற்கனவே அமலாகி விட்டது.

     ஒப்போ ஸ்மார்ட்போன்

    விலை குறைப்பின் படி ஒப்போ எப்17 ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 18,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒப்போ எப்17 சீரிஸ் ஒரு வேரியண்ட்டிற்கு மட்டுமே விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் 2 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 9,490 விலையில் இருந்து தற்சமயம் ரூ. 8,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 1000 விலை குறைக்கப்பட்டு ரூ. 9990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    ரூ. 9490 விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒப்போ ஏ12 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் தற்சமயம் ரூ. 8990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    சீல் செய்யப்பட்ட சூப்பர் மேரியோ ப்ரோஸ் 3 இந்திய மதிப்பில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

    சூப்பர் மேரியோ ப்ரோஸ் 3 சீல் செய்யப்பட்ட வீடியோ கேம் 1,56,000 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,15,48,758 விலைக்கு ஏலம் விடப்பட்டு இருக்கிறது. வீடியோ கேம் ஏல விற்பனை வரலாற்றில் இத்தனை கோடிகளுக்கு ஏலம் போன வீடியோ கேம் இது தான் என எக்ஸ்ப்ளிகா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நவம்பர் 20 ஆம் தேதி இந்த கேமிற்கான ஏலம் நடைபெற்றது. இந்த வீடியோ கேமிற்கான துவக்க விலை 62 ஆயிரம் டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தம் 20 பேர் கலந்து கொண்டனர். 

     சூப்பர் மேரியோ ப்ரோஸ் 3

    முன்னதாக சூப்பர் மேரியோ ப்ரோ என்இஎஸ் 11400 டாலர்களுக்கு ஏலம் போனது. அந்த வகையில் இம்முறை இதுவரை இல்லாத அளவு அதிக தொகைக்கு வீடியோ கேம் விற்பனையாகி இருக்கிறது. 

    வீடியோ கேம் ஏல தொகை இத்தனை லட்சம் டாலர்கள் வரை சென்று இருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
    கூகுள் நிறுவனம் தடை செய்யப்பட்ட தரவுகளை நீக்க தவறி விட்டதாக கூறி ரஷியா வழக்கு தொடர்ந்து இருக்கிறது.

    இணைய தேடலில் அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி பயனாளர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ரஷியாவில் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்க தவறி விட்டதாக கூறி கூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

     கோப்புப்படம்

    இதுகுறித்து ரஷியாவின் தகவல் கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் “பயங்கரவாதம், ஆபாசம் மற்றும் தற்கொலையை தூண்டுவது உள்ளிட்ட ஆபத்தான தரவுகளை அகற்ற கூகுள் தவறிவிட்டது.

    எனவே கூகுள் நிறுவனத்துக்கு எதிராக ரஷிய அரசு நிர்வாக நடவடிக்கைகளை துவங்கி உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது மட்டுமல்லாமல் 65 ஆயிரத்து 670 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 48 லட்சத்து 60 ஆயிரம்) அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
    கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனங்களை பிஎஸ்என்எல் குறைந்த விலையில் வழங்குகிறது.


    பிஎஸ்என்எல் நிறுவன பாரத் பைபர் பயனர்களுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பாரத் பைபர் பயனர்கள் கூகுள் நெஸ்ட் மினி மற்றும் கூகுள் நெஸ்ட் ஹப் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை முறையே ரூ. 99 மற்றும் ரூ. 199 மாத கட்டணத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

    இதுதவிர மேம்பட்ட பாரத் பைபர் சலுகையினை பயனர்கள் 12 மாதங்கள், 24 மாதங்கள் மற்றும் 36 மாதங்களுக்கு இண்டர்நெட் பேக் தேர்வு செய்யும் போது முறையே 10.5 மாதங்கள், 20.5 மாதங்கள் மற்றும் 30.5 மாதங்களுக்கான கட்டணத்தை செலுத்தினாலே போதுமானது. 

     கோப்புப்படம்

    இதேபோன்று கூகுள் நெஸ்ட் ஹப் வாங்குவோர் மாதம் ரூ. 199 கட்டணத்தை 12 மாதங்களுக்கு செலுத்த வேண்டும். புதிய பிஎஸ்என்எல் சலுகை அந்நிறுவன வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் தற்சமயம் கூகுள் நெஸ்ட் ஹப் விலை ரூ. 9,999 என்றும் கூகுள் நெஸ்ட் மினி விலை ரூ. 4,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    இந்த சலுகை விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த சலுகை மார்ச் 31, 2021 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை பயனர்கள் பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ வலைதளம் சென்று ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 

    இந்தியர்களுக்கான பிரத்யேக மொபைல் கேமாக பப்ஜி விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.


    பப்ஜி மொபைல் கேம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது முதல் மீண்டும் இந்த கேம் வெளியாகாதா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. பலரின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பப்ஜி மொபைல் விரைவில் வெளியாகும் என்ற தகவல் கிடைத்து இருக்கிறது.

    பப்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் பெயரில் தனி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் பப்ஜி மொபைல் விரைவில் இந்தியாவில் வெளியாகலாம். பப்ஜி இந்தியா நிறுவனம் நவம்பர் 21 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறும் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வெளியாகி உள்ளது.

     பப்ஜி

    முன்னதாக பப்ஜி இந்தியா வலைதளத்தில் பப்ஜி மொபைல் கேமிற்கான ஏபிகே பைல் காணப்படுவதாக பலர் இணையத்தில் தெரிவித்து வந்தனர். எனினும், இந்த கேமிற்கான சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

    இந்தியாவில் மீண்டும் வெளியாக பப்ஜி மொபைல் கேமில் அதிகப்படியான மாற்றங்களை எதிர்கொள்ள பயனர்கள் தயாராக இருக்க வேண்டும் என பப்ஜி மொபைல் இந்தியா குழு தெரிவித்து இருக்கிறது. அதன்படி இந்திய வெர்ஷனில் பெருமளவு மாற்றங்கள் இருக்கலாம் என தெரிகிறது.

    6000 எம்ஏஹெச் பேட்டரி, மூன்று கேமரா சென்சார்கள் கொண்ட போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.


    போக்கோ பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி போக்கோ எம்3 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.

    முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கும் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

     போக்கோ எம்3

    போக்கோ எம்3 சிறப்பம்சங்கள்

    - 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 LCD ஸ்கிரான்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 4 ஜிபி LPPDDR4x ரேம் 
    - 64 ஜிபி (UFS 2.1) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, எல்இடி பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி 4cm மேக்ரோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.05
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    சர்வதேச சந்தையில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் பவர் பிளாக், கூல் புளூ மற்றும் போக்கோ எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை 149 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 11,035 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 12,515 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    தரைவழி தொலைபேசியில் இருந்து செல்போன் எண்ணுக்கு பேசும்போது, அந்த எண்களுக்கு முன்பாக ‘0’ சேர்க்க வேண்டும். இந்த நடைமுறை ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது.
    புதுடெல்லி:

    லேண்ட்லைன் என்று அழைக்கப்படுகிற தரைவழி தொலைபேசியில் இருந்து எந்தவொரு செல்போன் எண்ணுக்கு பேச வேண்டும் என்றாலும் அந்த எண்களை ‘டயல்’ செய்வதற்கு முன்பாக முதலில் பூஜ்ஜியத்தை (0) சேர்த்து ‘டயல்’ செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய், மத்திய தொலைதொடர்பு துறைக்கு கடந்த மே மாதம் 29-ந்தேதி பரிந்துரை செய்திருந்தது.

    இது, தொலைதொடர்பு சேவைகளுக்கு போதுமான எண்ணிக்கையிலான இடத்தை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.

    இந்த பரிந்துரையை மத்திய தொலைதொடர்பு துறை இப்போது ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை அந்த துறை கடந்த 20-ந்தேதி வெளியிட்டுள்ளது.

    தரைவழி தொலைபேசியில் இருந்து வாடிக்கையாளர்கள் செல்போன் எண்களை அழைத்து பேசுவதற்காக ‘0’ டயலிங் வசதி (எஸ்.டி.டி. வசதி) வழங்கப்பட வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வசதியை தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், தரைவழி தொலைபேசி சந்தாதாரர்களுக்கு செய்து தருவதற்கு ஜனவரி 1-ந்தேதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த புதிய நடைமுறை ஜனவரி 1-ந்தேதி நடைமுறைக்கு வரும்.

    இந்த புதிய நடைமுறையினால், செல்போன் சேவைக்கு புதிதாக 2,544 மில்லியன் கூடுதல் எண்களை உருவாக்க முடியும் என டிராய் கூறி உள்ளது.
    ரெட்மி நோட் 9 5ஜி ஸ்மார்ட்போனிற்கான புதிய டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.


    ரெட்மி பிராண்டு அதிகாரி ஒருவர் ரெட்மி நோட் 9 5ஜி மாடல் டீசரை வெளியிட்டு இருக்கிறார். டீசர்களில் ஸ்மார்ட்போனின் பின்புறம் வட்ட வடிவ கேமரா பம்ப் காணப்படுகிறது. அதில் நான்கு கேமரா சென்சார்கள், எல்இடி பிளாஷ் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

    இத்துடன் அறிமுகமாகும் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடலில் 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிகழ்வில் மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகலாம் என தெரிகிறது.

     ரெட்மி நோட் 9 5ஜி

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 9 5ஜி மாடலில் 6.53 இன்ச் FHD+ பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 800யு அல்லது டிமென்சிட்டி 720 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா சேர்த்து மூன்று கேமரா லென்ஸ், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.

    ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடல் 6.67 இன்ச் பன்ச் ஹோல் எல்சிடி பேனல் டிஸ்ப்ளே, 108 எம்பி பிரைமரி கேமரா, 4820 எம்ஏஹெச் பேட்டரி, 33வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. 
    ஸ்னாப்சாட் நிறுவனம் அதிரடி பரிசு தொகையுடன் ஸ்பாட்லைட் பெயரில் புதிய சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஸ்னாப் நிறுவனம் டிக்டாக் போன்று செயல்படும் புதிய அம்சத்தை ஸ்பாட்லைட் எனும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களின் மிகவும் பொழுதுபோக்கான ஸ்னாப்களை பதிவு செய்து பரிசு வென்றிட வழி செய்கிறது.  

    ஸ்பாட்லைட் சேவையை பயன்படுத்த வைக்கும் நோக்கில் ஸ்னாப்சாட் அதிகபட்சம் 1 மில்லியன் டாலர்கள் வரையிலான பரிசு தொகையை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வோர் குறைந்தபட்சம் 16 வயதுடையவராக இருக்க வேண்டும். 

     ஸ்பாட்லைட்

    மேலும் ஸ்னாப் அறிவித்து இருக்கும் வழிமுறைகளை சரியாக பின்பற்றியிருக்க வேண்டும். வீடியோக்கள் 60 நொடிகளில் செங்குத்தாக சவுண்ட் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். புகைப்படங்கள், செங்குத்தாக இருக்கும் படங்கள், தெளிவற்ற படங்கள், எழுத்துக்கள் மட்டும் அடங்கிய ஸ்னாப்கள் ஸ்பாட்லைட்டில் இடம்பெறாது.

    பயனர்கள் கேமரா ரோலில் இருந்தபடி ஸ்பாட்லைட்டிற்கு பதிவு செய்ய முடியும். இதற்கு பயனர்கள் Send To பக்கத்தில் #topic என குறிப்பிட்டு தங்களின் சிறந்த ஸ்னாப்களை அனுப்பலாம். எனினும், நாள் ஒன்றிற்கு இத்தனை பதிவுகள் தான என கட்டுப்பாடுகள் உள்ளன. 

    தற்சமயம் ஸ்னாப்சாட் ஸ்பாட்லைட் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஐயர்லாந்து, நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் இது மற்ற நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.
    போக்கோ இந்தியா பிராண்டு புதிய போக்கோ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

    போக்கோ பிராண்டு இந்திய சந்தையில் தொடர்ந்து புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. முன்னதாக போக்கோ எக்ஸ்2 மற்றும் போக்கோ சி3 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், புதிய எப் சீரிஸ் மாடல் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை.

    போக்கோ எப்1 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. போக்கோ எப்2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. போக்கோ எப்2 ப்ரோ முந்தைய போக்கோ எப்1 மாடலின் சரியான அப்டேட் ஆக இருக்காது.

     போக்கோ போன்

    புதிய எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக போக்கோ இந்தியா இயக்குனர் அனுஜ் ஷர்மா மற்றும் பொது மேலாளர் மன்மோகன் ஆகியோர் சமீபத்திய ASK ME ANYTHING நிகழ்வில் தெரிவித்து இருக்கின்றனர்.  

    அந்த வகையில் போக்கோ எப்1 மாடலின் மேம்பட்ட மாடலாக போக்கோ எப்2-வை எதிர்பார்க்கலாம். மேலும் இந்த மாடல் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபேட் ப்ரோ மாடலில் முற்றிலும் புதிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.


    2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் புதிய டிஸ்ப்ளே பேனல் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பேனல்களை சாம்சங் உற்பத்தி செய்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    தென் கொரியாவில் இயங்கி வரும் சாம்சங் உற்பத்தி ஆலைகளில் ஒன்றை 2021 ஐபேட் ப்ரோ மாடலுக்கான டிஸ்ப்ளே பேனல்களை உற்பத்தி செய்ய வசதியாக மாற்றப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு  OLED பேனல்களை உற்பத்தி செய்து வழங்கலாம் என தெரிகிறது.

     ஐபேட் ப்ரோ

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபேட் ப்ரோ மாடல்களில் மினி எல்இடி டிஸ்ப்ளே வழங்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த டிஸ்ப்ளே பேனல்கள் அதிக காண்டிராஸ்ட், மேம்பட்ட டைனமிக் ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டவை ஆகும்.

    மேலும் இவை அதிகளவு பேட்டரியை சேமிக்கும் திறன் கொண்டவை ஆகும். தற்சமயம் ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் OLED டிஸ்ப்ளே பேனல்களை வழங்கி வருகிறது. இதே தொழில்நுட்பம் ஐபேட் மற்றும் மேக் மாடல்களில் பயன்படுத்த அதிக செலவாகும் என தெரிகிறது.

    அந்த வகையில் ஆப்பிள் தனது ஐபேட் மாடல்களில் OLED பேனல்களை கட்டாயம் வழங்குமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாகவே உள்ளது.
    இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இந்தியாவில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி கேலக்ஸி எம் 01, கேலக்ஸி எம்01எஸ் மற்றும் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு நவம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

     கேலக்ஸி எம்01

    கேலக்ஸி எம்01 

    பழைய விலை ரூ. 7999 
    விலை குறைப்பு ரூ. 500 

    தற்சமயம் ரூ. 7499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 5.3 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் எம்டி6739 பிராசஸர், ஆண்ட்ராய்டு கோ ஒஎஸ், 3000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் 

    பழைய விலை ரூ. 9,999
    விலை குறைப்பு ரூ. 1000 

    தற்சமயம் ரூ. 8999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் பிராசஸர், 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டு உள்ளது.

    கேலக்ஸி எம்11 

    பழைய விலை ரூ. 10,499
    விலை குறைப்பு ரூ. 500 

    தற்சமயம் ரூ. 9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 6.4 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
    ×