என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ரெட்மி நோட் 9 சீரிசுக்கு போட்டியாக உருவாகும் லெனோவோ ஸ்மார்ட்போன் சீரிஸ் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
லெனோவோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. லெனோவோ புது ஸ்மார்ட்போன் சீரிஸ் நவம்பர் 26 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகிறது.
புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் லெமன் சீரிஸ் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. டீசர்களின் படி மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என தெரிகிறது. மேலும் இது பார்க்க தலைகீழாக ரெட்மி டீசர் போன்றே காட்சியளிக்கிறது.

லெனோவோ லெமன் சீரிஸ் மாடல்கள் குறைந்த விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இது அதிக வரவேற்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் லெனோனோ நிறுவனம் லெமன் பிராண்டு ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் விற்பனை செய்து வந்தது.
எனினும், இவற்றின் விற்பனை ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டது. அந்த வகையில் இந்த பிராண்டு மீண்டும் விற்பனைக்கு வர இருப்பது தெரியவந்துள்ளது.
போக்கோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
போக்கோ பிராண்டின் புதி எம்3 ஸ்மார்ட்போன் நாளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
அதன்படி புதிய போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

போக்கோ எம்3 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- டெப்த் / மேக்ரோ கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங்
எல்ஜி நிறுவனம் புதிதாக ரோலபிள் லேப்டாப் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எல்ஜி நிறுவனம் நிறுவனம் 17 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ரோலபிள் லேப்டாப் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த லேப்டாப் மடிக்கக்கூடிய கீபோர்டு மற்றும் டச்பேட் கொண்டிருக்கும் என தெரிகிறது.
இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை எனினும், ரோபலிள் லேப்டாப் விவரங்கள் காப்புரிமை விண்ணப்பத்தில் இருந்து வெளியாகி இருக்கிறது. புதிய ரோலபிள் லேப்டாப் 13.3 இன்ச் முதல் 17 இன்ச் வரையிலான அளவுகளில் அன்ரோல் ஆகும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த லேப்டாப்களின் பக்கவாட்டில் பவர் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. ரோல் செய்யப்பட்ட நிலையில், லேப்டாப்பில் இருக்கும் வெப்கேமரா மறைந்து கொள்கிறது. மேலும் இந்த லேப்டாப்புடன் வழங்கப்படும் கீபோர்டு மற்றும் டச்பேட் பாதியாக மடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ரோலபிள் லேப்டாப் பற்றி எல்ஜி சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வழங்கப்படவில்லை. அந்த வகையில் இது வெறும் கான்செப்ட் ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அசத்தல் கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ் தவிர சாம்சங் மடிக்கக்கூடிய கேலக்ஸி இசட் போல்டு 3 ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், புதிய கேலக்ஸி இசட் போல்டு 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல் உண்மையாகும் பட்சத்தில் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு இந்த கேமரா தொழில்நுட்பத்தை சாம்சங் வழங்குவது இதுவே முதல் முறையாக இருக்கும். இதுவரை சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கின்றன.
அந்த வகையில் புதிய அன்டர் டிஸ்ப்ளே சிஸ்டம் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இதனை சரி செய்யும் வகையில் கேலக்ஸி இசட் போல்டு 3 மாடலில் சிறப்பான சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கென சாம்சங் பிரத்யேக டிஸ்ப்ளே டிசைன் பயன்படுத்தலாம் என தெரிகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜூம் சேவையுடனான போட்டியை எதிர்கொள்ள அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் நாள் முழுக்க இலவச வீடியோ மற்றும் வாய்ஸ் கால் வசதியை வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு ஜூம் சேவையுடனான போட்டியை எதிர்கொள்ளும் வகையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய அறிவிப்பின் படி மைக்ரோசாப்ட் டீம்ஸ் இலவச சேவையில் அதிகபட்சம் 300 பேர் வரை கலந்து கொண்டு சுமார் 24 மணி நேரத்திற்கு உரையாட முடியும். சமீபத்தில் Thanksgiving தினத்தை முன்னிட்டு ஜூம் தனது சேவையில் 40 நிமிடங்களுக்கு வழங்கப்பட்ட சேவையை தற்காலிகமாக நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் ஜூம் சேவை அறிவிப்பை தொடர்ந்து மைக்ரோசாப்ட் இலவச அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இலவச சேவை மட்டுமின்றி மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் அதிகபட்சம் 249 பேருடன் சாட் செய்யும் வசதி, 49 பேருடன் விர்ச்சுவல் உரையாடல்களை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் வசதியை வழங்கும் அப்டேட் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது.
நாள் முழுக்க வீடியோ காலிங் வசதியுடன் மைக்ரோசாப்ட் டீம்ஸ் ஜூம் சேவையை பயன்படுத்துவோரை ஈர்க்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. புதிய இலவச சேவை வசதியை மைக்ரோசாப்ட் தனது வலைதள பதிவின் மூலம் அறிவித்து இருக்கிறது.
அமெரிக்காவின் 33 மாகாண அரசுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் 113 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா:
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன் 6, ஐபோன் 7 மற்றும் ஐபோன் எஸ்இ ஆகிய மாடல்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு புதிய அம்சங்களை வழங்கும் அப்டேட்கள் வழங்கப்பட்டது.
அந்த அப்டேட்களால் ஐபோனின் பேட்டரி திறன் குறைந்தது. இந்த பேட்டரி திறனை அதிகரிப்பதற்காக புதிய சாப்ட்வேர் அப்டேட் ஒன்றை ஆப்பிள் வெளியிட்டது.
அந்த சாப்ட்வேரை அப்டேட் செய்த சில நாட்களுக்கு பின்னர் பயனாளிகளின் ஐபோன் செயல் வேகம் பெருமளவு குறைந்தது. இது ஐபோன் பயனாளர்களை தங்கள் பழைய ஐபோனில் இருந்து புதிய ஐபோன் வாங்க தூண்டியது. இதன் மூலம் ஐபோன் விற்பனை அதிகரித்தது.
இதற்கிடையில், புதிய ஐபோன்களை விற்பனை செய்வதற்காக பழைய ஐபோன்களில் பேட்டரி செயல்திறனை வேண்டுமென்றே குறைத்ததாக ஆப்பிள் நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள 33 மாகாண அரசுகளின் ஒழுங்குமுறை ஆணையர்கள் வழக்குத்தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கு மீதான தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் பேட்டரி செயல்திறனை வேண்டுமென்றே குறைத்ததற்காக 33 மாகாண அரசுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் 113 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 113 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடை 33 மாகாண அரசுகளுக்கு வழங்க ஆப்பிள் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.
2020 ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டுகள் இவை தான் என நார்டுபாஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
2020 ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டு ‘123456' என நார்டுபாஸ் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாஸ்வேர்டு சுமார் 2.3 கோடி முறை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உலகம் முழுக்க பெரும்பாலானோர் ‘123456' பாஸ்வேர்டை பயன்படுத்தி இருக்கின்றனர். நார்டுபாஸ் வெளியிட்டு இருக்கும் மோசமான பாஸ்வேர்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 200 பாஸ்வேர்டுகள் இடம்பெற்று இருக்கும். இந்த வரிசையில் இரண்டாவது மோசமான பாஸ்வேர்டு ‘123456789' இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ‘picture1' இருக்கிறது.

2015 ஆண்டு வாக்கில் வெளியான இதேபோன்ற அறிக்கையில் மென்பொருள் ஆய்வு நிறுவனம் மோசமான பாஸ்வேர்டுகளை பட்டியலிட்டது. அப்போதும் ‘123456' முதலிடம் பிடித்து இருந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ‘password' இருந்தது.
தற்சமயம் ஐந்து ஆண்டுகள் கழிந்தும் மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியலில் ‘123456' முதலிடம் பிடித்து இருக்கிறது. ‘password' இம்முறை நான்காவது இடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின் மூலம் மக்கள் மிக எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள கூடிய பாஸ்வேர்டுகளை அதிகம் விரும்புவது தெளிவாக தெரிகிறது.
ஹூவாய் நிறுவனத்தின் புதிய மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஹூவாய் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இதில் ஒரு மாடல் மேட் எக்ஸ்2 என்றும் மற்றொரு ஹூவாய் ஸ்மார்ட்போன் CDL-AN50 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. இரு மாடல்களும் சீனாவின் TENAA சான்றளிக்கும் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
சீன வலைதளத்தில் மேட் எக்ஸ்2 விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், CDL-AN50 மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் தெரியவந்துள்ளது. மேட் எக்ஸ்2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்பதால் முந்தைய மாடலை விட சிறப்பான ஹின்ஜ் டிசைன், மேம்பட்ட ஹார்டுவேர் வழங்கப்படலாம் என தெரிகிறது.

முன்னதாக வெளியான தகவல்களின் படி மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் 8.3 இன்ச் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரெசல்யூஷன், கிரின் 9000 சிப்செட், 5ஜி வசதி, Hi1105, வைபை 6, ப்ளூடூத் 5.1, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் சார்ந்த EMUI 11, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் OLED பேனல், டூயல் கார்டு ஸ்லாட், அதிக ரெசல்யூஷன் செல்பி கேமரா, 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 3900 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படு இருக்கிறது.
இந்தியாவில் தனது ஸ்டிரீமிங் சேவையை முற்றிலும் இலவசமாக வழங்குவதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் சேவை டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இது விளம்பர நோக்கில், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இலவச சலுகை ஸ்டிரீம்பெஸ்ட் எனும் பெயரில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த சலுகை டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அமலாக இருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வார இறுதிநாட்களில் நெட்ப்ளிக்ஸ் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் பதிவு செய்யவோ, கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 4 ஆம் தேதிக்கு பின் எப்போது வேண்டுமானாலும் 48 மணி நேரத்திற்கு நெட்ப்ளிக்ஸ் சேவையை இலவசமாக ஸ்டிரீம் செய்து பார்க்க முடியும்.
இந்த 48 மணி நேரத்திற்கு பயனர்கள் நெட்ப்ளிக்ஸ் சேவையில் பதிவு செய்யவோ, கட்டணம் செலுத்தவோ அவசியம் இல்லை. இதுவரை 30 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்படுகிறது. எனினும், இதனை பயன்படுத்த பயனர் தங்களின் விவரங்களை வழங்க வேண்டும். ஸ்டிரீம்பெஸ்ட் சேவை நிறைவுறும் போது எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
சியோமியின் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சியோமி நிறுவனம் தனது ரெட்மி 9 5ஜி மற்றும் நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் நவம்பர் 26 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிது. இதைத் தொடர்ந்து, ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
கீக்பென்ச் விவரங்களின் படி ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அட்ரினோ 619 ஜிபியு, 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் கோரில் 645 புள்ளிகளையும், மல்டி கோரில் 1963 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.

இதுதவிர ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடல் 6.67 இன்ச் பன்ச் ஹோல் எல்சிடி பேனல் டிஸ்ப்ளே, 108 எம்பி பிரைமரி கேமரா, 4820 எம்ஏஹெச் பேட்டரி, 33வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் ரெட்மி நோட் 9 5ஜி மாடலில் 6.53 இன்ச் FHD+ பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 800யு அல்லது டிமென்சிட்டி 720 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா சேர்த்து மூன்று கேமரா லென்ஸ், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை வர்த்தக வெளியீடு பற்றி மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 4ஜி சேவை அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை. எனினும், அரசாங்கம் விரைவில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது.
வர்த்தக ரீதியில் 4ஜி வெளியீட்டு விவகாரத்தில் நாங்கள் எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்க முடியாது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் தான் இதுபற்றிய இறுதி முடிவை எடுக்க வேண்டும் என மூத்த அதிகாரி ஒருவர் தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

ஏற்கனவே இதுபற்றி மத்திய அமைச்சகத்திற்கு பிஎஸ்என்எல் சார்பில் பதில் அளிக்கப்பட்டு விட்டது. எனினும், இதற்கு எம்பவர்டு டெக்னாலஜி குரூப் பரிந்துரை வழங்க வேண்டும்.
ரிலையன்ஸ் ஜியோவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் திறன் இருந்தும் மத்திய அரசு பிஎஸ்என்எல் சலுகை விஷயத்தில் அலட்சியம் காட்டி வருவதாக கூறி பிஎஸ்என்எல் அதிகாரிகள் நவம்பர் 26 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளனர்.
இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ 2016 ஆண்டு வாக்கில் குறைந்த விலை டேட்டா வழங்கும் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து களமிறங்கியது. தற்சமயம் டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக உருவெடுத்து இருப்பதோடு டெலிகாம் சந்தையை முழுமையாக மாற்றியமைத்து இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் உருவாகும் கேலக்ஸி இசட் ப்ளிப் லைட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது.
சாம்சங் நிறுவனம் இதுவரை மூன்று மடிக்கக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை மூன்றும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலை விரைவில் மாறலாம் என தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேலக்ஸி இசட் ப்ளிப் லைட் எனும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சாம்சங் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிக மெல்லிய கிளாஸ் (UTG) தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக தெரிகிறது.

இதே தொழில்நுட்பம் கேலக்ஸி போல்டு 2 மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் நிறுவனம் மிக மெல்லிய கிளாஸ் உற்பத்திக்கு ஆகும் செலவை குறைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் எதிர்கால மடிக்கக்கூடிய சாதனங்களிலும் இதே கிளாஸ் பயன்படுத்தப்படலாம்.
குறைந்த விலையில் கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதன் மூலம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மீது கூறப்படும் பெரும் குறையை சரி செய்ய முடியும்.
2021 ஆண்டு ஜனவரியில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21, எஸ்21 பிளஸ், எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களையும், அதன்பின் கேல்க்ஸி எஸ்21 எப்இ, கேலக்ஸி இசட் போல்டு 3, இசட் ப்ளிப் 3 மற்றும் இசட் போல்டு எப்இ உள்ளிட்ட மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.






