என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ஐகியர் நிறுவனம் புதிய ட்ரூ வயர்லெஸ் சவுண்ட்பார் மாடலை இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவை சேர்ந்த அக்சஸரீ பிராண்டு ஐகியர் புதிதாக ட்ரூ வயர்லெஸ் போர்டபிள் சவுண்ட்பார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய சவுண்ட்பார் என்செம்பிள் என அழைக்கப்படுகிறது.
இந்த சவுண்ட்பார் பில்ட்-இன் சப் வூபர், 20 வாட் பவர் வழங்குகிறது. இது பேட்டரியால் இயங்குகிறது. மேலும் இது மறு சுழற்சி செய்யப்பட்ட மரத்தால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது வழக்கமான ஏபிஎஸ் பிளாஸ்டிக் ஸ்பீக்கர்களை விட சிறப்பான ஆடியோ தரம் வழங்குகிறது.

அதிகபட்சம் 20 வாட் பவர் அவுட்புட் வழங்கும் ஐகியர் என்செம்பிள் முன்புறத்தில் நான்கு 5 வாட் ஸ்ப்லிட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இதில் உள்ள பில்ட்-இன் சப் வூபர் அதிக பேஸ் வழங்குகிறது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5 வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இவற்றுடன் பில்ட் இன் எப்எம் ரேடியோ, யுஎஸ்பி போர்ட், 2400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்பீக்கர் 3 முதல் 5 மணி நேர பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஐகியர் என்செம்பிள் போர்டபிள் ஸ்பீக்கர் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஜியோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குவாட் கேமராக்கள், 5100 எம்ஏஹெச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஜியோனி நிறுவனம் தனது புதிய எம்12 ஸ்மார்ட்போனினை நைஜீரிய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 48 எம்பி கேமராவுடன் குவாட் சென்சார்கள், 5100 எம்ஏஹெச் பேட்டரி, அதிகபட்சம் 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, மீடியாடெக் ஹீலியோ ஏ25 மற்றும் பி22 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

ஜியோனி எம்12 சிறப்பம்சங்கள்
- 6.55 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
- மீடியாடெக் ஹீலியோ ஏ25 மற்றும் பி22 பிராசஸர்
- 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
- 48 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ்
- 2 எம்பி + 2 எம்பி கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார்
- பேஸ் அன்லாக்
- 5100 எம்ஏஹெச் பேட்டரி
ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் நைஜீரியாவில் ஹீலியோ ஏ25 பிராசஸர், 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் NGN 78,900 இந்திய சந்தையில் ரூ. 15,400 என்றும், ஹீலியோ பி22 மாடல் NGN 85,000 இந்திய சந்தையில் ரூ. 16,600 என்றும் ஹீலியோ பி22 சிப்செட், 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் NGN 75,000 இந்திய சந்தையில் ரூ. 14,600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர் கொண்ட ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் விர்ச்சுவல் நிகழ்வு மூலம் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஏற்கனவே ஆகஸ்ட் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி வி5 ஸ்மார்ட்போனின் ரீ பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர், குவாட் கேமரா சென்சார், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே டிசைன், டூயல் 5ஜி கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி 7 5ஜி சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர்
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 48 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- மேக்ரோ சென்சார்
- மோனோகுரோம் சென்சார்
- 16 எம்பி செல்பி கேமரா
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
- டூயல் சிம் ஸ்லாட்
- 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
புதிய ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போனின் விலை GBP 279, இந்திய மதிப்பில் ரூ. 27,400 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பால்டிக் புளூ நிறத்தில் கிடைக்கிறது.
இந்தியாவில் பண்டிகை காலக்கட்டத்தில் ரியல்மி பிராண்டு பல லட்சம் சாதனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்து இருக்கிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி இந்திய சந்தையில் சமீபத்திய பண்டிகை காலக்கட்டத்தில் மட்டும் ரியல்மி நிறுவனம் சுமார் 83 லட்சம் யூனிட்களை விற்பனை செய்ததாக அறிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடும் போது 20 சதவீதம் அதிகம் ஆகும்.
உலகில் ஐந்து கோடி சாதனங்களை வேகமாக விற்பனை செய்த பிராண்டாக ரியல்மி இருக்கிறது. இந்த விற்பனையில் மூன்று கோடி சாதனங்கள் இந்தியாவில் மட்டும் விற்பனையாகி இருக்கிறது. தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பிராண்டாக ரியல்மி இருக்கிறது.

ரியல்மி நிறுவனத்தின் dare to leap நிலைப்பாடு காரணமாக வெளியான 30 மாதங்களில் வேகமான வளர்ச்சியை பெற முடிந்ததாக ரியல்மி தெரிவித்து உள்ளது. 2020 ஆண்டில் ரியல்மி பிராண்டு 50 இண்டர்நெட் ஆப் திங்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
2021 ஆண்டு இந்த எண்ணிக்கையை இருமடங்கு அதிகரிக்க ரியல்மி திட்டமிட்டு இருக்கிறது. ரியல்மி டிசைன் ஸ்டூடியோவில் உலக தரம் மிக்க வடிவமைப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்து பணியாற்றியதால் ஐந்து விருதுகளை ரியல்மி பிராண்டு சர்வதேச சந்தையில் வென்று இருக்கிறது.
விவோ நிறுவனம் புதிய ஒரிஜின் ஒஎஸ் இயங்குதளத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
விவோ நிறுவனம் ஆண்ட்ராய்டு தளத்தை சார்ந்து இயங்கும் ஒரிஜின் ஒஎஸ்-ஐ அறிமுகம் செய்து உள்ளது. இது அந்நிறுவனத்தின் பன்டச் ஒஎஸ்-ஐ விட மேம்பட்ட இயங்குதளம் ஆகும்.
புதிய ஒஎஸ் பயனர் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதாக விவோ தெரிவித்து உள்ளது. தற்போதைய சூழலில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் சவால்களை சரி செய்யும் வகையில், சிறப்பான வடிவமைப்பு, சீராக இயங்கும் வகையில் இந்த ஒஎஸ் தயாராகி இருக்கிறது.

ஒரிஜின் ஒஎஸ் தளத்தில் டெஸ்க்டாப் சிஸ்டம் மாற்றப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஐகான்கள் மாற்றப்பட்டு எளிய வடிவமைப்பு கொண்டுள்ளது. ஒரிஜின் ஒஎஸ் வேகமாகவும், சீராகவும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய அனிமேஷன்கள் மற்றும் பீட்பேக் உள்ளிட்டவை இயற்கையை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. இது மொபைல் போன்களில் நிஜமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என விவோ தெரிவித்து உள்ளது. விவோ ஒரிஜின் ஒஎஸ் வழங்கப்படும் சாதனங்கள் பற்றிய விவரங்கள் விவோ டெவலப்பர் நிகழ்வில் அறிவிக்கப்பட இருக்கிறது.
ஹூவாமி நிறுவனம் பிரீமியம் விலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஹூவாமி நிறுவனம் செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வாட்ச் டைட்டானியம் கொண்டு உருவான வட்ட வடிவ டையல் பிரேம் மற்றும் லெதர் ஸ்டிராப் கொண்டிருக்கிறது.
இதுதவிர எஸ்பிஒ2 இரத்தத்தில் உள்ள காற்றின் அளவு, இதய துடிப்பு மற்றும் மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது. வாட்ச் அம்சங்களை இயக்க மூன்று பட்டன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வாட்ச் 30 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

ஹூவாமி செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள்
- 1.39 இன்ச் 454x454 AMOLED டிஸ்ப்ளே
- 5ஏடிஎம் வாட்டர் ப்ரூப் வசதி
- எஸ்பிஒ2
- இதய துடிப்பு சென்சார்
- டைட்டானியம் அலாய் பாடி
- 40 கிராம் எடை
- 340 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.
- வயர்லெஸ் மேக்னெடிக் சார்ஜர்
ஹூவாமியின் புதிய செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் விலை 349 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 25,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வாட்ச் லெதர் பிரவுன் ஸ்டிராப் என ஒற்றை வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் விவரங்கள் அந்நிறுவனத்தின் ரஷ்ய நாட்டு வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் SM-125F/DSN எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ12 மாடலில் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் என்எப்சி வசதி வழங்கப்படுகிறது. இது கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

முந்தைய கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் போன்றே புதிய கேலக்ஸி ஏ12 மாடலின் விலையும் குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ11 மாடலில் 6.4 இன்ச் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 13 எம்பி மூன்று கேமரா சென்சார், 4000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் மாணவர்களுக்கு விசேஷ தள்ளுபடி வழங்கும் சிறப்பு திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு Education Benefits பெயரில் அசத்தல் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையில் ஒன்பிளஸ் சாதனங்களை வாங்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விசேஷ தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் இந்தியா முழுக்க 760 பல்கலைக்கழகங்கள் மற்றும் 38,498 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. ஒன்பிளஸ் Education Benefits திட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அல்லது ஒன்பிளஸ் டிவி வாங்கும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி பெற முடியும்.

இதுதவிர கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் செல்வோர் ஒன்பிளஸ் அக்சஸரீ வாங்கும் போது ஐந்து சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும். இந்த சலுகை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் பொருந்தும். சலுகையில் பயன்பெற முதலில் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
தற்போதைய கல்வியாண்டில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது. மேலும் இதனை ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஐந்து சதவீத தள்ளுபடி ஆடியோ சாதனங்கள், கேஸ் மற்றும் ப்ரோடக்ஷன் உள்ளிட்டவைகளுக்கு பொருந்தும்.
வோடபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய வரி விவகாரத்தில் மத்திய அரசு கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டுள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன், சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹட்சிசன் என்ற மற்றொரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை 1,100 கோடி டாலருக்கு விலைக்கு வாங்கியது. இதற்காக, ரூ.22 ஆயிரத்து 100 கோடி வரி செலுத்த வேண்டும் என்று வோடபோனுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் வோடபோன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வோடபோன் செயலுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இதற்கிடையே, சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் வோடபோனுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறதா? அல்லது எதிர்ப்பு தெரிவிக்கிறதா? என்று கடந்த மாதம் 7-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. இந்த நிலையில், நேற்று நீதிபதிகள் ராஜீவ் சஹாய் எண்ட்லா, ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா, “மத்திய அரசின் அதிகார குழு இன்னும் கூடாததால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆகவே, முடிவு எடுக்க 2 வாரம் கால அவகாசம் வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அதை ஏற்ற நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 8-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய், சாம்சங், சியோமி என பல்வேறு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து விட்டன. மேலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
சாம்சங் சமீபத்தில் தனது கேலக்ஸி இசட் போல்டு2 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஐபோனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மடிக்கக்கூடிய ஐபோன் பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

எனினும், சீன உற்பத்தியாளர்களான பாக்ஸ்கான் மற்றும் நியூ நிக்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு மடிக்கக்கூடிய போன்களின் மாதிரி வடிவத்தை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய போனினை உருவாக்க திட்டமிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மடிக்கக்கூடிய ஐபோனில் OLED அல்லது மைக்ரோஎல்இடி என இரு வகை டிஸ்ப்ளேக்களில் எதை வழங்கலாம் என பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மடிக்கும் திரை மற்றும் ஹின்ஜ் கொண்ட சாதனங்களை ஆப்பிள் விரைவில் சோதனை செய்ய துவங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் மைக்ரோஎல்இடி பேனலை தேர்வு செய்யும் பட்சத்தில் உற்பத்தி பணிகளில் பெருமளவு வித்தியாசமான ஒன்றாக இருக்கும். தற்சமயம் மைக்ரோஎல்இடி ரக பேனல்கள் குறைந்த மின்திறனில் அதிக பிரைட்னஸ், சாட்யூரேஷன் வழங்குகிறது.
ஒப்போ எக்ஸ் 2021 ரோலபிள் ஸ்மார்ட்போன் மற்றும் ஒப்போ ஏஆர் கிளாஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் ரோலபிள் OLED ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன் மற்றும் ஏஆர் கிளாஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு சாதனங்களும் ஒப்போ இன்னோ தினத்தில் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய ரோலபிள் ஸ்மார்ட்போனில் ஒப்போ நிறுவனத்தின் சொந்த ரோல் மோட்டார் பவர்டிரெயின் வழங்கப்பட்டு உள்ளது. இது டிஸ்ப்ளேவினை இருவித அளவுகளில் மிக மென்மையாக மாற்றும் பணியை மேற்கொள்கிறது.

ஒப்போ எக்ஸ் 2021 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. எனினும், நீட்டிக்கப்பட்ட நிலையில், இது 7.4 இன்ச் அளவுக்கு நீள்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வளைந்த எட்ஜ் மற்றும் யுஎஸ்பி டைப் சி, ஸ்பீக்கர் கிரில் கீழ்புறத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒப்போ ரோலபிள் ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. ஒப்போ ஏஆர் கிளாஸ் 2021 பற்றிய விவரங்களை ஒப்போ வெளியிடவில்லை. எனினும், இது மெல்லிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.
இத்துடன் ToF சென்சார், SLAM அல்காரிதம், டிப்ராக்டிவ் ஆப்டிக்கல் வேவ் கைடு தொழில்நுட்பம், ஜெஸ்ட்யூர் மற்றும் வாய்ஸ் நேவிகேஷன் வசதி வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நவம்பர் 26 ஆம் தேதி இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இதனை நோக்கியா மொபைல் இந்தியா சமூக வலைதள பக்கங்களில் டீசர் வடிவில் அறிவித்து இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 2.4 மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. டீசர் வீடியோவில் ஸ்மார்ட்போனின் பின்புறம் மட்டும் தெரியும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

நோக்கியா 2.4 சிறப்பம்சங்கள்
6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே
ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
அதிகபட்சம் 3 ஜிபி ரேம்
அதிகபட்சம் 64 ஜிபி மெமரி
டூயல் சிம் ஸ்லாட்
13 எம்பி பிரைமரி கேமரா
2 எம்பி டெப்த் சென்சார்
5 எம்பி செல்பி கேமரா
4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5
மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்
4500 எம்ஏஹெச் பேட்டரி
சர்வதேச சந்தையில் நோக்கியா 2.4 விலை 119 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 10,500 என முதல் துவங்குகிறது. இதன் இந்திய விலை அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருக்கிறது. இதே நிகழ்வில் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






