search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள்
    X
    ஆப்பிள்

    இணையத்தில் லீக் ஆன மடிக்கக்கூடிய ஐபோன் விவரங்கள்

    ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


    ஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய், சாம்சங், சியோமி என பல்வேறு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து விட்டன. மேலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 

    சாம்சங் சமீபத்தில் தனது கேலக்ஸி இசட் போல்டு2 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஐபோனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மடிக்கக்கூடிய ஐபோன் பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

     ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்

    எனினும், சீன உற்பத்தியாளர்களான பாக்ஸ்கான் மற்றும் நியூ நிக்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு மடிக்கக்கூடிய போன்களின் மாதிரி வடிவத்தை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய போனினை உருவாக்க திட்டமிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    மடிக்கக்கூடிய ஐபோனில் OLED அல்லது மைக்ரோஎல்இடி என இரு வகை டிஸ்ப்ளேக்களில் எதை வழங்கலாம் என பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மடிக்கும் திரை மற்றும் ஹின்ஜ் கொண்ட சாதனங்களை ஆப்பிள் விரைவில் சோதனை செய்ய துவங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் மைக்ரோஎல்இடி பேனலை தேர்வு செய்யும் பட்சத்தில் உற்பத்தி பணிகளில் பெருமளவு வித்தியாசமான ஒன்றாக இருக்கும். தற்சமயம் மைக்ரோஎல்இடி ரக பேனல்கள் குறைந்த மின்திறனில் அதிக பிரைட்னஸ், சாட்யூரேஷன் வழங்குகிறது.

    Next Story
    ×