என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் கோ 2, சர்பேஸ் புக் 3 சாதனங்களின் இந்திய விற்பனை துவங்கி உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சர்பேஸ் கோ 2 மற்றும் சர்பேஸ் புக் 3 மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. சர்பேஸ் கோ 2 மாடலில் பெரிய 10.5 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, 10 பாயிண்ட் மல்டி-டச் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது.
இத்துடன் 8th Gen இன்டெல் கோர் எம்3 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதன் பேஸ் மாடலில் இன்டெல் பென்டியம் கோல்டு பிராசஸர் 4425வை வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 128 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

சர்பேஸ் கோ 2 சிறப்பம்சங்கள்
- 10.5 இன்ச் 1920x1280 பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- இன்டெல் பென்டியம் கோல்டு பிராசஸர் 4425Y / 8th Gen இன்டெல் கோர் எம்3 பிராசஸர்
- இன்டெல் UHD கிராபிக்ஸ் 615
- 4 ஜிபி / 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி eMMC / 128 ஜிபி எஸ்எஸ்டி
- 8 எம்பி ஆட்டோபோகஸ் கேமரா
- 5 எம்பி முன்புற கேமரா
- 1 x USB Type-C, 1 x சர்பேஸ் கனெக்ட், சர்பேஸ் டைப் கவர் போர்ட்
- மைக்ரோSDXC கார்டு ரீடர்
- 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்
- வைபை 6, ப்ளூடூத் 5.0, குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ்16 எல்டிஇ மோடெம்
- 2வாட் ஸ்டீரியோ மற்றும் டால்பி ஆடியோ பிரமீயம் ஸ்பீக்கர்
- டூயல் மைக்ரோபோன்
- விண்டோஸ் 10 ஹோம் எஸ் மோட் / விண்டோஸ் 10 ப்ரோ
சர்பேஸ் புக் 3 சிறப்பம்சங்கள்
- 13.5 இன்ச் 3000x2000 பிக்சல் / 15 இன்ச் 3240x2160 பிக்சல் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே
- குவாட்கோர் 10th gen இன்டெல் கோர் i5-1035G7 மற்றும் இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராபிக்ஸ்
- கோர் ஐ7-1065G7 மற்றும் 4ஜிபி GDDR5 NVIDIA GeForce GTX 1650
- 6 ஜிபி GDDR6 NVIDIA GeForce GTX 1660 Ti / NVIDIA Quadro RTX 3000
- 8 ஜிபி, 16 ஜிபி, அல்லது 32 ஜிபி 3733Mhz LPDDR4x ரேம்
- 256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி அல்லது 2 டிபி PCIe எஸ்எஸ்டி
- HW TPM 2.0 சிப்
- 5.0 எம்பி முன்புற கேமரா
- 8.0 எம்பி பிரைமரி கேமரா
- 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், டூயல் பார் பீல்டு ஸ்டூடியோ மைக்
- 2 x USB-A, 1 x USB-C
- வைபை, ப்ளூடூத் 5
இந்தியாவில் மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ 2 பேஸ் மாடல் விலை ரூ. 42,999 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 63,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் 3 மாடல் விலை ரூ. 1,56,299 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 3,40,399 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது மேக் ஒஎஸ் பிக் சர் தளத்தில் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட மேக் ஒஎஸ் பிக் சர் இயங்குதளத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை ஆப்பிள் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த கோளாறு சர்வர் சார்ந்த பிரச்சினை என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது.
கடந்த ஆண்டுகளில் ஆப்பிள் வெளியிட்டதில் மிகப்பெரும் அப்டேட்டாக மேக் ஒஎஸ் பிக் சர் சில நாட்களுக்கு முன் இலவசமாக வெளியிடப்பட்டது. இந்த அப்டேட்டில் புதிய வடிவமைப்பு, சபாரி, மெசேஜஸ், மேப்ஸ் மற்றும் பிரைவசி உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு உள்ளன.

மேலும் இந்த ஒஎஸ் ஆப்பிள் நிறுவனத்தின் எம்1 சிப்செட்டிற்காக வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், தற்சமயம் கண்டறியப்பட்டு இருக்கும் பிரச்சினை மேக் சாதனங்களில் மூன்றாம் தரப்பு செயலிகள் எவ்வித சோதனையும் இன்றி சுலபமாக லான்ச் ஆக செய்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
மேக் ஒஎஸ் தளத்தில் கேட்கீப்பர் எனும் அம்சம் செயல்பட்டு வருகிறது. இது அங்கீகரிக்கப்பட்ட மென்பொருளை மட்டுமே மேக் தளத்தில் இன்ஸ்டால் ஆக அனுமதிக்கும். மேலும் இது மால்வேர் உள்ள செயலிகளை கண்டறிந்து அவற்றை சாதனத்திற்குள் அனுமதிக்காது.
பயனர் தரவுகளை பாதுகாக்கும் வகையில் ஆப்பிள் டெவலப்பர் ஐடி சோதனைகளுடன் தொடர்பு கொண்டுள்ள ஐபி-க்கள் லாக் ஆவதை தடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த ஐபிக்கள் சேகரித்த தரவுகளை மீட்க நடவடிக்கை எடுத்து இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
வி நிறுவனம் தனது சலுகை கட்டணத்தை விரைவில் உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது சலுகை கட்டணங்களை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய விலை உயர்வு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
வியாபாரத்தில் தொடர் இழப்பை சரி செய்யும் முயற்சியாக விலை உயர்வை அமல்படுத்த வி நிறுவனம் திட்டமிட்டு இருக்கலாம் என தெரிகிறது. பாரதி ஏர்டெல் நிறுவனமும் இதேபோன்று சலுகை விலையை உயர்த்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

எனினும், இரு நிறுவனங்களும் ஜியோ சலுகை கட்டணங்களுக்கு போட்டியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிக்கலாம் என கூறப்படுகிறது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அடிப்படை கட்டணத்தை நிர்ணயிக்கும் முன் வி நிறுவனம் விலை உயர்வு பற்றி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விலை உயர்வு டிசம்பர் மாத வாக்கில் அமலுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. விலை உயர்வு அதிகபட்சம் 25 சதவீதம் வரை இருக்கலாம் என அந்நிறுவன வட்டாரங்கள் கூறினாலும், இவ்வாறு அமல்படுத்துவது சற்றே சிக்கலான காரியம் என்றும் கூறப்படுகிறது.
ஹூவாய் நிறுவனம் தனது ஹானர் பிராண்டை விற்பனை செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
சீனாவை சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய், தனது ஹானர் ஸ்மார்ட்போன் பிராண்டை விற்பனை செய்வதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் ஹூவாய் நிறுவனம் தனது வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டு இருக்கிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மற்றும் செயலிகள் மக்களின் தரவுகளை திருடுவது மற்றும் கண்காணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதையே காரணம் காட்டி அமெரிக்காவில் ஹுவாய் டெலிகாம் உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் காரணமாக ஹூவாய் நிறுவனத்தின் மீதான தடை நீங்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் ஹானர் பிராண்டை விற்கும் முடிவை ஹூவாய் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஹானர் பிராண்டு விற்பனை பற்றிய வர்த்தக விவரங்கள் வெளியாகவில்லை.
தற்சமயம் ஹானர் பிராண்டை மட்டும் விற்பனை செய்துவிட்டு, ஹூவாய் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பிரிவில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு ஹூவாய் கடும் போட்டியை ஏற்படுத்தலாம்.
ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஹானர் பிராண்டை ஷென்சென் பகுதியை ஒட்டிய தெற்கு நகர அரசாங்கம் அமைத்த நிறுவனம் வாங்க இருப்பதாக தெரிகிறது. ஹூவாய் தனது ஹானர் பிராண்டை இந்திய மதிப்பில் ரூ. 1,13,300 கோடிகளுக்கு விற்பனை செய்யும் என கூறப்படுகிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு 5ஜி வசதி கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுவரை இந்த சீரிஸ் பற்றி பல்வேறு விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், ரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அந்த வகையில் ரெட்மி நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் நவம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக புதிய ரெட்மி நோட் 9 5ஜி ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகமாகி அதன்பின் சர்வதேச சந்தையில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 9 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர்
- 48 எம்பி பிரைமரி கேமரா
- டெப்த் சென்சார்
- மேக்ரோ சென்சார்
- கைரேகை சென்சார்
- 5ஜி, ப்ளூடூத், வைபை
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரியல்மி பிராண்டின் புதிய எக்ஸ்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 2021 வாக்கில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.
இந்திய சந்தையில் முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை ரியல்மி பிராண்டு அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து ரியல்மி பிராண்டு பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய 5ஜி மாடல்கள் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய மாடல்கள் தவிர ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் 2021 ஆண்டின் முதல் சில மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ்7 ப்ரோ மாடலில் 6.55 இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளே, 2400x1080 பிக்சல் ரெசல்யூஷன், மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் சிப்செட், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ கஸ்டம் ஒஎஸ் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 32 எம்பி செல்பி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
டூயல் கேமரா சென்சார் மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனினை இம்மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த வரிசையில் தற்சமயம் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், அதிகபட்சம் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
சர்வதேச சந்தையில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனின் விலை 119 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 10,500 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் சார்கோல், டஸ்க் மற்றும் ஜோர்ட் நிறங்களில் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்21, எஸ்21 பிளஸ் மற்றும் எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்21 மற்றும் எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் 6.8 இன்ச் குவாட் ஹெச்டி + குவாட் ஹெச்டி + எல்டிபிஒ ரக டிஸ்ப்ளே, அட்பாடிவ் ரிப்ரெஷ் ரேட் (அதிகபட்சம் 120 ஹெர்ட்ஸ்) வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் இரு மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 875 அல்லது எக்சைனோஸ் 2100 பிராசஸர் சந்தைக்கு ஏற்ப வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் எஸ்21 அல்ட்ரா மாடலுடன் எஸ் பென் ஸ்டைலஸ் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கேலக்ஸி எஸ் சீரிஸ் சிறப்பம்சங்கள்
- எஸ்21 – 6.2 இன்ச் FHD+ இன்பினிட்டி-ஒ எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்
- எஸ்21 பிளஸ் – 6.7 இன்ச் FHD+ இன்பினிட்டி-ஒ எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்
- எஸ்21 அல்ட்ரா – 6.8 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் எல்டிபிஒ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 875 பிராசஸர் / சாம்சங் எக்சைனோஸ் 2100 பிராசஸர்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1
- எஸ்21 மற்றும் எஸ்21 பிளஸ்– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
- 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
- எஸ்21 அல்ட்ரா – 108 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், OIS
- 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
- 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
- 10 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ்
- 5ஜி SA/NSA, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி 3.1
- 4000 எம்ஏஹெச் பேட்டரி (எஸ்21)
- 4800 எம்ஏஹெச் பேட்டரி (எஸ்21 பிளஸ்)
- 5000 எம்ஏஹெச் பேட்டரி (எஸ்21 அல்ட்ரா)
- பாஸ்ட் சார்ஜிங் வசதி
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் மாடல் மினி எல்இடி டிஸ்ப்ளேவுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் மினி எல்இடி டிஸ்ப்ளேவுடன் புதிய ஐபேட் மாடலை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் புதிய ஏர்பாட்ஸ் 3 மாடலும் அறிமுகமாகும் என தெரிகிறது. இரு சாதனங்களும் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
லிக்விட் க்ரிஸ்டல் சாப்ட் போர்டு (எல்சிபி) தொழில்நுட்பத்திற்காக ஆப்பிள் நிறுவனம் சீன உற்பத்தியாளரான ஜியலின்யி-யை ஒப்பந்தம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான சாதனங்களுக்கு இந்நிறுவனம் உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வழங்குகிறது.

எல்சிபி தொழில்நுட்பம் மூலம் ஆப்பிள் நிறுவனம் உதிரிபாங்களிடையே அதிவேகமாக தரவுகளை பரிமாற்றம் செய்ய முடியும். மினி எல்இடி ஐபேட் மாடலின் உற்பத்தி பணிகள் 2021 ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் துவங்கும் என தெரிகிறது.
மினி எல்இடி டிஸ்ப்ளேக்கள் கொண்ட ஏழு சாதனங்களை ஆப்பிள் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ, 27 இன்ச் ஐமேக் ப்ரோ, 14.1 இன்ச் மேக்புக் ப்ரோ, 166 இன்ச் மேக்புக் ப்ரோ, 10.2 இன்ச் ஐபேட் மற்றும் 7.9 இன்ச் ஐபேட் மினி போன்ற சாதனங்கள் அடங்கும்.
இத்துடன் 3 ஆம் தலைமுறை ஏர்பாட்ஸ் மாடலையும் ஆப்பிள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய ஏர்பாட்ஸ் மாடலை விட சிறிய ஸ்டெம் மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாலில் உள்ளதை போன்ற இயர்டிப் டிசைன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு 48 எம்பி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமியின் ரெட்மி பிராண்டு புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் M2010J19SC எனும் மாடல் நம்பருடன் உருவாகி வருவதா கூறப்படுகிறது. இது ரெட்மி நோட் 9 4ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஸ்கிரீன், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. மேலும் 48 எம்பி பிரைமரி கேமரா சேர்த்து மூன்று கேமரா சென்சார்கள், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் வழங்கப்படுகிறது.

ரெட்மி நோட் 9 4ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
அட்ரினோ 610 GPU
4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம்
64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம்
ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
48 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ்
அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
டெப்த் / மேக்ரோ கேமரா
8 எம்பி செல்பி கேமரா
கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i கோட்டிங்)
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
யுஎஸ்பி டைப் சி
6000 எம்ஏஹெச் பேட்டரி
22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 பிளஸ் பிடிஎஸ் எடிஷன் மாடலுக்கு இந்தியாவில் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் பிடிஎஸ் எடிஷனை ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இவற்றின் விலை முறையே ரூ. 87,999 மற்றும் ரூ. 14,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
அந்த வகையில் வெளியான ஐந்து மாதங்களுக்குள் கேலக்ஸி எஸ்20 பிளஸ் பிடிஎஸ் எடிஷன் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பின் படி கேலக்ஸி எஸ்20 பிளஸ் பிடிஎஸ் எடிஷன் ரூ. 77,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. விலை குறைப்பு மட்டுமின்றி சாம்சங் கேர் பிளஸ் ஆக்சிடண்டல் மற்றும் லிக்விட் டேமேஜ் சேவைக்கு 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் மாடலை ரூ. 5,999 விலையில் வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் பிடிஎஸ் எடிஷன்களில் பிடிஎஸ் சார்ந்த தீம்கள் மற்றும் ஃபேன் கம்யூனிட்டி பிளாட்பார்ம், விவெர்ஸ் உள்ளிட்டவை பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் அழகிய ஸ்டிக்கர்கள், போட்டோ கார்டுகள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.
இன்ஸ்டாகிராம் ஹோம் ஸ்கிரீனில் இரண்டு அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதன் விவரங்களை பார்ப்போம்.
இன்ஸ்டாகிராம் செயலியில் புது அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இன்ஸ்டா ஹோம் ஸ்கிரீனில் ரீல்ஸ் மற்றும் ஷாப் அம்சங்களுக்கான டேப்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
ரீல்ஸ் மற்றும் ஷாப் போன்ற அம்சங்களை தொடர்ந்து அதிக பயனர்கள் பயன்படுத்தியதே இந்த அப்டேட்டிற்கு முக்கிய காரணியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் தனது ஹோம் ஸ்கிரீனில் மாற்றம் செய்து சில காலம் ஆகிவிட்டது. புதிய அப்டேட்டில் ரீல்ஸ் மற்றும் ஷாப் டேப்கள் ஹோம் ஸ்கிரீனின் கீழ்புறத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே இந்த பகுதியில் காணப்பட்ட நியூ போஸ்ட் மற்றும் போஸ்ட் லைக் ஹிஸ்ட்ரி உள்ளிட்டவைகளுக்கான டேப்கள் நீக்கப்பட்டு உள்ளன.






