search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சர்பேஸ் புக் 3
    X
    சர்பேஸ் புக் 3

    மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ 2, சர்பேஸ் புக் 3 இந்திய விற்பனை துவக்கம்

    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் கோ 2, சர்பேஸ் புக் 3 சாதனங்களின் இந்திய விற்பனை துவங்கி உள்ளது.


    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சர்பேஸ் கோ 2 மற்றும் சர்பேஸ் புக் 3 மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. சர்பேஸ் கோ 2 மாடலில் பெரிய 10.5 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, 10 பாயிண்ட் மல்டி-டச் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது.

    இத்துடன் 8th Gen இன்டெல் கோர் எம்3 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதன் பேஸ் மாடலில் இன்டெல் பென்டியம் கோல்டு பிராசஸர் 4425வை வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 128 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

     மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ 2

    சர்பேஸ் கோ 2 சிறப்பம்சங்கள்

    - 10.5 இன்ச் 1920x1280 பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - இன்டெல் பென்டியம் கோல்டு பிராசஸர் 4425Y  / 8th Gen இன்டெல் கோர் எம்3 பிராசஸர்
    - இன்டெல் UHD கிராபிக்ஸ் 615
    - 4 ஜிபி / 8 ஜிபி ரேம்
    - 64 ஜிபி eMMC / 128 ஜிபி எஸ்எஸ்டி
    - 8 எம்பி ஆட்டோபோகஸ் கேமரா
    - 5 எம்பி முன்புற கேமரா
    - 1 x USB Type-C, 1 x சர்பேஸ் கனெக்ட், சர்பேஸ் டைப் கவர் போர்ட்
    - மைக்ரோSDXC கார்டு ரீடர்
    - 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் 
    - வைபை 6, ப்ளூடூத் 5.0, குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ்16 எல்டிஇ மோடெம்
    - 2வாட் ஸ்டீரியோ மற்றும் டால்பி ஆடியோ பிரமீயம் ஸ்பீக்கர்
    - டூயல் மைக்ரோபோன்
    - விண்டோஸ் 10 ஹோம் எஸ் மோட் /  விண்டோஸ் 10 ப்ரோ

    சர்பேஸ் புக் 3 சிறப்பம்சங்கள்

    - 13.5 இன்ச் 3000x2000 பிக்சல் / 15 இன்ச் 3240x2160 பிக்சல் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே
    - குவாட்கோர் 10th gen இன்டெல் கோர் i5-1035G7 மற்றும் இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராபிக்ஸ்
    - கோர் ஐ7-1065G7 மற்றும் 4ஜிபி GDDR5 NVIDIA GeForce GTX 1650
    - 6 ஜிபி  GDDR6 NVIDIA GeForce GTX 1660 Ti / NVIDIA Quadro RTX 3000
    - 8 ஜிபி, 16 ஜிபி, அல்லது 32 ஜிபி 3733Mhz LPDDR4x ரேம்
    - 256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி அல்லது 2 டிபி PCIe எஸ்எஸ்டி
    - HW TPM 2.0 சிப்
    - 5.0 எம்பி முன்புற கேமரா
    - 8.0 எம்பி பிரைமரி கேமரா
    - 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், டூயல் பார் பீல்டு ஸ்டூடியோ மைக்
    - 2 x USB-A, 1 x USB-C 
    - வைபை, ப்ளூடூத் 5

    இந்தியாவில் மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ 2 பேஸ் மாடல் விலை ரூ. 42,999 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 63,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் 3 மாடல் விலை ரூ. 1,56,299 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 3,40,399 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×