என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2021 வெளியீடு அந்த காரணத்தால் தாமதமாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபோன் எஸ்இ மாடல் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வந்தது. எனினும், 2021 ஐபோன் எஸ்இ வெளியீடு திட்டத்தில் தாமதம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    2021 முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் புதிய ஐபோன் எஸ்இ மாடல் வெளியாகாது என தகவல் வெளியாகி இருக்கிறது. தற்சமயம் ஐபோன் 13 கேமராக்களை விநியோகம் செய்ய நான்கு நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. 

    இதன் காரணமாக ஐபோன் எஸ்இ 2021 மாடலுக்கான உற்பத்திபணிகளில் தாமதம் ஏற்படலாம் என தெரிகிறது. ஐபோன் எஸ்இ 2020 மாடல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஐபோன் 11 ஹார்டுவேர், ஐபோன் 8 வடிவமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ஐபோன் எஸ்இ

    வெளியீட்டின் போது இந்த மாடல் அதிக வரவேற்பை பெற்றது. அந்த வகையில் 2021 மாடல் வெளியாக சில காலம் ஆகும் என ஆப்பிள் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

    தற்சமயம் ஐபோன் 13 மாடலுக்கான கேமரா ஹார்டுவேரை வழங்குவதில் தாய்வானின் ஜீனியஸ் எலெக்டிரானிக் ஆப்டிக்கல், லார்கன் பிரெசிஷன், செம்கோ மற்றும் சன்னி ஆப்டிக்கல் போன்ற நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஐபோன் எஸ்இ 2021 உற்பத்தி பணிகள் தாமதமாகி இருக்கிறது.
    பேஸ்புக் தளத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

    பேஸ்புக் நிறுவனம் பயனர்கள் விர்ச்சுவல் முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து உள்ளது. இதில் பயனர்கள் தங்களது உறவினர்களுக்கு பிரத்யேக வாழ்த்துகளை தீபாவளி ரெடி அவதார்களாக அனுப்பலாம்.

    இத்துடன் பயனர்கள் தன் வீட்டில் எவ்வாறு தீபாவளியை கொண்டாடினர் என்பதை விளக்கும் புகைப்படம் அல்லது விளக்கேற்றும் வீடியோக்களை படமாக்கி அதனை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 

     பேஸ்புக்

    பின் அவர்களையும் இதே போன்று செய்ய டேக் செய்து சவால் விட முடியும். இவ்வாறு செய்பவர்கள் #DiwaliAtHomeChallenge எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தலாம். 

    பயனர் எதிர்கொள்ளும் சவால்களை ஏற்று அதனை தங்களது நியூஸ் பீடில் பகிர்ந்து கொண்டு மற்றவர்களை அதில் டேக் செய்து அவர்களையும் அவ்வாறு செய்ய வலியுறுத்தலாம். 

    வழக்கமான தீபாவளி பதிவுகளின் பின்னணியில் தீபாவளி தீம் கொண்ட அவதார்களை இணைத்து கொள்ளலாம். இந்த அம்சம் பேஸ்புக் மொபைல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலிகளில் பயன்படுத்த முடியும்.
    ஆப்பிள் நிறுவனம் மேக் ஒஎஸ் பிக் சர் இயங்குதளத்தை வெளியிட துவங்கியது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    மேக் ஒஎஸ் பிக் சர் இயங்குதளம் வெளியானது. இது இந்த ஆண்டின் மிகப்பெரும் அப்டேட் ஆகும். இந்த அப்டேட் மேக் மெஷின்களில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குகிறது. 

    இதன் மேம்பட்ட மெனு பார் முன்பை விட பெரிதாக இருக்கிறது. இத்துடன் உயரமான சைடுபார்கள், புது வடிவமைப்பு கொண்ட டாக் மற்றும் மேம்பட்ட ஆப் ஐகான்கள், மேம்பட்ட கண்ட்ரோல் சென்டர் வழங்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் மேக் ஒஎஸ் 11 பிக் சர் வெர்ஷனை மிகப்பெரும் அப்டேட்டாக மாற்றுகிறது.

     மேக் ஒஎஸ் பிக் சர்

    இத்துடன் பிக் சர் அப்டேட்டில் பிரீலோட் செய்யப்பட்ட மெசேஜ்கள், மேப், சபாரி ஆப் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. மேலும் எம்1  சிப் வழங்கும் மேம்படுத்தல்களை இயக்கும் வசதியை இந்த அப்டேட் வழங்குகிறது.

    முன்னதாக 2020 ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் மேக் ஒஎஸ் பிக் சர் அறிவிக்கப்பட்டது. தற்சமயம் இந்த அப்டேட் அனைவருக்கும் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. இத்துடன் ரீ-டிசைன் செய்யப்பட்ட டாக் வழங்கப்படுகிறது. இது டெஸ்க்டாப் வால்பேப்பரை டிரான்ஸ்பேரண்ட் ஆக மாற்றுகிறது.

    மேக் ஒஎஸ் 11 பிக் சர் புதிய கண்ட்ரோல் சென்டர் கொண்டுள்ளது. இது அதிக கஸ்டமைசேஷன், மேம்பட்ட நோட்டிபிகேஷன் சென்டர் மற்றும் நோட்டிபிகேஷன்களை வழங்குகிறது.
    இந்திய சந்தையில் மீண்டும் பப்ஜி மொபைல் கேம் வெளியாக இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் மீண்டும் வெளியாக இருக்கிறது. முன்னதாக பப்ஜி மொபைல் கேமிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் கேமினை இந்திய எல்லைக்குள் முழுமையாக முடக்கியது. பின் இந்த கேம் மீண்டும் வெளியாக இருப்பதாக பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தன.

    தற்சமயம் பப்ஜி கார்ப்பரேஷன் பப்ஜி மொபைல் இந்தியா கேமினை இந்திய சந்தையில் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த கேம் இந்தியர்களுக்காக கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கும் என பப்ஜி கார்ப்பரேஷன் அறிவித்து உள்ளது.

     பப்ஜி மொபைல்

    இம்முறை பப்ஜி விளையாடும் இளம் கேமர்கள் பரிந்துரைக்கப்பட்ட கேம்பிளே வழக்கங்களில் ஈடுபட கட்டுப்பாடுகள் இருக்கும். மேலும் கேம் விர்ச்சுவல் சிமுலேஷன் டிரெய்னிங் கிரவுண்டில் துவங்கி கேம் கதாபாத்திரங்கள் ஆடை அணிந்து கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டு இருக்கும்.

    இதுதவிர பப்ஜி கார்ப்பரேஷன் தாய் நிறுவனமான கிராப்டன் இன்க் இந்தியாவில் உள்ளூர் வீடியோ கேம், பொழுதுபோக்கு, இ ஸ்போர்ட்ஸ் மற்றும் ஐடி துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் 100 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.
    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அப்டேட் அந்த வசதியையும் வழங்குகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் ஷாப்பிங் பட்டன் வசதியை பேஸ்புக் நிறுவனம் தனது அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வசதி இந்தியா உள்பட பல்வேறு இதர நாடுகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

    ஷாப்பிங் பட்டன் வசதியில் சாட் செய்வதை போன்றே பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். மேலும் இந்த அம்சம் பயனர்கள் வியாபாரங்கள் வழங்கும் பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளவும் வழி செய்கிறது.

     வாட்ஸ்அப்

    முன்னதாக இதுபோன்ற அம்சத்தை இயக்க பயனர்கள் அந்தந்த வியாபாரங்களின் பிஸ்னஸ் ப்ரோபைலை க்ளிக் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. தற்சமயம் ஷாப்பிங் பட்டனை பார்த்ததும், பயனர்கள் க்ளிக் செய்து குறிப்பிட்ட வியாபார பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

    இந்த அம்சம் பயனர்கள் மட்டுமின்றி வியாபாரங்கள் தங்களின் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும். இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும். 

    புதிய ஷாப்பிங் பட்டன் வாட்ஸ்அப் பிஸ்னஸ் அக்கவுண்ட் சாட் ஸ்கிரீன்களில் மட்டுமே காணப்படும். அந்த வகையில், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சாட் ஸ்கிரீனில் ஷாப்பிங் பட்டன் இடம்பெறாது.
    சுழலும் ரக திரை கொண்ட சாம்சங் சிரோ ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    சாம்சங் நிறுவனம் தி சிரோ எனும் பெயரில் முற்றிலும் வித்தியாசமான டிவி மாடலை 2020 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில்  அறிமுகம் செய்தது. இது செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் சுழலும் திரை கொண்டிருந்தது.

    எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன் தரவுகளை டிவியில் செங்குத்தாக பார்க்கும் வகையில் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டதாக சாம்சங் அறிவித்து இருந்தது. இந்நிலையில், சாம்சங் சிரோ டிவி மாடல் தற்சமயம் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    சிரோ மாடலில் ஆல்-இன்-ஒன் ஸ்டான்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்டான்டின் மீது 43 இன்ச் QLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனை பயனர்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் செங்குத்தாகவோ, கிடைமட்டமாகவோ திருப்பி வைத்து பார்க்கலாம்.

     சாம்சங் சிரோ

    வடிவம் மற்றும் அமைப்பு தவிர இது வழக்கமான சாம்சங் ஸ்மார்ட் டிவி போன்றே இயங்கும். மொபைல் தரவுகளை டிவியில் பார்க்க விரும்பும் போது திரை செங்குத்தாக திரும்பி கொள்ளும். இது செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களை இயக்கும் போது பயனுள்ள அம்சமாக இருக்கும்.

    இந்த டிவியின் முன்புறம் 4.1 சேனல் 60வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் தலைசிறந்த பேஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. சாம்சங் சிரோ மாடல் நேவி புளூ நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. 

    இந்திய சந்தையில் புதிய சாம்சங் சிரோ ஸ்மார்ட் டிவி மாடல் விலை ரூ. 1,24,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    இந்திய டெலிகாம் சந்தையில் அந்த விஷயத்தில் ரிலையன்ஸ் ஜியோவை ஏர்டெல் நிறுவனம் முந்தி இருக்கிறது.
     

    இந்திய டெலிகாம் சந்தையில் 2020 ஆகஸ்ட் மாத வாக்கில் ரிலையன்ஸ் ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் பத்து லட்சம் வாடிக்கையாளர்களை அதிகமாக சேர்த்து இருக்கிறது. இந்த தகவலை மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

    ஆகஸ்ட் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 28.99 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. ஜியோ நிறுவனம் 18.64 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்தது. வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் 12.28 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது.

     ஜியோ

    சந்தாதாரர்கள் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் 35.08 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் 28.12 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது.

    ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்திய சந்தையின் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 114.18 கோடிகளாக இருக்கிறது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 0.33 சதவீதம் அதிகம் ஆகும்.
    தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுக்க யூடியூப் சேவை பலருக்கு இயங்காமல் போனது.


    கூகுள் நிறுவனத்தின் வீடியோ தளமான யூடியூப் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. இதன் காரணமாக பயனர்களால் யூடியூப் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியவில்லை.

    யூடியூபில் வீடியோக்களை க்ளிக் செய்தால், அது சீராக லோட் ஆனது. எனினும், வீடியோ பிளே ஆகாமல் பபர் ஆனதால் பயனர்கள் கோபமுற்றனர். பலர் தங்களின் கோபத்தை சமூக வலைதளத்தில் பதிவுகளாகவும். சிலர் யூடியூபை கேலி செய்யும் மீம்களுடன் வெளிப்படுத்தினர்.

    சேவையில் தடங்கல் ஏற்பட்டதை உறுதிப்படுத்திய யூடியூப் தனது தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தது. பின் சிறிது நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது, தடங்கலுக்கு வருந்துகிறோம் என யூடியூப் தெரிவித்தது.  
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் பல்வேறு கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகின. இவை கேலக்ஸி ஏ12, ஏ22, ஏ32, ஏ42, ஏ52, ஏ62, ஏ72, ஏ82 மற்றும் ஏ92 உள்ளிட்ட பெயர்களில் அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டன. 

    இவற்றில் கேலக்ஸி ஏ42 5ஜி மாடல் அந்நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அந்த வரிசையில் கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் பற்றிய விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது. 

     கேலக்ஸி ஏ42 5ஜி

    அதன்படி கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் SM-A526B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 6 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அட்ரினோ 619 ஜிபியு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதே பிராசஸர் சியோமி எம்ஐ 10டி லைட் மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது.

    கீக்பென்ச் முடிவுகளை பொருத்தவரை கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் சிங்கிள் கோரில் 298 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 1001 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி ஏ52 மாடலில் குவாட் கேமரா சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

    தற்போதைய தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், மேக்ரோ லென்ஸ் மற்றும் டெப்த் லென்ஸ் வழங்கப்பட இருக்கிறது. பிரைமரி சென்சார் தவிர மற்ற லென்ஸ் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் 5ஜி சிப்செட் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 5ஜி சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது மீடியாடெக் நிறுவனத்தின் பிளாக்ஷிப் பிராசஸர் ஆகும்.

    இது ஸ்னாப்டிராகன் 800 சீரிஸ் சிப்செட்களுக்கு போட்டியாக அமைகின்றன. புதிய டிமென்சிட்டி 1000 5ஜி சிப்செட் ரியல்மி எக்ஸ்7 ப்ரோ சீரிசில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது இந்திய சந்தையில் 5ஜி கனெக்டிவிட்டியுடன் வெளியாகும் முதல் 5ஜி சிப்செட் ஆகும். 

     ரியல்மி

    இதுவரை குவால்காம் நிறுவன 5ஜி சிப்செட்களே தற்போதைய 5ஜி ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுவரை ஸ்னாப்டிராகன் 765ஜி மற்றும் 865 சீரிஸ் சிப்செட்களில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு உள்ளன.
    ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு எஸ்இ மாடல் ஸ்மார்ட்போனினை சத்தமின்றி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனினை சில மாதங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து நார்டு என்10 5ஜி மற்றும் நார்டு என்100 போன்ற ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்தது.

    அந்த வரிசையில் ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு எஸ்இ எனும் ஸ்மார்ட்போனை சத்தமின்றி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய நார்டு எஸ்இ ஸ்மார்ட்போன் எபா எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

     ஒன்பிளஸ் நார்டு

    இது ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு எஸ்இ மாடலில் வார்ப் சார்ஜ் 65, ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 4500 எம்ஏஹெச் பேட்டரியை 40 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

    இதுதவிர நார்டு எஸ்இ ஸ்மார்ட்போனில் AMOLED பேனல் மற்றும் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே அளவு பற்றி எந்த தகவலும் இல்லை. ஒன்பிளஸ் நார்டு எஸ்இ ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கூகுள் பிளே ஸ்டோரில் கூகுள் ஒன் செயலி டவுன்லோட்களில் அசத்தி புதிய மைல்கல் எட்டியுள்ளது.


    கூகுள் நிறுவனத்தின் கூகுள் ஒன் செயலி பிளே ஸ்டோரில் பத்து கோடி டவுன்லோட்களை கடந்து புதிய மைல்கல் எட்டி இருக்கிறது. பிளே ஸ்டோரில் பத்து கோடி டவுன்லோட்களை கடந்த புதிய செயலியாக கூகுள் ஒன் இணைந்து இருக்கிறது.

    பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் கூகுள் ஒன் ஆப் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதுதவிர கூகுள் நிறுவனம் பல்வேறு இதர செயலிகளை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்து வழங்குகிறது.

     கூகுள் ஒன்

    ஒப்போ, ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் கூகுள் மெசேஜஸ் மற்றும் போன் ஆப்ஸ் உள்ளிட்டவைகளை டீபால்ட் செயலியாக வழங்கி வருகின்றன.

    கிளவுட் ஸ்டோரேஜ் வழங்குவதை கூகுள் ஒன் முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. இதுதவிர கூகுள் எக்ஸ்பெர்ட்ஸ் மற்றும் பேமிலி ஷேரிங் உள்ளிட்ட சேவைகளுக்கான வசதியும் இந்த செயலியில் வழங்கப்படுகிறது. சமீபத்தில் கூகுள் ஒன் சேவையில் விபிஎன் (VPN) சேவையும் இணைக்கப்பட்டது.
    ×