search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ் நார்டு
    X
    ஒன்பிளஸ் நார்டு

    அசத்தல் அம்சங்களுடன் சத்தமின்றி உருவாகும் நார்டு எஸ்இ ஸ்மார்ட்போன்

    ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு எஸ்இ மாடல் ஸ்மார்ட்போனினை சத்தமின்றி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனினை சில மாதங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து நார்டு என்10 5ஜி மற்றும் நார்டு என்100 போன்ற ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்தது.

    அந்த வரிசையில் ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு எஸ்இ எனும் ஸ்மார்ட்போனை சத்தமின்றி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய நார்டு எஸ்இ ஸ்மார்ட்போன் எபா எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

     ஒன்பிளஸ் நார்டு

    இது ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு எஸ்இ மாடலில் வார்ப் சார்ஜ் 65, ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 4500 எம்ஏஹெச் பேட்டரியை 40 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

    இதுதவிர நார்டு எஸ்இ ஸ்மார்ட்போனில் AMOLED பேனல் மற்றும் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே அளவு பற்றி எந்த தகவலும் இல்லை. ஒன்பிளஸ் நார்டு எஸ்இ ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×