search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி ஏ31
    X
    கேலக்ஸி ஏ31

    சத்தமின்றி உருவாகும் கேலக்ஸி ஏ32 5ஜி விவரங்கள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    ஸ்மார்ட்போன் சந்தையில் 2021 ஆண்டு 5ஜி மொபைல் போன்கள் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கும். சாம்சங், ரியல்மி, சியோமி மற்றும் இதர நிறுவனங்கள் குறைந்த விலை 5ஜி மாடல்களை அறிமுகம் செய்வதில் முக்கிய பங்காற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கேலக்ஸி ஏ42 5ஜி மாடல் சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இது தற்சமயம் ஐரோப்பிய சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது.

     கேலக்ஸி ஏ32 5ஜி

    புதிய ஸ்மார்ட்போனின் CAD ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அதன்படி புதிய சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என்றும் இவை ஒவ்வொன்றும் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் மற்ற மாடல்களில் காணப்படுவதை போன்று பெரிய கேமரா பம்ப் கொண்டிருக்காது. எனினும், கேமரா சென்சார்களுடன் எல்இடி பிளாஷ் வழங்கப்படுகிறது. இத்துடன் கேமராக்கள் அருகில் சென்சார் ஒன்று காணப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் இன்பினிட்டி வி நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், AMOLED ஸ்கிரீன், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 
    Next Story
    ×