என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஹூவாய் நிறுவனம் 5ஜி சிப்செட்களை உருவாக்க சாம்சங் மற்றும் மீடியாடெக் போன்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர இருக்கிறது.



    ஹூவாய் மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து பதற்ற சூழல் நிலவும் நிலையில், சீன தொழில்நுட்ப நிறுவனம் புதிய கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடபட துவங்கி இருக்கிறது. ஹூவாய் நிறுவனம் ஏற்கனவே தனது போன்களில் சொந்த சிப்செட்களை பயன்படுத்தி வரும் நிலையில், 5ஜி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர திட்டமிட்டுள்ளது.

    குவால்காம் நிறுவனத்துடன் கூட்டு சேர முடியாத சூழல் ஏற்பட்டு இருப்பதால், ஹூவாய் நிறுவனம் மற்ற இரண்டு முன்னணி நிறுவனங்களான சாம்சங் மற்றும் மீடியாடெக் உடன் கூட்டு சேர முயற்சிக்கலாம். சாம்சங் நிறுவனம் சொந்தமாக எக்சைனோஸ் 990 5ஜி பிராசஸரையும், மீடியாடெக் டிமென்சிட்டி 1000 5ஜி சிப்செட்டையும் உருவாக்கி இருக்கின்றன.  

    ஸ்மார்ட்போன் பிராசஸர் உருவாக்கும் நான்கு முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஹூவாய் இருக்கிறது. ஹூவாய் தவிர குவால்காம், மீடியாடெக் மற்றும் சாம்சங் போன்றவை முன்னணி சிப்செட் உற்பத்தியாளர்களாக திகழ்கின்றன. ஹூவாய் நிறுவனம் 5ஜி பிராசஸர்களை உருவாக்கி அவற்றை ஹைசிலிகான் கிரின் 5ஜி பிரிவில் விநியோகம் செய்கிறது.

    கிரின் 990 5ஜி

    ஹைசிலிகான் கிரின் 5ஜி பிராசஸர்களை தாய்வான் செமிகன்டக்டர் மேனுபேக்ச்சரிங் கம்பெனி உற்பத்தி செய்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருபக்கம் இருக்க. 5ஜி சந்தை மெல்ல விரிவடைய துவங்கிய நிலையில், தற்போதைய சூழலிலும் 5ஜி சந்தை அதிகளவு பாதிக்கப்படவில்லை.

    கொரோனா வைரஸ் பாதிப்பு சூழலிலும் 5ஜி சந்தை பெருமளவு பாதிக்கப்படவில்லை என குவால்காம் நிறுவன துணை தலைவர் ஹௌ மிங்ஜூவான் தெரிவித்தார். தற்போதைய சூழலிலும் இந்த ஆண்டு 5ஜி சந்தை அதிக தட்டுப்பாடு மற்றும் வளர்ச்சியை பதிவு செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்.

    அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த ஹூவாய் நிறுவனத்திற்கு அதிகப்படியான 5ஜி சிப்செட்கள் தேவைப்படும். விரைவில் இந்த தொழில்நுட்பம் ஃபிளாக்ஷிப் மட்டுமின்றி மிட் ரேன்ஜ் சாதனங்களிலும் வழங்கப்படலாம். சாம்சங் மற்றும் மீடியாடெக் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கும் நிலையில், ஹூவாய் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகளை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
    கொரோனா நோய் தொற்றை விரட்டியடிக்க எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் ஒன்றை ஐஐடி குழு கண்டறிந்து இருக்கிறது.



    ஐஐடியை சேர்ந்த குழு ஒன்று எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரத்தை குறைந்த விலையில் உருவாக்கி இருக்கிறது. இந்த இயந்திரத்தை பயன்படுத்தி மருத்துவமனை, பேருந்து மற்றும் ரெயில்களின் தரையில் உள்ள கிருமிகளை கொன்று கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும்.  

    புதிய இயந்திரத்திற்கான காப்புரிமையை பெற ஐஐடி கவுகாத்தி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது. வணிக ரீதியில் இந்த இயந்திரத்தை ஆயிரம் ரூபாய்க்கு வழங்க முடியும். தற்சமயம் ப்ரோடோடைப் இயந்திரமாக இருக்கும் இதை ஒருவர் இயக்க வேண்டும். 

    எனினும், மனிதர்கள் இன்றி ரோபோட் மூலம் இதை இயங்க வைப்பதற்கான பணியில் இந்த இயந்திரத்தை கண்டறிந்த குழு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

    ஐஐடி கவுகாத்தி

    இந்த இயந்திரம் கர்நாடகா அரசின் வேண்டுகோளை தொடர்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயந்திரம் மருத்துவமனைகள் மற்றும் பேருந்துகளில் பயன்படுத்தப்பட இருக்கிறது. தற்சமயம் இந்த இயந்திரம் மற்ற அரசாங்கங்களுக்கு வணிக ரீதியில் வழங்கப்பட இருக்கிறது.

    கிருமி தொற்று நிறைந்த பகுதிகளை சுத்தம் செய்ய யுவிசி சிஸ்டம் நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். இகை கொண்டு 90 சதவீத கிருமிகளை கொன்றுகுவிக்க முடியும். 

    ஐஐடி குழு உருவாக்கி இருக்கும் யுவிசி எல்இடி சிஸ்டம் கொண்டு 30 விநாடிகளில் கிருமி தொற்று நிறைந்த பகுதியை சுத்தம் செய்ய முடியும். யுவிசி சிஸ்டம் கொண்டு கிருமி தொற்று ஏற்பட்ட பகுதியினை சீராக சுத்தம் செய்ய முடியும் என ஐஐடி குழுவை சேர்ந்த பேராசிரியர் செந்தில் முருகன் சுப்பையா தெரிவித்திருக்கிறார். 
    செயலி மூலம் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் வாட்ஸ்அப் அதிரடி முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறது.



    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாட்ஸ்அப்பில் ஒரே சமயத்தில் ஒரு சாட்டிற்கு மட்டுமே குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்ய முடியும். முன்னதாக ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது. 

    புதிய கட்டுப்பாடு மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி உலகம் முழுக்க பரவும் போலி செய்திகளை முடக்க முடியும். முன்னதாக ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவலை ஆன்லைனில் வெரிஃபை செய்யும் வசதியை வாட்ஸ்அப் சோதனை செய்து வருவது பற்றிய விவரங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    வாட்ஸ்அப்

    நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர். இதன் காரணமாக வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்யும் வழக்கம் கடந்த வாரத்தில் பெருமளவு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    இதன் மூலம் போலி செய்திகளும் பரவும் என்பதால் வாட்ஸ்அப் ஃபார்வேர்டு சமயத்தில் ஒருவருக்கு மட்டும் மேற்கொள்ளக்கூடிய வகையில் மாற்றப்பட்டு இருப்பதாக வாட்ஸ்அப் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.

    சர்வதேச அளவில் சுமார் 200 கோடி பேரும் இந்தியாவில் மட்டும் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்சமயம் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய மாற்றம் மூலம் போலி செய்திகள் பரவுவதை பெருமளவு தடுக்க முடியும்.
    வீடியோ கால் மேற்கொள்ள சைன் அப் மற்றும் டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியத்தை நீக்கும் புதிய அம்சம் ஸ்கைப் சேவையில் அறிமுகம்.



    ஸ்கைப் சேவையில் புதிதாக மீட் நௌ (Meet Now) எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மீட் நௌ அம்சம் கொண்டு ஸ்கைப் காண்டாக்ட்கள் மட்டுமின்றி, குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பை விடுக்க முடியும். அழைப்பை பெறுவோர் ஸ்கைப் அக்கவுண்ட் இல்லை என்றாலும், வீடியோ கால் இணைப்பில் இணைந்து கொள்ளலாம்.

    புதிய மீட் நௌ அம்சம் கொண்டு ஒரு க்ளிக் செய்து பிரத்யேக லிண்க்கினை இலவசமாக உருவாக்கி கொள்ளலாம். இதன் மூலம் வரம்பற்ற வீடியோ கால் அழைப்புகளை ஸ்கைப் சேவையில் பயன்படுத்திக் கொள்ளலாம். முற்றிலும் இலவசமாக கிடைக்கும் மீட்டிங் லிண்க் நேரத்தின் அடிப்படையில் இடையிடையே நிறுத்தப்படாது என ஸ்கைப் அறிவித்துள்ளது.

    மேலும் ஸ்கைப் அழைப்புகளை 30 நாட்கள் வரை கால் ரெக்கார்டிங்களை சேமித்து வைத்துக் கொள்ளும். மேலும் சாட்களில் பகிரப்படும் மீடியா ஃபைல்களை பின்னர் பயன்படுத்த ஏதுவாக சேமித்து வைத்து கொள்ள முடியும். 

    ஸ்கைப் மீட் நௌ

    ஸ்கைப் மீட்டிங் கால் செய்வது எப்படி?

    ஸ்கைப் சேவையில் சைன்இன் செய்து மீட் நௌ universal Meet Now பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

    பின் கால் லிண்க் கிடைக்கும், அதனை ஷேர் பட்டன் மூலம் மற்றவர்களுக்கு பகிர வேண்டும்

    அழைப்புக்கு தயாரானதும் ஆடியோ அல்லது வீடியோ ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்து ஸ்டார்ட் கால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

    இனி இணைய வசதி கொண்டு மீட்டிங் உருவாக்கலாம்

    மீட் நௌ அம்சம் மூலம் ஸ்கைப் சேவையில் இணைவது எப்படி?

    ஸ்கைப் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனில் மீட் நௌ லிண்க் க்ளிக் செய்ய வேண்டும்

    சைன் இன் செய்யப்படவில்லை என்றாலும் அழைப்பில் இணைந்து கொள்ள முடியும்

    டெஸ்க்டாப் சாதனத்தில் ஸ்கைப் இன்ஸ்டால் செய்யப்படவில்லை என்றாலும், ஸ்கைப் வெப் மூலம் அழைப்புகளை இணைந்து கொள்ள முடியும். இத்துடன் சாதனத்தில் ஸ்கைப் இன்ஸ்டால் செய்யக் கோரும் ஆப்ஷனும் காணப்படும்.
    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஸ்மார்ட்போன் விநியோகம் பத்து ஆண்டுகளில் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பெரும்பாலான துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தொழில்நுட்ப பிரிவில் ஸ்மார்ட்போன் சந்தை அதிகளவு பாதிப்பை சந்தித்து இருக்கிறது. சிசிஎஸ் இன்சைட் அறிக்கையின் படி ஸ்மார்ட்போன் சந்தை அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மட்டும் சுமார் 126 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 25 கோடி யூனிட்கள் குறைவு ஆகும். அந்த வகையில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு என சிசிஎஸ் தெரிவித்துள்ளது.

    போன் பயன்பாடு

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஸ்மார்ட்போன் விநியோகம் 2020 இரண்டாவது காலாண்டில் 29 சதவீதம் வரை சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஸ்மார்ட்போன் விநியோகம் தொடர்புடைய இதர பணிகளும் ஆண்டு இறுதியில் பாதிப்பை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

    உலகம் முழுக்க வாடிக்கையாளர்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றனர். பெரும்பாலான நிறுவனங்களும் விநியோக பணிகளில் அதிக பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக வாடிக்கைாயளர்களால் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    இதுதவிர மக்களின் பொருளாதார நெருக்கடி சூழலும் அவர்களை ஸ்மார்ட்போன்களை வாங்க விடாத நிலைக்கு தள்ளி இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற பொருட்களை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் செலுத்த மாட்டார்கள். 2019 ஆண்டு விடுமுறை காலத்தில் விற்பனையானதை விட இந்த ஆண்டு விடுமுறை கால விற்பனை மூன்று சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பை டிராக் செய்யும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆரோக்யசேது எனும் செயலி வெளியிடப்பட்டுள்ளது.



    மத்திய அரசு சார்பில் ஆரோக்யசேது எனும் மொபைல் செயலி வெளியிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவன கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய செயலி கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை டிராக் செய்ய முடியும்.

    இந்த செயலி ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். மூலம் உருவாக்கப்பட்ட சமூக வரைபடம் கொண்டு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் மக்கள் தொடர்பு கொள்கிறார்களா என்பதை கண்டறியும். 

    ஆரோக்யசேது

    இன்ஸ்டால் செய்யப்பட்டதும் இந்த செயலி ஏற்கனவே ஆரோக்யசேது இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள சாதனங்களை கண்டறியும். பின் இன்ஸ்டால் செய்யப்பட்ட சாதனங்களை பயன்படுத்துவோரில் எவரேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரா என்பதை கண்டறிந்து பயனரின் அபாய அளவை கணக்கிடும். 

    இந்த செயலியை கொண்டு மக்கள் கொரோனா தொற்று பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வைக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பின் பயனர் தனிமைப்படுத்தப்பட வேண்டுமா என்பது போன்ற விவரங்களையும் இந்த செயலி வழங்குகிறது.

    மத்திய அரசின் ஆரோக்யசேது செயலியை பயன்படுத்த மக்கள் ப்ளூடூத், லொகேஷன் மற்றும் டேட்டா விவரங்களை பயன்படுத்துவதற்கான அனுமதியை செயலிக்கு வழங்க வேண்டும். 

    செயலி சேகரிக்கும் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த செயலி 11 மொழிகளில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் இதனை பயன்படுத்த முடியும்.
    கொரோனா வைரஸ் பாதிப்பு பரவுவதை தடுக்கும் நோக்கில் நாடுதழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து சமூக வலைதள பயன்பாடு 87 சதவீதம் அதிகரித்துள்ளது.


    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து, வேறு காரணங்களுக்காக வெளியே செல்ல முடியாமால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

    இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோர் சமூகவலைதளங்களிலேயே பொழுதை போக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களின் பயன்பாடு கடந்த வாரத்தை விட 87 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. 

    சமூக வலைதளம்

    கடந்த வாரம் சராசரியாக ஒருவர் 150 நிமிடங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவின் முதல் வாரத்தில் சராசரி பயன்பாடு சதவீதம் 280 நிமிடங்களாக உயர்ந்துள்ளது.

    இதுதொடர்பாக மும்பை, பெங்களூர் மற்றும் சென்னையில் 1300 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 72 சதவீதம் பேர் இண்டர்நெட்டில் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை தேடிப்பார்ப்பதும், 76 சதவீதம் பேர் காலை 8 மணி முதல் 9 மணி வரை டி.வி. பார்ப்பதும், 89 சதவீதம் பேர் ரேடியோ கேட்பது மற்றும் இசை சம்பந்தமான செயலிகளில் பொழுதை போக்குவதாக தெரிவித்துள்ளனர்.
    ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம் வழங்குவதாக இரு நிறுவனங்கள் அறிவித்து இருக்கின்றன.



    வோடபோன் ஐடியா நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 17 வரை வேலிடிட்டி நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டியை ஏப்ரல் 17 வரை நீட்டிக்கிறது.

    இத்துடன் இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 இலவச டாக்டைம் வழங்குகின்றன. ஜீரோ பேலன்ஸ் டாக்டைம் கொண்ட அக்கவுண்ட்களுக்கு இலவச டாக்டைம் வழங்கப்படும் என அறிவித்து இருக்கின்றன. 

    ஏர்டெல் நிறுவன தகவல்களின் படி சுமார் எட்டு கோடி வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை வாடிக்கையாளர்களுக்கும் தொடர்ந்து இன்கமிங் அழைப்புகள் வருவதோடு, ரூ. 10 இலவச டாக்டைம் வழங்கப்படுகிறது. 

    வோடபோன் ஐடியா

    ஏர்டெல் அறிவித்து இருக்கும் புதிய சலுகை வாடிக்கையாளர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும் என ஏர்டெல் நிறுவம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 100 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

    ஊரடங்கு உத்தரவு காரணமாக மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைக்கு ஏற்ப டெலிகாம் நிறுவனங்கள் வேலிடிட்டி நீட்டிப்பு மற்றும் இலவச டாக்டைம் போன்ற சலுகைகளை அறிவித்து வருகின்றன. மொபைல் போன் போன்றே பிராட்பேண்ட் சேவைகளிலும் இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    ஸ்மார்ட்போன் சாதனங்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.



    பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய சாதனமாக ஸ்மார்ட்போன் மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் ஒருநாளில் பலமுறை நம் உடலில் தொடுகிறது. மேலும் ஸ்மார்ட்போன்களில் அதிக கிருமிகள் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

    கொரோனா வைரஸ் பாதிப்பு எளிதில் பரவி வரும் நிலையில், ஸ்மார்ட்போன் மூலம் அது பரவும் அபாயமும் அதிகமே. அந்த வகையில் ஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும் என தெரியுமா? 

    உலக சுகாதார மையம்  சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், 2003 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட சார்ச்-கோவ் வைரஸ் கிளாஸ் மீது 96 மணி நேரங்கள் அதாவது நான்கு நாட்களுக்கு உயிர்வாழும் என கண்டறியப்பட்டது. கிளாஸ் தவி கடுமையான பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மீது 72 மணி நேரங்களுக்கு உயிர்வாழும் என கண்டறியப்பட்டது.

    போன் பயன்பாடு

    ஆரோக்கியத்திற்கான தேசிய மையம் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தற்போதைய கொரோனா வைரஸ் ஸ்டீல் மற்றும் கடுமையான பிளாஸ்டிக் மீது 72 மணி நேரங்கள் அதாவது மூன்று நாட்களுக்கு உயிர்வாழும் என தெரியவந்துள்ளது. மேலும் கார்டுபோர்டின் மீது 24 மணி நேரத்திற்கும், பித்தளையின் மீது 4 மணி நேரத்திற்கு உயிர்வாழும் என தெரிவிக்கப்பச்சுள்ளது. சமீபத்திய ஆய்வில் கொரோனா வைரஸ் கிளாஸ் மீது எவ்வளவு காலம் உயிர்வாழும் என கண்டறியப்படவில்லை.

    எனினும், 2003 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உலக சுகாதார மையம் மற்றும் ஆரோக்கியத்துக்கான தேசிய அமைப்பு ஆய்வு முடவுகளின் படி கிளாஸ் மீது கொரோனா வைரஸ் 96 மணி நேரம் அதாவது நான்கு நாட்களுக்கு உயிர்வாழும் என கருத முடியும். ஆய்வின் படி ஸ்மார்ட்போன் மட்டுமின்றி அனைத்துவித கிளாஸ் பரப்புக்கும் பொருந்தும்.
    ஃபேஸ்புக் நிறுவனம் கொரோனா வைரஸ் பற்றிய மக்களின் சந்தேகங்களை போக்கும் நோக்கில், கொரோனா ஹெல்ப்டெஸ்க் சாட்பாட் ஒன்றை துவங்கி உள்ளது.



    உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் மெசஞ்சர் சாட்பாட் சேவையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்துடன் இணைந்து வெளியிட்டு உள்ளது. கொரோனா ஹெல்ப்டெஸ்க் சாட்பாட் என அழைக்கப்படும் இந்த மெசஞ்சர் சேவை மூலம் மக்களுக்கு கொரோனா பற்றி ஏற்படும் சந்தேகங்களை போக்கவும், போலி செய்திகளை தடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    தொழில்நுட்ப வசதியினை சரியான நேர்ததில் பயன்படுத்தி மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை வழங்கி அவர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள மத்திய அரசு அமைச்சகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது பெருமைக்குரிய விஷயம்  என ஃபேஸ்புக் இந்தியா நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் தெரிவித்தார்.

    புதிய சாட்பாட் சேவையை கொண்டு மக்கள் மத்திய சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அவசர உதவி எண் உள்ளிட்டவற்றை கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.

    ஃபேஸ்புக்

    முன்னதாக உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்சுக்கு சொந்தமான பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிக்காக ஒரு நிதியத்தை இம்மாத தொடக்கத்தில் ஆரம்பித்தது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், அந்த நிதியத்துக்கு உதவ முன்வந்துள்ளார். 

    அவருக்கு சொந்தமான ‘சான் ஜுகர்பெர்க் இனிஷியேட்டிவ்’ என்ற தொண்டு நிறுவனம், ரூ.185 கோடி நன்கொடை அளிக்கிறது. இதை ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில், மார்க் ஜுகர்பெர்க்கும், அவருடைய மனைவி பிரிஸ்சில்லா சானும் தெரிவித்தனர். 

    “வைரசை குணப்படுத்த இதுவரை உள்ள மருந்துகளின் அடிப்படையில், கொரோனாவை தடுப்பதற்கான, பாதிப்பை குறைப்பதற்கான மருந்து ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும்” என்று ஜுக்கர்பெர்க் கூறினார்.

    இந்த ஆராய்ச்சிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு பிறகு அதிக நன்கொடை அளிப்பது மார்க் ஜுகர்பெர்க் ஆவார். அவர் வெளிஅமைப்புக்கு அளித்த மிகப்பெரிய நன்கொடை இதுவே ஆகும்.
    2020 5ஜி ஐபோன் மாடல்களின் உற்பத்தியில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால், இவற்றின் வெளியீடு மாதக்கணக்கில் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.



    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணம் ஆப்பிள் நிறுவனத்தையும் பாதித்து இருக்கிறது. இதனால் 2020 5ஜி ஐபோன் மாடல்கள் திட்டமிட்டப்படி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    புதிய மொபைல்  போன்கள் குறிப்பாக ஐபோன் மாடல்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு விருப்பம் குறைந்து இருக்கும் என்பதே புதிய ஐபோன் வெளியீடு தாமதமாக மற்றொரு காரணம் என கூறப்படுகிறது. இதுதவிர தற்போதைய பொருளாதார நெருக்கடியும் இதற்கு காரணமாக கூறலாம்.

    சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபோன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. வெளியீடு ஏற்கனவே தாமதமாகி விட்டதால், தனது 5ஜி ஐபோன் அதிக பிரபலமாக ஆப்பிள் விரும்பும் என தெரிகிறது.

    எனினும், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய ஐபோன் வாங்குவதற்கான விருப்பம் குறைந்து இருக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

    ஐபோன்

    இதுதவிர ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வழங்கும் நிறுவனங்களும் பணிகளை கணிசமான அளவு நிறுத்தி இருக்கின்றன. சீனாவில் நிலைமை மெல்ல சீரடைந்து வருகிறது என்ற போதும், உற்பத்தி ஆலைகள் இன்னமும் முழுவீச்சில் செயல்பட துவங்கவில்லை.

    புதிய ஐபோனிற்கான பொறியியல் பிரிவின் பணிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பயண தடைகளால் தாமதமாகி இருக்கின்றன. இது நிலைமையை மேலும் மோசமடைய வைத்திருக்கின்றன.

    உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும் மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் பாகங்களை ஆகஸ்ட் மாத வாக்கில் வழங்குவதாக தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக இவை ஜூன் மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    தற்போதைய சூழ்நிலையில், 5ஜி ஐபோன் வெளியீடு தாமதமாகி இருப்பது மட்டும் உறுதியாகி இருக்கும் நிலையில், இதுபற்றிய மற்ற விவரங்கள் தெளிவற்றதாகவே இருக்கின்றன. 
    கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், ரியல்மி சாதனங்களுக்கு வழங்கப்பட்ட வாரண்டி நீட்டிக்கப்படுவதாக ரியல்மி அறிவித்துள்ளது.



    ரியல்மி பிராண்டு தனது சாதனங்களுக்கான வாரண்டியை மே 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. வாரண்டி நீட்டிப்பு மார்ச் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 வரையிலான காலக்கட்டத்துடன் வாரண்டி நிறைவுறும் ரியல்மி ஸ்மார்ட்போன், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் பல்வேறு சாதனங்களுக்கு பொருந்தும்.

    இதுதவிர மார்ச் 15 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட சாதனங்களுக்கான வாரண்டியும் 30 நாட்கள் வரை நீட்டிக்கப்படுவதாக ரியல்மி தெரிவித்துள்ளது. 

    கொரோனா வைரஸ் நொய் தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ரியல்மி பிராண்டு அறிமுக நிகழ்வுகள் ஏப்ரல் 14 வரை நடைபெறாது என ரியல்மி அறிவித்து இருக்கிறது.

    ரியல்மி வாரண்டி

    நாட்டில் கொரோனா வைரஸ் நொய் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில், நாடு தழுவிய ஊரடங்கு 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நாடு  முழுக்க பெரும்பாலான சேவைகள் முடங்கி இருக்கின்றன. 

    அந்த வரிசையில் ரியல்மி தனது உற்பத்தி ஆலைகளில் பணியாற்றுவோரின் பாதுகாப்பு கருதி பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது.

    மேலும் ரியல்மி பிராண்டின் நார்சோ சீரிஸ் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது. ரியல்மி பயனர்கள் தங்களது பொருட்களின் வாரண்டி நிலவரத்தை ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
    ×