search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப்
    X
    வாட்ஸ்அப்

    போலி செய்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் எடுத்த அதிரடி முடிவு

    செயலி மூலம் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் வாட்ஸ்அப் அதிரடி முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறது.



    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாட்ஸ்அப்பில் ஒரே சமயத்தில் ஒரு சாட்டிற்கு மட்டுமே குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்ய முடியும். முன்னதாக ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது. 

    புதிய கட்டுப்பாடு மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி உலகம் முழுக்க பரவும் போலி செய்திகளை முடக்க முடியும். முன்னதாக ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவலை ஆன்லைனில் வெரிஃபை செய்யும் வசதியை வாட்ஸ்அப் சோதனை செய்து வருவது பற்றிய விவரங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    வாட்ஸ்அப்

    நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர். இதன் காரணமாக வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்யும் வழக்கம் கடந்த வாரத்தில் பெருமளவு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    இதன் மூலம் போலி செய்திகளும் பரவும் என்பதால் வாட்ஸ்அப் ஃபார்வேர்டு சமயத்தில் ஒருவருக்கு மட்டும் மேற்கொள்ளக்கூடிய வகையில் மாற்றப்பட்டு இருப்பதாக வாட்ஸ்அப் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.

    சர்வதேச அளவில் சுமார் 200 கோடி பேரும் இந்தியாவில் மட்டும் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்சமயம் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய மாற்றம் மூலம் போலி செய்திகள் பரவுவதை பெருமளவு தடுக்க முடியும்.
    Next Story
    ×