என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    டிக்டாக்கை தொடர்ந்து சீனாவின் மேலும் 8 செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து டிரம்ப் உத்தரவு.


    கொரோனாவைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

    இதற்கிடையே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி சீனாவை சேர்ந்த டிக்டாக் மற்றும் வீசாட் செயலிக்கு அமெரிக்காவில் டிரம்ப் தடை விதித்தார். அந்த செயலியை அமெரிக்கா நிறுவனத்துக்கு விற்கவும் காலக்கெடு விதித்தார்.

     அலிபே

    இந்த செயலிகள் அமெரிக்க மக்களின் தகவல்களை திருட வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தநிலையில் சீனாவை சேர்ந்த மேலும் 8 செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

    அலிபே, உள்பட 8 சீன செயலிகளுக்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பை காக்கும் வகையில் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த தடை 45 நாட்களில் அமலுக்கு வருகிறது.
    2021 ஆரம்பமே இப்படியானு சொல்லும் வகையில் அமலாகி இருக்கும் சில திட்டங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    புத்தாண்டு கொண்டாட்டம் எல்லாம் ஓரளவு சுமாரா தான் போச்சுனு பலர் தங்களோட அனுபவத்தை சொல்லிட்டு இருக்காங்க. 2021 துவக்கமே சரியில்லைனு சொல்ல வைக்குறதுக்கு ஏற்ற மாதிரி உருமாறிய கொரோனா, 100 வருஷத்துல இல்லாத மழை ஜனவரி துவக்கத்திலேயே பதிவான சம்பவங்கள் அரங்கேறி இருக்கு.

    இந்த நிலையில், 2021 நம் வாழ்க்கை முறையில் சத்தமின்றி மாறி இருக்குற சில விஷயங்களோட டாப் 5 பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

    வாட்ஸ்அப்

    வாட்ஸ்அப்

    ஜனவரி 1, 2021 துவங்கி ஆண்ட்ராய்டு 4.0.3, ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கும் முந்தைய ஒஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் புது அம்சங்கள் வழங்கப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    பாஸ்டேக்

    இந்தியா முழுக்க சுங்க சாவடிகளில் ஆன்லைன் பணம் செலுத்தும் முறையை ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலாக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. எனினும், கடைசியில் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

     ரிசர்வ் வங்கி

    பாசிட்டிவ் பே சிஸ்டம்

    வங்கி துறையில் ஏற்படும் ஊழல்களை குறைக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி, ஜனவரி 1 2021 முதல் பாசிட்டிவ் பே சிஸ்டம் எனும் திட்டத்தை அமலாக்கி இருக்கிறது. இதன் மூலம் ரூ. 50 ஆயிரம் மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட காசோலை சார்ந்த பரிமாற்றங்களை கடைசி நேரத்தில் உறுதிப்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    அதாவது காசோலை கொடுத்தவர் எஸ்எம்எஸ், மொபைல் ஆப், இண்டர்நெட் பேங்கிங் அல்லது ஏடிஎம் போன்ற சேவைகளை கொண்டு காசோலை விவரங்களை வழங்கி அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

     கோப்புப்படம்

    அழைப்புகளுக்கு முன் இதை செய்யணும்

    லேண்ட்லைனில் இருந்து மொபைல் நம்பர்களுக்கு அழைப்பை மேற்கொள்ளும் முன் 0 என்ற எண் பயன்படுத்த வேண்டும். இந்த வழிமுறை ஜனவரி 15 ஆம் தேதி முதல் துவங்குகிறது. எனினும், இதற்கு தேவையான வழிமுறைகளை டெலிகாம் ஆபரேட்டர்கள் ஜனவரி 1 ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டு இருந்தது.

    ஆன்லைன் வர்த்தகம்

    இந்தியாவில் டிஜிட்டல் பேமண்ட் சேவையை பாதுகாப்பாக மேற்கொள்ளும் நோக்கில் ரிசர்வ் வங்கி ஆளுநர் வங்கிகள் காண்டாக்ட்லெஸ் கார்டு பரிமாற்றங்களுக்கான அளவை ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வலியுறுத்தி இருக்கிறார். இது ஜனவரி 1, 2021 முதல் அமலுக்கு வந்தது. 
    வாட்ஸ்அப் செயலியில் புத்தாண்டு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட புது சாதனை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    புத்தாண்டு தினத்தில் மட்டும் வாட்ஸ்அப் செயலி மூலம் சுமார் 140 கோடி வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது வாட்ஸ்அப் செயலியில் ஒரே நாளில் பதிவான அதிகப்படியான அழைப்புகள் ஆகும்.

    ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் இதேபோன்று அதிகளவு பயன்பாடு பெறுவது வாடிக்கையான ஒன்று தான். எனினும், இந்த ஆண்டு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இத்தகைய சாதனை படைக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. 

     கோப்புப்படம்

    இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகம் ஆகும். பேஸ்புக்கின் வாட்ஸ்அப் மட்டுமின்றி இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் உள்ளிட்டவையும் அதிக பயன்பாட்டை எதிர்கொண்டிருந்தது. இதே நாளில் மெசஞ்சரில் அதிகப்படியான க்ரூப் வீடியோ கால்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

    அதாவது முந்தைய ஆண்டை விட புத்தாண்டு தினத்தில் மட்டும் இருமடங்கு அதிக வீடியோ கால்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மெசஞ்சரில் பயன்படுத்தப்பட்ட ஏஆர் எபெக்ட் “2020 Fireworks” ஆகும்.

    புத்தாண்டு தினத்தில் நேரலை சேவையின் பயன்பாடும் அதிகரித்து இருக்கிறது. அன்று மட்டும் உலகம் முழுக்க 5.5 கோடி நேரலைகள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவாகி இருக்கிறது. 
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிட்னஸ் பேண்ட் மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிட்னஸ் பேண்ட் டீசர் வெளியாகி உள்ளது. புதிய டீசர், “The New Face of Fitness” தலைப்பில் #SmartEverywear-எனும் ஹேஷ்டேக் கொண்டு பதிவிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஒன்பிளஸ் பிராண்டிங்கில் வளைந்த ஸ்கிரீன் கொண்ட பேண்ட் படமும் இணைக்கப்பட்டு உள்ளது.

    புதிய பிட்னஸ் பேண்ட் ஸ்லீப் டிராக்கிங் அம்சம் கொண்டிருக்கும் என்றும் டீசரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி ஒன்பிளஸ் பேண்ட், சியோமி நிறுவனத்தின் எம்ஐ பேண்ட் 5 மாடலுக்கு போட்டியாக வெளியாகும் என கூறப்பட்டது.

     ஒன்பிளஸ் பேண்ட்

    இதில் வாட்டர் ரெசிஸ்டண்ட், AMOLED ஸ்கிரீன், நீண்ட பேட்டரி பேக்கப் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ஒன்பிளஸ் பேண்ட் சொந்தமான மென்பொருள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    மேலும் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி புதிய ஒன்பிளஸ் வாட்ச் உருவாகி வருவதாக தகவல் தெரிவித்து இருந்தார். எனினும், முதற்கட்டமாக பேண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    பத்து கோடி பயனர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டார்க் வெப் தளத்தில் சுமார் பத்து கோடி பயனர்களின் மிகமுக்கிய விவரங்கள் வெளியாகி இருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் தெரிவித்து இருக்கிறார். இதில் பயனர்களின் பெயர், போன் நம்பர், மின்னஞ்சல் முகவரி, முதல் மற்றும் கடைசி நான்கு இலக்க கார்டு எண்கள் இடம்பெற்று இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்த விவகாரத்தில் அமேசான், மேக்மைட்ரிப் மற்றும் ஸ்விகி போன்ற நிறுவனங்களின் பணப்பரிமாற்ற முறைகளை கையாளும் ஜஸ்பே எனும் முகமைக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. முன்னதாக பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் தனது பயனர் விவரங்கள் அம்பலமாதாக தெரிவித்து இருந்தது.

     கோப்புப்படம்

    மார்ச் 2017 முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆன்லைன் பணப்பரிமாற்றங்களின் போது இந்த விவரங்கள் டார்க் வெப் தளத்தில் வெளியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. 

    இதில் பல்வேறு இந்தியர்களின் கார்டு எக்ஸ்பைரி தேதி, கஸ்டமர் ஐடிி மற்றும் கார்டு எண்களின் முதல் மற்றும் கடைசி நான்கு இலக்கங்கள் உள்ளிட்டவை இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், சரியான பரிமாற்ற விவரங்கள் தெரியவில்லை. 

    இணையத்தில் வெளியாகி இருக்கும் அந்த விவரங்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு இருந்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராஜசேகர் ராஜாரியா தெரிவித்து இருக்கிறார். இவற்றை விற்கும் ஹேக்கர் டெலிகிராம் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பிட்காயின்களை பரிமாற்றத்திற்கு கேட்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இருந்து சில செயலிகளை திடீரென நீக்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் தனது சீன ஆப் ஸ்டோரில் இருந்து 39 ஆயிரம் கேம் செயலிகளை நீக்கி இருக்கிறது. உரிமம் பெறாத காரணத்தால் இந்த செயலிகள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    சீனாவின் ஆப் ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து டெவலப்பர்கள் முறையான உரிமம் பெற ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே காலக்கெடு விதித்து இருந்தது. இந்நிலையில், உரிமம் பெறாத காரணத்தால் ஒரே நாளில் இத்தனை செயலிகள் நீக்கப்பட்டு இருக்கிறது.

     ஆப் ஸ்டோர்

    ஆப்பிள் நிறுவன வரலாற்றில் ஒரே நாளில் அதிகளவு செயலிகள் நீக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை ஆகும். ஆப் ஸ்டோரில் இருந்து மொத்தம் 46 ஆயிரம் செயலிகள் நீக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 39 ஆயிரம் செயலிகள் கேம்கள் ஆகும். 

    நீக்கப்பட்ட செயலிகள் பட்டியலில் என்பிஏ2கே20 மற்றும் அசாசின்ஸ் கிரீட் ஐடென்டி என பல்வேறு பிரபல கேம்களும் இடம்பெற்று இருக்கின்றன. 

    சோனி நிறுவனம் தனது பிளேஸ்டேஷன் 5 கேமிங் கன்சோலின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.

    சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் 5 (பிஎஸ்5) கேமிங் கன்சோல் இந்திய சந்தையில் பிப்ரவரி 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது. 

    இந்த தகவலை சோனி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. மேலும் புதிய கன்சோல் முன்பதிவு ஸ்டாக் இருக்கும்வரை மட்டுமே நடைபெறும் என சோனி தெரிவித்து உள்ளது. உலகின் பல்வேறு சந்தைகளில் சோனி பிளேஸ்டேஷன் 5 நவம்பர் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. 

     சோனி பிளேஸ்டேஷன் 5

    விற்பனை துவங்கிய ஒரே மாதத்தில் பிளேஸ்டேஷன் 5 மொத்தம் 34 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியான பிளேஸ்டேஷன் கன்சோல்களை விட இது அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கிறது.

    இந்தியாவில் சோனி பிளேஸ்டேஷன் 5 முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசான், ப்ளிப்கார்ட், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், கேம்ஸ் தி ஷாப், ஷாப் அட் சோனி சென்ட்டர், விஜய் சேல்ஸ் மற்றும் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் துவங்குகிறது.

    சோனி பிளேஸ்டேஷன் 5 டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 39,990 என்றும் டிஸ்க் டிரைவ் எடிஷன் விலை ரூ. 49,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    போக்கோ நிறுவனத்தின் புதிய எப்2 ஸ்மார்ட்போன் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    போக்கோ எப்2 ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. புத்தாண்டில் அறிமுகமாக இருக்கும் முதல் போக்கோ ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என தெரிகிறது. டீசர் வீடியோவில், கடந்த ஆண்டு மட்டும் பத்து லட்சத்திற்கும் அதிக போக்கோ ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய போக்கோ எப்2 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், 4250 எம்ஏஹெச் பேட்டரி, குவாட் கேமரா சென்சார், AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் மற்றும் என்எப்சி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய போக்கோ எப்2 ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகும் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி போக்கோ பிராண்டு லேப்டாப் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகலாம் என கூறப்பட்டு இருக்கிறது. 

    ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால் இலவசமாக வழங்கப்படுகிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளை இலவசமாக வழங்குவதாக மீண்டும் அறிவித்து இருக்கிறது. 

    இதன் மூலம் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின் மற்ற நெட்வொர்க் எண்களுக்கான வாய்ஸ் கால் சேவையை ஜியோ இலவசமாக வழங்குகிறது. முன்னதாக ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால் கட்டணம் நிமிடத்திற்கு 6 பைசா வீதம் வசூலிக்கப்பட்டு வந்தது.

     கோப்புப்படம்

    புதிய அறிவிப்பு மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் இன்று (ஜனவரி 1) முதல் அமலாக்க இருக்கும் ‘Bill and Keep' முறையின் அடிப்படையில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த முறையில் இன்டர்கனெட் கட்டணம் உள்நாட்டில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    டிராய் புது முறையின் படி ரிலையன்ஸ் ஜியோ மற்ற டெலிகாம் நிறுவனங்களை போன்று அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் இலவச வாய்ஸ் கால் சேவையை வழங்க முடியும். இதன் மூலம் ஏர்டெல் மற்றும் வி போன்ற நிறுவனங்கள் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளன.

    சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் 4ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சகஜமாகி வருகின்றன. தற்சமயம் பெரும்பாலான சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 5ஜி நெட்வொர்க் வசதி கொண்டிருக்கின்றன. 

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. மூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

     சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 ஸ்மார்ட்போன் மாடல்களுடன் சற்றே குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சாம்சங் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி இசட் ப்ளிப் லைட் என அழைக்கப்படலாம் என தெரிகிறது. இந்த மாடல் 4ஜி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 4ஜி எல்டிஇ மட்டும் வழங்கப்பட்டால் இதன் விலை கணிசமாக குறையும் என தெரிகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் பிளாட் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்துடன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன. 

    அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் பிளாட் டிஸ்ப்ளே மற்றும் அதிவேக வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

     ஸ்மார்ட்போன்

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இவற்றுடன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆக்சிஜன் ஒஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 11, 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400  பிக்சல் பிளாட் டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    2020 ஆண்டின் டாப் 10 டிரெண்டிங் ஆப்ஸ் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
      

    2020 ஒருவழியாக நிறைவுக்கு வந்து விட்டது. ஆண்டு துவக்கம் முதல் இதுவரை கொரோனாவைரஸ் ஊரடங்கிலேயே கழிந்து விட்டது. நோய் தொற்று ஊரடங்கு உலக வழக்கங்கள் அனைத்தையும் அடியோடு மாற்றி விட்டது. பெரும்பாலான சேவைகள் முழுமையாக ஆன்லைன் மயமாகிவிட்டன.

    ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் தளத்தில் சிறப்பாக செயல்பட செயலிகள் பேரளவு உதவியாக இருந்தன. உடல்நலம் துவங்கி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு என பல்வேறு பிரிவுகளில் செயலிகள் 2020 ஆண்டில் செயலிகள் அதிக பிரபலமாகி இருக்கின்றன.

    டிஜிட்டல் பணப்பரிமாற்ற செயலிகளான கூகுள் பே, பேடிஎம், போன் பே உள்ளிட்டவைகளின் பயன்பாடு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இதேபோன்று பொழுதுபோக்கு செயலிகள், சமூக வலைதள செயலிகளும் பிரபலமாகி இருக்கின்றன. அந்த வகையில் 2020 டிரெண்டிங் செயலிகளின் டாப் 10 பட்டியலை பார்ப்போம்.

    டிக்டாக்

    டிக்டாக்

    டிக்டாக் செயலி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், டிக்டாக் இந்த ஆண்டு அதிக பிரபல செயலியாக இருக்கிறது. இந்த ஆண்டு இதன் பயனர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. மேலும் இது 2020 ஆண்டு அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலிலும் இடம்பிடித்து இருக்கிறது. 

    இன்ஸ்டாகிராம்

    பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் போட்டோ-ஷேரிங் செயலி ஆகும். இது சமூக வலைதள செயலிகளில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் செயலிகளை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கிறது. பொழுதுபோக்கு மட்டுமின்றி பயனர்களின் திறமையை வெளிப்படுத்தும் தளமாகவும் இது மாறி இருக்கிறது.

     ஜூம்

    ஜூம்

    உலகில் தற்சமயம் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக ஜூம் இருக்கிறது. இந்த செயலிக்கான தட்டுப்பாடு கடந்த ஆறு மாதங்களில் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. கொரோனாவைரஸ் பரவலை தடுக்க மக்கள் வீட்டில் இருந்தபடி வெளி உலகத்துடன் தொடர்பில் இருக்க இந்த செயலி உதவுகிறது.

    வாட்ஸ்அப்

    ஜூலை 2020 நிலவரப்படி உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. இந்த செயலி உலகம் முழுக்க சுமார் 200 கோடி டவுன்லோட்களை கடந்து உள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயனர்கள் அடிக்கடி பயன்படுத்தவில்லை என்ற போதும், வாட்ஸ்அப் செயலியை அன்றாடம் பயன்படுத்துகின்றனர்.

    நெட்ப்ளிக்ஸ்

    பிரபல ஒடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் பல்வேறு தரவுகளை வழங்குகிறது. வீடியோ ஸ்டிரீமிங் செயலிகள் பிரிவில் நெட்ப்ளிக்ஸ் முதலிடம் பிடித்து இருக்கிறது. இதன் பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

     பேஸ்புக்

    பேஸ்புக்

    மக்கள் தங்களின் உறவினர், நட்பு வட்டாரத்துடன் உலகின் எந்த பகுதியில் இருந்தும் தொடர்பு கொள்ள பேஸ்புக் சிறந்த தளமாக இருக்கிறது. ஊரடங்கு காலக்கட்டத்தில் ஆன்லைன் வியாபார வழக்கம் அதிகரித்து இருக்கும் சூழலில் பேஸ்புக் லைவ் மூலம் பொருட்களை நேரடியாக விற்கவும் முடிகிறது.

    அமேசான்

    2020 ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட செயலிகளில் ஒன்றாக அமேசான் இருக்கிறது. இதேபோன்று நெட்ப்ளிக்ஸ் சேவைக்கு மாற்றாக அமேசான் பிரைம் வீடியோ சேவையை வழங்குகிறது. இத்துடன் அமேசான் பேண்ட்ரி மூலம் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்க முடியும்.

    கூகுள் மீட்

    ஜூம் செயலிக்கு மாற்றாக கிடைக்கும் கூகுள் மீட் உலகின் முன்னணி வீடியோ கான்பரன்சிங் செயலிகளில் ஒன்றாக இருக்கிறது. கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் மக்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றும் போது இந்த செயலி அதிக பிரபலமானது.

     பேஸ்புக் மெசஞ்சர்

    பேஸ்புக் மெசஞ்சர்

    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிக்கு மாற்றான குறுந்தகவல் செயலியாக பேஸ்புக் மெசஞ்சர் இருக்கிறது. உலகம் முழுக்க இந்த செயலியை பலர் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் இந்த செயலியில் பேஸ்புக் பல்வேறு புது அம்சங்களை சேர்த்தது.

    யூடியூப்

    உலகில் அதிகம் பேர் பார்க்கும் தளமாக யூடியூப் இருக்கிறது. மேலும் முன்னணி வீடியோ தளமாகவும் இது இருக்கிறது. இந்த செயலி கொண்டு பயனர்கள் தங்களின் திறமையை உலகிற்கு எடுத்துரைக்க முடியும்.
    ×