search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இணையத்தில் லீக் ஆன பத்து கோடி பயனர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள்

    பத்து கோடி பயனர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டார்க் வெப் தளத்தில் சுமார் பத்து கோடி பயனர்களின் மிகமுக்கிய விவரங்கள் வெளியாகி இருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் தெரிவித்து இருக்கிறார். இதில் பயனர்களின் பெயர், போன் நம்பர், மின்னஞ்சல் முகவரி, முதல் மற்றும் கடைசி நான்கு இலக்க கார்டு எண்கள் இடம்பெற்று இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்த விவகாரத்தில் அமேசான், மேக்மைட்ரிப் மற்றும் ஸ்விகி போன்ற நிறுவனங்களின் பணப்பரிமாற்ற முறைகளை கையாளும் ஜஸ்பே எனும் முகமைக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. முன்னதாக பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் தனது பயனர் விவரங்கள் அம்பலமாதாக தெரிவித்து இருந்தது.

     கோப்புப்படம்

    மார்ச் 2017 முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆன்லைன் பணப்பரிமாற்றங்களின் போது இந்த விவரங்கள் டார்க் வெப் தளத்தில் வெளியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. 

    இதில் பல்வேறு இந்தியர்களின் கார்டு எக்ஸ்பைரி தேதி, கஸ்டமர் ஐடிி மற்றும் கார்டு எண்களின் முதல் மற்றும் கடைசி நான்கு இலக்கங்கள் உள்ளிட்டவை இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், சரியான பரிமாற்ற விவரங்கள் தெரியவில்லை. 

    இணையத்தில் வெளியாகி இருக்கும் அந்த விவரங்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு இருந்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராஜசேகர் ராஜாரியா தெரிவித்து இருக்கிறார். இவற்றை விற்கும் ஹேக்கர் டெலிகிராம் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பிட்காயின்களை பரிமாற்றத்திற்கு கேட்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
    Next Story
    ×