search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சோனி பிளேஸ்டேஷன் 5
    X
    சோனி பிளேஸ்டேஷன் 5

    சோனி பிஎஸ் 5 இந்திய வெளியீட்டு விவரம்

    சோனி நிறுவனம் தனது பிளேஸ்டேஷன் 5 கேமிங் கன்சோலின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.

    சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் 5 (பிஎஸ்5) கேமிங் கன்சோல் இந்திய சந்தையில் பிப்ரவரி 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது. 

    இந்த தகவலை சோனி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. மேலும் புதிய கன்சோல் முன்பதிவு ஸ்டாக் இருக்கும்வரை மட்டுமே நடைபெறும் என சோனி தெரிவித்து உள்ளது. உலகின் பல்வேறு சந்தைகளில் சோனி பிளேஸ்டேஷன் 5 நவம்பர் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. 

     சோனி பிளேஸ்டேஷன் 5

    விற்பனை துவங்கிய ஒரே மாதத்தில் பிளேஸ்டேஷன் 5 மொத்தம் 34 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியான பிளேஸ்டேஷன் கன்சோல்களை விட இது அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கிறது.

    இந்தியாவில் சோனி பிளேஸ்டேஷன் 5 முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசான், ப்ளிப்கார்ட், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், கேம்ஸ் தி ஷாப், ஷாப் அட் சோனி சென்ட்டர், விஜய் சேல்ஸ் மற்றும் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் துவங்குகிறது.

    சோனி பிளேஸ்டேஷன் 5 டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 39,990 என்றும் டிஸ்க் டிரைவ் எடிஷன் விலை ரூ. 49,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×