search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப்
    X
    வாட்ஸ்அப்

    ஒரே நாளில் இத்தனையா? வாட்ஸ்அப் படைத்த புது சாதனை

    வாட்ஸ்அப் செயலியில் புத்தாண்டு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட புது சாதனை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    புத்தாண்டு தினத்தில் மட்டும் வாட்ஸ்அப் செயலி மூலம் சுமார் 140 கோடி வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது வாட்ஸ்அப் செயலியில் ஒரே நாளில் பதிவான அதிகப்படியான அழைப்புகள் ஆகும்.

    ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் இதேபோன்று அதிகளவு பயன்பாடு பெறுவது வாடிக்கையான ஒன்று தான். எனினும், இந்த ஆண்டு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இத்தகைய சாதனை படைக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. 

     கோப்புப்படம்

    இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகம் ஆகும். பேஸ்புக்கின் வாட்ஸ்அப் மட்டுமின்றி இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் உள்ளிட்டவையும் அதிக பயன்பாட்டை எதிர்கொண்டிருந்தது. இதே நாளில் மெசஞ்சரில் அதிகப்படியான க்ரூப் வீடியோ கால்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

    அதாவது முந்தைய ஆண்டை விட புத்தாண்டு தினத்தில் மட்டும் இருமடங்கு அதிக வீடியோ கால்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மெசஞ்சரில் பயன்படுத்தப்பட்ட ஏஆர் எபெக்ட் “2020 Fireworks” ஆகும்.

    புத்தாண்டு தினத்தில் நேரலை சேவையின் பயன்பாடும் அதிகரித்து இருக்கிறது. அன்று மட்டும் உலகம் முழுக்க 5.5 கோடி நேரலைகள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவாகி இருக்கிறது. 
    Next Story
    ×