என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆரம்பமே இப்படியா? இதை எல்லாம் கவனிச்சீங்களா?

    2021 ஆரம்பமே இப்படியானு சொல்லும் வகையில் அமலாகி இருக்கும் சில திட்டங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    புத்தாண்டு கொண்டாட்டம் எல்லாம் ஓரளவு சுமாரா தான் போச்சுனு பலர் தங்களோட அனுபவத்தை சொல்லிட்டு இருக்காங்க. 2021 துவக்கமே சரியில்லைனு சொல்ல வைக்குறதுக்கு ஏற்ற மாதிரி உருமாறிய கொரோனா, 100 வருஷத்துல இல்லாத மழை ஜனவரி துவக்கத்திலேயே பதிவான சம்பவங்கள் அரங்கேறி இருக்கு.

    இந்த நிலையில், 2021 நம் வாழ்க்கை முறையில் சத்தமின்றி மாறி இருக்குற சில விஷயங்களோட டாப் 5 பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

    வாட்ஸ்அப்

    வாட்ஸ்அப்

    ஜனவரி 1, 2021 துவங்கி ஆண்ட்ராய்டு 4.0.3, ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கும் முந்தைய ஒஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் புது அம்சங்கள் வழங்கப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    பாஸ்டேக்

    இந்தியா முழுக்க சுங்க சாவடிகளில் ஆன்லைன் பணம் செலுத்தும் முறையை ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலாக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. எனினும், கடைசியில் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

     ரிசர்வ் வங்கி

    பாசிட்டிவ் பே சிஸ்டம்

    வங்கி துறையில் ஏற்படும் ஊழல்களை குறைக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி, ஜனவரி 1 2021 முதல் பாசிட்டிவ் பே சிஸ்டம் எனும் திட்டத்தை அமலாக்கி இருக்கிறது. இதன் மூலம் ரூ. 50 ஆயிரம் மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட காசோலை சார்ந்த பரிமாற்றங்களை கடைசி நேரத்தில் உறுதிப்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    அதாவது காசோலை கொடுத்தவர் எஸ்எம்எஸ், மொபைல் ஆப், இண்டர்நெட் பேங்கிங் அல்லது ஏடிஎம் போன்ற சேவைகளை கொண்டு காசோலை விவரங்களை வழங்கி அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

     கோப்புப்படம்

    அழைப்புகளுக்கு முன் இதை செய்யணும்

    லேண்ட்லைனில் இருந்து மொபைல் நம்பர்களுக்கு அழைப்பை மேற்கொள்ளும் முன் 0 என்ற எண் பயன்படுத்த வேண்டும். இந்த வழிமுறை ஜனவரி 15 ஆம் தேதி முதல் துவங்குகிறது. எனினும், இதற்கு தேவையான வழிமுறைகளை டெலிகாம் ஆபரேட்டர்கள் ஜனவரி 1 ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டு இருந்தது.

    ஆன்லைன் வர்த்தகம்

    இந்தியாவில் டிஜிட்டல் பேமண்ட் சேவையை பாதுகாப்பாக மேற்கொள்ளும் நோக்கில் ரிசர்வ் வங்கி ஆளுநர் வங்கிகள் காண்டாக்ட்லெஸ் கார்டு பரிமாற்றங்களுக்கான அளவை ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வலியுறுத்தி இருக்கிறார். இது ஜனவரி 1, 2021 முதல் அமலுக்கு வந்தது. 
    Next Story
    ×