என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • இந்த நிலை மாறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • அதிக அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்துள்ளது.

    உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள். ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், கணினி என பல பிரிவுகளில் மின்சாதனங்களை விற்பனை செய்து முன்னணி இடத்தில் உள்ளது. ஸ்மார்ட்வாட்ச் பிரான்டுகள் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் உலகளவில் முதலிடத்தில் இருந்து வந்தது. எனினும், தற்போது இந்த நிலை மாறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஸ்மார்ட்வாட்ச் சார்ந்த அம்சங்கள் மற்றும் சேவைகளை சிறந்து விளங்குவதில் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தற்போது இந்த பிரிவில் முதலிடத்தை பறிக்கொடுத்துள்ளது. அந்த வகையில், உலகின் முன்னணி ஸ்மார்ட்வாட்ச் பிராண்டு என்ற பெருமையை ஹூவாய் நிறுவனம் பெற்றிருக்கிறது. சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள காலாண்டு அறிக்கையில், இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

     


    உலகளவில் அணியக்கூடிய சாதனங்கள் காலாண்டு அடிப்படையில் எந்த அளவு விற்பனையாகி உள்ளன என்பதை விவரிக்கும் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையின் படி 2024 ஆண்டின் முதல் மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் ஹூவாய் நிறுவனம் ஆப்பிளை விட அதிக அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்துள்ளது.

    இதன் மூலம் ஹூவாய் நிறுவனத்தின் சந்தை பங்குகள் 16.9 சதவீதமாக (23.6 மில்லியன் யூனிட்கள்) அதிகரித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் இதே காலக்கட்டத்தில் 16.2 சதவீத பங்குகளுடன் (22.5 மில்லியன் யூனிட்கள் ) இரண்டாவது இடத்தில் உள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டியோ/ஆடியோ அழைப்புகள், AI சாட்போட் gork உள்ளிட்ட அம்சங்களை எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தினார்.
    • இந்தக் குறிச்சொற்களைச் சேர்ப்பதன் மூலம் தலைப்புகள் மற்றும் இடுகைகளை எளிதாகத் தேட முடியும்.

    உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.

    டிவிட்டரின் பெயரை எக்ஸ்[X] என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். வீடியோ/ஆடியோ அழைப்புகள், AI சாட்போட் gork உள்ளிட்ட அம்சங்களை எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தினார்.

     

    இந்நிலையில் எக்ஸ் தளத்தில் ஹேஸ்டேங் இடுகைகள் தேவையில்லாதது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    எக்ஸ் தளத்தில் பதிவுகளில் அது தொடர்புடைய ஹேஸ்டேக் களை இடுவதும், அது டிரண்ட் ஆவதும் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது, மேலும் இந்தக் குறிச்சொற்களைச் சேர்ப்பதன் மூலம் தலைப்புகள் மற்றும் இடுகைகளை எளிதாகத் தேட முடியும். இந்நிலையில் எலான் மஸ்க் அது தேவையே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

     

    எக்ஸ் இல் ஹேஸ்டேக் போடலாமா வேண்டாமா என்ற பயனர் ஒருவரின் கேள்விக்கு கோர்ட் சாட்பாட் அளித்த பதிலை பகிர்ந்து மஸ்க் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இனி சிஸ்டத்துக்கு ஹேஸ்டேக்குகள் தேவையில்லை, அதுமட்டுமில்லாமல் அவை பார்க்க அசிங்கமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    தளத்தில் என்ன ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதை அறிந்துகொல்வதற்கு வேறு ஏதும் வழியை எக்ஸ் தளம் உருவாகியிருக்கலாம் என்றும் அதன் காரணமாகவே மஸ்க் இவ்வாறு கூறியுள்ளார் என்று இணைய வல்லுநர்கள் கூறுகின்றனர். 

    • டவுன்லோடு செய்தவர்களின் தனிப்பட்ட விவரங்களை போலி செயலிகள் வாயிலாக திருடப்பட்டு உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
    • டவுன்லோடு செய்வதால் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடி ஹேக்கர்களுக்கு அனுப்பி வைப்பதாக எச்சரித்துள்ளது.

    McAfee எனப்படும் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்றில் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் போலியான கடன் செயலிகள் உலா வருவது தெரியவந்துள்ளது.

    McAfee நிறுவனம் நடத்திய ஆய்வுகளின் படி வெளியிட்டுள்ள செய்தியில், உலகிலேயே போலியான செயலிகளை டவுன்லோடு செய்யக்கூடிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக கூறியுள்ளது.



    அதன்படி, பிளே ஸ்டோரில் Rapidfinance, Prestamo Seguro- Rapido seguro உள்ளிட்ட 15 கடன் போலி செயலிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவில் இந்த 15 கடன் போலி செயலியை 8 மில்லியன் பேர் டவுன்லோடு செய்து பயன்படுத்தி உள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. டவுன்லோடு செய்தவர்களின் தனிப்பட்ட விவரங்களை போலி செயலிகள் வாயிலாக திருடப்பட்டு உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த செயலிகளை டவுன்லோடு செய்வதால் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடி ஹேக்கர்களுக்கு அனுப்பி வைப்பதாக எச்சரித்துள்ளது.

    ஒருவேளை இந்த செயலிகள் உங்கள் போனில் இருந்தால் உடனே நீக்கம் செய்து விட வேண்டும் என்று பொதுமக்களுக்கு McAfee நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

    • வர்த்தக முறையில் 5ஜி சேவையை வழங்க துவங்கியது.
    • பிரீபெயிட், போஸ்ட்போயிட் பயனர்களுக்கு கிடைக்கிறது.

    வோடபோன் ஐடியா நிறுவனம் நாட்டில் உரிமம் பெற்ற 17 சேவை வழங்கும் பகுதிகளில் 5ஜி சேவையை துவங்கியது. மிக சிறிய அளவில் சேவை வழங்கப்படுவதால், பல பயனர்களால் இதனை பயன்படுத்த முடியாது. இந்த சேவை அறிமுகத்தின் மூலம் வோடபோன் ஐடியா நிறுவனம் வர்த்தக முறையில் 5ஜி சேவையை வழங்க துவங்கியுள்ளது.

    3.3 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5ஜி சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்பெக்ட்ரம் தற்போது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்போயிட் பயனர்களுக்கு கிடைக்கிறது. தமிழகத்தில் வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் சென்னை, பெருங்குடி மற்றும் நெசப்பாக்கம் பகுதிகளில் கிடைக்கிறது.

    வோடபோன் ஐடியாவின் 5ஜி பிரீபெயிட் பயனர்கள் ரூ. 475 ரீசார்ஜ் செய்து 5ஜி சேவையை பயன்படுத்த முடியும். போஸ்ட்பெயிட் பயனர்கள் ரூ. 1101 ரெட்-எக்ஸ் ரீசார்ஜில் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். 

    • 'சாட் ஜிபிடி' க்கு பயிற்சி அளித்தல், அதன் மேம்பாடு தொடர்பான பணிகளை செய்தவர் ஆவார்
    • மனித குலத்துக்கு AI கொண்டு வரக்கூடிய ஆபத்துகள் குறித்து பாலாஜி நியூ யார்க் டைம்ஸ் பேட்டியில் எச்சரித்தார்.

    OpenAI நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும், அந்நிறுவனத்தின் தீய நடைமுறைகளை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவருமான 26 வயதான சுசீர் பாலாஜி தற்கொலை செய்துகொண்டார்.

    நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

    அவரது மரணத்தில் சந்தேகம் நிலவி வந்த நிலையில் தற்கொலை மூலமே அவரது உயிர் பிரிந்துள்ளதாக சான் பிரான்சிஸ்கோ மருத்துவ பரிசோதகர் அலுவலகம் உறுதிப்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து அவரது இறப்பில் எந்த மர்மமும் இல்லை என சான் பிரான்சிஸ்கோ போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

     

    யார் இந்த சுசீர் பாலாஜி?

    இந்திய வம்சாவளியை சேர்ந்த சுசீர் பாலாஜி, ஏஐ தொல்நூட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஓபன் ஏஐ நிறுவனத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கணினி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.

    சுமார் 4 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பாலாஜி 2022 பிற்பகுதியில் அந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 'சாட் ஜிபிடி' க்கு பயிற்சி அளித்தல், அதன் மேம்பாடு தொடர்பான பணிகளை செய்தவர் ஆவார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2024 இல் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

    இதைத்தொர்ந்த்து ஓபன் ஏஐ சாட் ஜிபிடி குறித்த பல குற்றசாட்டுகளை பாலாஜி பொதுவெளியில் முன்வைத்தார். நியூ யார்க் டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்த பாலாஜி, ஓபன் ஏஐ நிறுவனத்தின் வணிக கொள்கைகள் வணிகங்களுக்கும் சமூகத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்ததால் அதில் இருந்து வெளியேறியதாக அவர் தெரிவித்தார்.

     

    சாட் ஜிபிடிக்கு பயிற்சி அளிக்க பதிப்புரிமை பெற்ற தரவுகளை ஓபன் ஏஐ பயன்படுத்தி அமெரிக்க பி[பதிப்புரிமை சட்டத்தை மீறியதாக அவர் குற்றம் சாட்டினார். பல எழுத்தாளர்கள், கம்பியூட்டர் புரோகிராமர்கள், பத்திரிகையாளர்கள் தங்களின் உழைப்பை ஓபன் ஏஐ எந்த அனுமதியும் இன்றி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினர்.

    பாலாஜியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஓபன் ஏஐ மீது பல வழக்குகளும் தொடரப்பட்டன. கடுமையான விதிமுறைகள் இல்லாமல் மனித குலத்துக்கு AI கொண்டு வரக்கூடிய ஆபத்துகள் குறித்து பாலாஜி நியூ யார்க் டைம்ஸ் பேட்டியில் கவலை தெரிவித்தார்.காலப்போக்கில், இந்த தொழில்நுட்பம் சமூகத்திற்கு நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

     

    இந்த நிலையில்தான் பாலாஜியின் மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது. கடைசியாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவிலும் ஓபன் ஏஐ மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஏஐ வளர்ச்சி குறித்த கவலையை வெளிப்படுத்தி இருந்தார்.

    உலகில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் சேவைகள் ஏஐ ஆல் சக்தியூட்டப்பட்டவை என்று விளம்பரம் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும் அளவுக்கு ஏஐ பெரு வணிகத் தேவையாக வளர்ந்துள்ள நிலையில் பாலாஜி மரணத்தை போலீஸ் தற்கொலை என்ற முடிவுக்கு வந்தாலும், இதில் இன்னும் மர்மம் உள்ளதாகவே பலர் சந்தேகிக்கின்றனர். 

    • கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் கூகுலின் குவாண்டம் ஆய்வகம் உள்ளது
    • 30 ஆண்டுகால சவாலை முறியடித்து ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

    குவாண்டம் கம்ப்யூட்டிங் என்பது குவாண்டம் கோட்பாட்டின் கொள்கைகளின் அடிப்படையில் கணினிகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் கணினி அறிவியலின் ஒரு பகுதியாகும். இயற்பியலின் கூறுகளை பயனப்டுத்தி மிகவும் சிக்கலான சிக்கல்களைத் தீர்க்க குவாண்டம் கம்ப்யூட்டிங் பயன்படுத்துகிறது.

    குவாண்டம் கம்ப்யூட்டிங் ஒரு வளர்ந்து வரும் அறிவியல் துறையாக உள்ள நிலையில் தற்போது அதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

     

     

    கூகிள் நிறுவனம் சார்பில் புதிய குவாண்டம் கம்பியூட்டிங் சிப் [CHIP] ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய குவாண்டம் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்த புதிய சிப்-க்கு வில்லோ [WILLOW] என்று பெயரிடப்பட்டுள்ளது.

     

    ஒரு சிக்கலான கணித பிராப்லம் -ஐ இன்றைய சூப்பர் கம்ப்யூட்டர்கள் தீர்க்க 10 செப்டில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொண்டால், அதே சிக்கலை 'வில்லோ' 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் தீர்க்கிறது என்று கூறப்பட்டுள்ளது. [1 (24 சைபர்கள்) = 1 செப்டில்லியன்]

     

     

    எங்கள் புதிய அதிநவீன குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் 30 ஆண்டுகால சவாலை முறியடித்து ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

    • இந்தியாவில் 2024 கூகுளில் ட்ரெண்டிங் தேடல்களில் தேர்தல் மற்றும் விளையாட்டுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
    • புரோ கபடி லீக் மற்றும் இந்தியன் சூப்பர் லீக் ஆகியவை அதிகம் தேடப்பட்டுள்ளன

    ஒவ்வொரு  ஆண்டில் முடிவிலும் அந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இந்த ஆண்டு டாப் 10 கூகுள் தேடல்கள் என்னென்ன என்ற லிஸ்ட் வெளியாகி உள்ளது. இந்தியாவில் 2024 கூகுளில் ட்ரெண்டிங் தேடல்களில் தேர்தல் மற்றும் விளையாட்டுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

    ஐபிஎல், டி20 உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் 2024 ஆகியவற்றை விட 2024 ஆம் ஆண்டிற்கான ட்ரெண்டிங் தேடல்களாக ஆச்சர்யம் அளிக்கும் வகையில் , புரோ கபடி லீக் மற்றும் இந்தியன் சூப்பர் லீக், மகளிர் பிரீமியர் லீக் மற்றும் துலீப் டிராபி போன்ற உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகள் இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்டுள்ளன.

    கோபா அமெரிக்கா - யுஇஎஃப்ஏ ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகியவை இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட மற்ற விளையாட்டு நிகழ்வுகள் ஆகும்.

    அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல், பல மாநிலத் தேர்தல்கள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற சொற்கள் அதிகம் தேடப்பட்டள்ளன.

     

    2024-ல் அதிகம் தேடப்பட்ட நபர்களில், வினேஷ் போகத் , பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் மற்றும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் போன்ற அரசியல்வாதிகள் முன்னணியில் உள்ளனர்.

     

    2024 இல் Google இல் அதிகம் தேடப்பட்ட முதல் 10:

    1) இந்தியன் பிரீமியர் லீக்

    2) டி20 உலகக் கோப்பை

    3) பாரதிய ஜனதா கட்சி

    4) தேர்தல் முடிவுகள் 2024

    5) ஒலிம்பிக் 2024

    6) அதிக வெப்பம்

    7) ரத்தன் டாடா

    8) இந்திய தேசிய காங்கிரஸ்

    9) புரோ கபடி லீக்

    10) இந்தியன் சூப்பர் லீக்

    • ஒரு மனிதனைக் கழுவ 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.
    • சரி, இது உடலை மட்டும்தான் சுத்தம் செய்கிறதா என்றால், இல்லை.

    இன்றைய காலகட்டத்தில் குளிப்பதே பெரும்பாடாக உள்ளதாக ஜென் Z தலைமுறையினர் நொந்துகொள்கின்றனர். அனைத்து பிரச்சனைக்கும் தீர்வை வைத்திருக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தற்போது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான் மனிதர்களைக் குளிப்பாட்டும் நவீன ஹியூமன் வாஷிங் மெஷின்.

    ஜப்பானின் ஒசாகாவைச் சேர்ந்த ஷவர்ஹெட் நிறுவனமான சயின்ஸ் கோ. நிறுவனம் இந்த நவீன வாஷிங் மெஷினை கண்டுபிடித்து 'மிராய் நிங்கன் சென்டகுகி' என்று பெயர்வைத்துள்ளது. இதற்கு எதிர்காலத்தின் மனித வாஷிங் மெஷின் என்பது பொருளாகும்.

     

    இந்த சலவை எந்திரம் ஒரு மனிதனைக் கழுவ 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. நீங்கள் அதன் பிளாசிக் நாற்காலி மீது ஏறியதும் மெஷினில் பாதியளவு வெதுவெதுப்பான நீர் நிரம்பும். பின்னர் மெஷினில் இருந்து நீர் குமிழிகளாக வெடிக்கிறது.

    இது உங்கள் தோலில் இருந்து அழுக்குகளை நீக்குகிறது. நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியில் உள்ள மின் உணரிகள், உங்களின் உடலின் உயிரியல் தகவல்களைச் சேகரித்து நீங்கள் பொருத்தமான வெப்பநிலையில் கழுவப்படுவதை உறுதிசெய்யும்.

    இதில் பிளாஸ்டிக் 'மசாஜ் பந்துகள்' அடங்கும். சரி, இது உடலை மட்டும்தான் சுத்தம் செய்கிறதா என்றால் இல்லை. இது உங்கள் மனதையும் அமைதிப்படுத்துகிறது.

     

    மெஷினில் உள்ள செயற்கை நுண்ணறிவு ஏஐ [AI] சென்சார் உங்களின் சேகரிக்கப்பட்ட உடலின் உயிரியல் தகவல்களை ஆராய்ந்து உங்கள் மனதை அமைதிப்படுத்தும் காட்சி மற்றும் ஒலி அடங்கிய வீடியோவை நாற்காலி முன் ஒளிபரப்புகிறது. விளைவு, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விரைவான குளியல்.

    இந்த அதிநவீன மனித வாஷிங் மெஷின் ஒசாகா கன்சாய் எக்ஸ்போவில் விரைவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அங்கு 1,000 விருந்தினர்கள் இந்த குளியலை முயற்சிக்க உள்ளனர்.

    • மனிதனின் அறிவையும் தாண்டி ஏ.ஐ. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வருகிறது.
    • கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இந்த ஆப்பை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்

    நம் வாழ்வில் இறுதி நாள் தெரிந்துவிட்டால் வாழும் காலம் நரகமாகிவிடும் என்று சொல்வார்கள். பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பு என்பது இருந்துதான் தீரும். ஆதலால் நாம் கண்டிப்பாக ஒருநாள் மரணமடைவோம் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் நம் மரணம் எப்போது நிகழும் என்று யாருக்கும் தெரியாது.

    ஆனால் தற்போது உலகில் வளர்ந்து தொழில்நுட்பம் நாம் எப்போது இறப்போம் என்பதையும் துல்லியமாக கணிக்க ஆரம்பித்து விட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

    மனிதனின் அறிவையும் தாண்டி ஏ.ஐ. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வருகிறது. அவ்வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய மரண கடிகாரம் (Death Clock) என்ற ஆப் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஆப் ஒரு நபர் எப்போது மரணமடைவார் என்று துல்லியமாக கணித்து கூறுகிறது.

    கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இந்த ஆப்பை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பதே இந்த ஆப்பின் வெற்றியை சொல்கிறது.

    இந்த ஆப் சுமார் 5.3 கோடி பங்கேற்பாளர்களின் உதவியுடன் 1,200 க்கும் மேற்பட்ட ஆயுட்கால ஆய்வு தரவுகளின் அடிப்படையில் ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆப், உணவு, உடற்பயிற்சி, மன அழுத்த நிலைகள் மற்றும் தூக்கம் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி மரணம் நிகழ்வதற்கான சாத்தியமான தேதியைக் கணிக்கின்றது.

    தற்போது அமெரிக்காவில் வாழும் 85 வயது முதியவர் ஒருவர் அடுத்த ஒரு வருடத்திற்குள் இறப்பதற்கான சாத்தியம் 10% எனும் சராசரியாக இன்னும் 5.6 ஆண்டுகள் அவர் வாழ்வார் என்றும் மரண கடிகாரம் (Death Clock) கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து OEMகள் மற்றும் ஆண்ட்ராய்டின் பயனர்களுக்கு இந்த ஆபத்தானது ஏற்படக்கூடும்
    • CERT-In என்பது மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

    ஆண்ட்ராய்டு - Android 12, 12 12L, 13, 14, 15 ஆகிய வெர்ஷன்களை கொண்ட சாதனங்களை பயன்படுத்துவோருக்கு அரசு அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் உபயோக சாதனங்களிலும் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) தெரிவித்துள்ளது.

     

    மேற்கூறிய வெர்ஷன்களை பயன்படுத்தும் ஆண்டிராய்டு சாதனங்களில் கண்டறியப்பட்ட பாதுகாப்பு கோளாறுகளால் தனிநபர் தகவல்களைத் திருடி தன்னிச்சையாக arbitrary code குறியீடுகளைச் செயல்படுத்தி denial of service (DoS) கட்டமைப்பு மூலம் சைபர் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது.

    CERT-In இன்கூற்றுப்படி அனைத்து OEMகள் மற்றும் ஆண்ட்ராய்டின் பயனர்களுக்கு இந்த ஆபத்தானது ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டிராய்டில் உள்ள, சிஸ்டம், கூகுள் பிளே சிஸ்டம் அப்டேட்கள்,கர்னல் எல்டிஎஸ், இமேஜினேஷன் டெக்னாலஜிஸ், மீடியாடெக், குவால்காம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளால் இந்த பாதுகாப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

     

    இதற்கான தீர்வாக, பயனர்கள், தங்கள் சாதனங்களில் பொருத்தமான அப்டேட்களை மேற்கொள்ள CERT-In அறிவுறுத்தியுள்ளது. CERT-In என்பது மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையப் பாதுகாப்பு பணிகளைக் கையாள்வதற்கான அமைப்பாகும்.  

    • கணினிகளில் பழைய வெர்ஷன்களை கொண்ட கூகுள் குரோம் செயல்பாட்டில் உள்ளது
    • Windows மற்றும் Mac க்கான 131.0.6778.69/70க்கு முந்தைய டெஸ்க்டாப் வெர்ஷன் உள்ளது.

    கூகுள் குரோம் பிரவுசரில் பலவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகப் பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்பியூட்டர் எமர்ஜென்சி குழு [CERT-In] எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கணினிகளில் பழைய வெர்ஷன்களை கொண்ட கூகுள் குரோம் செயல்பாட்டில் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

    அதாவது, Windows மற்றும் Mac க்கான 131.0.6778.69/70க்கு முந்தைய டெஸ்க்டாப் வெர்ஷனிலும், Linuxக்கு 131.0.6778.69க்கு முந்தைய டெஸ்க்டாப் வெர்ஷனிலும் கூகுள் குரோம் இயங்குகிறது.

     

    எனவே பக் [bugs] களை பயன்படுத்தி செக்கியூரிட்டி கட்டுப்பாடுகளை எளிதில் கடந்து பாதுகாக்கப்பட்ட தகவல்களைக் குற்றவாளிகள் திருடும் அபாயம் அதிகம் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • 88,817 டாலர்களை எட்டி கிரிப்டோ சந்தையில் முதல் இடத்தில் உள்ளது.
    • கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

    உலக வல்லரசான அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள அதிபர் தேர்தல் பிட்காயின் மதிப்பை எகிறச்செய்துள்ளது. டிரம்பின் வெற்றி கிரிப்டோகரன்சியில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கிரிப்டோவின் முன்னணி காயினான பிட்காயின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

    அமெரிக்க டாலர் மதிப்பில் 88,817 டாலர்களை எட்டி கிரிப்டோ சந்தையில் முதல் இடத்தில் உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75.62 லட்சம் ஆகும். 1,00,000 டாலரை நெருங்கிக்கொண்டிருக்கும் பிட்காயின் மதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

     

    கிரிப்டோகரன்சியை ஆதரிக்கப்போவதாகத் தனது பிரசாரத்தில் டிரம்ப் சொன்னதே பிட்காயின் வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    தற்போதைய நிலவரப்படி பிட்காயின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 1.75 டிரில்லியன் ஆக உள்ளது. எனவே வெள்ளியின் சந்தை மதிப்பான 1.729 டிரில்லியன் டாலரை தற்போது பிட்காயின் சந்தை மதிப்பு ஓவர்டேக் செய்துள்ளது.

    ×