என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • வாய்ஸ் கால்' மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.
    • பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

    இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) டெலிகாம் நிறுவனங்களின் கட்டண வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது.

    அதன்படி இணைய சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, 'வாய்ஸ் கால்' [டாக்-டைம்] மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.

    அதன்படி, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு தனித்தனியே ரீசார்ஜ் செய்யும் திட்டங்களை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது.

    தொலை தூர பகுதிகள் மற்றும் கிராமபுறங்களில், 2ஜி நெட்வொர்க்குகள் கொண்ட பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி (SMS) சேவைகளை மட்டுமே வேண்டும் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.

    ஜியோவில் 458 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 1,000 எஸ்எம்எஸ் சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    முன்னதாக, இதே திட்டத்தின் விலை 479 ரூபாயாக இருந்தது. அதில், 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 6ஜிபி டேட்டா மற்றும் 1,000 எஸ்எம்எஸ் சேவைகள் அடங்கும். இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட இந்த திட்டம் ரூ. 21 குறைவானதாகும். 

    • இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தளத்தை உருவாக்குவதற்காக கூட்டணி.
    • நிதி சார்ந்த சேவைகளை ஏர்டெல் தேங்ஸ் செயலியில் வழங்கும்.

    இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்று பாரதி ஏர்டெல். இந்த நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கி சாரா நிதி நிறுவனமான (NBFC) பஜாஜ் ஃபைனான்ஸ் உடன் ஒன்றிணைந்து நிதி சேவைகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தளத்தை உருவாக்குவதற்காக கூட்டணி அமைத்துள்ளது.

    இது குறித்த அறிவிப்பை ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. இந்தக் கூட்டணி மூலம், ஏர்டெல் நிறுவனம் பஜாஜ் ஃபைனான்ஸ்-இன் நிதி சார்ந்த சேவைகளை அதன் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் வழங்கும். பின்னர் அதன் நாடு தழுவிய கடைகள் மூலம் வழங்கும்.

    டிஜிட்டல் சொத்துக்களின் ஒருங்கிணைந்த வலிமை, ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் ஊடுருவலை ஆழப்படுத்த இந்த திட்டம் உதவும் என்று இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. கூட்டணியின் ஒரு பகுதியாக, இரு நிறுவனங்களும் தரவு தனியுரிமை - பாதுகாப்பு, தடையற்ற வாடிக்கையாளர் சேவை மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதி செய்யும்.

    இந்தக் கூட்டாணி ஏர்டெல்லின் 375 மில்லியன் வாடிக்கையாளர் தளத்தையும், 12 லட்சத்திற்கும் அதிகமான விநியோக வலையமைப்பு, பஜாஜ் ஃபைனான்ஸ்-இன் 27 சேவைகள் மற்றும் 5,000-க்கும் அதிக கிளைகள் மற்றும் 70,000 கள முகவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட தொகுப்பையும் ஒன்றிணைக்கிறது.

    • பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) 6,526 சதுர அடியை குத்தகைக்கு எடுத்துள்ளது.
    • வணிக பயன்பாட்டுக்கான இடத்தை ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளது.

    நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வாடகையில் ஆப்பிள் இந்தியா புதிய இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.

    ஆப்பிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) 6,526 சதுர அடி இடத்தை ஒரு சதுர அடிக்கு ரூ.738 மாத வாடகைக்கு எடுத்துள்ளது என்று சொத்துப் பதிவு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒரு மாத வாடகை மட்டுமே ரூ.48.19  லட்சம் ஆகும்.

    Proptstack.co ஆவணங்களின்படி, கலிபோர்னியாவின் குபெர்டினோவைத் தலைமையிடமாகக் கொண்ட அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் இந்திய பிரிவு, ஆப்பிள் இந்தியா பிரைவேட் லிமிடட்,Maker Maxity-5 என்ற கட்டிடத்தில் வணிக பயன்பாட்டுக்கான இடத்தை ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளது. டிசம்பர் 31 2028 வரை இந்த குத்தகை தொடரும்.

    • தள்ளுபடி சலுகைகள் சமீபத்திய மாடல்களில் குறைவாகவும் பழைய மாடல்களில் அதிகமாகவும் இருக்கும்.
    • ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 (ஜி.பி.எஸ்.) விலை 45mm மாடல் குரோமாவில் ரூ.33,990-ல் தொடங்குகிறது.

    ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் ஆன்லைனில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்கப்பட்டு வருகின்றன. நீங்கள் ஐபோன்களில் ஏதேனும் ஒன்றை வாங்கி விட்டு, ஒரு நல்ல ஆப்பிள் வாட்ச் வாங்க விரும்பினால், அதை செய்வதற்கு இதுவே சரியான நேரம். ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் இப்போது குறைந்த விலையில் கிடைக்கின்றன.

    குடியரசு தின விழா விற்பனையில் க்ரோமா, அமேசான் மற்றும் பல தளங்களில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மற்றும் ஆப்பிள் வாட்ச் எஸ்.இ. 2 ஆகிய மாடல்கள் இந்த இணையதளங்களில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. தள்ளுபடி சலுகைகள் சமீபத்திய மாடல்களில் குறைவாகவும் பழைய மாடல்களில் அதிகமாகவும் இருக்கும்.

    அதன்படி 42mm ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 (ஜி.பி.எஸ்.) ரூ. 44,990 தள்ளுபடி விலையில் குரோமாவில் விற்கப்படுகிறது. இந்த மாடலின் உண்மை விலை ரூ.46,900. அந்த வகையில் இதனை வாங்குபவர்களுக்கு ரூ.1,910 தள்ளுபடி கிடைக்கும்.

    இது தவிர, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எஸ்.பி.ஐ. வங்கி மற்றும் கோடக் வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக ரூ.2,500 தள்ளுபடியும் உள்ளது. இதை சேர்க்கும்போது, இந்த மாடலின் விலை ரூ. 42,490 ஆக குறைந்துவிடும். இதன் மூலம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 வாங்குவோர் மொத்தமாக ரூ. 4,410 வரை தள்ளுபடி பெறலாம்.

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 (ஜி.பி.எஸ்.) விலை 45mm மாடல் குரோமாவில் ரூ.33,990-ல் தொடங்குகிறது. இந்த ஆப்பிள் வாட்ச் இந்தியாவில் ரூ.44,900-க்கு விற்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் ரூ.10,910 தள்ளுபடியை பெற முடியும். இதற்கான எந்த வங்கி சலுகையும் குரோமாவில் இல்லை.

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 (ஜி.பி.எஸ்.) வாங்க விரும்புபவர்கள் அதை ரூ.30,490 என்ற குறைந்த விலையில் பெற முடியும், இது 45mm மிட்நைட் அலுமினியம் மாடலுக்கான விலை ஆகும். ஆப்பிள் வாட்ச் 8 உடன் ஒப்பிடும்போது வெறும் ரூ.3,500 அதிகம் செலவழித்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலை வாங்குவது நல்லது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளில் ரூ. 2,500 வரை தள்ளுபடி சலுகையும் உள்ளது.

    கடைசியாக, குறைந்த பட்ஜெட்டில் வாங்க நினைப்பவர்கள் ஆப்பிள் வாட்ச் எஸ்.இ. 2 (ஜி.பி.எஸ்., 40mm) வாங்கலாம். இந்த மாடல் அமேசானில் ரூ.19,999 எனும் மிக குறைந்த விலையில் விற்கப்படுகிறது. இது அதன் வெளியீட்டு விலையான ரூ.29,900-ல் இருந்து குறைந்துள்ளது. இந்த இரண்டாம் தலைமுறை ஆப்பிள் வாட்ச் எஸ்.இ. மாடலில் வாடிக்கையாளர்கள் ரூ.9,901 தள்ளுபடி பெறலாம்.

    • இந்த இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (ICR) வசதியை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
    • 27,000 டவர்களைப் பயன்படுத்தி, 35,400க்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூர கிராமங்களுக்கு தடையற்ற 4G இணைப்பு வழங்கப்படும்.

    ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் பயனர்கள் சந்திக்கும் சிக்னல் பிரச்சனைகளுக்கு புதிய தீர்வு பிறந்துள்ளது. இந்த சிம்களை பயன்படுத்துவோர் தங்கள் நெட்வொர்க் சிக்னல் கிடைக்காமல் போனாலும் மற்ற நிறுவங்களின் சிக்னலை பயன்படுத்தி 4G வாய்ஸ் கால் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    ஜனவரி 17 அன்று, டிஜிட்டல் பாரத் நிதி (DBN) திட்ட நிகழ்வின்போது போது இந்த இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (ICR) வசதியை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இருப்பினும் DBN திட்டத்தின் கீழ் டவர்கள் இருக்கும் இடங்களில் மட்டும் இந்த சேவை அமலுக்கு வந்துள்ளது.

    சுமார் 27,000 டவர்களைப் பயன்படுத்தி, 35,400க்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூர கிராமங்களுக்கு தடையற்ற 4G இணைப்பு வழங்களை மேம்படுத்துவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

    • இன்ஸ்டாகிராம் செயலியை இளைஞர்கள் தான் அதிக அளவில் பயனபடுத்துகின்றனர்.
    • முன்னதாக, இன்ஸ்டாகிராமில் 90 விநாடிகள் வரையிலான ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளும் வசதி இருந்தது.

    உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இந்த செயலியில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.

    இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இனி 3 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்ற புதிய அப்டேட்டை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது

    முன்னதாக, இன்ஸ்டாகிராமில் 90 விநாடிகள் வரையிலான ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளும் வசதி இருந்தது.

    கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் பதிவிட முடியும் புகைப்படங்களின் எண்ணிக்கையை 10ல் இருந்து 20 ஆக மெட்டா நிறுவனம் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஒன்பிளஸ் 13 சீரிஸ் அறிமுகத்தின் போது இந்த அறிவிப்பை ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது.
    • இதில் பயனர்கள் ஒரே நேரத்தில் பல நெட்வொர்க் செல்களுடன் [மல்டி-செல்] இணைப்பு ஏற்படுத்த முடியும்.

    நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ 5G தொழில்நுட்பத்தை கடந்த 2022 இல் அறிமுகப்படுத்தியது.

    இந்நிலையில் ஒன் பிளஸ் செல்போன் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி நெட்வொர்க்கின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான 5.5ஜியை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

    ஒன்பிளஸ் 13 சீரிஸ் அறிமுகத்தின் போது இந்த அறிவிப்பை ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய போன் ஜியோவின் 5.5G அல்லது Jio 5GA சேவை செயல்படும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

     

    5G - 5.5G வித்தியாசம் என்ன?

    5G சேவையின் மேம்பட்ட பதிப்பு 5.5G என்று கூறப்படுகிறது. 5G உடன் ஒப்பிடும்போது 5.5G, சிறந்த இணைய வேகம், குறைந்த தாமதம் மற்றும் மேம்பட்ட நெட்வொர்க் கனெக்ஷனை வழங்குகிறது. இது 3GPP கீழ் உருவாக்கப்பட்டது.

    இதில் பயனர்கள் ஒரே நேரத்தில் பல நெட்வொர்க் செல்களுடன் [மல்டி-செல்] இணைப்பு ஏற்படுத்த முடியும்.

    வழக்கமாக ஒரு மொபைல் ஒரு டவரில் இருந்து சிக்னலை பெறும். அந்த டவரில் வலிமையான சிக்னல் கிடைக்கவில்லை என்றால் வேறு ஒரு டவருக்கு மாறும். ஆனால், 5.5ஜி தொழில்நுட்பத்தில் மொபைலால் ஒரே நேரத்தில் பல டவர்களில் இருந்து சிக்னலை பெறமுடியும்.

    இது வேகமான பதிவிறக்கம் மற்றும் தரவு பரிமாற்ற வேகத்தை உறுதி செய்கிறது. இந்த 5.5G நெட்வொர்க் மூலம் அதிகபட்சம் நொடிக்கு 10 ஜிபி வரை இணைய வேகத்தைப் பெறலாம். அப்லோட் வேகமும் நொடிக்கு 1 ஜிபி வரை இருக்கும்.

     

    ஒன பிளஸ் 13 அறிமுகத்தின் போது, 5.5G சேவையின் டெமோ வீடியோ காட்டப்பட்டது, இதில் டவுன்லோடிங் வேகம் 1014.96 Mbps ஆக ஜியோவின் நெட்வொர்க்கில் பதிவானது.

    வழக்கமான 5ஜி நெட்வோர்க்கில் நமது நாட்டில் நொடிக்கு 277.78 Mbps என்ற வேகத்தில் இணையம் கிடைக்கும். எனவே 5ஜி வேகத்தை விட 5.5ஜி வேகம் 380% அதிகமாகும். இதன்மூலம் 10 நொடிகளில் நம்மால் ஹெச்டி தரத்தில் 5 முழு படங்களை டவுன்லோட் செய்ய முடியும். இந்த 5.5ஜி சேவை வரும்காலங்களில் அனைத்து மற்ற ஸ்மாட்போன்களிலும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • விளம்பர நோக்கில் பயன்படுத்தியதாக ஆப்பிள் மீது குற்றச்சாட்டு.
    • ஆப்பிள் நிறுவனம் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமையை மீறியது தொடர்பான வழக்கில் 95 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 815 கோடி) இழப்பீடு வழங்க இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேவையான சிரியிடம் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை விளம்பர நோக்கில் பயன்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இதனை ஆப்பிள் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. எனினும், சிரி சேவையை பயன்படுத்துவோரின் தனியுரிமை சார்ந்த விஷயம் என்பதால், இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பயனர்கள் 20 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1700 பெறுவர்.

    கடந்த செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடந்த 2021 பிப்ரவரி மாதத்திலேயே தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், ரத்து செய்யப்பட்டு விட்டது.

    எனினும், பயனர்கள் ஆப்பிள் நிறுவனம் சிரி உரையாடல்களை பதிவு செய்வதாக குற்றம்சாட்டினர். இது தொடர்பாக சிலர் தங்களை குறிவைத்து விளம்பரங்கள் வருவதை கண்டறிந்தனர். பின்னர் இதை உறுதிப்படுத்த அவர்கள் சிரியிடம் சில உரையாடல்களை மேற்கொண்டனர். பிறகு, உரையாடல்கள் சார்ந்த விளம்பரங்கள் ஐபோனில் வருவதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

    இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் ஆப்பிள் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ. 815 கோடியை இழப்பீடாக வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி செப்டம்ர் 17, 2014 ஆம் ஆண்டு துவங்கி டிசம்பர் 31 ஆம் தேதி 2024 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் பாதிக்கப்பட்ட பயனர் ஒவ்வொருத்தருக்கும் இழப்பீடு வழங்கப்பட இருக்கிறது. 

    • வாய்ஸ் கால்' மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    • பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

    இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) TELIKAAMநிறுவனங்களின் கட்டண வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது.

    அதன்படி இணைய சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, 'வாய்ஸ் கால்' [டாக்-டைம்] மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    சமீப காலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படாத சேவைகளை ரீசார்ஜ் பேக் உடன் இணைத்து அதிக நிதி சுமையை உருவாக்குகின்றன.

    அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை மட்டுமே வேண்டும் வாடிக்கையாளரிடம் கூடுதல் சேவைகள் திணிக்கப்படுகின்றன. தொலை தூர பகுதிகள் மற்றும் கிராமபுறங்களில், 2ஜி நெட்வொர்க்குகள் கொண்ட பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

    எனவே அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றிற்கு மட்டுமே சிறப்பு பிளான்களை கட்டாயமாக்குவது, இன்டர்நெட் தேவையில்லாத வாடிக்கையாளர்களின் தேவையற்ற சுமையை தீர்க்கும் என டிராய் தெரிவித்துள்ளது.  

    • ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

    உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் தகவல் பரிமாற்றம் சார்ந்து ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருபக்கம் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மறுப்பக்கம் வாட்ஸ்அப் செயலி பழைய சாதனங்களில் இயங்கும் வசதி குறைக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், ஆண்ட்ராய்டு கிட்கேட் அல்லது அதற்கும் பழைய ஓ.எஸ். கொண்ட ஸ்மார்ட்போன்களில் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற சேவைகளை பயனர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மெட்டா மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் அங்கமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மேலும், இந்த நடவடிக்கை செயலியின் பாதுகாப்பு மற்றும் சீரான இயக்கத்தை உறுதிப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2013ம் ஆண்டு வெளியான ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓஎஸ் மிகவும் பழையது என்பதால், வாட்ஸ்அப்-இன் புதிய அம்சங்களை அதில் வழங்குவதில் நிறைய சிக்கல்கள் ஏற்படும். இதோடு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

    வாட்ஸ்அப் சேவை நிறுத்தம் காரணமாக சாம்சங், எல்.ஜி. மற்றும் சோனி என பல ஸ்மார்ட்போன் பிரான்டுகளின் பழைய மாடல்களை பயன்படுத்துவோர் பாதிக்கப்படுவர். எனினும், எந்தெந்த மாடல்களுக்கு வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்பது குறித்த பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை.

    • சாட் - ஜிபிடி தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் அறிமிருகப்படுத்தியது.
    • தனியாக செயலியைப் பதிவிறக்கம் செய்ய தேவை இல்லை

    மெட்டா நிறுவனத்தின் பிரபல சமூக தொடர்பு தளமான வாட்ஸ்அப் இருந்து வருகிறது. இந்தியாவில் சுமார் 54 கோடி பேர் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்துகின்றனர். உலகளவில் 300 கோடி பேர் வரை இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

    இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் சாட்-ஜிபிடி அம்சத்தை பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ அறிமுகம் செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்துடன் சாட்டிங் மூலம் மனிதர்கள் உரையாட சாட் - ஜிபிடி தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது.

     

    இது சாதாரண உரையாடல் தொடங்கி தொழில்துறையும் வளர்ந்து வரும் நுட்பமாக உள்ள நிலையில் தனியாகச் செயலியைப் பதிவிறக்கம் செய்யாமல் தற்போது வாட்ஸ்அப் செயலி மூலம் நேரடியாகவே சாட் -ஜிபிடி உடன் உரையாடும் அம்சத்தை அருகப்படுத்துவதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.

    முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் 1-800-CHATGPT என்று அழைக்கப்படும் இந்த சாட் ஜிபிடி வாட்ஸ்அப்பில் அறிமுகமாகிறது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     

    இதனுடன் உரையாட 1-800-242-8478 என்ற எண்ணை அழைத்தால் போதுமானது. ஏற்கனவே வாட்ஸ்அப்-இல் மெட்டா ஏஐ வசதி உள்ள நிலையில் இந்த சாட் ஜிபிடி அறிமுகம் பயனர்களிடத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

    முன்னதாக சாட்- ஜிபிடி குறித்து அதை பயிற்றுவிக்கும் குழுவில் பணியாற்றிய ஓபன் ஏஐ முன்னாள் ஆராய்ச்சியாளர் சுசீர் பாலாஜி[ 26 வயது] அதன் தீமைகள் குறித்து எச்சரித்திருந்தார். கடந்த நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

    • 4 மாதங்களுக்கு முன்பே இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளை தயார் செய்து விட்டன.
    • விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    பார்வையற்றவர்களின் வசதிக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கண் கண்ணாடிகள் ஏஐ தொழில்நுட்பத்தில் கிடைக்கிறது.

    இந்த கண்ணாடியை அணிந்து கொண்டால் எதிரே வருபவர்களைப் பற்றி சொல்வதைத் தவிர, வரும் வாகனங்களைப் பற்றி எச்சரித்து விபத்துகளில் இருந்து காக்கிறது. நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதற்கு இது வழிகாட்டுகிறது.

    பார்வையற்ற மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உதவியுடன் புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் கூட்டாக ஆராய்ச்சி நடத்தி 4 மாதங்களுக்கு முன்பே இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளை தயார் செய்து விட்டன.

    தற்போது ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இந்த கண்ணாடிகள் கிடைக்கின்றன. விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    ×