என் மலர்
தொழில்நுட்பம்
- தாம்சன் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல் மெல்லிய, பெசல் லெஸ் டிசைன், மெட்டாலிக் ஸ்டாண்ட் கொண்டிருக்கிறது.
- மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட் டிவியில் 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி உள்ளது.
சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடலை ஆத்ப்ரோ மேக்ஸ் சீரிசில் அறிமுகம் செய்தது. QLED சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து புதிய ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடலில் 65 இன்ச் ஸ்கிரீன், டால்பி விஷன், HDR10+, 40 வாட் ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி உள்ளது. இத்துடன் மெல்லிய தோற்றம், பெசல் லெஸ் டிசைன் மற்றும் மெட்டாலிக் ஸ்டாண்ட் உள்ளது. இந்த டிவி-யில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர், மாலி 450 GPU, டூயல் பேண்ட் வைபை வழங்கப்பட்டு இருக்கிறது.

தாம்சன் ஆத்ப்ரோ மேக்ஸ் சீரிஸ் டிவி அம்சங்கள்:
65 இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே, டால்பி விஷன், 550 நிட்ஸ் பிரைட்னஸ்
1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
மாலி 450 GPU
2 ஜிபி ரேம்
16 ஜிபி மெமரி
கூகுள் டிவி
வாய்ஸ் ரிமோட்
வைபை, ப்ளூடூத் 5
3xHMDI, 2xUSB, S/PDIF, AV இன்புட், 1xஈத்தர்நெட்
40 வாட் (2x20 வாட்) ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
டிடிஎஸ், டால்பி ஆடியோ, டாால்பி அட்மோஸ்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
தாம்சன் 65 இன்ச் டிவி விலை ரூ. 43 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 13 ஆம் தேதி துவங்கும் ப்ளிப்கார்ட் சம்மர் சேவிங் டேஸ்-இல் துவங்க இருக்கிறது.
- அமெரிக்க நிறுவனங்கள் ஐரோப்பாவில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளன.
- 2023 ஆண்டில் மட்டும் 1,68,918 ஊழியர்களுக்கு பணிநீக்க ஆணையை டெக் நிறுவனங்கள் வழங்கி உள்ளன.
உலகளவில் பிரபலமாக அறியப்படும் முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்லாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு முதலே பணிநீக்க நடவடிக்கைகளால் ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கூகுள், மெட்டா, அமேசான் உள்பட உலகளவில் 570 தொழில்நுட்ப நிறுவனங்கள் 2023 ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 68 ஆயிரத்து 918 ஊழியர்களுக்கு பணிநீக்க ஆணையை வழங்கி உள்ளன.
இதுதவிர, மேலும் பலரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இந்த நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்த வரிசையில் அமெரிக்க நிறுவனங்கள் தற்போது ஐரோப்பாவில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளன. எனினும், இந்த பகுதிகளில் உள்ள கடுமையான விதிகள் காரணமாக நிறுவனங்கள் தரப்பில் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளிடம் முன்கூட்டியே அறிவிக்காமல் பணிநீக்கம் செய்ய முடியாது என்ற சூழல் நிலவுகிறது.

பணிநீக்க நடவடிக்கைகளுக்கு முன்பு ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆணையங்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. இதன் காரணமாக கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களிடம் பணியினை ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகின்றன. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஆல்ஃபாபெட் நிறுவனம், ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்து, பெரும் தொகையை பணி நீக்க ஊதியமாக பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இது போன்ற தகவல்களால், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இயங்கி வரும் கூகுள் அலுவலக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படும் சூழலுக்கு ஆளாகியுள்ளனர். கூகுள் போன்றே அமேசான் நிறுவனமும் தனது மூத்த மேலாளர்களிடம், பணியை ராஜினாமா செய்து அதிகபட்சம் ஒரு வருடத்திற்கான சம்பளத்தை பணி நீக்க ஊதியமாக பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை பிப்ரவரி மாத வாக்கில் அறிவித்தது.
- புதிய ஒன்பிளஸ் பேட் மாடலில் 9510 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் பேட் கடந்த பிப்ரவரி மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஒன்பிளஸ் பேட் ஏப்ரல் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என ஒன்பிளஸ் அறிவித்து இருந்தது. தற்போது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் முன்பதிவு துவங்கி இருக்கிறது.
அறிமுக சலுகையாக ஒன்பிளஸ் பேட் முன்பதிவு செய்வோருக்கு 149 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 230 மதிப்புள்ள மேக்னடிக் கீபோர்டு இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் பேட் முன்பதிவு கட்டணம் 99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 130 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் பேட் விலை விவரங்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

இங்கிலாந்தில் ஒன்பிளஸ் பேட் டேப்லெட் மாடலை ஏப்ரல் 25 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் வாங்குவோருக்கு சூப்பர்வூக் 80 வாட் அடாப்டர் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் வினியோகம் மே 8 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
ஒன்பிளஸ் பேட் அம்சங்கள்:
11.6 இன்ச் 2800x2000 பிக்சல் டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் 9000 பிராசஸர்
அதிகபட்சம் 12 ஜிபி ரேம்
5ஜி கனெக்டிவிட்டி
குவாட் ஸ்பீக்கர்கள்
டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ்
9510 எம்ஏஹெச் பேட்டரி
67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- விவோ T2x 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் உள்ளது.
- விவோ T2 5ஜி மாடல் 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி விவோ T2 சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய விவோ T2 5ஜி மாடலில் 6.38 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், 16MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13 வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS, 2MP டெப்த் சென்சார், 16MP செல்ஃபி கேமரா உள்ளது.
விவோ T2x 5ஜி மாடலில் 6.58 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 50MP பிரைமரி கேமரா, 2MP சென்சார், 8MP செல்ஃபி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ T2 5ஜி அம்சங்கள்:
6.38 இன்ச் 2400x1080 பிக்சல் Full HD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஷாட் எக்சென்சேஷன் கிளாஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
அட்ரினோ 619L GPU
6 ஜிபி, 8 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஹைப்ரிட் டூயல் சிம்
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13
64MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா
16MP செல்ஃபி கேமரா
3.5mm ஆடியோ ஜாக்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
யுஎஸ்பி டைப் சி
4500 எம்ஏஹெச் பேட்டரி
44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விவோ T2x 5ஜி அம்சங்கள்:
6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ ஸ்கிரீன்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
4 ஜிபி, 6 ஜிபி, 8 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13
ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
2MP டெப்த் சென்சார்
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
விவோ T2 5ஜி மாடல் வெலாசிட்டி வேவ் மற்றும் நைட்ரோ பிளேஸ் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 18 ஆம் தேதி துவங்குகிறது.
விவோ T2x 5ஜி மாடல் க்ளிம்மர் பிளாக், அரோரா கோல்டு மற்றும் மரைன் புளூ என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 21 ஆம் தேதி துவங்குகிறது.
இரண்டு புதிய விவோ ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் விற்பனை தளங்களில் நடைபெற இருக்கிறது. அறிமுக சலுகையாக ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்துவோர் விவோ T2 மாடலுக்கு ரூ. 1500, விவோ T2x 5ஜி மாடலுக்கு ரூ. 1000 வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். இத்துடன் மூன்று மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
- மும்பையில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் ஆப்பிள் பிகேசி என்று அழைக்கப்படுகிறது.
- ஆப்பிள் பிகேசி போன்றே ஆப்பிள் சகெட் சார்பில் புதிய வால்பேப்பர் வெளியிடப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் சில்லறை விற்பனை மையம் மும்பையில் ஏப்ரல் 18 ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 20 ஆம் தேதி டெல்லியில் ஆப்பிள் விற்பனை மையம் திறக்கப்பட இருக்கிறது. மும்பையில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் ஆப்பிள் பிகேசி என்றும் டெல்லியில் துவங்கப்பட இருக்கும் ஸ்டோர் ஆப்பிள் சகெட் என்றும் அழைக்கப்படுகிறது.

புதிய ஆப்பிள் சகெட் விற்பனை மையத்தினுள் உள்ள பேரிகார்டுகள் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கேட்களை தழுவி டிசைன் செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்டோர் என்ற வகையில் பிரத்யேக கலை வடிவம் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட இருப்பதை கொண்டாடும் வகையில், ஆப்பிள் பிகேசி சார்பில் டுடே அட் ஆப்பிள் எனும் சீரிஸ் 'மும்பை ரைசிங்' என்ற பெயரில் அறிவித்து இருக்கிறது. ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படும் முதல் நாளில் இருந்து ஏப்ரல் 18 ஆம் தேதி வரை இது அமலில் இருக்கும்.
ஆப்பிள் பிகேசி போன்றே ஆப்பிள் சகெட் சார்பில் புதிய வால்பேப்பர் வெளியிடப்பட்டு உள்ளது. இதுதவிர ஆப்பிள் சகெட்டுக்காக பிரத்யேக ஆப்பிள் மியூசிக் பிளே லிஸ்ட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மும்பையில் உருவாகி இருக்கும் முதல் ஆப்பிள் ஸ்டோரான ஆப்பிள் பிகேசி ஏப்ரல் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது.
டெல்லியை அடுத்த சிட்டிவாக் பகுதியில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஆப்பிள் சகெட் ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது.
- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கும் புகைப்படங்கள் சமீப காலங்களில் வைரலாகி வருகின்றன.
- இவ்வாறு ஏஐ நிபுணர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிய டெக் தலைவர்களின் படங்கள் வெளியாகி உள்ளன.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகளவில் பெருமளவில் அதிகரித்து வருகிறது. பலர் ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்டு தங்களுக்கு தேவையான பல வேலைகளை சுலபமாக முடிக்க கற்றுக் கொண்டு வருகின்றனர். மேலும் பலர் ஏ.ஐ. டூல்களை கொண்டு தங்கள் கற்பனைக்கு தீனிப்போடும் வகையில் வித்தியாசமான படங்களை உருவாக்கி வருகின்றனர்.
இவ்வாறு சிலர் உருவாக்கிய படங்கள் வைரலானதோடு, சர்ச்சைகளுக்கும் உள்ளானது. டெனால்ட் டிரம்ப் கைது செய்யப்படுவது போன்ற புகைப்படம், போப் பிரான்சிஸ் பஃபர் ஜாக்கெட் அணிந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் அதிர செய்தது. இதில் டொனால்ட் டிரம்ப் புகைப்படத்தை வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது.
பலர் ஏ.ஐ. உருவாக்கிய படங்கள் உண்மை என்றே நம்பிவிட்டனர். இந்த அளவுக்கு மக்களை குழப்பும் வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் தனது பணியை சிறப்பாக செய்து அசத்துகிறது. இந்த வரிசையில் ஏ.ஐ. நிபுணரான கோகுல் பிள்ளா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கிய டெக் துறை தலைவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவர் உருவாக்கிய புகைப்படங்கள் டெக் துறை தலைவர்கள் ஏழையாக இருந்தால், எப்படி காட்சியளிப்பர் என்பதை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளன. இவற்றை உருவாக்க கோகுல் பிள்ளா மிட்ஜர்னி (Midjourney) எனும் ஏ.ஐ. மென்பொருளை பயன்படுத்தி இருக்கிறார். இவர் உருவாக்கி இருக்கும் புகைப்படங்கள் டெக் தலைவர்கள் உண்மையில் ஏழையாக இருப்பதை போன்றே காட்சியளிக்கின்றன.
கோகுல் புள்ளா உருவாக்கிய ஏ.ஐ. புகைப்படங்களை கீழே காணலாம்...


ஏ.ஐ. மூலம் உருவான ஜெஃப் பெசோஸ்-இன் படம்

ஏ.ஐ. மூலம் உருவான எலான் மஸ்க்-இன் படம்

ஏ.ஐ. மூலம் உருவான மார்க் ஜூக்கர்பர்க்-இன் படம்
- விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 12 மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
- ஐபோன் 15 மற்றும் அதன் பின் அறிமுகமாகும் புதிய ஐபோன்களை உற்பத்தி செய்ய டாடா திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரன் ஐபோன் உற்பத்தி ஆலையை முழுமையாக கைப்பற்றும் பணிகளில் டாடா குழுமம் இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு நிறுவனங்கள் இடையே ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இம்மாத இறுதியில் கையகப்படுத்தும் பணிகள் முழுமை பெறும் என கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் அமைந்து இருக்கும் விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 12 மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதற்காக ஆலையில் பாகங்களை ஒருங்கிணைக்கும் எட்டு அசெம்ப்ளி லைன்கள் உள்ளன. ஆலையை கையகப்படுத்தியதும் டாடா குழுமம் ஐபோன் 15 மற்றும் அதன் பின் அறிமுகமாகும் புதிய ஐபோன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியின் முக்கிய பகுதியாக இந்தியாவை மாற்ற முடியும். ஏற்கனவே விஸ்ட்ரன், பெகட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் ஆப்பிள் நிறுவன சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இதில் விஸ்ட்ரன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற இருக்கும் நிலையில், ஃபாக்ஸ்கான் மற்றும் பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளன.
மத்திய அரசு இந்தியாவை உற்பத்தி களமாக மாற்றும் திட்டத்தை ஊக்குவித்து வருவதோடு, ஆப்பிள் நிறுவனம் தனது பெரும்பாலான உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்ற நினைப்பதை அடுத்து டாடா குழுமம் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தது. விஸ்ட்ரன் நிறுவனத்தை கைப்பற்றியதும், டாடா குழுமம் பெகட்ரான் உற்பத்தி ஆலைகளை கையகப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
- ஃபயர்போல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது.
- ஆல்வேஸ் ஆன் AMOLED டிஸ்ப்ளே, மெட்டாலிக் கேசிங் உள்ளிட்டவை இந்த வாட்ச்-இன் முக்கிய அம்சங்களாக உள்ளன.
ஃபயர்போல்ட் நிறுவனத்தின் புதிய ராக் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபயர்போல்ட் கொலைட் மாடலை தொடர்ந்து ஒரே வாரத்தில் ஃபயர்போல்ட் அறிமுகம் செய்திருக்கும் இரண்டாவது ஸ்மார்ட்வாட்ச் இது ஆகும். புதிய ஃபயர்போல்ட் ராக் மாடலில் 1.3 இன்ச் வட்ட வடிவிலான ஆல்வேஸ் ஆன் AMOLED டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இத்துடன் ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டண்ட், 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், மெட்டாலிக் கேசிங், ஏராளமான வசதிகளை வழங்கும் கிரவுன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் உள்ள 260 எம்ஏஹெச் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இந்த வாட்ச்-இல் ஹெல்த் சூட், ஹார்ட் ரேட் டிராக்கர், SpO2 டிராக்கர் மற்றும் ஸ்லீப் சைக்கிள் மாணிட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஃபயர் போல்ட் ராக் அம்சங்கள்:
1.3 இன்ச் 390x390 பிக்சல் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே
கிளாஸ் கவர், மெட்டல் பட்டன், சுழலும் கிரவுன்
ப்ளூடூத் காலிங் வசதி
கால் ஹிஸ்ட்ரி, குயிக் டயல் பேட், சின்க் காண்டாக்ட்
இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்
100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்
110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
260 எம்ஏஹெச் பேட்டரி
ஃபயர்போல்ட் ஹெல்த் சூட்
ஸ்லீப், SpO2 மற்றும் ஹார்ட் ரேட் டிராகிங்
IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்கள்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஃபயர்போல்ட் ராக் ஸ்மார்ட்வாட்ச் பிளாக், கோல்டு மற்றும் கிரே என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 2 ஆயிரத்து 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஃபயர்போல்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது.
- அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் சார்பில் இந்த காப்புரிமை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
- இதன் மூலம் ஏர்பாட்ஸ்-இல் பயனர் இசையை கேட்கும் அனுபவம் முற்றிலும் புதிதாக மாறும்.
ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் பெற்றுருக்கும் காப்புரிமையில், புதிய தொழில்நுட்பம் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. இந்த தொழில்நுட்பம் அந்நிறுவனம் ஏற்கனவே வழங்கி வரும் ஸ்பேஷியல் ஆடியோ அம்சத்தை மேம்படுத்தும்.
மெஷர்மண்ட் ஆஃப் விர்ச்சுவல் லிசனிங் என்விரான்மெண்ட் (measurement of virtual listening environment) என்று அழைக்கப்படும் புதிய தொழில்நுபட்பம் ஏர்பாட்ஸ் ப்ரோ-வில் உள்ள பிரத்யேக சிப்செட்களை பயன்படுத்துகிறது. பின் சாஃப்ட்வேர் ஆக்மெண்டேஷன் மற்றும் ஆடியோ சிக்னல் பிராசஸருடன் இணைத்து பயனர் இருக்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துகிறது.

அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் சார்பில் இந்த காப்புரிமை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆடியோ பாராமீட்டர்களை அட்ஜஸ்ட் செய்கிறது. இதன் மூலம் ஏர்பாட்ஸ்-இல் பயனர் இசையை கேட்கும் அனுபவம் முற்றிலும் புதிதாக மாறும்.
திறந்தவெளி, அரங்கம், வீட்டின் உள்புறம், பொது போக்குவரத்து வாகனங்கள் என பல்வேறு வகையான சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய தொழில்நுட்பம் பயனருக்கு ஆடியோ அனுபவத்தை மேம்படுத்தி கொடுக்கும். இது போன்ற அம்சம் பயனர் இசையை ஆழ்ந்து அனுபவிக்க செய்கிறது.
மற்ற காப்புரிமை விவரங்களை போன்றே புதிய தொழில்நுட்பம் எப்போது பயனருக்கு வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த அம்சம் ஏர்பாட்ஸ் எதிர்கால மாடல்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
- லாவா நிறுவனத்தின் புதிய பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், கிளாஸ் பேக், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
- 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்ட பிளேஸ் 2 மாடல் யுனிசாக் டி616 ஆக்டா கோர் பிராசஸர் கொண்டிருக்கிறது.
லாவா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லாவா பிளேஸ் 2 மாடலில் 6.5 இன்ச் HD+ 90Hz டிஸ்ப்ளே, யுனிசாக் டி616 ஆக்டா கோர் பிராசஸர், 6 ஜிபி ரேம், 5 ஜிபி வரை கூடுதலாக விர்ச்சுவல் ரேம் வழங்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் லாவா பிளேஸ் 2 மாடலில் புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 8MP செல்ஃபி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.

லாவா பிளேஸ் 2 அம்சங்கள்:
6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே 90Hz ரிப்ரெஷ் ரேட்
2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் யுனிசாக் டி616 பிராசஸர்
மாலி G57 GPU
6 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ்
13MP பிரைமரி கேமா
2MP மேக்ரோ கேமரா, எல்இடி ஃபிளாஷ்
8MP செல்ஃபி கேமரா
3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5
யுஎஸ்பி டைப் சி போர்ட்
5000 எம்ஏஹெச் பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் கிளாஸ் புளூ, கிளாஸ் பிளாக் மற்றும் கிளாஸ் ஆரஞ்சு என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 8 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் லாவா வலைதளங்களில் ஏப்ரல் 18 ஆம் தேதி துவங்குகிறது.
- ஃபாஸ்டிராக் நிறுவனத்தின் புதிய லிமிட்லெஸ் FS1 ஸ்மார்ட்வாட்ச் ஏடிஎஸ் சிப்செட் கொண்டிருக்கிறது.
- புதிய ஸ்மார்ட்வாட்ச் ஹார்ட் ரேட் டிராகிங், ஸ்லீப் டிராகிங், ஸ்டிரெஸ் டிராகிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஃபாஸ்டிராக் நிறுவனத்தின் புதிய லிமிட்லெஸ் FS1 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபாஸ்டிராக் ரெவோல்ட் FS1 மாடலை தொடர்ந்து புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய லிமிட்லெஸ் FS1 மாடலில் 1.95 இன்ச் ஹாரிசான் கர்வ் டிஸ்ப்ளே, ப்ளூடூத் 5.3, அடுத்த தலைமுறை ஏடிஎஸ் சிப்செட் கொண்டிருக்கிறது. இத்துடன் பல்வேறு உடல்நல டிராகிங் அம்சங்களான ஸ்டிரெஸ் டிராகிங், ஸ்லீப் டிராகிங் மற்றும் 24x7 ஹார்ட் ரேட் டிராகிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ் ஆப்ஷன்கள், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.

இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், புளூ மற்றும் பின்க் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஃபாஸ்டிராக் லிமிட்லெஸ் FS1 அம்சங்கள்:
1.95 இன்ச் ஹாரிசான் கர்வ் டிஸ்ப்ளே, 240x296 பிக்சல் ரெசல்யூஷன்
அடுத்த தலைமுறை ஏடிஎஸ் சிப்செட்
ப்ளூடூத் 5.3
பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்
சிங்கில் சின்க் ப்ளூடூத் காலிங்
150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்
100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
பில்ட்-இன் அலெக்சா சப்போர்ட்
ஹெல்த் சூட்
ஃபாஸ்டிராக் ரிப்லெக்ஸ் வொர்ல்டு ஆப்
300 எம்ஏஹெச் பேட்டரி
அதிகபட்சம் பத்து நாட்களுக்கான பேட்டரி லைஃப்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய ஃபாஸ்டிராக் லிமிட்லெஸ் FS1 மாடலின் அறிமுக விலை ரூ. 1995 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது.
- ரியல்மி நிறுவனத்தின் புதிய நார்சோ N55 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- நார்சோ N55 மாடலில் டைனமிக் ஐலேண்ட் போன்ற மினி கேப்சியுல் வழங்கப்படும் என தெரிகிறது.
ரியல்மி நிறுவனத்தின் நார்சோ N55 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 12 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய நார்சோ N55 மாடலில் டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 33 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
இத்துடன் புதிய நார்சோ N55 மாடலின் பின்புறம் புளூ மற்றும் பிளாக் நிறங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதைத் தொடர்ந்து ரியல்மி வெளியிட்டு இருக்கும் புதிய வீடியோவில், நார்சோ N55 ஸ்மார்ட்போனில் முன்புறம் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் இதில் ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் போன்ற மினி கேப்சியுல் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ரியல்மி அறிமுகம் செய்த C55 ஸ்மார்ட்போனிலும் இதே போன்ற மினி கேப்சியுல் அம்சம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. நார்சோ N55 மாடலின் முழு அம்சங்கள் மற்றும் டிசைன் உறுதிப்படுத்தப்பட்டு விட்டன. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி C55 மாடலின் மற்றொரு வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை நார்சோ N55 மாடலில் 6.72 இன்ச் Full HD+ 90Hz LCD ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0 மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் 64MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.






