என் மலர்
கணினி

அறிமுக சலுகைகளுடன் ஒன்பிளஸ் பேட் முன்பதிவு துவக்கம்
- ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை பிப்ரவரி மாத வாக்கில் அறிவித்தது.
- புதிய ஒன்பிளஸ் பேட் மாடலில் 9510 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் பேட் கடந்த பிப்ரவரி மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஒன்பிளஸ் பேட் ஏப்ரல் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என ஒன்பிளஸ் அறிவித்து இருந்தது. தற்போது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் முன்பதிவு துவங்கி இருக்கிறது.
அறிமுக சலுகையாக ஒன்பிளஸ் பேட் முன்பதிவு செய்வோருக்கு 149 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 230 மதிப்புள்ள மேக்னடிக் கீபோர்டு இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் பேட் முன்பதிவு கட்டணம் 99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 130 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் பேட் விலை விவரங்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
இங்கிலாந்தில் ஒன்பிளஸ் பேட் டேப்லெட் மாடலை ஏப்ரல் 25 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் வாங்குவோருக்கு சூப்பர்வூக் 80 வாட் அடாப்டர் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் வினியோகம் மே 8 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
ஒன்பிளஸ் பேட் அம்சங்கள்:
11.6 இன்ச் 2800x2000 பிக்சல் டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் 9000 பிராசஸர்
அதிகபட்சம் 12 ஜிபி ரேம்
5ஜி கனெக்டிவிட்டி
குவாட் ஸ்பீக்கர்கள்
டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ்
9510 எம்ஏஹெச் பேட்டரி
67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி






