ஃபயர்போல்ட் நிறுவனத்தின் புதிய ப்ளூடூத் காலிங் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

ஃபயர்போல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது. ஆல்வேஸ் ஆன் AMOLED டிஸ்ப்ளே, மெட்டாலிக் கேசிங் உள்ளிட்டவை இந்த வாட்ச்-இன் முக்கிய அம்சங்களாக உள்ளன.
ஃபயர்போல்ட் நிறுவனத்தின் புதிய ப்ளூடூத் காலிங் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்
Published on

ஃபயர்போல்ட் நிறுவனத்தின் புதிய ராக் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபயர்போல்ட் கொலைட் மாடலை தொடர்ந்து ஒரே வாரத்தில் ஃபயர்போல்ட் அறிமுகம் செய்திருக்கும் இரண்டாவது ஸ்மார்ட்வாட்ச் இது ஆகும். புதிய ஃபயர்போல்ட் ராக் மாடலில் 1.3 இன்ச் வட்ட வடிவிலான ஆல்வேஸ் ஆன் AMOLED டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இத்துடன் ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டண்ட், 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், மெட்டாலிக் கேசிங், ஏராளமான வசதிகளை வழங்கும் கிரவுன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் உள்ள 260 எம்ஏஹெச் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இந்த வாட்ச்-இல் ஹெல்த் சூட், ஹார்ட் ரேட் டிராக்கர், SpO2 டிராக்கர் மற்றும் ஸ்லீப் சைக்கிள் மாணிட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஃபயர் போல்ட் ராக் அம்சங்கள்:

1.3 இன்ச் 390x390 பிக்சல் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே

கிளாஸ் கவர், மெட்டல் பட்டன், சுழலும் கிரவுன்

ப்ளூடூத் காலிங் வசதி

கால் ஹிஸ்ட்ரி, குயிக் டயல் பேட், சின்க் காண்டாக்ட்

இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்

100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்

110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

260 எம்ஏஹெச் பேட்டரி

ஃபயர்போல்ட் ஹெல்த் சூட்

ஸ்லீப், SpO2 மற்றும் ஹார்ட் ரேட் டிராகிங்

IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட்

ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்கள்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ஃபயர்போல்ட் ராக் ஸ்மார்ட்வாட்ச் பிளாக், கோல்டு மற்றும் கிரே என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 2 ஆயிரத்து 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஃபயர்போல்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com