என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • சியோமி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல்கள் வெளியீட்டு விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • மூன்று வித நிறங்களில் உருவாகி இருக்கும் புதிய டேப்லெட் மாடலில் கீபோர்டு டாக் மற்றும் ஸ்டைலஸ் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் தனது சியோமி பேட் 6 மற்றும் சியோமி பேட் 6 ப்ரோ மாடல்களின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. சியோமி 13 அல்ட்ரா மாடலுடன் புதிய டேப்லெட் மாடல்கள் சீன சந்தையில் ஏப்ரல் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. டேப்லெட் மாடல்கள் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களுடன் இவை மூன்று நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

    மேலும் புதிய பேட் 6 சீரிஸ் டேப்லெட்களில் கீபோர்டு டாக் மற்றும் ஸ்டைலஸ் சப்போர்ட் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 2.8K 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன், ஹார்டுவேர்-லெவல் லோ புளூ லைட் ஐ ப்ரோடெக்ஷன், டூயல் ஐ ப்ரோடெக்ஷன் சான்று கொண்டிருக்கிறது. புதிய சியோமி பேட் 6 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், சியோமி பேட் 6 ப்ரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.

     

    சியோமி பேட் 6 ப்ரோ மாடலில் 8600 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், புதிதாக டீப் ஸ்லீப் மோட் உள்ளது. இதன் ஸ்டாண்ட்பை நேரம் 47.9 நாட்கள் என்று சியோமி தெரிவித்துள்ளது. இதுதவிர டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி இந்த டேப்லெட் மாடல் மெட்டல் பாடி, யுஎஸ்பி 3.0, கைரேகை சென்சார், 50MP பிரைமரி கேமரா, அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி 13 அல்ட்ரா மாடலில் 6.7 இன்ச் சாம்சங் LTPO E6 AMOLED QHD+ 120Hz டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 50MP டெலிபோட்டோ மற்றும் பெரிஸ்கோப் லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா, 4900 எம்ஏஹெச் பேட்டரி, 90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் சீரிஸ் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
    • இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

    ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த ஆண்டு ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு வித மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதில் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இந்த ஆண்டு அல்ட்ரா மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் வரை அது பற்றி எவ்வித தகவலையும் வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை ஆப்பிள் கடுமையாக பின்பற்றி வருகிறது. எனினும், புதிய ஐபோன் மாடல்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கடந்த சில வாரங்களாக புதிய ஐபோன் 15 சீரிஸ் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், இந்த மாடல்களின் புதிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

     

    அதன்படி ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் அதாவது ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு பட்டன் டிசைனையே வழங்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. சாலிட் ஸ்டேட் யுனிஃபைடு வால்யும் பட்டன்கள் தயாராக காலதாமதம் ஆவதால், இரண்டு பட்டன் கொண்ட டிசைனை வழங்க முடிவு செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    தற்போது இருக்கும் மாடல்களில் ஏற்கனவே இரண்டு பட்டன் டிசைன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மியூட் ஸ்விட்ச்-ஐ மாற்றிவிட்டு புதிதாக மியூட் பட்டன் வழங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலில் உள்ள ஆக்ஷன் பட்டன் போன்றே புதிய மியூட் பட்டன் கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கும்.

    • அசுஸ் நிறுவனத்தின் புதிய ROG போன் 7 அதிகபட்சம் 16 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
    • அசுஸ் ROG போன் 7 மேம்பட்ட கேம்கூல் 7-இல் உள்ள தெர்மல் சிஸ்டம் சிறப்பான கூலிங்கை உறுதிப்படுத்துகிறது.

    அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அதிநவீன ROG போன் 7 மாடலை அறிமுகம் செய்தது. புதிய ROG போன் 7 மாடலில் 6.78 இன்ச் Full HD+ AMOLED HDR டிஸ்ப்ளே, 165Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள மேம்பட்ட கேம்கூல் 7 தெர்மல் சிஸ்டம் சிறப்பான கூலிங் வழங்குவதை உறுதிப்படுத்துகிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 5MP மேக்ரோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ROG போன் 7 மாடலில் உள்ள ROG லோகோவில் ஆர்ஜிபி மின்விளக்குகள் உள்ளன.

     

    இத்துடன் 3.5mm ஆடியோ ஜாக், சிமெட்ரிக்கல் டூயல் முன்புற ஸ்பீக்கர்கள், டிராக் HD சவுண்ட், டூயல் செல் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    அசுஸ் ROG போன் 7 அம்சங்கள்:

    6.78 இன்ச் 2448x1080 பிக்சல் Full HD+ 165Hz OLED 10-பிட் HDR டிஸ்ப்ளே

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU

    12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ROG யுஐ மற்றும் ஜென் யுஐ

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    13MP அல்ட்ரா வைடு கேமரா

    5MP மேக்ரோ கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    3.5mm ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள்

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்

    6000 எம்ஏஹெச் பேட்டரி

    65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    குயிக் சார்ஜ் 5.0 மற்றும் பிடி 3.0 சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    அசுஸ் ROG போன் 7 மாடல் ஸ்டார்ம் வைட் மற்றும் ஃபேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ROG போன் 7 அல்டிமேட் ஸ்டார்ம் வைட் (16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி) மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனிற்கான டெமோ விஜய் சேல்ஸ்-இல் நடைபெற இருக்கிறது. எனினும், விற்பனை எப்போது துவங்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    • ப்ளிப்கார்ட் தளத்தில் சம்மர் சேவர் டேஸ் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
    • சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் புதிதாக சம்மர் சேவர் டேஸ் பெயரில் சிறப்பு விற்பனை துவங்கி இருக்கிறது. இன்று (ஏப்ரல் 13) துவங்கிய சிறப்பு விற்பனை ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிக்சல் 6a, ஐபோன் 13, நத்திங் போன் 1, ரியல்மி 10 ப்ரோ பிளஸ் உள்பட பல்வேறு மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது.

    புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க இருப்போர் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையை பயன்படுத்தி அதிக சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம். அதன்படி ஐபோன் 13 மாடலின் 128 ஜிபி விலை ரூ. 54 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. பிக்சல் 6a மாடல் ரூ. 26 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 30 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.




     


    இந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 3 விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது பத்து சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை தற்போது ரூ. 66 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.

    ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் விலை ரூ. 27 ஆயிரத்து 499 என்றும் நத்திங் போன் (1) விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் மேலும் அதிக ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் விலை குறைப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் சலுகை மற்றும் விலை எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்.

    • சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது.
    • புதிய ஸ்மார்ட் டிவி மாடலில் 4K HDR ஸ்கிரீன், கூகுள் டிவி இண்டர்ஃபேஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை 2023 ஸ்மார்டர் லிவிங் (2023 Smarter Living) நிகழ்வில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் டிவி சியோமி ஸ்மார்ட் டிவி X ப்ரோ சீரிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வென்னிலா X சீரிசை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

    புதிய ஸ்மார்ட் டிவி மாடல் 4K HDR ஸ்கிரீன், கூகுள் டிவி ஒஎஸ் கொண்டிருக்கிறது. பெசல் லெஸ் மெட்டாலிக் ஃபிரேம் கொண்டிருக்கும் ஸ்மார்ட் டிவி X ப்ரோ சீரிசில் 4K எல்இடி பேக்லிட் எல்சிடி பேனல், HDR10+, டால்பி விஷன் IQ, சியோமி நிறுவனத்தின் சொந்த கலர் ப்ரோஃபைல்- விவிட் பிக்சர் என்ஜின் 2 வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இந்த ஸ்மார்ட் டிவி மாடல் 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் என மூன்றுவித அளவுகளில் கிடைக்கின்றன. இவற்றில் 40 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், டிடிஎஸ் எக்ஸ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஆம்பியண்ட் லைட் சென்சார், ஃபார்-ஃபீல்டு மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. கூகுள் டிவி ஒஎஸ் கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட் டிவி, சியோமியின் சொந்த பேட்ச்வால் கொண்டுள்ளது.

    இதில் க்ரோம்காஸ்ட் பில்ட்-இன், கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.0, 3x HDMI 2.1, 2x USB, ஆப்டிக்கல் போர்ட், AV இன்புட், ஹெட்போன் அவுட் மற்றும் ஈத்தர்நெட் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சியோமி ஸ்மார்ட் டிவி X ப்ரோ 43 இன்ச் விலை ரூ. 32 ஆயிரத்து 999

    சியோமி ஸ்மார்ட் டிவி X ப்ரோ 50 இன்ச் விலை ரூ. 41 ஆயிரத்து 999

    சியோமி ஸ்மார்ட் டிவி X ப்ரோ 55 இன்ச் விலை ரூ. 47 ஆயிரத்து 999

    மூன்று மாடல்களின் விற்பனை ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை Mi வலைதளம், ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ரிடெயில் விற்பனையாளர்களிடம் நடைபெற இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி/கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    • வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புதிய அப்டேட் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷன் செட்டிங்ஸ்-இல் விரைவில் சர்ச் பார் வழங்கப்பட இருக்கிறது.

    மெட்டா நிறுவனத்தின் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் புதிய அம்சம் வழங்க இருக்கிறது. இதுகுறித்து WABetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி செயலியின் செட்டிங்ஸ்-இல் சர்ச் பார் சேர்க்கப்பட இருக்கிறது. கூகுள் பிளே பீட்டா திட்டத்தின் கீழ் இந்த அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    அந்த வகையில், இந்த அம்சம் தற்போது பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து வெளியாக இருக்கும் எதிர்கால அப்டேட்களில் இந்த அம்சம் அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படலாம். ஆப்பிள் ஐபோன் வெர்ஷனில் சர்ச் பார் மூலம் ஆப் செட்டிங்ஸ்-ஐ இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் செயலியின் செட்டிங்ஸ்-ஐ குறிப்பிட்டு தேட முடியும்.

     

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்த அம்சம் எப்படி இயங்கும் என்ற ஸ்கிரீன்ஷாட்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பயனர்கள் செட்டிங்ஸ்-இன் மேல்புறத்தில் சர்ச் பார் கொண்டு தேட விரும்புவதை டைப் செய்யலாம். இவ்வாறு செய்தபின் தேடலுக்கான பதில்கள் பட்டியலிடப்படும். பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு விட்டதை உணர்த்தும் ஐகான் இடம்பெற்று இருக்கிறது.

    இவ்வாறு வாட்ஸ்அப் செட்டிங்ஸ்-இல் சர்ச் ஐகான் காணப்பட்டால் இந்த அம்சம் வழங்கப்பட்டு விட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சர்ச் பார் மட்டுமின்றி வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த கம்பேனியன் மோட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஏற்கனவே பீட்டா டெஸ்டர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.

    Photo Courtesy: WABetaInfo

    • அமேசான் மைக்ரோசைட்டில் புதிய கேலக்ஸி M14 அம்சங்கள் பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 13 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் வசதி கொண்டிருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி M14 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் SIRIM வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கான மைக்ரோசைட் அமேசான் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    அமேசான் மைக்ரோசைட்டில் புதிய கேலக்ஸி M14 அம்சங்கள் பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது. இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி M14 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 13 வித்தியாசமான 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

     

    இத்துடன் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட எக்சைனோஸ் 1330 பிராசஸர் வழங்கப்படுகிறது. கேலக்ஸி F14 5ஜி மாடலை தொடர்ந்து இந்த பிரிவில் எக்சைனோஸ் 1330 பிராசஸர் கொண்ட இரண்டாவது ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கேலக்ஸி M14 பெற்று இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமராவுடன், மூன்று லென்ஸ்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய சாம்சங் கேலக்ஸி M14 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 155 மணி நேரத்திற்கு ஆடியோ பிளேபேக், 58 மணி நேரத்திற்கு டாக்டைம், 27 மணி நேரத்திற்கு இணைய பயன்பாடு, 25 மணி நேர வீடியோ பிளேபேக் வழங்குகிறது.

    அமேசான் வலைதளத்தில் உள்ள மைக்ரோசைட்டில் புதிய சாம்சங் கேலக்ஸி M14 ஸ்மார்ட்போனின் டிசைன் பற்றிய விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய மாடலில் நாட்ச் டிஸ்ப்ளே, பிளாஸ்டிக் பேக் பேனல், வட்ட வடிவம் கொண்ட மூன்று கேமரா பம்ப்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளன. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி A14 போன்றே காட்சியளிக்கிறது.

    விலையை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13,xxx என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், சாம்சங் கேலக்ஸி M14 விலை ரூ. 13 ஆயிரத்து 499 அல்லது ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    • வி நிறுவனம் தனது இரண்டு பிரீபெயிட் சலுகை பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது.
    • வி மாற்றியமைத்து இருக்கும் இரு சலுகைகளும் தற்போது அதிக பலன்களை வழங்குகின்றன.

    வி நிறுவனம் தனது ரூ. 129 மற்றும் ரூ. 298 விலையில் வழங்கி வரும் இரண்டு பிரீபெயிட் சலுகை பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது. டேட்டா மற்றும் காலிங் பலன்களுடன் வி சமீபத்தில் அறிவித்த ரூ. 181 சலுகையை தொடர்ந்து, இரு சலுகை பலன்கள் மாற்றப்பட்டுள்ளது.

    ரூ. 129 விலையில் கிடைக்கும் வி சலுகைகள் தற்போது அதிக டேட்டா மற்றும் பொழுதுபோக்கு தரவுகளை வழங்குகின்றன. மாற்றப்பட்ட பலன்களை பொருத்தவரை ரூ. 129 சலுகை தற்போது அன்லிமிடெட் காலிங், 200 எம்பி டேட்டா உள்ளிட்டவை 18 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் எஸ்எம்எஸ் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

     

    வி ரூ. 298 சலுகை தற்போது 50 ஜிபி 4ஜி டேட்டா, வி திரைப்படங்கள் மற்றும் டிவி, பிரீமியம் திரைப்படங்கள், ஒரிஜினல்ஸ், செய்திகள் மற்றும் நேரலை டிவி போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகை வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

    சமீபத்தில் வி நிறுவனம் ரூ. 181 பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இந்த சலுகை 30 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனினும், இதில் தினமும் 1 ஜிபி டேட்டா அடிப்படையில் வழங்கப்படவில்லை. இவை ஏற்கனவே உள்ள பிரீபெயிட் சலுகையுடன் சேர்த்து பயன்படுத்த முடியும். இது தனி சலுகை என்பதை விட பூஸ்டர் பேக் ஆகும். 

    • சியோமி ஃபேன் ஃபெஸ்டிவல் பெயரில் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
    • சியோமி 13 ப்ரோ மாடலுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சியோமி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் கடந்த பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகத்தின் போது இதன் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதுதவிர ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது சியோமி ஃபேன் ஃபெஸ்டிவல் பெயரில் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் (ஏப்ரல் 6) துவங்கிய சிறப்பு விற்பனை இம்மாத இறுதிவரை நடைபெற உள்ளது. இதில் சியோமி 13 ப்ரோ மாடலுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கின்றன. அதன்படி ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போதோ அல்லது எக்சேன்ஜ் சலுகையை பயன்படுத்தும் போது பயனர்களுக்கு அதிகபட்சம் ரூ. 8 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     

    அதன்படி சியோமி 13 ப்ரோ விலை ரூ. 71 ஆயிரத்து 999 என்று மாறிவிடும். இத்துடன் சியோமி மற்றும் ரெட்மி பயனர்களுக்கு கூடுதலாக எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 69 ஆயிரத்து 9990க்கும் கீழ் குறைந்துவிடுகிறது.

    சியோமி 13 ப்ரோ அம்சங்கள்:

    6.73 இன்ச் 3200x1440 பிக்சல் QHD+ E6 AMOLED, 120Hz டிஸ்ப்ளே டால்பி விஷன்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் அட்ரினோ 740 GPU

    12 ஜிபி ரேம் 256 ஜிபி, 512 ஜிபி

    மெமரி டூயல் சிம்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14

    50MP பிரைமரி கேமரா

    50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்

    50MP டெலிபோட்டோ கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    4820 எம்ஏஹெச் பேட்டரி

    120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

    • டெக்னோ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரத்யேக டிராப் வடிவ ஹிஞ்ச் கொண்டிருக்கிறது.
    • புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது.

    டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு 5ஜி மாடலை வெளியிட்டுள்ளது. முன்னதாக பிப்ரவரி மாத வாக்கில் நடைபெற்ற 2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் வெளியாகி உள்ளது.

    புதிய டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு 5ஜி மாடலில் 7.85 இன்ச் 2K மடிக்கக்கூடிய 10-120Hz LTPO AMOLED ஸ்கிரீன், 6.42 இன்ச் 1080 பிக்சல் 10-120Hz LTPO AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏரோஸ்பேஸ் தர டிராப் வடிவ ஹிஞ்ச் உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 50MP போர்டிரெயிட் கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 55 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.

     

    டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு 5ஜி அம்சங்கள்:

    7.65 இன்ச் 2296x2000 பிக்சல் 2K+ 10-120Hz LTPO AMOLED மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே

    6.42 இன்ச் 1080x2550 பிக்சல் FHD+ 10-120Hz LTPO AMOLED வெளிப்புற டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர்

    மாலி G710 MC10 GPU

    12 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹைஒஎஸ் 13 ஃபோல்டு

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    13MP அல்ட்ரா வைடு கேமரா

    50MP போர்டிரெயிட் டெலிபோட்டோ கேமரா

    32MP (வெளிப்புறம்) / 16MP (உள்புறம்) செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 88 ஆயிரத்து 888 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனினை ரூ. 77 ஆயிரத்து 777 விலையில் வாங்கிட முடியும். விற்பனை நாளை (ஏப்ரல் 12) நடைபெற இருக்கிறது. 

    • ஒபன்ஏஐ நிறுவனத்தின் பக் பவுண்டி திட்டம் இன்று அமலுக்கு வந்தது.
    • திட்டத்தின் கீழ் கண்டறியப்படும் பிழையின் தீவிரத்தன்மையை பொருத்து 200 டாலர்கள் வழங்கப்படுகிறது.

    உலகளவில் பெரும் பேசுபொருளாகி இருக்கும் சாட்ஜிபிடி சேவையை உருவாக்கிய ஒபன்ஏஐ நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு சிஸ்டம்களில் பிழையை கண்டறிவோருக்கு 20 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16.4 லட்சம் வரை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது சேவையில் பிழையை கண்டறிவோருக்கு, இதுபோன்ற தொகை வழங்குவதை பக் பவுண்டி (Bug Bounty) திட்டம் என்ற பெயரில் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

    அந்த வரிசையில், ஒபன்ஏஐ நிறுவனத்தின் பக் பவுண்டி திட்டம் இன்று அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் கண்டறியப்படும் பிழையின் தீவிரத்தன்மையை பொருத்து குறைந்த பட்சமாக 200 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16 ஆயிரத்து 412 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     பக்-கிரவுட் என்ற பக் பவுண்டி பிளாட்ஃபார்மில், ஒபன்ஏஐ நிறுவனம் ஆராய்ச்சியாளர்கள் சாட்ஜிபிடி சேவையில் ஆய்வு செய்ய அழைப்பு விடுத்திருக்கிறது. இதில் சாட்ஜிபிடி செயல்பாடு, ஒபன்ஏஐ சிஸ்டம்கள் எவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்து, மூன்றாம் தரப்பு செயலிகளுடன் தகவல்களை பரிமாறி கொள்கிறது என்பதை ஆய்வாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தலாம்.

    தனியுரிமை விதிகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டில் இத்தாலி நாட்டில் சாட்ஜிபிடி சேவைக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் ஜெனரேடிவ் ஏஐ சேவைகளை சம்பந்தப்பட்ட ஆணையங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • ரியல்மி நிறுவனத்தின் புதிய நார்சோ ஸ்மார்ட்போன் ஐபோனில் உள்ளதை போன்ற மினி கேப்ஸ்யுல் கொண்டிருக்கிறது.
    • நார்சோ N55 மாடலில் மீடியாடெக் பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நார்சோ N55 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ரியல்மி நார்சோ N55 மாடலில் 6.72 இன்ச் FHD+ 90Hz LCD ஸ்கிரீன், 8MP செல்ஃபி கேமரா உள்ளது. மேலும் மினி கேப்ஸ்யுல் கொண்ட இரண்டாவது ரியல்மி ஸ்மார்ட்போன் இது ஆகும்.

    கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி C55 மாடலிலும் இதே போன்ற மினி கேப்ஸ்யுல் வழங்கப்பட்டு இருந்தது. இந்த கேப்ஸ்யுல் போன் சார்ஜிங் விவரம், லோ பேட்டரி, டேட்டா பயன்பாடு, தினசரி நடந்த தூரம் உள்ளிட்டவைகளை காண்பிக்கிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், கூடுதலாக 6 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் பிளாஸ்டிக் பேக், ப்ரிசம் டிசைன் மற்றும் க்ளிட்டர் சேண்ட் டெக்ஸ்ச்சர் கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ரியல்மி நார்சோ N55 அம்சங்கள்:

    6.72 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ IPS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர்

    ARM மாலி-G52 2EEMC2 GPU

    4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ 4.0

    64MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் சென்சார், எல்இடி ஃபிளாஷ்

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரியல்மி நார்சோ N55 ஸ்மார்ட்போன் ப்ரிசம் பிளாக் மற்றும் ப்ரிசம் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ரியல்மி, அமேசான் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஏப்ரல் 18 ஆம் தேதி துவங்குகிறது.

    இதுதவிர அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் முறையில் நாளை (ஏப்ரல் 13) விற்பனைக்கு வருகிறது. இதில் ஸ்மார்ட்போனிற்கு ரூ. 1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அறிமுக சலுகை:

    ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், அமேசான் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள், அமேசானில் மாத தவணை முறை அல்லது ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மற்றும் ரியல்மி தளத்தில் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது நார்சோ N55 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ. 500 மற்றும் 6 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ. 1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ×