என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.
    • ஐகூ பிராண்டின் ஆண்டு விழா சிறப்பு விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    விவோ நிறுவனத்தின் துணை பிராண்டாக மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது ஐகூ. 2020 வாக்கில் இந்தியாவில் கால்பதித்த ஐகூ பிராண்டு பல்வேறு ஸ்மமார்ட்போன்களை அறிமுகம் செய்து சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் தனது மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாடும் ஐகூ பிராண்டு ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது.

    ஐகூ இதுவரை அறிமுகம் செய்திருக்கும் ஸ்மார்ட்போன்களில் பயனர் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஐகூ நிறுவனத்தின் சமீபத்திய ஐகூ 11 ஸ்மார்ட்போன் தலைசிறந்த அம்சங்களுடன் கிடைக்கிறது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிநவீன ரேம் மற்றும் மெமரி உள்ளது. இதன் விலை இந்தியாவில் ரூ. 59 ஆயிரத்து 999 என்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    எனினும், ஆண்டு விழா சிறப்பு விற்பனையை ஒட்டி ஐகூ 11 ஸ்மார்ட்போனிற்கு ரூ. 10 ஆயிரம் வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஐகூ 11 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதுதவிர ஐகூ 9 மற்றும் ஐகூ 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கும் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக ஐகூ 9 விலை ரூ. 42 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இதனை ரூ. 30 ஆயிரத்து 990 விலையிலேயே வாங்கிட முடியும். இது ஐகூ 9 ஸ்மார்ட்போனின் பழைய விலையை விட ரூ. 12 ஆயிரம் வரை குறைவு ஆகும். ஐகூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை முன்னதாக ரூ. 64 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    தற்போது ஐகூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 39 ஆயிரத்து 990 என்று மாறி இருக்கிறது. இத்துடன் ஐகூ நியோ 6 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஐகூ நியோ 6 5ஜி மாடல் விலை தற்போது ரூ. 24 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது.

    ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஐகூ ஆண்டு விழா சிறப்பு விற்பனை ஐகூ மற்றும் அமேசான் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. சிறப்பு விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    • சியோமி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் நான்கு கேமரா சென்சார்களை கொண்டுள்ளது.
    • புதிய சியோமி 13 அல்ட்ரா மாடலில் 90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    சியோமி நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சியோமி 13 அல்ட்ரா மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 6.73 இன்ச் 2K AMOLED 1-120Hz LTPO C7 டிஸ்ப்ளே, HDR10+, டால்பி விஷன், அதிகபட்சம் 2600 நிட்ஸ் பிரைட்னஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் லிக்விட் கூல் தொழில்நுட்பம் உள்ளது. மேலும் 50MP குவாட் கேமரா சென்சார்கள், லெய்கா ஆப்டிக்ஸ் உள்ளது. இதில் 1-இன்ச் அளவு கொண்ட IMX989 50MP 23mm லெய்கா பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இது F/1.9 மற்றும் f/4.0 2-ஸ்டாப் அப்ரெச்சர் ஸ்விட்ச் வசதி கொண்டிருக்கிறது.

    இத்துடன் 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP டெலிபோட்டோ கேமரா, 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஹை-ரெஸ் ஆடியோ, டூயல் ஸ்பீக்கர்கள், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    சியோமி 13 அல்ட்ரா அம்சங்கள்:

    6.73 இன்ச் 3200x1440 பிக்சல் குவாட் ஹெச்டி பிளஸ் AMOLED, HDR10+ டிஸ்ப்ளே

    2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU

    12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    16 ஜிபி ரேம், 512 ஜிபி, 1 டிபி மெமரி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14

    50MP பிரைமரி கேமரா, 1 இன்ச் சோனி IMX989 சென்சார்

    50MP சோனி IMX858 அல்ட்ரா வைடு லென்ஸ்

    50MP சோனி IMX858 டெலிபோட்டோ கேமரா

    50MP சோனி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஹைரெஸ் ஆடியோ, டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    50 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்

    ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

     

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சியோமி 13 அல்ட்ரா (12 ஜிபி + 256 ஜிபி) மாடல் விலை 5,999 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 71 ஆயிரத்து 545

    சியோமி 13 அல்ட்ரா (16 ஜிபி + 512 ஜிபி) மாடல் விலை 6,499 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 77 ஆயிரத்து 545

    சியோமி 13 அல்ட்ரா (16 ஜிபி + 1 டிபி) மாடல் விலை 7,299 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 87 ஆயிரத்து 090

    சியோமி 13 அல்ட்ரா மாடல் பிளாக், வைட் மற்றும் ஆலிவ் கிரீன் என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. சீன வெளியீட்டை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் அடுத்த சில மாதங்களில் உலகளவில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என சியோமி உறுதியளித்து இருக்கிறது. 

    • ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு ஐஆர்சிடிசி சார்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பயனர்கள் தப்பித்தவறியும் இவ்வாறு செய்தால், அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு பயனர்கள் பாதுகாப்பு கருதி ஐஆர்சிடிசி சார்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் "irctcconnect.apk," என்ற பெயர் கொண்ட தரவுகளை தங்களது சாதனங்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்று ஐஆர்சிடிசி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தரவுகளை டவுன்லோட் செய்யும் பட்சத்தில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

    வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களின் மூலம் இந்த தரவு வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதில் போலி வலைதளமான https://irctc.creditmobile.site முகவரியும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

    ஐஆர்சிடிசி வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி இந்த தரவை டவுன்லோட் செய்தால், உங்களது ஸ்மார்ட்போனில் அது மால்வேரை இன்ஸ்டால் செய்துவிடும். https://irctc.creditmobile.site வலைதளம் தோற்றத்தில் ஐஆர்சிடிசி வலைதளம் போன்றே காட்சியளிக்கிறது. இதில் உங்களின் தனிப்பட்ட விவரங்களை பதிவிட்டால், ஹேக்கர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

     

    இந்த தளத்தை உருவாக்கிய ஹேக்கர்கள் ஐஆர்சிடிசி அதிகாரிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டு பயனர்களிடம் ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை டவுன்லோட் செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட வங்கி விவரங்களான நெட் பேங்கிங் பெயர், கடவுச்சொல், யுபிஐ முகவரி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.

    இந்த ஐஆர்சிடிசி முறைகேடில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

    போலி செயலிகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று ஐஆர்சிடிசி சார்பில் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யும் போது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதுபோன்ற முறைகேடில் சிக்காமல் இருக்க பயனர்கள் ஐஆர்சிடிசி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும்.

    மேலும் ஐஆர்சிடிசி சார்பில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களான (கடவுச்சொல்), கிரெடிட் கார்டு எண், ஒடிபி, வங்கி கணக்கு எண் அல்லது யுபிஐ உள்ளிட்டவைகளை மொபைல் போன் மூலம் கேட்கப்படாது. 

    • மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 6a மாடல் ஜூலை மாத வாக்கில் விற்பனைக்கு வந்தது.
    • பிக்சல் 7a ஸ்மார்ட்போன் கார்பன், காட்டன் மற்றும் ஆர்க்டிக் புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 7a ஸ்மார்ட்போனினை கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. இந்த வரிசையில், புதிய பிக்சல் 7a நிறங்கள் மற்றும் விற்பனை தேதி பற்றிய விவரங்களை டிப்ஸ்டர் ஜான் ப்ரொசர் வெளியிட்டுள்ளார். இதோடு பிக்சல் 7a விலை விவரங்களை 9டு5கூகுள் வெளியிட்டுள்ளது.

    அதன்படி சர்வதேச சந்தையில் பிக்சல் 7a ஸ்மார்ட்போனின் விலை 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 40 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் பிக்சல் 6a மாடலின் விலையை விட 50 டாலர்கள் வரை அதிகம் ஆகும்.

     

    இந்திய சந்தையில் பிக்சல் 6a மாடலின் விலை ரூ. 43 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி இதன் மேம்பட்ட மாடலான பிக்சல் 7a விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 6a மாடல் ஜூலை மாத வாக்கில் விற்பனைக்கு வந்தது.

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் கார்பன், காட்டன் மற்றும் ஆர்க்டிக் புளூ என மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர பிக்சல் 7a மாடல் சார்கோல், ஸ்னோ மற்றும் சீ போன்ற நிறங்களில் கிடைக்கும் என்றும் தகவல் வெளியானது. 

    • ஆப்பிள் ஸ்டோர்-ஐ திறந்து வைத்ததை அடுத்து டிம் குக் அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
    • டெல்லியில் உருவாகி இருக்கும் மற்றொரு ஆப்பிள் விற்பனை மையம் ஏப்ரல் 20 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது.

    இந்தியாவில் தனது சாதனங்களை விற்பனை செய்யத் துவங்கி 25 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் சில்லறை விற்பனை மையத்தை மும்பையில் திறந்தது. மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்லெக்ஸ்-இல் (பிகேசி) கட்டமைக்கப்பட்ட ஆப்பிள் விற்பனை மையத்தினை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் சரியாக காலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ விற்பனை மையம் இந்தியாவில் திறக்கப்பட இருப்பதை அறிந்து பலர் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படும் முன்பே அங்கு கூடியிருந்தனர். ஆப்பிள் பிகேசியை திறந்து வைத்த டிம் குக் சுமார் ஏழு நிமிடங்கள் வரை வாயிலில் நின்றபடி வாடிக்கையாளர்களை ஸ்டோருக்கு வரவேற்றார்.

     

    ஆப்பிள் பிகேசி திறப்பு விழாவில் உலகம் முழுவதிலும் பணியாற்றி வரும் ஆப்பிள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் 100 ஊழியர்கள் கலந்து கொண்டனர். புதிய ஆப்பிள் ஸ்டோர்-ஐ திறந்து வைத்ததை அடுத்து டிம் குக் அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.

    மும்பையை தொடர்ந்து டெல்லியில் உருவாகி இருக்கும் மற்றொரு ஆப்பிள் சில்லறை விற்பனை மையம் ஏப்ரல் 20 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. டெல்லியை அடுத்த சிட்டிவாக் பகுதியில் உருவாகி இருக்கும் புதிய விற்பனை மையம் ஆப்பிள் சகெட் என்று அழைக்கப்படுகிறது.

    • பிஎஸ்என்எல் நிறுவனம் வாய்ஸ் காலிங் சேவையை வழங்கும் புதிய சலுகையை அறிவித்தது.
    • புதிய பிஎஸ்என்எல் சலுகை மொத்தத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை வழங்கும் சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. பல்வேறு விலை பிரிவுகளில் கிடைக்கும் பிரீபெயிட் சலுகைகள் வெவ்வேறு பலன்களை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த வரிசையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.

    இந்த சலுகை பயனர்களுக்கு வாய்ஸ் கால் சேவையை மட்டும் 90 நாட்களுக்கு வழங்குகிறது. புதிய பிஎஸ்என்எல் சலுகை விலை ரூ. 439 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பிஎஸ்என்எல் ரூ. 439 சலுகை அன்லிமிடெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங், 300 எஸ்எம்எஸ் போன்ற பலன்களை வழங்குகிறது.

     

    முன்னதாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது பிஎஸ்என்எல் ரூ. 439 சலுகை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சலுகையின் மூலம் பயனர்கள் மாதத்திற்கு ரூ. 146 கட்டணத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவையை பெறலாம். இதன் மூலம் தினமும் ரூ. 4.80 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ஒருவேளை நீண்ட கால வேலிடிட்டி வேண்டும் என்று எதிர்பார்ப்போருக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1,999 விலையில் சலுகையை வழங்கி வருகிறது. இதில் தினமும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் பலன்கள், 600 ஜிபி அதிவேக டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி ஒரு வருடம் ஆகும். 

    • விவோ நிறுவனத்தின் புதிய X90 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகி உள்ளன.
    • புதிய விவோ X90 சீரிஸ் மாடல்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ X90 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. விவோ X90 சீரிசில் X90 மற்றும் X90 ப்ரோ என இரு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இரு பிரீமியம் ஸ்மார்ட்போன்களும் ஏப்ரல் 26 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    புதிய X90 சீரிஸ் மாடல்கள் தலைசிறந்த அம்சங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தனித்துவ பயனர் அனுபவம் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். சமீபத்திய ஃபிளாக்ஷிப் மாடல்களை போன்றே புதிய சீரிசிலும் X90 ப்ரோ மாடல் மேம்பட்ட வெர்ஷனாகவும், X90 பேஸ் மாடலாகவும் இருக்கும். வெளியீட்டு தேதி மட்டுமின்றி புதிய ஸ்மார்ட்போன்களின் சில அம்சங்களையும் விவோ அம்பலப்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே சர்வதேச சந்தையில் சில நாடுகளில் விவோ X90 சீரிஸ் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. தற்போதைய தகவல்களின் படி புதிய X90 சீரிஸ் மாடல்களின் இந்திய வெர்ஷனிலும், அதன் சர்வதேச வெர்ஷனில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    விவோ X90 மற்றும் X90 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 6.78 இன்ச் OLED டிஸ்ப்ளே, வளைந்த எட்ஜ்கள், பன்ச் ஹோல் கட்-அவுட், FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+ சப்போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க X90 மாடலில் 50MP பிரைமரி கேமரா, OIS சப்போர்ட், 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 12MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது.

    விவோ X90 ப்ரோ மாடலில் 1 இன்ச் சோனி IMX989 50MP பிரைமரி கேமரா, 50MP போர்டிரெயிட் கேமரா, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்படுகிறது. இரு சாதனங்களிலும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.
    • மென்பொருள் சார்ந்த புதிய அப்டேட்கள் மற்றும் அறிவிப்புகள் இந்த நிகழ்வில் முக்கிய அம்சமாக இருக்கும்.

    ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் மாடலை ஜூன் 5 ஆம் தேதி நடைபெறும் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வான WWDC 2023-இல் அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது. WWDC வரலாற்றில் அதிக சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் நிகழ்வாக இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் WWDC 2023 நிகழ்வு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்து ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இந்த ஆண்டின் WWDC நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய மேக் லேப்டாப்களை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. வழக்கமாக இந்த நிகழ்வில் ஐபோன், மேக், வாட்ச், டிவி மற்றும் ஐபேட் மாடல்களுக்கான புதிய ஒஎஸ் அப்டேட்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

     

    இந்த ஆண்டு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஹெட்செட் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் புதிய xrOS-ஐ அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் 15 இன்ச் மேக்புக் ஏர், மேம்பட்ட 13 இன்ச் மேக்புக் ஏர், எண்ட்ரி லெவல் 13 இன்ச் மேக்புக் ப்ரோ, ரிப்ரெஷ் செய்யப்பட்ட 24 இன்ச் ஐமேக் மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

    இதுதவிர அளவில் பெரிய மேக்புக் ஏர் மாடலை ஆப்பிள் அறிமுகம் செய்யும் என்றும் இதில் அடுத்த தலைமுறை M3 பிராசஸருக்கு மாற்றாக M2 சிப்செட் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தற்போது ஆப்பிள் நிறுவனம் M1 மற்றும் M2 பிராசஸர் கொண்ட மேக்புக் ஏர் மாடல்களையே விற்பனை செய்து வருகிறது.

    இரண்டு வேரியண்ட்களிலும் 13.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. புதிய மாடலில் 15 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுவதால், இதன் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 13 இன்ச் மேக்புக் ஏர் (M2 பிராசஸர் மற்றும் 256 ஜிபி எஸ்எஸ்டி மாடல்) விலைரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    Photo Courtesy: Renders by Ian

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 1330 பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய M14 ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கேலக்ஸி M14 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+ IPS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் எக்சைனோஸ் 1330 பிராசஸர், மாலி G68 MP2 GPU, 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ், 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    சாம்சங் கேலக்ஸி M14 5ஜி அம்சங்கள்:

    6.6 இன்ச் FHD+ IPS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    எக்சைனோஸ் 1330 பிராசஸர்

    மாலி G68 MP2 GPU

    4ஜிபி ரேம்

    64 ஜிபி மெமரி, 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    50MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் சென்சார்

    2MP மேக்ரோ லென்ஸ்

    13MP செல்ஃபி கேமரா

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    5ஜி, 4ஜி, டூயல் பேண்ட் வைபை

    ப்ளூடூத், என்எஃப்சி, ஜிபிஎஸ்

    யுஎஸ்பி டைப் சி போர்ட்

    6000 எம்ஏஹெச் பேட்டரி

    25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 490 என்றும் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 21 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. விற்பனை அமேசான், சாம்சங் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.

    • இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ G13 குறைந்த விலையில் கிடைக்கிறது.
    • ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்கிறது.

    உலகில் முழுவதிலும் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலானோருக்கும் அத்தியாவசியமான சாதனமாக மாறிவிட்டது. எனினும், ஸ்மார்ட்போன் சந்தையில் ஏராளமான மாடல்கள் மிக குறுகிய காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கிடைக்கின்றன. அடிக்கடி புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படுவதால், குறிப்பிட்ட விலை பிரிவில் சிறந்த ஸ்மார்ட்போனை தேர்வு செய்வது சவாலான காரியமாக இருக்கிறது.

    எனினும் ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி, போக்கோ, லாவா, மோட்டோ என பல்வேறு நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையிலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. போட்டி அதிகரித்து வருவதை அடுத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது மாடல்களில் சிறந்த அம்சம் இருப்பதை உறுதிப்படுத்த பெருமளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

    சக்திவாய்ந்த பிராசஸர்களில் இருந்து, போதுமான ஸ்டோரேஜ், அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளேக்கள், சிறந்த கேமராக்கள் என அசத்தல் அம்சங்களுடன் சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில், ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய மாடல் வாங்க விரும்புவோர் தேர்வு செய்ய சிறந்த மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

     

    மோட்டோ G13

    6.5 இன்ச் டிஸ்ப்ளே HD+ ரெசல்யூஷன், மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 8MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை இந்த மோட்டோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் ஆகும். இந்திய சந்தையில் மோட்டோ G13 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.

     

    லாவா யுவா 2 ப்ரோ

    இந்தியாவில் ரூ. 7 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கும் இந்த லாவா ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD+ நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர், 13MP பிரைமரி கேமராவுடன் இரு விஜிஏ கேமராக்கள், 5MP செல்ஃபி கேமரா, ஸ்கிரீன் ஃபிளாஷ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் அடாப்டர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

     

    மோட்டோ E13

    ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று. ரூ. 6 ஆயிரத்து 999 எனும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் மோட்டோ E13 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் யுனிசாக் டி606 பிராசஸர், மாலி G57 MP1 GPU, அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

     

    ரியல்மி C55

    இந்திய சந்தையில் ரூ. 10 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி C55 ஸ்மார்ட்போன் வங்கி சலுகைகளை சேர்த்தால் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் LCD டிஸ்ப்ள, Full HD+ ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர், 64MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    • சியோமி நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஸ்மார்ட்போனுடன் சியோமி பேட் 6 சீரிஸ் டேப்லெட் மாடல்களும் அறிமுகமாகும் என அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

    சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. பல்வேறு விலை பிரிவுகளில் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை குறிவைத்து சியோமி நிறுவனம் தொடர்ச்சியாக புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி சமீபத்தில் ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்த நிறுவனம் தற்போது சியோமி 13 அல்ட்ரா ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இதனிடையே சியோமி நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் தனது வெய்போ அக்கவுண்டில் புதிய கேமரா சாதனம் ஒன்றின் டீசரை வெளியிட்டு இருக்கிறார். இந்த சாதனம் ஸ்மார்ட்போனை வழக்கமான கேமரா போன்று பயன்படுத்தும் வசதியை வழங்கும் என அதன் தோற்றத்தில் இருந்தே அறிந்து கொள்ள முடிகிறது. புதிய சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் தலைசிறந்த கேமரா சிஸ்டம் கொண்டிருக்கும் என கூறப்பட்டு வருகிறது.

     

    இந்த நிலையில் சியோமி நிறுவனர் வெளியிட்டு இருக்கும் சாதனம் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்கும் முறையில் புரட்சியை ஏற்படுத்தும் என தெரிகிறது. லெய் ஜூன் வெளியிட்டு இருக்கும் புதிய டீசரில் உள்ள கேமரா க்ரிப் சாதனம் கொண்டு சியோமி 13 அல்ட்ரா மாடலை பயனர்கள் வழக்கமான கேமராவுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது. ஸ்மார்ட்போன் கேமரா விஷயத்தில் சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது.

    அதன்படி புதிய சாதனம் நான்கு 50MP பிரைமரி கேமரா சென்சார்கள் மற்றும் 1 இன்ச் அளவில் சோனி IMX989 சென்சாருடன் வேரியபில் அப்ரெச்சர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது டீசரில் இடம்பெற்று இருக்கும் கேமரா க்ரிப்-இல் பிரத்யேக ஷட்டர் பட்டன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    • இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய லேப்டாப் மாடல் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    • புதிய இன்ஃபினிக்ஸ் லேப்டாப் 2 வாட் டூயல் ஸ்பீக்கர்கள், 40வாட் பேட்டரி, 45 வாட் சார்ஜிங் வசதிகளை கொண்டிருக்கிறது.

    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் ஏப்ரல் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாத வாக்கில் இன்புக் Y1 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய லேப்டாப் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய இன்புக் Y1 பிளஸ் நியோ மாடல் சற்றே குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் இன்ஃபினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ மாடலின் விலை ரூ. 25 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தலைசிறந்த அம்சங்களுடன் மிக குறைந்த விலையில் அறிமுகமாகி சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்த லேப்டாப் மிக மெல்லிய மற்றும் பிரீமியம் டிசைன், அலுமினியம் அலாய் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் மிக மெல்லிய பெசல்கள் உள்ளன.

     

    புதிய இன்புக் Y1 பிளஸ் நியோ மாடலில் 15.6 இன்ச் விவிட் கலர்-ரிச் டிஸ்ப்ளே, 82 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, 250 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இத்துடன் இரண்டு 2 வாட் ஸ்பீக்கர்கள், 40 வாட் பேட்டரி, 45 வாட் டைப் சி சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால், இந்த லேப்டாப் ஒரு மணி நேரத்தில் 75 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும்.

    இத்துடன் புதிய மாடலில் அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இதுதவிர 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி ஆப்ஷன்களும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முந்தைய இன்ஃபினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் மாடலில் உள்ளதை போன்றே இந்த மாடலிலும் இண்டெல் நிறுவனத்தின் i3 10th Gen பிராசஸர் வழங்கப்படலாம். இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிடும்.

    ×