search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    விரைவில் இந்தியா வரும் புதிய இன்ஃபினிக்ஸ் லேப்டாப் - இத்தனை அம்சங்களா?
    X

    விரைவில் இந்தியா வரும் புதிய இன்ஃபினிக்ஸ் லேப்டாப் - இத்தனை அம்சங்களா?

    • இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய லேப்டாப் மாடல் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    • புதிய இன்ஃபினிக்ஸ் லேப்டாப் 2 வாட் டூயல் ஸ்பீக்கர்கள், 40வாட் பேட்டரி, 45 வாட் சார்ஜிங் வசதிகளை கொண்டிருக்கிறது.

    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் ஏப்ரல் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாத வாக்கில் இன்புக் Y1 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய லேப்டாப் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய இன்புக் Y1 பிளஸ் நியோ மாடல் சற்றே குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் இன்ஃபினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ மாடலின் விலை ரூ. 25 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தலைசிறந்த அம்சங்களுடன் மிக குறைந்த விலையில் அறிமுகமாகி சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்த லேப்டாப் மிக மெல்லிய மற்றும் பிரீமியம் டிசைன், அலுமினியம் அலாய் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் மிக மெல்லிய பெசல்கள் உள்ளன.

    புதிய இன்புக் Y1 பிளஸ் நியோ மாடலில் 15.6 இன்ச் விவிட் கலர்-ரிச் டிஸ்ப்ளே, 82 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, 250 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இத்துடன் இரண்டு 2 வாட் ஸ்பீக்கர்கள், 40 வாட் பேட்டரி, 45 வாட் டைப் சி சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால், இந்த லேப்டாப் ஒரு மணி நேரத்தில் 75 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும்.

    இத்துடன் புதிய மாடலில் அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இதுதவிர 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி ஆப்ஷன்களும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முந்தைய இன்ஃபினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் மாடலில் உள்ளதை போன்றே இந்த மாடலிலும் இண்டெல் நிறுவனத்தின் i3 10th Gen பிராசஸர் வழங்கப்படலாம். இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிடும்.

    Next Story
    ×