என் மலர்
தொழில்நுட்பம்
- 1.69 இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240x280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்வாட்ச் உடல்நல ஆரோக்கியம் சார்ந்து ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.
நாய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கலர்ஃபிட் விவிட் கால் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது. நாய்ஸ் HRX ஸ்ப்ரிண்ட் ஸ்மார்ட்வாட்ச்-ஐ தொடர்ந்து புதிய மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய நாய்ஸ் கலர்ஃபிட் விவிட் கால் ஸ்மார்ட்வாட்ச் மெட்டாலிக் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இத்துடன் ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட், பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 1.69 இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240x280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் உடல்நல ஆரோக்கியம் சார்ந்து ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.

நாய்ஸ் கலர்ஃபிட் விவிட் கால் அம்சங்கள்:
1.69 இன்ச் 240x280 பிக்சல் டிஸ்ப்ளே
100-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்
100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
ப்ளூடூத் 5.1
ப்ளூடூத் காலிங் வசதி
260 எம்ஏஹெச் பேட்டரி
இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்
ஹார்ட் ரேட், SpO2, அக்செல்லோமீட்டர் சென்சார்கள்
நாய்ஸ் ஹெல்த் சூட்
IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட்
பில்ட்-இன் கேம்ஸ்
நாய்ஸ் ஃபிட் ஆப்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நாய்ஸ் கலர்ஃபிட் விவிட் கால் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 1,299 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்பேஸ் புளூ, சில்வர் கிரே, ஜெட் பிளாக், ஃபாரஸ்ட் கிரீன், ரோஸ் பின்க் மற்றும் டீப் வைன் என்று ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது.
- சோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.
- 4K ரெசல்யூஷன் ஸ்கிரீன் மற்றும் லைவ் கலர் தொழில்நுட்பம் கொண்டுள்ளன.
சோனி இந்தியா நிறுவனம் தனது புதிய பிரேவியா X75L ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் டிவி 4K அல்ட்ரா HD LED ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என நான்குவித அளவுகளில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களில் X1 பிக்சர் பிராசஸர் கொண்டிருக்கிறது.
இதில் உள்ள X1 பிராசஸர் மேம்பட்ட விதிகளை பின்பற்றி நாய்ஸ்-ஐ குறைத்து, அதிக தெளிவான 4K ரெசல்யூஷன் படங்ளை பிரதிபலிக்கிறது. X75L சீரிஸ் மாடல்களில் பயனர்கள் அதிகபட்சம் 10 ஆயிரத்திற்கும் அதிக செயலிகளை டவுன்லோட் செய்து கொள்ள முடியும். மேலும் 7 லட்சத்திற்கும் அதிக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.

சோனி பிரேவியா X75L அம்சங்கள்:
மெல்லிய பெசல்கள், ஸ்லிம் பிலேடு ஸ்டாண்ட்
43, 50, 55 மற்றும் 65 இன்ச் அளவுகள்
4K, 50Hz, 3840x2160 பிக்சல், 4K X ரியாலிட்டி ப்ரோ
லைவ் கலர் தொழில்நுட்பம், மோஷன்ஃப்ளோ XR, ஃபிரேம் டிம்மிங்
HDR
4K பிராசஸர் X1
ஆண்ட்ராய்டு டிவி மற்றம் கூகுள் டிவி
10வாட் + 10 வாட், ஓபன் பேஃபில் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
16 ஜிபி மெமரி
ஆட்டோ HDR டோன் மேப்பிங், ஆட்டோ ஜெனர் பிக்சர் மோட், கேம் மோட்
க்ரோம்காஸ்ட், வாய்ஸ் சர்ச் சப்போர்ட்
அலெக்சா, ஆப்பிள் ஏர்பிளே2, ஆப்பிள் ஹோம்கிட், கிட்ஸ் ப்ரோஃபைல்
வாய்ஸ் ரிமோட்
ஈத்தர்நெட் இன்புட் X1, RF X1, கம்போசிட் வீடியோ இன்புட் x1
HDMI 2.1, USBx 2, 1x ஹெட்போன்
வைபை, ப்ளூடூத் 5
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சோனி பிரேவியா 43X75L விலை ரூ. 69 ஆயிரத்து 900 - விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி துவங்குகிறது.
சோனி பிரேவியா 50X75L விலை ரூ. 85 ஆயிரத்து 900 - விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி துவங்குகிறது.
சோனி பிரேவியா 65X75L விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900 - விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி துவங்குகிறது.
சோனி பிரேவியா 55X75L விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
புதிய சோனி பிரேவியா X75L சீரிஸ் டிவி மாடல்கள் விற்பனை சோனி செண்டர்கள், முன்னணி மின்சாதன விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது.
- சாம்சங் கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
- புதிய கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் சில தினங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்த கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கியது. 90Hz FHD+ டிஸ்ப்ளே, மூன்று கேமரா சென்சார்கள், 6000 எம்ஏஹெச் பேட்டரி என அசத்தல் அம்சங்கள் நிறைந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி கேலக்ஸி M14 5ஜி மாடல் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 990 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 490 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அறிமுக சலுகைகள்:
புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1500 வரை உடனடி தள்ளுபடி பெறலாம்.
அமேசான் சார்பில் இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ. 500 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் புதிய கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12 ஆயிரத்து 990 என்று மாறிவிடுகிறது.

சாம்சங் கேலக்ஸி M14 5ஜி அம்சங்கள்:
6.6 இன்ச் FHD+ IPS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
எக்சைனோஸ் 1330 பிராசஸர்
மாலி G68 MP2 GPU
4ஜிபி ரேம்
64 ஜிபி மெமரி, 128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
50MP பிரைமரி கேமரா
2MP டெப்த் சென்சார்
2MP மேக்ரோ லென்ஸ்
13MP செல்ஃபி கேமரா
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
5ஜி, 4ஜி, டூயல் பேண்ட் வைபை
ப்ளூடூத், என்எஃப்சி, ஜிபிஎஸ்
யுஎஸ்பி டைப் சி போர்ட்
6000 எம்ஏஹெச் பேட்டரி
25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
புதிய சாம்சங் கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போன் ஐஸ் சில்வர், பெர்ரி புளூ மற்றும் ஸ்மோக்கி டியல் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் இந்தியா வலைதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
- சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
- ரெட்மி K50i மாடலில் டிமென்சிட்டி 8100 பிராசஸர், 6.6 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது.
சியோமி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. சியோமி 12 ப்ரோ மற்றும் ரெட்மி K50i ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
இந்திய சந்தையில் ரூ. 62 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் வலைதளத்தில் ரூ. 49 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இத்துடன் வங்கி கார்டு கொண்டு பரிவர்த்தனை செய்யும் போது கூடுதலாக ரூ. 4 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

முன்னதாக பிப்ரவரி மாத வாக்கில் சியோமி 13 ப்ரோ வெளியீட்டைத் தொடர்ந்து சியோமி 12 ப்ரோ விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு ரூ. 52 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
சியோமி 12 ப்ரோ போன்றே ரெட்மி K50i ஸ்மார்ட்போனும் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மீடியாடெக் நிறுவனத்தின் டிமென்சிட்டி 8100 பிராசஸர், 6.6 இன்ச் டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் ரெட்மி K50i ஸ்மார்ட்போன் ரூ. 25 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ. 22 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 19 ஆயிரத்து 499 என்று மாறிவிடும்.
- வி நிறுவனத்தின் புதிய சலுகைகளில் ஒடிடி பலன்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
- புதிய வி சலுகைகள் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகின்றன.
வி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும், இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இரு சலுகைகளிலும் ஒடிடி சந்தா பலன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ. 368 மற்றும் ரூ. 369 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. சிறு மாற்றங்கள் தவிர, இரு சலுகைகளிலும் ஒரே மாதிரியான பலன்களே வழங்கப்படுகின்றன.
அதன்படி இரண்டு சலுகைகளிலும் தினமும் 2 ஜிபி டேட்டா, 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. வி ரூ. 368 சலுகையில் 30 நாட்களுக்கான சன் நெக்ஸ்ட் சந்தா, ரூ. 369 சலுகையில் 30 நாட்களுக்கான சோனிலிவ் சந்தா வழங்கப்படுகிறது.

இரு சலுகைகளின் இதர பலன் விவரங்கள்:
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி நேர எவ்வித கூடுதல் கட்டணம் இன்றி அன்லிமிடெட் இணைய வசதி.
வார இறுதியில் டேட்டா ரோல் ஓவர் - திங்கள் முதல் வெள்ளி வரை பயன்படுத்தாத டேட்டாவை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வி மூவிஸ் மற்றும் டிவி சேவையின் விஐபி சந்தா வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 2 ஜிபி வரை பேக்கப் டேட்டா எவ்வித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. இதனை பெற வி ஆப் அல்லது 121249 என்ற எண்ணிற்கு டயல் செய்ய வேண்டும்.
- விவோ நிறுவனம் ஏற்கனவே அறித்தப்படி தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
- புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை முதற்கட்டமாக சீன சந்தையில் நடைபெற இருக்கின்றன.
விவோ நிறுவனம் தனது X ஃபோல்டு 2 மற்றும் X ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களிலும் 120Hz AMOLED மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன.
விவோ X ஃபோல்டு2 மாடலில் உலகின் முதல் 8.03 இன்ச் 2K+ ஸ்கிரீன், 6.53 இன்ச் 1080 பிக்சல் வெளிப்புறம் E6 AMOLED LTPO ஸ்கிரீன்கள், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கிரீனில் SCHOTT UTG கிளாஸ் கவர் மற்றும் 3டி அல்ட்ராசோனிக் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இதில் உள்ள ஹிஞ்ச் மிகவும் குறைந்த எடை கொண்டிருப்பதோடு, அதிக உறுதியானது என விவோ தெரிவித்து இருக்கிறது.
முந்தைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மாடலின் தடிமன் 2mm வரையிலும், எடை 33 கிராம் வரை குறைந்திருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனினை மடிக்கும் திறன், அதன் முந்தைய வெர்ஷனை விட 33 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போனை அதிகபட்சம் 4 லட்சம் முறை மடிக்க முடியும்.

விவோ X ஃபோல்டு 2 அம்சங்கள்:
8.03 இன்ச் 2160x1916 பிக்சல் 2K+ E6 AMOLED LTPO டிஸ்ப்ளே
1-120Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+, டால்பி விஷன், 1800 நிட்ஸ் பிரைட்னஸ்
6.53 இன்ச் 2520x1080 பிக்சல் FHD+ E6 AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ 740 GPU
12 ஜிபி ரேம்
256 ஜிபி / 512 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆரிஜின் ஒஎஸ் 3
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
12MP அல்ட்ரா வைடு கேமரா
12MP போர்டிரெயிட் டெலிபோட்டோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
4800 எம்ஏஹெச் பேட்டரி
120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
50 வாட் வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
விவோ X ஃப்ளிப் மாடலில் 6.74 இன்ச் மடிக்கக்கூடிய 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED ஸ்கிரீன் மற்றும் UTG கிளாஸ், 3 இன்ச் வெளிப்புற ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12 ஜிபி ரேம், 50MP பிரைமரி கேமரா, 4400 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

விவோ X ஃப்ளிப் அம்சங்கள்:
6.74 இன்ச் 2520x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
3 இன்ச் 682x422 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
அட்ரினோ 730 GPU
12 ஜிபி ரேம்
256 ஜிபி / 512 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆரிஜின் ஒஎஸ் 3
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
12MP அல்ட்ரா வைடு கேமரா
32MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
5ஜி, 4ஜி வோல்ட்இ, வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
4400 எம்ஏஹெச் பேட்டரி
44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
விவோ X ஃபோல்டு2 ஸ்மார்ட்போன் ஷேடோ பிளாக், சீனா ரெட் மற்றும் அஸ்யுர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 8,999 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 07 ஆயிரத்து 455 என்று துவங்குகிறது.
புதிய விவோ X ஃப்ளிப் ஸ்மார்ட்போன் டைமண்ட் பிளாக், பர்பில் மற்றும் சில்க் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 5,999 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 71 ஆயிரத்து 640 என்று துவங்குகிறது. இரு மாடல்களின் முன்பதிவு சீனாவில் ஏற்கனவே துவங்கிவிட்டது. விற்பனை ஏப்ரல் 28 ஆம் தேதி சீனாவில் துவங்குகிறது.
- மும்பை பிகேசி ஸ்டோரை விட ஆப்பிள் சகெட் ஸ்டோர் அளவில் பாதியாக இருக்கிறது.
- ஆப்பிள் சகெட் விற்பனை மையத்தில் 70-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.
டெல்லியில் அமைக்கப்பட்ட முதல் ஆப்பிள் விற்பனை மையத்தினை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் திறந்து வைத்து, வாடிக்கையாளர்களை வரவேற்றார். டெல்லியின் செலக்ட் சிட்டிவாக் மாலில் இந்த விற்பனையகம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆப்பிள் ஸ்டோர் டெல்லியின் பல்வேறு கேட்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
சகெட் ஸ்டோர் என்று அழைக்கப்படும் டெல்லி ஆப்பிள் ஸ்டோர் மும்பையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பிகேசி ஸ்டோரை விட அளவில் சற்றே சிறியதாக இருக்கிறது. மும்பை பிகேசி ஸ்டோரை விட ஆப்பிள் சகெட் ஸ்டோர் அளவில் பாதியாகவே இருக்கிறது. இதற்கான வாடகையாக ஸ்டோரின் மொத்த விற்பனையில் ஒரு பகுதி அல்லது மாதம் ரூ. 40 லட்சம் என்று எந்த தொகை அதிகமாக இருக்கிறதோ அதனை ஆப்பிள் நிறுவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.

சகெட் விற்பனை மையத்தில் 70-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்கள் ஆப்பிள் சாதனங்கள் குறித்த செயல்முறை விளக்கம் பெற்று, முழு தகவல்களை அறிந்துள்ளனர். நாட்டின் 18 மாநிலங்களை சேர்த்து, இவர்கள் அனைவரும் அதிகபட்சம் 15 மொழிகளில் பேசும் திறன் கொண்டுள்ளனர்.
முன்னதாக ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது இந்தியாவில் முதலீடுகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக டிம் குக் தெரிவித்தார்.
2016 வாக்கில் இந்தியாவுக்கு வந்திருந்த டிம் குக் ஏழு ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் இந்தியா வந்துள்ளார். இந்த முறை ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை மையங்களை திறந்து வைக்க டிம் குக் இந்தியா வந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் நாட்டின் முதல் ஆப்பிள் விற்பனை மையத்தினை மும்பையில் டிம் குக் திறந்து வைத்தார்.
- ஒபன்ஏஐ நிறுவனத்தில் அதிக முதலீடு செய்ய இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது.
- தரவுகளை பயன்படுத்தியற்காக மைக்ரோசாப்ட் மீது வழக்கு தொடர எலான் மஸ்க் முடிவு.
டுவிட்டர் பயனர்களின் தரவுகளை கொண்டு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு பயிற்சி அளித்ததாக எலான் மஸ்க் மைக்ரோசாப்ட் மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சட்டவிரோதமாக டுவிட்டர் தரவுகளை பயன்படுத்தியற்காக மைக்ரோசாப்ட் மீது வழக்கு தொடரப் போவதாகவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
"அவர்கள் டுவிட்டர் தரவுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவுக்கு பயிற்சி அளித்துள்ளனர். வழக்கு தொடர்வதற்கான நேரம்," என்று எலான் மஸ்க் டுவிட் செய்துள்ளார்.

வொர்ட் மற்றும் எக்சல் போன்ற சேவைகளில் சாட்ஜிபிடி சார்ந்த ஏஐ ஒருங்கிணைக்கப்பட இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஜனவரி மாத வாக்கில் அறிவித்தது. இதோடு சாட்ஜிபிடி சேவையை உருவாக்கிய ஒபன்ஏஐ நிறுவனத்தில் அதிக முதலீடு செய்ய இருப்பதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் பயன்பாட்டுக்கு வந்த சாட்ஜிபிடி சேவை உலகளவில் பேசுபொருளாக மாறியது. பலர் சாட்ஜிபிடி சேவையை புகழ்ந்தும், பலர் இதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர். சாட்ஜிபிடி சேவை பயனர் சந்தேகங்களுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்கிறது.
- இவ்வாறு செய்த போது ஸ்மார்ட்போனில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு இருக்கிறது.
- வெடித்த ஸ்மார்ட்போன் பேட்டரியில் ஏதேனும் பிழை இருந்ததா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் மிகவும் அபாயகரமானவை ஆகும். ஸ்மார்ட்போன்கள் வெடிப்பது, தீப்பிடித்து எரிவது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த வரிசையில், உத்திர பிரதேச மாநிலத்தின் படௌன் மாவட்டத்தில் ஏற்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதில் ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் படௌன் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்த போது உயிரிழந்தார் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஸ்மார்ட்போனை சார்ஜ் ஏற்றிக் கொண்டிருக்கும் போதே, சிறுவன் அழைப்பில் பேசியிருக்கிறார். இவ்வாறு செய்த போது ஸ்மார்ட்போனில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு இருக்கிறது. மின்சாரம் சிறுவன் மீது பாய்ந்ததை அடுத்து திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். உடனே சிறுவனின் பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் வெடித்துச் சிதறிய ஸ்மார்ட்போன் எந்த பிராண்டு மற்றும் மாடல் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. மாறாக அது பெரிய பிராண்டு ஒன்றின் ஸ்மார்ட்போன் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் சிறுவன் இந்த ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் என இரண்டிற்கும் சேர்த்து ரூ. 20 ஆயிரம் கொடுத்து வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போன் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒன்று ஆகும்.

வெடித்துச் சிதறிய ஸ்மார்ட்போனின் பேட்டரியில் ஏதேனும் பிழை ஏற்பட்டு இருந்ததா அல்லது வேறு ஏதேனும் ஹார்டுவேர் கோளாறு ஏற்பட்டு இருந்ததா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும், மின்கசிவு காரணமாகவே சிறுவன் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்போன் பழைய மாடல் என்பதில், அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என தெரிகிறது.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்த நிலையில், பயன்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும். சார்ஜ் செய்யும் போது பயன்படுத்தினால், ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் சூடாகலாம். இதன் காரணமாக அவை வெடித்துச் சிதறும் அபாயம் உண்டு.
பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களில், சாதனம் அதிக சூடாவதை எச்சரிக்கை செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சமயங்களில் ஐபோன்கள் வெப்பத்தை குறைத்து, சாதாரன நிலைக்கு மாற சற்று நேரம் எடுத்துக் கொள்கின்றன.
- ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
- முன்னதாக மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ்-ஐ டிம் குக் சந்தித்தார்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படுவதை ஒட்டி ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். பிரதமர் மோடியின் 'தொழில்நுட்பத்தில் சாதகமான தாக்கம்' என்ற நோக்கத்தை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து முதலீடு செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்.
"சிறப்பான வரவேற்பு அளித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக்க நன்றி. இந்தியாவின் எதிர்காலத்தில் தொழில்நுட்பம் ஏற்படுத்தக்கூடிய சாதகமான தாக்கம் என்ற உங்களின் கனவை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். கல்வியில் துவங்கி, டெவலப்பர்கள் முதல் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் வரை , நாங்கள் நாடு முழுக்க வளர்ச்சி பெறவும், முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளோம்," என்று டிம் குக் தனது டுவிட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
"உங்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பல்வேறு துறை சார்ந்த கருத்துக்களை பகிர்ந்தது மற்றும் இந்தியாவில் அரங்கேறி வரும் தொழில்நுட்பம் சார்ந்த பரிமாற்றங்கள் குறித்து பேசியதும் மகிழ்ச்சியாக உள்ளது," என்று டிம் குக் டுவிட்டர் பதிவுக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் முன் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ்-ஐ சந்தித்தார்.
சமீபத்தில் தான் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் மும்பையில் திறக்கப்பட்டது. மும்பை விற்பனை மையத்தை திறந்து வைத்த டிம் குக் சில நிமிடங்கள் வரை வாயிலில் நின்றபடி வாடிக்கையாளர்களை கடைக்குள் வரவேற்றார்.
இதே போன்று டெல்லி விற்பனை மையத்திற்கும் டிம் குக் வாடிக்கையாளர்களை வரவேற்பார் என கூறப்படுகிறது. டெல்லியின் செலக்ட் சிட்டி மாலில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது விற்பனை மையம் நாளை திறக்கப்பட இருக்கிறது.
- இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய லேப்டாப் மாடல் அலுமினியம் அலாய் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது.
- புதிய இன்ஃபினிக்ஸ் லேப்டாப் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.
இன்ஃபின்க்ஸ் நிறுவனத்தின் புதிய இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இன்புக் Y1 பிளஸ் நியோ மாடலில் 15.6 இன்ச் FHD ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள், இண்டெல் செலரான் N5100 பிராசஸர், 8 ஜிபி +256 ஜிபி மற்றும் 8 ஜிபி + 512 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
இத்துடன் ஐஸ் ஸ்டார்ம் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது லேப்டாப் வெப்பமாவதை அதிகபட்சம் 4 டிகிரி வரை குறைக்கிறது. அலுமினியம் அலாய் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள இன்புக் Y1 பிளஸ் நியோ மாடல் 1.76 கிலோ எடை கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் 18.15mm அளவு தடிமனாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பேக்லிட் கீபோர்டு, ஆண்டி கிளேர் கிளாஸ் டச்பேட் மற்றும் மல்டி டச் சப்போர்ட், 45 வாட் டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் லேப்டாப்-ஐ ஒரு மணி நேரத்தில் 75 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும்.
இன்ஃபினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ அம்சங்கள்:
15.6 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே, 260 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
1.1 ஜிகாஹெர்ட்ஸ் இண்டெல் செலரான் N5100 குவாட் கோர் பிராசஸர்
இண்டெல் UHD கிராஃபிக்ஸ்
8 ஜிபி ரேம்
256 ஜிபி / 512 ஜிபி எஸ்எஸ்டி
விண்டோஸ் 11 ஹோம் எடிஷன்
2MP FHD வெப்கேமரா
வைபை 5, ப்ளூடூத் 5.1
2x USB 3.0, 1x HDMI 1.4, 1x USB C
மைக்ரோ எஸ்டி ஸ்லாட்
3.5mm ஹெட்போன் / மைக்ரோபோன் ஜாக்
2 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
40 வாட் ஹவர் பேட்டரி
45 வாட் பிடி டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
இன்ஃபினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ மாடல் சில்வர், புளூ மற்றும் கிரே என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 990 என்றும் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 22 ஆயிரத்த 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை ஆகும். விற்பனை ஏப்ரல் 26 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
- போக்கோ நிறுவனத்தின் புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
- கீக்பென்ச் டெஸ்டிங்கில் போக்கோ F5 ஸ்மார்ட்போன் 4236 புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது.
போக்கோ நிறுவனத்தின் புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்: போக்கோ F5 மற்றும் போக்கோ F5 ப்ரோ மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. போக்கோ இந்தியா தலைவர் ஹிமான்ஷூ டாண்டன் புதிய போக்கோ F5 சீரிஸ் மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் 23049PCD8I எனும் மாடல் நம்பர் கொண்ட போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த ஸ்மார்ட்போன் போக்கோ F5 இந்திய வேரியண்ட் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போனின் செயல்திறன் மற்றும் ஹார்டுவேர் விவரங்களும் தெரியவந்துள்ளது.

கீக்பென்ச் 5 டேட்டாபேஸ்-இல் போக்கோ F5 ஸ்மார்ட்போன் 23049PCD8I எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோர் டெஸ்டிங்கில் 1118 புள்ளிகளையும், மல்டி கோரில் 4236 புள்ளிகளையும் பெற்று அசத்தி இருக்கிறது. கீக்பென்ச் தகவல்களின் படி போக்கோ F5 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் பிராசஸர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிராசஸரில் ஒரு கோர் 2.92 ஜிகாஹெர்ட்ஸ்-லும், மூன்று கோர்கள் 2.50 ஜிகாஹெர்ட்ஸ்-லும், நான்கு கோர்கள் 1.80 ஜிகாஹெர்ட்ஸ்-ல் அதிவேகமாக இயங்கும் வகையில் கிளாக் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய போக்கோ F5 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI ஒஎஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தகவல்களின் படி புதிய போக்கோ F5 ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 12 டர்போ மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.
Photo Courtesy: Pricebaba






