என் மலர்
தொழில்நுட்பம்
- சோனி நிறுவனத்தின் புதிய 4K ஸ்மார்ட் டிவி மாடல்கள் இருவித அளவுகளில் கிடைக்கின்றன.
- புதிய சோனி 4K ஸ்மார்ட் டிவி மாடல்கள் X ரியாலிட்டி ப்ரோ தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் 4K ரெசல்யூஷன் கொண்ட டாப் எண்ட் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய சோனி பிரேவியா X70L சீரிஸ், பிரேவியா X75L 4K டிவி மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பிரேவியா X70L டிவி சீரிஸ் மாடல்களில் மெல்லிய பெசல், அழகிய ஸ்டாண்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் X1 4K பிக்சர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இது தலைசிறந்த வீடியோக்களை பிரதிபலிக்கிறது. இதில் உள்ள பிஎஸ்5 சப்போர்ட் தலைசிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிவி 4K X ரியாலிட்டி ப்ரோ தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த டிவி கூகுள் டிவி ஒஎஸ், ஆப்பிள் ஹோம் கிட், ஏர்பிளே கொண்டுள்ளது. இதில் உள்ள 20 வாட் ஒபன் பேஃபில் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ தொழில்நுட்பம் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

இத்துடன் வழங்கப்படும் டிவி ரிமோட் வாய்ஸ் சார்ந்த அம்சங்கள், ஆறு செயலிகளுக்கான ஹாட்கீ கொண்டிருக்கிறது. இத்துடன் X70L மாடலில் X ப்ரோடெக்ஷன் ப்ரோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
சோனி பிரேவியா X70L அம்சங்கள்:
4K அல்ட்ரா ஹெச்டி 3840x2160 பிக்சல் ஸ்கிரீன்
X1 4K பிராசஸர், 4K HDR, லைவ் கலர், 4K X ரியாலிட்டி ப்ரோ
3x HDMI போர்ட்கள், 1x USB போர்ட்
20 வாட் ஆடியோ அவுட்புட், ஒபன் பேஃபில் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ
கூகுள் டிவி, கூகுள் பிளே, க்ரோம்காஸ்ட் சப்போர்ட்
வாய்ஸ் வசதி கொண்ட ரிமோட்
வாட்ச்லிஸ்ட், வாய்ஸ் சர்ச் மற்றும் பிஎஸ்5 சப்போர்ட்
ஆப்பிள் ஏர்பிளே, ஆப்பிள் ஹோம்கிட் மற்றும் அலெக்சா
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சோனி X70L 4K 43 இன்ச் மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 990
சோனி X70L 4K 50 இன்ச் மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900
அறிமுக சலுகையாக 43 இன்ச் X70L ஸ்மார்ட் டிவி மாடல் ரூ. 47 ஆயிரத்து 490 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி விற்பனை அனைத்து சோனி செண்டர்கள், முன்னணி மின்சாதன பொருட்கள் விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் நடைபெறுகிறது.
- போக்கோ நிறுவனத்தின் புதிய F5 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 பிராசஸர் கொண்டுள்ளது.
- தோற்றத்தில் புதிய போக்கோ F5 மாடல் ரெட்மி நோட் 12 டர்போ போன்றே காட்சியளிக்கிறது.
பல்வேறு டீசர்களை தொடர்ந்து போக்கோ நிறுவனம் தனது போக்கோ F5 ஸ்மார்ட்போனை மே 9 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 பிராசஸர் கொண்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை போக்கோ F5 பெற இருக்கிறது.
முந்தைய போக்கோ F4 மாடலில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய டீசர்களின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் தோற்றத்தில் ரெட்மி நோட் 12 டர்போ போன்றே காட்சியளிக்கிறது. சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது.
சர்வதேச சந்தையில் போக்கோ நிறுவனம் புதிய F5 ஸ்மார்ட்போனுடன் போக்கோ F5 ப்ரோ மாடலையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. போக்கோ F5 ப்ரோ மாடல் ரெட்மி K60 ஸ்மார்ட்போனின் சர்வதேச வேரியண்ட் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
போக்கோ F5 மாடலில் 6.67 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன், F5 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் 2K 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்கப்படும் என்று தெரிகிறது. இரு மாடல்களிலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, F5 மாடலில் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், F5 ப்ரோ மாடலில் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
- நாய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.46 இன்ச் AMOLED ஸ்கிரீன் மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் கொண்டிருக்கிறது.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரக்கட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ்ஃபிட் ஃபோர்ஸ் பிளஸ் என்று அழைக்கப்படுகிறது. நாய்ஸ் கலர்ஃபிட் விவிட் கால் மாடலை தொடர்ந்து புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
ரக்கட் டிசைன் கொண்டிருக்கும் நாய்ஸ்ஃபிட் ஃபோர்ஸ் பிளஸ் மாடல் மிக கடுமையான வெளிப்புற சூழல்களை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த வாட்ச் 1.46 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 466x466 பிக்சல் ரெசல்யூஷன், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் ப்ளூடூத் 5, ட்ரூசின்க் தொழில்நுட்பம் மற்றும் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது.

ப்ளூடூத் காலிங் வசதியுடன் அதிகபட்சம் ஐந்து அழைப்புகளை ஸ்டோர் செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. இத்துடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, நீண்ட நேர பேட்டரி பேக்கப், நாய்ஸ் ஹெல்த் சூட், SPO2, ஹார்ட் ரேட் போன்ற சென்சார்களை கொண்டிருக்கிறது.
நாய்ஸ்ஃபிட் ஃபோர்ஸ் பிளஸ் அம்சங்கள்:
1.46 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 446x446 பிக்சல் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே
கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்
ஸ்போர்ட் மற்றும் ரக்கட் டிசைன்
ப்ளூடூத் 5
ப்ளூடூத் காலிங் வசதி
ஹார்ட் ரேட், அக்செல்லோமீட்டர், SPO2 சென்சார்
ஏழு நாட்களுக்கான பேட்டரி லைஃப்
நாய்ஸ் ஹெல்த் சூட்: SPO2, ஹார்ட் ரேட், ஸ்லீப், ஸ்டெப் டிராக்கிங்
150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்
நாய்ஸ்ஃபிட் ஆப்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நாய்ஸ்ஃபிட் ஃபோர்ஸ் பிளஸ் மாடலின் விலை அறிமுக சலுகையாக குறுகிய காலத்திற்கு ரூ. 3 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 1 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் நாய்ஸ் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக், மிஸ்ட் கிரே மற்றும் டியல் புளூ என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.
- விவோ நிறுவனத்தின் புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் பிராசஸர் கொண்டுள்ளன.
- விவோ X90 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளன.
விவோ நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் X90 மற்றும் X90 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடல்களில் 6.78 இன்ச் 120Hz FHD+ AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 9200 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. விவோ X90 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 12MP 2X போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய விவோ X90 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமரா, OIS, 12MP IMX663 சென்சார், 50MP 50mm IMX758 2X போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. விவோ X90 மற்றும் X90 ப்ரோ மாடல்களில் முறையே 4810 எம்ஏஹெச் மற்றும் 4870 எம்ஏஹெச் பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளன.

விவோ X90 மற்றும் X90 ப்ரோ அம்சங்கள்:
6.78 இன்ச் 2800x1260 பிக்சல் FHD+ BOE Q9 OLED HDR10+, 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
3.05 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 பிராசஸர்
இம்மார்டலிஸ் G715 GPU
8 ஜிபி, 12 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ்13
டூயல் சிம் ஸ்லாட்
X90 - 50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP போர்டிரெயிட் கேமரா
X90 ப்ரோ - 50MP போர்டிரெயிட் கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்
12MP அல்ட்ரா வைடு கேமரா
50MP 2x போர்டிரெயிட் கேமரா
32MP செல்ஃபி கேமரா
இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், CS4131 Hi-Fi சிப் (X90 ப்ரோ மாடலில் மட்டும்)
X90 ப்ரோ - டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி 3.2 ஜென் 1
X90 - 4810 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
X90 ப்ரோ - 4870 எம்ஏஹெச் பேட்டரி
120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
விவோ X90 மாடல் ஆஸ்டிராய்ட் பிளாக் மற்றும் பிரீஸ் புளூ மற்றும் ஃபுளோரைட் ஏஜி கிளாஸ் பேக் நிறங்களில் கிடைக்கிறது. விவோ X90 ப்ரோ மாடல் லெஜண்டரி பிளாக் மற்றும் லெதர் லைட் பேக் நிறத்தில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் விவோ X90 மாடலின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 63 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவோ X90 ப்ரோ மாடலின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 84 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இரு ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி விவோ இந்தியா இஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது. விற்பனை மே 5 ஆம் தேதி துவங்க இருக்கிறது. அறிமுக சலுகையாக புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோர் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி மற்றும் ஐடிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
- பயனர்கள் அதிக சாதனங்களில் தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்தலாம்.
- லின்க் செய்யப்பட்ட போன் ஒவ்வொன்றும் தனித்தனியே வாட்ஸ்அப் உடன் இணைந்திருக்கும்.
வாட்ஸ்அப் செயலியில் கடந்த ஆண்டு கம்பானியன் மோட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு பயனர்கள் தங்களின் அக்கவுண்டை இரண்டாவதாக மற்றொரு சாதனத்தில் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டது. முன்னதாக இம்மாத துவக்கத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் மேலும் அதிக போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயனர்கள் அதிக சாதனங்களில் தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்தலாம். அதாவது ஒரே மொபைல் நம்பர் கொண்ட வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ அதிகபட்சம் நான்கு சாதனங்களில் பயன்படுத்த முடியும்.

லின்க் செய்யப்பட்ட போன் ஒவ்வொன்றும் தனித்தனியே வாட்ஸ்அப் உடன் இணைந்திருக்கும். இதன் காரணமாக மெசேஞ்ச், மீடியா, அழைப்புகள் என அனைத்துமே எண்ட்-டு-எண்ட் என்க்ர்பிட் செய்யப்படுகிறது. எனினும், உங்களின் பிரைமரி சாதனம் 14 நாட்களுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படவில்லை எனில், மற்ற சாதனங்களில் இருந்து வாட்ஸ்அப் தானாக லாக் அவுட் செய்யப்பட்டு விடும்.
விரைவில் புதிய வசதி:
தற்போது வாட்ஸ்அப் கியூஆர் கோட் மூலம் பிரைமரி சாதனத்தில் இருந்து மற்றொரு சாதனத்தில் வாட்ஸ்அப்-ஐ இணைக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
வரும் வாரங்களில், வாட்ஸ்அப் வெப் தளத்தில் உங்களின் மொபைல் நம்பரை பதிவிட்டு அதன் பின் மொபைல் நம்பருக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் கொண்டு எளிமையாக லின்க் செய்துவிட முடியும். எதிர்காலத்தில் இந்த அம்சத்தில் பயன்படுத்தக்கூடிய சாதனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது.
தற்போது புதிய அம்சம் உலகளவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
- வி ரூ. 549 சலுகை பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டா, 180 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
- வி ரூ. 368 மற்றும் ரூ. 369 விலை சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், பிரீபெயிட் சலுகை பலன்களில் அதிகளவு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதுதவிர புதிய பிரீபெயிட் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்த வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வி ரூ. 549 சலுகை மொத்தத்தில் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.
அதிக பலன்களுக்கு மாற்றாக நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வகையில், இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் தான் வி நிறுவனம் ரூ. 368 மற்றும் ரூ. 369 விலையில் சலுகைகளை அறிவித்தது. இதைத் தொடர்ந்து தற்போது நீண்ட கால வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

வி ரூ. 549 சலுகை பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டா, 180 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. 1 ஜிபி தவிர்த்து கூடுதல் டேட்டா வேண்டுமெனில் பயனர்கள் மற்ற டேட்டா வவுச்சர்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் பலன்கள் வழங்கப்படவில்லை என்பதால், அழைப்புகளுக்கான கட்டணம் நொடிக்கு 2.5 பைசா என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவைதவிர இந்த சலுகையில் எஸ்எம்எஸ் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. வி சிம் கார்டை இரண்டாவது இணைப்பாக பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும். முந்தைய ரூ. 368 மற்றும் ரூ. 369 விலை சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இவை தவிர ஒடிடி பலன்களும் வழங்கப்படுகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர் கொண்டுள்ளது.
- இந்திய சந்தையில் இந்த பிராசஸர் உடன் அறிமுகமாகி இருக்கும் முதல் டேப்லெட் இது ஆகும்.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் டேப்லெட்- ஒன்பிளஸ் பேட் விலையை அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு, விற்பனை தேதி மற்றும் சலுகைகள் பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளது.
புதிய ஒன்பிளஸ் பேட் மாடலில் 11.61 இன்ச் 144Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, டல்பி விஷன், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர், டால்பி அட்மோஸ் சப்போர்ட், நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் 9150 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
இந்திய சந்தையில் ஒன்பிளஸ் பேட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 37 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் முன்பதிவு அமேசான், ப்ளிப்கார்ட், ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர், ஆஃப்லைன் ஸ்டோர்கள், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ரிலையன்ஸ் மற்றும் க்ரோமா ஸ்டோர்களில் ஏப்ரல் 28 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. விற்பனை மே 2 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

அறிமுக சலுகைகள்:
ஒன்பிளஸ் பேட் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள், மாத தவணை முறை பரிவர்த்தனை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மாதம் ரூ. 3 ஆயிரத்து 166 வீதம் அதிகபட்சம் 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ், அமேசான், ப்ளிப்கார்ட், தேர்வு செய்யப்பட்ட ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ரிலையன்ஸ் மற்றும் க்ரோமா ஸ்டோர்களில் முன்பதிவு செய்யும் போது ரூ. 1499 மதிப்புள்ள ஃபோலியோ கேஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. முன்பதிவு ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்குகிறது.
ஒன்பிளஸ் எக்சேஞ்ச் சலுகையின் கீழ் பழைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆர்சிசி லின்க்டு சாதனம் வைத்திருப்போருக்கு ரூ. 2 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை இன்று (ஏப்ரல் 25) முதல் குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் பேட் அம்சங்கள்:
11.6 இன்ச் 2800x2000 பிக்சல் டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் 9000 பிராசஸர்
அதிகபட்சம் 12 ஜிபி ரேம்
5ஜி கனெக்டிவிட்டி
குவாட் ஸ்பீக்கர்கள்
டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ்
9510 எம்ஏஹெச் பேட்டரி
67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- விவோ நிறுவனத்தின் புதிய Y78+ 5ஜி ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
- புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் கொண்டிருக்கிறது.
விவோ நிறுவனம் தனது புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன்: Y78+ மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய Y78+ மாடலில் 6.78 இன்ச் Full HD+ 120Hz AMOLED வளைந்த ஸ்கிரீன், 8MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ Y78+ 5ஜி அம்சங்கள்:
6.78 இன்ச் 2400x1080 பிக்சல் Full HD + AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
அட்ரினோ 619L GPU
8 ஜிபி, 12 ஜிபி ரேம்
128 ஜிபி, 256 ஜிபி மெமரி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆரிஜின் ஒஎஸ் 3
50MP பிரைமரி கேமரா
2MP டெப்த் சென்சார்
8MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை 6
ப்ளூடூத் 5.2
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
விவோ Y78+ 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு மற்றும் புளூ என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1599 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரம் என்று துவங்குகிறது. சீன சந்தையில் இதன் விற்பனை ஏப்ரல் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
- சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடல் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல்.
- புதிய கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி Z ஃப்ளிப் 5 ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி புதிய கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடல் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் தாக்கத்திற்கு சவால் விடும் வகையில் மேம்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் ஸ்மார்ட்போன் லாக் ஸ்கிரீனில் நேரம், விட்ஜெட்கள் மற்றும் வால்பேப்பரை குறைந்த பிரைட்னசில் காண்பிக்கும்.
கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் இந்த ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் வழங்கப்பட்டது. இந்த அம்சம் குறைந்தபட்சம் 1Hz ரிப்ரெஷ் ரேட்டில் இயங்கும். இதன் காரணமாக லோ-பவர் மோடிலும் இந்த அம்சம் இயங்கும். பயனர் ஸ்மார்ட்போனை லாக் அல்லது அப்படியே வைத்தல், சிறிது நேரத்தில் இந்த அம்சம் லாக் ஸ்கிரீன் வால்பேப்பர் பிரைட்னசை குறைத்து நேரம், கடிகாரம் அல்லது எந்த விட்ஜெட்டையும் காண்பிக்கும்.
ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே மோட் மூலம் பயனர்கள் வால்பேப்பரை மறைத்துக் கொண்டு, நோட்டிஃபிகேஷன்களை செயலிழக்க செய்யலாம். முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களில் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலில் 25 வாட் வயர்டு சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்றும் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்றுவித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.
- ஆப்பிள் ஸ்டோர் பணியாளர்களில் சிலர் சர்வதேச பல்கலைக்கழகங்களில் படித்துள்ளனர்.
- பணியாளர்களின் வேலை நேரம் வியாபார நேரங்களை பொருத்து வேறுப்படும்.
ஆப்பிள் நிறுவனம் தனது முதல் நேரடி விற்பனை மையங்களை மும்பை மற்றும் டெல்லி பகுதிகளில் கடந்த வாரம் திறந்தது. இரு ஸ்டோர்களிலும் கூட்டாக சேர்த்து மொத்தத்தில் 170 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அதிகபட்சம் 15 மொழிகளில் பேசக்கூடியவர்கள் ஆவர். இந்திய ஆப்பிள் ஸ்டோர்களில் பணியாற்றுவோர் பெரும்பாலும் எம்பிஏ, பி டெக், பிஎஸ்சி போன்ற பட்டப்படிப்பு முடித்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இவர்களில் சிலருக்கு மாதம் ரூ. 1 லட்சம் வரையிலான சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மற்ற மின்சாதன ஸ்டோர்களில் பணியாற்றி வரும் நிர்வாக அதிகாரிகள் வாங்கும் சம்பளத்தை விட இது மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகம் ஆகும். ஆப்பிள் ஸ்டோர் பணியாளர்களில் சிலர் சர்வதேச பல்கலைக்கழகங்களில் படித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

சில பணியாளர்கள் வெளிநாடுகளில் இயங்கி வரும் ஆப்பிள் ஸ்டோர்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளனர். இந்திய ஸ்டோர்களில் பணியாற்ற மேலும் சிலருக்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பணியாளர்களின் வேலை நேரம் வியாபார நேரங்களை பொருத்து வேறுப்படும்.
மும்பை மற்றும் டெல்லியில் துவங்கப்பட்டு இருக்கும் ஆப்பிள் ஸ்டோர்களை ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் திறந்து வைத்தார். ஸ்டோர்களை திறந்து வைத்ததோடு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு மத்திய மந்திரிகளை டிம் குக் சந்தித்து பேசினார்.
- கேலக்ஸி S20 FE மாடலை ரூ. 29 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.
- பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பிரீமியம் அல்லது மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் வாங்குவது பற்றிய திட்டம், அதற்கான பட்ஜெட் விஷயத்தில் பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தும். அந்த வகையில், பிரீமியம் மாடல்களின் மீது அதிக சலுகைகள் அல்லது தள்ளுபடி அறிவிக்கப்படும் போது அதுபற்றிய தகவல் வேகமாக பரவுவது இயல்பான காரியம் தான். அந்த வரிசையில், அமேசான் வலைதளத்தில் சாம்சங் கேலக்ஸி S20 FE மாடலுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி ரூ. 74 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S20 FE மாடலை அமேசான் வலைதளத்தில் தற்போது ரூ. 4 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி S20 FE மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 74 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த வேரியண்டிற்கு குறுகிய கால சலுகையாக 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக கேலக்ஸி S20 FE விலையில் ரூ. 45 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இதற்காக பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யவோ அல்லது குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. குறுகிய கால தள்ளுபடி சேர்த்து கேலக்ஸி S20 FE மாடலை ரூ. 29 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.
விலை குறைப்பு தவிர பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையை பெற ஸ்மார்ட்போன் சீராக இயங்கும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். அனைத்து ஸ்மார்ட்போனிற்கும் ஒரே மாதிரியான மதிப்பு வழங்கப்படாது. ஒவ்வொரு ஸ்மார்ட்போனின் மறுமதிப்பீடு பொருத்து அதற்கான விலை வேறுப்படும்.
எக்சேஞ்ச் சலுகையில் முழு தள்ளுபடியை பெறும் பட்சத்தில் சாம்சங் கேலக்ஸி S20 FE மாடலை ரூ. 4 ஆயிரத்து 999 விலையிலே வாங்கிட முடியும். இதன் மூலம் அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் சேமிக்கலாம்.
அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி S20 FE 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 8MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
- ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 200MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல்.
- இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ரியல்மி நிறுவனம் முற்றிலும் புதிய மிட்-பிரீமியம் ரேஞ்ச் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 12 சீரிசுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்கள்- ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மற்றும் ரியல்மி 11 ப்ரோ பெயர்களில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
இதனிடையே ரியல்மி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தனது வெய்போ அக்கவுண்டில் புதிய ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமரா பிரத்யேகமாக மூன் மோட் அம்சம் கொண்டிருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார். ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலில் இந்த அம்சம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இணையத்தில் வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் டெலிபோட்டோ கேமரா கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் ஜூம் அம்சம் பெற இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இது, சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் கேலக்ஸி S சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் ஸ்பேஸ் ஜூம் அம்சத்திற்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. சாம்சங் இந்த அம்சத்தினை கேலக்ஸி S21 மாடலில் இருந்து வழங்கி வருகிறது.
ரியல்மி ஸ்மார்ட்போனில் இந்த அம்சம் எப்படி இயங்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலில் இதற்காக பிரத்யேக டெலிபோட்டோ கேமரா வழங்கப்படும் என்றும் கூடுதலாக மென்பொருள் அப்டேட்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலில் 6.7 இன்ச் Full HD+ 120Hz டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி வழங்கப்படலாம். இத்துடன் 200MP பிரைமரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, அதிகபட்சம் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
சீன வெளியீட்டை தொடர்ந்து புதிய ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும். இந்திய சந்தையில் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரியல்மி 11 ப்ரோ பிளஸ் இந்தியாவில் அறிமுகமாகும் பட்சத்தில் அதன் விலை ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
Photo Courtesy: Weibo / Ice Universe






