search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இந்தியாவிலேயே முதல் முறை - விசேஷ பிராசஸருடன் அறிமுகமாகும் போக்கோ F5
    X

    இந்தியாவிலேயே முதல் முறை - விசேஷ பிராசஸருடன் அறிமுகமாகும் போக்கோ F5

    • போக்கோ நிறுவனத்தின் புதிய F5 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 பிராசஸர் கொண்டுள்ளது.
    • தோற்றத்தில் புதிய போக்கோ F5 மாடல் ரெட்மி நோட் 12 டர்போ போன்றே காட்சியளிக்கிறது.

    பல்வேறு டீசர்களை தொடர்ந்து போக்கோ நிறுவனம் தனது போக்கோ F5 ஸ்மார்ட்போனை மே 9 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 பிராசஸர் கொண்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை போக்கோ F5 பெற இருக்கிறது.

    முந்தைய போக்கோ F4 மாடலில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய டீசர்களின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் தோற்றத்தில் ரெட்மி நோட் 12 டர்போ போன்றே காட்சியளிக்கிறது. சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது.

    சர்வதேச சந்தையில் போக்கோ நிறுவனம் புதிய F5 ஸ்மார்ட்போனுடன் போக்கோ F5 ப்ரோ மாடலையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. போக்கோ F5 ப்ரோ மாடல் ரெட்மி K60 ஸ்மார்ட்போனின் சர்வதேச வேரியண்ட் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    போக்கோ F5 மாடலில் 6.67 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன், F5 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் 2K 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்கப்படும் என்று தெரிகிறது. இரு மாடல்களிலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, F5 மாடலில் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், F5 ப்ரோ மாடலில் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×