search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NoiseFit"

    • நாய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.46 இன்ச் AMOLED ஸ்கிரீன் மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் கொண்டிருக்கிறது.

    நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரக்கட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ்ஃபிட் ஃபோர்ஸ் பிளஸ் என்று அழைக்கப்படுகிறது. நாய்ஸ் கலர்ஃபிட் விவிட் கால் மாடலை தொடர்ந்து புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.

    ரக்கட் டிசைன் கொண்டிருக்கும் நாய்ஸ்ஃபிட் ஃபோர்ஸ் பிளஸ் மாடல் மிக கடுமையான வெளிப்புற சூழல்களை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த வாட்ச் 1.46 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 466x466 பிக்சல் ரெசல்யூஷன், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் ப்ளூடூத் 5, ட்ரூசின்க் தொழில்நுட்பம் மற்றும் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது.

     

    ப்ளூடூத் காலிங் வசதியுடன் அதிகபட்சம் ஐந்து அழைப்புகளை ஸ்டோர் செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. இத்துடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, நீண்ட நேர பேட்டரி பேக்கப், நாய்ஸ் ஹெல்த் சூட், SPO2, ஹார்ட் ரேட் போன்ற சென்சார்களை கொண்டிருக்கிறது.

    நாய்ஸ்ஃபிட் ஃபோர்ஸ் பிளஸ் அம்சங்கள்:

    1.46 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 446x446 பிக்சல் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே

    கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்

    ஸ்போர்ட் மற்றும் ரக்கட் டிசைன்

    ப்ளூடூத் 5

    ப்ளூடூத் காலிங் வசதி

    ஹார்ட் ரேட், அக்செல்லோமீட்டர், SPO2 சென்சார்

    ஏழு நாட்களுக்கான பேட்டரி லைஃப்

    நாய்ஸ் ஹெல்த் சூட்: SPO2, ஹார்ட் ரேட், ஸ்லீப், ஸ்டெப் டிராக்கிங்

    150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்

    நாய்ஸ்ஃபிட் ஆப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நாய்ஸ்ஃபிட் ஃபோர்ஸ் பிளஸ் மாடலின் விலை அறிமுக சலுகையாக குறுகிய காலத்திற்கு ரூ. 3 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 1 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் நாய்ஸ் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக், மிஸ்ட் கிரே மற்றும் டியல் புளூ என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    ×