என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 7a ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • ப்ளிப்கார்ட் தளத்தில் பிக்சல் 7 மற்றும் 7 ப்ரோ மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக் சேவிங் டேஸ் சேல் பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனை இந்த வாரம் துவங்க இருக்கிறது. இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கு அசத்தல் தள்ளுபடி, கேஷ்பேக் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படவுள்ளன. இதில் பயனர்கள் வாங்கும் பொருட்களின் மீது அதிக சேமிப்புகளை பெற முடியும். இந்த நிலையில், சிறப்பு விற்பனை துவங்கும் முன்பே பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் 7 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 84 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் விலை ரூ. 69 ஆயிரத்து 999 என்று ப்ளிப்கார்ட் தளத்தில் மாறி இருக்கிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போதும், மாத தவணை முறையை பயன்படுத்தும் போது அதிகபட்சம் பத்து சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     

    இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 28 ஆயிரத்து 250 வரையிலான தள்ளுபடி பெற முடியும். மே 4 ஆம் தேதி துவங்கும் சிறப்பு விற்பனையின் போது பிக்சல் 7 ப்ரோ மாடல் ரூ. 65 ஆயிரத்து 999 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கும். இதில் எக்சேஞ்ச் மற்றும் வங்கி சலுகைகளும் அடங்கும். பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது.

    பிக்சல் 7 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ. 69 ஆயிரத்து 999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருப்பதை அடுத்து பயனர்கள் இதனை ரூ. 44 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். இதில் தள்ளுபடி, வங்கி சலுகைகள் மற்றும் எக்சேஞ்ச் சலுகைகளும் அடங்கும். பிக்சல் 7 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது. 

    • கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் 64MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
    • முந்தைய பிக்சல் 6a மாடலின் விலை இந்தியாவில் ரூ. 43 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே மே 10 ஆம் தேதி நடைபெறும் கூகுள் I/O 2023 நிகழ்வில் வைத்து சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் இந்திய வெளியீடு மே 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நாளில் இதன் விலை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய பிக்சல் 7a ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் முந்தைய பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

     

    இதன் இந்திய விலை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், டிப்ஸ்டர் பரஸ் குக்லானி வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பிக்சல் 7a மாடலின் விலை ரூ. 35 ஆயிரத்தில் துவங்கும் என்றும் இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 39 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய பிக்சல் 6a மாடலின் விலை இந்தியாவில் ரூ. 43 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    கூகுள் பிக்சல் 7a எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், கூகுள் நிறுவனத்தின் டென்சார் G2 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 64MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10.8MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 4400 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது.

    புதிய பிக்சல் 7a மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படலாம். அந்த வகையில் புதிய பிக்சல் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்கள், சக்திவாய்ந்த பிராசஸர், அதிகளவு ரேம் மற்றும் மெமரி, தலைசிறந்த கேமரா மற்றும் நீண்ட நேர பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • பீட்டா டெஸ்டர்கள் மற்றும் டெவலப்பர்கள் மட்டுமின்றி இந்த அப்டேட் பொது மக்களுக்கும் வெளியிடப்பட்டு வருகிறது.
    • ஐஒஎஸ் 16.4.1 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.4.1 வெர்ஷன்களுக்கு இந்த ஆர்எஸ்ஆர் அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதல் முறை காரியம் ஒன்றை செய்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக ரேபிட் செக்யுரிட்டி ரெஸ்பான்ஸ் (ஆர்எஸ்ஆர்) அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பீட்டா டெஸ்டர்கள் மற்றும் டெவலப்பர்கள் மட்டுமின்றி இந்த அப்டேட் பொது மக்களுக்கும் வெளியிடப்பட்டு வருகிறது.

    ஐஒஎஸ் 16.4.1 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.4.1 வெர்ஷன்களுக்கு இந்த ஆர்எஸ்ஆர் அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த அப்டேட் வெளியிடப்பட்டுவிடும். ஆர்எஸ்ஆர் அப்டேட்டை வெற்றிகரமாக இன்ஸ்டால் செய்த பின் உங்களது ஐபோன் அல்லது ஐபேட்-இன் அபௌட் பகுதியில் ஐஒஎஸ் 16.4.1 (a) அல்லது ஐபேட் ஒஎஸ் 16.4.1 (a) என்று காண்பிக்கப்படும்.

     

    ஆர்எஸ்ஆர் அப்டேட்கள் தானாகவே உங்களின் சாதனங்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டு விடும். இதுபோன்ற அப்டேட்கள் அனைத்திற்கும் சாதனம் ரிஸ்டார்ட் ஆகாது. ஆனாலும் சில சாதனங்கள் ரிஸ்டார்ட் ஆகலாம். அப்டேட் இன்ஸ்டால் செய்யப்பட்டதும், ரிஸ்டார்ட் செய்யக் கோரும் ஆப்ஷன் திரையில் தோன்றும். ஆர்எஸ்ஆர் அப்டேட்கள் தானாக இன்ஸ்டால் ஆவதை தடுப்பதற்கான வசதி செட்டிங்ஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆனால், இவ்வாறு செய்வது பரிந்துரைக்கப்படாத ஒன்றாகும். ஆர்எஸ்ஆர் அப்டேட்கள் மூலம் மிகமுக்கிய செக்யுரிட்டி மேம்படுத்தல்கள் வழங்கப்படும். இதுபோன்ற அப்டேட் பாதுகாப்பு எச்சரிக்கைகள் அல்லது செக்யுரிட்டி சார்ந்த பிரச்சினைகளை விரைந்து சரிசெய்யும் நோக்கில் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சாதனத்தின் பாதுகாப்பு கருதி இந்த அம்சம் செயல்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதே சிறந்தது.

    இன்றைய ஆர்எஸ்ஆர் அப்டேட் சில நிமிடங்களில் டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் ஆகிவிடும். இந்த அப்டேட் இன்ஸ்டால் செய்தபின் சாதனம் ரிஸ்டார்ட் ஆகும். சமீபத்திய ஐஒஎஸ் மற்றும் ஐபேட் ஒஎஸ் கொண்ட சாதனங்களில் மட்டுமே ஆர்எஸ்ஆர் அப்டேட் வழங்கப்படும்.

    Photo Courtesy: 9To5Mac

    • டெம்ப்ட் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் 10mm ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது.
    • இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது.

    ஆடியோ தொழில்நுட்ப நிறுவனமான டெம்ப்ட் இந்திய சந்தையில் தனது புதிய நெக்பேண்ட் - டெம்ப்ட் ரஷ் மாடலை அறிமுகம் செய்தது. குவால்காம் நிறுவனத்தின் CSR 8635 சிப்செட் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் முதல் இயர்போன் எனும் பெருமையை புதிய டெம்ப்ட் ரஷ் மாடல் பெற்று இருக்கிறது. இந்த சிப்செட் தலைசிறந்த ஆடியோ மற்றும் மேம்பட்ட பயனர் அனுபவத்தை வழங்குகிறது.

    டெம்ப்ட் ரஷ் நெக்பேண்ட் இயர்போனில் காப்பர் ரிங் மற்றும் 20Hz-20KHz வரையிலான ரெஸ்பான்ஸ் ரேஞ்ச் வழங்கும் 10mm ஸ்பீக்கர் உள்ளது. இது அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை வழங்குவதோடு, தெளிவான குரல்களை வெளிப்படுத்துகிறது. மேலும் ஆழமான பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. இந்த நெக்பேண்ட் இயர்போன் பயன்படுத்தும் போது சவுகரிய அனுபவத்தை வழங்குவதோடு அதிக தரமுள்ளதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     

    இந்த இயர்போன் IPX7 சான்று பெற்ற ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த இயர்போனை உடற்பயிற்சி செய்யும் போதும் எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்தலாம். புதிய டெம்ப்ட் ரஷ் மாடலில் உள்ள மல்டி-ஃபன்ஷன் பட்டன் கொண்டு பயனர்கள் இதனை இயக்க முடியும். இத்துடன் மைக்ரோ யுஎஸ்பி மூலம் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. மேலும் 120 மணி நேரத்திற்கு ஸ்டாண்ட் பை வழங்குகிறது. இத்துடன் வைப்ரேஷன் அலர்ட் அம்சம் இன்கமிங் அழைப்புகள், குறுந்தகவல் உள்ளிட்டவைகளுக்கு நோட்டிஃபிகேஷன் வழங்குகிறது.

     

     

    டெம்ப்ட் ரஷ் அம்சங்கள்:

    குவால்காம் CSR 8635 சிப்செட்

    10mm*2 டிரைவர்கள்

    ப்ளூடூத் 5.2

    வைப்ரேஷன் அலர்ட்

    பட்டன் கண்ட்ரோல்

    மைக்ரோ யுஎஸ்பி போர்ட்

    1.5 மணி நேரத்தில் சார்ஜ் செய்யும் வசதி

    35 மணி நேர பிளேபேக்

    120 மணி நேரத்திற்கு ஸ்டாண்ட் பை

    IPX7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    டெம்ப்ட் ரஷ் நெக்பேண்ட் இயர்போன் ஆலிவ், பிளாக் மற்றும் கிரே என்று மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 649 ஆகும். விற்பனை டெம்ப்ட் இந்தியா ஆன்லைன் வலைதளம் மற்றும் அமேசான், ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெறுகிறது.

    • புதிய அம்சம் ஸ்கிரீனை பிரித்து, பல்வேறு உரையாடல்களை ஒரே சமயத்தில் பயன்படுத்த வழி செய்கிறது.
    • உரையாடல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றின் அளவு குறைந்து கொண்டே வரும்.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு டேப்லெட் வெர்ஷனில் சைட்-பை-சைட் பெயரில் புதிய அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஏற்கனவே உள்ள சாட்களை திரையின் ஒருபகுதியில் வைத்துக் கொண்டு மேலும் அதிக சாட்களுக்கு பதில் அனுப்பவும், சாட் செய்யவும் உதவுகிறது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஸ்கிரீனில் பல்வேறு சாட்களை ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம்.

    புதிய அம்சம் ஸ்கிரீனை பிரித்து, பல்வேறு உரையாடல்களை ஒரே சமயத்தில் பயன்படுத்த வழி செய்கிறது. ஒரே சமயம் பலருக்கு குறுந்தகவல் அனுப்பும் வழக்கம் கொண்டிருப்போருக்கு இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். எனினும், இவ்வாறு செய்யும் போது உரையாடல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றின் அளவு குறைந்து கொண்டே வரும்.

     

    இந்த அம்சம் வேண்டாம் என்பவர்கள் அதனை டிசேபில் (செயலிழக்க) செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்ய வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- சாட்ஸ் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். புதிய அம்சத்திற்கான அப்டேட் தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    வரும் நாட்களில் அனைத்து பீட்டா பயனர்களுக்கும் இந்த அம்சம் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுதவிர வாட்ஸ்அப்-இல் மல்டி-டிவைஸ் லாக்-இன் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதை கொண்டு பயனர்கள் பல்வேறு சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்த முடியும். இந்த அம்சம் உலகளவில் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    Photo Courtesy: WABetaInfo

    • மெட்டாலிக் கேசிங் மற்றும் கிரவுன் ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ஃபயர் போல்ட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் - ஃபீனிக்ஸ் அல்ட்ரா பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஃபயர் போல்ட் ராக் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புதிய ஸ்மார்ட்வாட்ச் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஃபயர்-போல்ட் ஃபீனிக்ஸ் அல்ட்ரா மாடல் அழகிய தோற்றம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள வட்ட வடிவம் கொண்ட ஸ்கிரீன் 1.39 இன்ச் அளவில், 60Hz ரிப்ரெஷ் ரேட், 240x240 பிக்சல் ரெசல்யுஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் மிக உறுதியான ஸ்டீல் டிசைன், ஷாக் ப்ரூஃப் பொருட்களால் உருவாக்கப்பட்டு இருப்பதால், இந்த ஸ்மார்ட்வாட்ச் எளிதில் சேதமடையாது. இத்துடன் 120-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் காலிங் வசதி, வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

     

    மெட்டாலிக் கேசிங் மற்றும் கிரவுன் ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தை அழகாக வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 7 நாட்களுக்கான பேக்கப், 30 நாட்களுக்கான ஸ்டாண்ட்-பை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் மேம்பட்ட ஹெல்த் சூட் உள்ளது. இது ஹார்ட் ரேட் டிராக்கர், SpO2 டிராக்கர் மற்றும் ஸ்லீப் சைக்கிள் மாணிட்டர் போன்ற வசதிகளை வழங்குகிறது.

    இத்துடன் பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு ஸ்மார்ட்வாட்ச்-இல் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இத்துடன் ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்கள், தனித்துவ ரிமைண்டர்கள், வானிலை அப்டேட்களை பார்க்க முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

     

    ஃபயர்-போல்ட் ஃபீனிக்ஸ் அல்ட்ரா அம்சங்கள்:

    1.39 இன்ச் 240x240 பிக்சல், 60Hz டிஸ்ப்ளே

    கிளாஸ் கவர், ஸ்டீல் டிசைன் மற்றும் சுழலும் கிரவுன்

    ப்ளூடூத் காலிங் வசதி

    கால் ஹிஸ்டரி, குயிக் டயல் பேட், சின்க் காண்டாக்ட்

    இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்

    100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்

    ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    30 நாட்கள் ஸ்டாண்ட்பை

    ஃபயர்-போல்ட் ஹெல்த் சூட்

    IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்

    ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஃபயர்-போல்ட் ஃபீனிக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மே 1 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 1,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஃபயர்-போல்ட் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் புளூ, கோல்டு, டார்க் கிரே, சில்வர் மற்றும் ரெயின்போ என ஐந்துவித நிறங்களில் கிடைக்கிறது.

    • பாக்கெட்டில் இருந்து ஸ்மார்ட்போனை எடுத்து தரையில் வைத்தார்.
    • ஸ்மார்ட்போன் சார்ஜரில் இணைக்கப்படாத நிலையிலும், தீப்பிடித்து எரிந்துள்ளது.

    ஸ்மார்ட்போன்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன. அந்த வரிசையில் அரியானா மாநிலத்தில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    கடந்த பிப்ரவரி மாத வாக்கில் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனினை நவீன் தஹியா என்ற நபர் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில், ஏப்ரல் 11 ஆம் தேதி பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் தனது ஸ்மார்ட்போனில் இருந்து புகை வெளியேறியதை நவீன் கவனித்தார். சட்டை பாக்கெட்டில் வைக்கப்பட்டு இருந்த நிலையில், நவீன் தனது உடலில் திடீரென வெப்பத்தை உணர்ந்து இருக்கிறார்.

     

    பின் சுதாரித்துக் கொண்ட நவீன், தனது பாக்கெட்டில் இருந்து ஸ்மார்ட்போனை எடுத்து தரையில் வைத்திருக்கிறார். ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எரிவதை பார்த்து நவீன் அதிர்ச்சி அடைந்தார். ஸ்மார்ட்போன் சார்ஜரில் இணைக்கப்படாத நிலையிலும், தீப்பிடித்து எரிந்துள்ளது. தீப்பிடித்து எரிந்த ஸ்மார்ட்போன் முழுமையாக சேதமடைந்துவிட்டது.

    அதிர்ஷ்டவசமாக நவீனுக்கோ அல்லது அருகில் இருந்தவர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து நவீன் ரெட்மி வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டிருக்கிறார். எனினும், நிறுவனம் தரப்பில் நவீனுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. ஸ்மார்ட்போன் எதனால் தீப்பிடித்து எரிந்தது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    • இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது.
    • புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் 7 HD ஸ்மார்ட்போன் இந்திய சந்தையின் எண்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 HD மாடலில் 1612x720 பிக்சல் ரெசல்யுஷன் கொண்ட 6.6 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே, அதிகபட்சம் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் உள்ள வேவ் பேட்டன் டிசைன் அழகிய தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 196 கிராம் எடை, 8.65mm தடிமனாக உள்ளது. புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 HD மாடலில் ஆக்டா கோர் ஸ்பிரெட்ரம் SC9863A1 பிகாசஸர், 2 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 2 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 12 மற்றும் கேம் மோட், ஐ கேர், ஏஐ கேலரி, வீடியோ அசிஸ்டண்ட், சோஷியல் டர்போ என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

     

    இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 HD அம்சங்கள்:

    6.6 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே, அதிகபட்சம் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்

    ஆக்டா கோர் ஸ்பிரெட்ரம் SC9863A1 பிராசஸர்

    2 ஜிபி ரேம், 2 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம்

    64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 12

    8MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், டூயல் எல்இடி ஃபிளாஷ்

    5MP செல்ஃபி கேமரா

    வைபை, ப்ளூடூத் 4.2

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 HD மாடல் பிளாக், ஜேட் வைட், கிரீன் ஆப்பிள் மற்றும் சில்க் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 5 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அறிமுக சலுகையாக புதிய ஸ்மார்ட் 7 HD மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 5 ஆயிரத்து 399 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை மே 4 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது.

    • ஒப்போ நிறுவனத்தின் புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    ஒப்போ நிறுவனம் பல்வேறு புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றிருந்த ஒப்போ A98 ஸ்மார்ட்போனும் இதில் அடங்கும். இந்த நிலையில், ஒப்போ நிறுவனம் புதிய F23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து டிப்ஸ்டரான முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஒப்போ F23 ப்ரோ 5ஜி மாடல் இந்தியாவில் மே 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்றும் இதன் விலை ரூ. 25 ஆயிரம் அல்லது ரூ. 26 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எத்தனை வேரியண்ட்களில் கிடைக்கும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.

     

    முன்னதாக வெளியான தகவல்களில் ஒப்போ நிறுவனத்தின் F23 மாடல் மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. எனினும், இது நடைபெறவேயில்லை.

    ஒப்போ F23 ப்ரோ 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒப்போ F23 ப்ரோ 5ஜி மாடலில் 6.72 இன்ச் LCD ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே, 580 நிட்ஸ் பிரைட்னஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 64MP பிரைமரி கேமரா, இரண்டு 2MP லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போனை அதிவேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பயனர்கள் தங்களின் கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நெட்ஃப்ளிக்ஸ் நிறுத்துகிறது.
    • கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்வதை கண்டறிந்து தடுக்கும் தொழில்நுட்ப முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    நெட்ஃப்ளிக்ஸ் சேவையில் பயனர்கள் தங்களின் கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கைக்கு முற்றிப்புள்ளி வைக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த நடவடிக்கையை சில நாடுகளில் நெட்ஃப்ளிக்ஸ் ஏற்கனவே துவங்கி விட்டது.

    இது தொடர்பாக அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கை காரணமாக சுமார் பத்து லட்சம் பயனர்களை நெட்ஃப்ளிக்ஸ் இழந்துள்ளது. 2023 முதல் காலண்டில் நெட்ஃப்ளிக்ஸ் சுமார் பத்து லட்சம் பயனர்களை இழந்துள்ளது என்று ஆய்வு நிறுவனமான கந்தர் தெரவித்து இருக்கிறது. பயனர்கள் தங்களின் கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நெட்ஃப்ளிக்ஸ் நிறுத்துவதால், பயனர் எண்ணிக்கை குறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

    பயனர்கள் தங்களின் கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்வதை கண்டறிந்து தடுக்கும் தொழில்நுட்ப முறைகளை கடந்த பிப்ரவரி மாத வாக்கில் ஸ்பானிஷ் பயனர்களிடையே நெட்ஃப்ளிக்ஸ் செயல்படுத்தியது. மேலும் 5.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 500 கட்டணம் கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • பிக்சல் 7a ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் Full HD+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என தகவல்.
    • பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மாடல்களில் டென்சார் G2 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் பிக்சல் 6a மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய பிக்சல் 7a மாடல் மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய பிக்சல் 7a பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    அந்த வரிசையில், இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. டிப்ஸ்டர் யோகேஷ் ரார் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி பிக்சல் 7a ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் Full HD+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், டென்சார் G2 பிராசஸர் கொண்டிருக்கும் எனறு கூறப்படுகிறது.

     

    முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கூகுள் அறிமுகம் செய்த பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மாடல்களில் டென்சார் G2 பிராசஸர் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க பிக்சல் 7a மாடலில் 64MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    பிரைமரி கேமராவுடன் OIS சப்போர்ட், 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 10.8MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை பிக்சல் 7a மாடலில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இவைதவிர இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படலாம்.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி பிக்சல் 7a மாடல்- கிரே, வைட் மற்றும் புளூ என்று மூன்றுவித நிறங்களில் வெளியாகும் என்றும் இவை சார்கோல், ஸ்னோ மற்றும் சீ என்று அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. விலையை பொருத்ததவரை பிக்சல் 7a மாடல் 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 40 ஆயிரத்து 900 என்று துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    • சோனி நிறுவனத்தின் புதிய 4K ஸ்மார்ட் டிவி மாடல்கள் இருவித அளவுகளில் கிடைக்கின்றன.
    • புதிய சோனி 4K ஸ்மார்ட் டிவி மாடல்கள் X ரியாலிட்டி ப்ரோ தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன.

    சோனி நிறுவனம் இந்திய சந்தையில் 4K ரெசல்யூஷன் கொண்ட டாப் எண்ட் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய சோனி பிரேவியா X70L சீரிஸ், பிரேவியா X75L 4K டிவி மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பிரேவியா X70L டிவி சீரிஸ் மாடல்களில் மெல்லிய பெசல், அழகிய ஸ்டாண்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் X1 4K பிக்சர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இது தலைசிறந்த வீடியோக்களை பிரதிபலிக்கிறது. இதில் உள்ள பிஎஸ்5 சப்போர்ட் தலைசிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிவி 4K X ரியாலிட்டி ப்ரோ தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த டிவி கூகுள் டிவி ஒஎஸ், ஆப்பிள் ஹோம் கிட், ஏர்பிளே கொண்டுள்ளது. இதில் உள்ள 20 வாட் ஒபன் பேஃபில் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ தொழில்நுட்பம் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

     

    இத்துடன் வழங்கப்படும் டிவி ரிமோட் வாய்ஸ் சார்ந்த அம்சங்கள், ஆறு செயலிகளுக்கான ஹாட்கீ கொண்டிருக்கிறது. இத்துடன் X70L மாடலில் X ப்ரோடெக்ஷன் ப்ரோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சோனி பிரேவியா X70L அம்சங்கள்:

    4K அல்ட்ரா ஹெச்டி 3840x2160 பிக்சல் ஸ்கிரீன்

    X1 4K பிராசஸர், 4K HDR, லைவ் கலர், 4K X ரியாலிட்டி ப்ரோ

    3x HDMI போர்ட்கள், 1x USB போர்ட்

    20 வாட் ஆடியோ அவுட்புட், ஒபன் பேஃபில் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ

    கூகுள் டிவி, கூகுள் பிளே, க்ரோம்காஸ்ட் சப்போர்ட்

    வாய்ஸ் வசதி கொண்ட ரிமோட்

    வாட்ச்லிஸ்ட், வாய்ஸ் சர்ச் மற்றும் பிஎஸ்5 சப்போர்ட்

    ஆப்பிள் ஏர்பிளே, ஆப்பிள் ஹோம்கிட் மற்றும் அலெக்சா

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சோனி X70L 4K 43 இன்ச் மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 990

    சோனி X70L 4K 50 இன்ச் மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900

    அறிமுக சலுகையாக 43 இன்ச் X70L ஸ்மார்ட் டிவி மாடல் ரூ. 47 ஆயிரத்து 490 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி விற்பனை அனைத்து சோனி செண்டர்கள், முன்னணி மின்சாதன பொருட்கள் விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    ×