என் மலர்
தொழில்நுட்பம்
- வி நிறுவனம் தொடர்ச்சியாக தனது சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது.
- வி நிறுவனத்தின் 5ஜி சேவை வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
இந்திய சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களிடம் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் வி நிறுவனத்தின் பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தொடர் நஷ்டம் காரணமாகவும், பயனர்கள் எண்ணிக்கை குறைவதாலும் வி நிறுவனத்தின் 5ஜி வெளியீடு தாமதமாகி வருகிறது.
எனினும், வி நிறுவனம் தொடர்ச்சியாக புதிய சலுகைகளை அறிவித்தும், அவ்வப்போது சிறப்பான சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகளை பயனர்கள் வி செயலி மூலம் ரிசார்ஜ் செய்தால் கூடுதல் கட்டணம் இன்றி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.
முன்னதாக இதே போன்ற சலுகையை வி நிறுவனம் குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கி வந்தது. இந்த சலுகையின் கீழ் பயனர்கள் வி செயலி மூலம் பிரீபெயிட் ரிசார்ஜ் செய்தால் அதிகபட்சம் 5ஜிபி வரை கூடுதல் டேட்டா பெற முடியும். பயனர்கள் ரூ. 299 அல்லது இதைவிட அதிக தொகைக்கு ரிசார்ஜ் செய்யும் போது கூடுதல் டேட்டாவை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான வேலிடிட்டி மூன்று நாட்கள் ஆகும்.
- சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- இந்திய சந்தையில் கடந்த பிப்ரவரி மாதம் சாம்சங் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய லைம் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிளாக்ஷிப் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன்- கிரீம், கிரீன், லாவண்டர் மற்றும் ஃபேண்டம் பிளாக் என்று நான்குவித நிறங்களில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் புதிதாக லைம் நிறத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அதன்படி விரைவில் கேலக்ஸி S23 லைம் நிற வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதை சேர்க்கும்பட்சத்தில் சாம்சங் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் மொத்தத்தில் ஐந்து நிறங்களில் கிடைக்கும்.

ஃபிளாக்ஷிப் தர அம்சங்களை கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் பிரத்யேக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 512 ஜிபி மெமரி, 6.1 இன்ச் Full HD+ டைனமிக் AMOLED 2x டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 3900 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
விலையை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கேலக்ஸி S23 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கேலக்ஸி S23 புதிய லைம் நிற வேரியண்டின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது.
- பிக்சல் வாட்ச் 2 மாடலில் சாம்சங் நிறுவனத்தின் எக்சைனோஸ் 9110 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.
- கூகுள் I/O 2023 நிகழ்வில் பிக்சல் 8 சீரிஸ் மற்றும் பிக்சல் வாட்ச் 2 மாடல்களின் பிரிவியூ வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேட் பை கூகுள் நிகழ்வில் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. தற்போது கூகுள் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய பிக்சல் வாட்ச் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் பிக்சல் 8 சீரிஸ் வெளியீட்டின் போதே அறிவிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.
புதிய பிக்சல் வாட்ச் 2 மாடலில் சாம்சங் நிறுவனத்தின் எக்சைனோஸ் 9110 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக பிக்சல் வாட்ச் மாடலுக்கான டீசர் கடந்த ஆண்டு நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்தது. அதன்படி அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் பிக்சல் 8 சீரிஸ் மற்றும் பிக்சல் வாட்ச் 2 மாடல்களின் பிரிவியூ வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
கூகுள் பிக்சல் வாட்ச் - கோப்புப்படம்
கூகுள் பிக்சல் வாட்ச் 2 மாடல் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ வெளியீட்டுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2018-இல் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி வாட்ச் மாடலில் வழங்கப்பட்டு இருந்த சாம்சங் எக்சைனோஸ் 9110 பிராசஸர் புதிய பிக்சல் வாட்ச் 2 மாடலில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சிப்செட் ஸ்மார்ட்வாட்ச்-க்கு நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும்.
மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 7a, பிக்சல் ஃபோல்டு போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், பிக்சல் 7a கடந்த சில நாட்களுக்கு முன்பே இபே வலைதளத்தில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- நத்திங் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது.
நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் போன் 2 மாடல் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அமெரிக்க சந்தையில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், தற்போது இதன் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 1 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய போன் 2 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய நத்திங் போன் 2 மாடலில் தலைசிறந்த அம்சங்கள் மற்றும் அதிகளவு அப்டேட்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் நத்திங் போன் 2 மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

புதிய நத்திங் போன் 2 மாடல் பிரீமியம் பிரிவில் களமிறங்க இருக்கிறது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில், இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படலாம். சமீபத்தில் தான் இந்த ஸ்மார்ட்போனின் சர்வதேச வெளியீட்டுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருந்தது.
அதன்படி சர்வதேச வெளியீட்டின் போதே இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த மாடலிலும் முந்தைய போன் 1 மாடலில் வழங்கப்பட்டு இருந்ததை போன்று பிரத்யேக எல்இடி க்லிம்ஃப் டிசைன், சிவப்பு நிற எல்இடி இண்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றே தெரிகிறது.
- ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் அதிாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
- புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 200MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் சீன சந்தையில் புதிய ரியல்மி 11 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் ரியல்மி 11 5ஜி, ரியல்மி 11 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி என்று மூன்று மாடல்கள் இடம்பெறுகின்றன. மே 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ரியல்மி 11 சீரிஸ் டீசர்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் புதிய ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 200MP சாம்சங் ISOCELL HP3 சென்சார் கொண்டிருக்கும் என்று ரியல்மி அறிவித்து இருக்கிறது. இத்துடன் புதிய ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் 4x லாஸ்லெஸ் ஜூம் வசதி, 20x மூன் மோட் ஜூம் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. ப்ரோ பிளஸ் வேரியண்ட் 200MP பிரைமரி கேமராவுடன், OIS சப்போர்ட் கொண்டிருக்கும்.
மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர், மாலி G68 MC4 GPU, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் உள்பட ஒட்டுமொத்த டிசைன் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதன்படி புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் வட்ட வடிவம் கொண்ட கேமரா மாட்யுல் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.
- கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகமாகிறது.
- பிக்சல் ஃபோல்ட் வெளியீட்டை உணர்த்தும் டீசரை கூகுள் பகிர்ந்து இருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்ட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முதல் முறையாக பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் வெளியீட்டை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.
பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போனிற்காக கூகுள் நிறுவனம் பிரத்யேக வீடியோ வெளியிட்டுள்ளது. டுவிட்டர் மற்றும் யூடியூப் வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் வீடியோவில் பிக்சல் ஃபோல்ட் எப்படி காட்சியளிக்கும் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில், டேப்லட் போன்று காட்சியளிக்கிறது.
தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் சிறிய டச் ஸ்கிரீன் பேனல் உள்ளது. சமீபத்திய பிக்சல் போன்களில் உள்ளதை போன்றே பிக்சல் ஃபோல்ட் பின்புறமும் கேமரா பார் உள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி பிக்சல் ஃபோல்ட் மாடலில் 5.8 இன்ச் டிஸ்ப்ளே, 7.6 இன்ச் ஸ்கிரீன், கூகுள் டென்சார் G2 சிப்செட் வழங்கப்படுகிறது.
- கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வெர்ஷன் ரூ. 84 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
- ஃப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விலை 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
ஃப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக் சேவிங்ஸ் டேஸ் சேல் பெயரில் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பு விற்பனையில் ஏராளமான சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள், தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி Z ஃப்ளிப் 3 ஸ்மார்ட்போன் ரூ. 84 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஃப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விலை 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வெர்ஷன் ரூ. 84 ஆயிரத்து 999 என்றும் 256 ஜிபி வெர்ஷன் விலை ரூ. 88 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

தற்போது இதன் பேஸ் 128 ஜிபி வெர்ஷன் ரூ. 44 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது. இத்துடன் எஸ்பிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரத்து 500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனை சேர்க்கும் பட்சத்தில் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 விலை ரூ. 42 ஆயிரத்து 649 என்று மாறிவிடும்.
2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி Z ஃப்ளிப் 3 சாம்சங் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ஃப்ளிப் போன் ஆகும். பிரீமியம் மடிக்கக்கூடிய சாதனமாக அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலுக்கு அப்போது வேறு எந்த ஸ்மார்ட்போனும் மாற்றாக விற்பனைக்கு கிடைக்கவில்லை. இன்று இந்த ஸ்மார்ட்போனிற்கு ஒப்போ, விவோ போன்ற பிராண்டுகளின் மாடல்கள் போட்டியாக உள்ளன.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலில் 6.7 இன்ச் FHD+ டைனமிக் 2X AMOLED இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ், 1.9 இன்ச் AMOLED ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராசஸர், அட்ரினோ 660 GPU, 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 10MP செல்ஃபி கேமரா, 3300 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி, 4ஜி, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது.
- மே 11 ஆம் தேதி பிக்சல் 7a இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- பிக்சல் 7a அம்சங்கள் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகியுள்ளன.
கூகுள் நிறுவனம் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் புதிய பிக்சல் 7a ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதைத் தொடர்ந்து மே 11 ஆம் தேதி பிக்சல் 7a இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் பிக்சல் 7a மாடலுக்கான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் யூனிட்கள் இபே (EBay) வலைதளத்தில் தற்போது விற்பனைக்கு பட்டியலிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அறிமுக நிகழ்வுக்கு முன்பே பிக்சல் 7a யூனிட்கள் விற்பனைக்கு வந்துள்ளது பற்றி ஸ்மார்ட்போன் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது கூகுள் தவிர வேறு நபர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பிக்சல் 7a யூனிட்களை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டாம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கிடைக்கும் யூனிட்களை கூகுள் நிறுவனம் மென்பொருள் மூலம் செயலிழக்கச் செய்துவிடும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இன்னும், சில நாட்களில் பிக்சல் 7a மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விலை 499 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அறிமுகமாகாத சாதனங்கள் சந்தையில் விற்பனைக்கு கிடைப்பது முதல்முறை இல்லை. முன்னதாக பல சமயங்களில் நிறுவனங்கள் அறிமுகம் செய்வதற்கு முன்பே புதிய சாதனங்கள் இபே போன்ற வலைதளங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.
புதிய பிக்சல் 7a ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், இபே தளத்தில் பட்டியலிடப்பட்டு இருப்பதன் மூலம் அதன் அம்சங்கள் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. அதன்படி பிக்சல் 7a மாடலில் டூயல் சிம் வசதி, 5ஜி, ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் டென்சார் G2 சிப்செட் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
- தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் புதிய நேவிகேஷன் பார் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
- புதிய அம்சத்தின் படி இந்த ஐகான்களை க்ளிக் செய்து சம்பந்தப்பட்ட ஆப்ஷனை இயக்க முடியும்.
வாட்ஸ்அப் தளத்தின் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் நேவிகேஷன் பார் போன்ற அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக ஐஒஎஸ் வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்த நேவிகேஷன் பார் அம்சம் தற்போது ஆண்ட்ராய்டிலும் வழங்கப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் புதிய நேவிகேஷன் பார் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
இது பற்றி WABetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு செயலியின் கீழ்புறம் நேவிகேஷன் பார் வழங்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் இந்த அம்சம் மேலும் அதிக டெஸ்டர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

வாட்ஸ்அப் ஐஒஎஸ் வெர்ஷனின் கீழ்புறம் உள்ள நேவிகேஷன் பார் கொண்டு செயலியின் பல்வேறு ஆப்ஷன்களை எளிதில் இயக்கிவிட முடியும். தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனை ரிடிசைன் செய்து - புதிதாக நேவிகேஷன் பார் போன்ற அம்சத்தினை வழங்க இருக்கிறது.
புதிய அம்சம் குறித்து வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களின் படி, புதிய இண்டர்ஃபேஸ் கீழ்புறத்தில் பல்வேறு டேப்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சாட், கம்யுனிடிஸ், கால்ஸ் மற்றும் ஸ்டேட்டஸ் போன்ற ஆப்ஷன்கள் உள்ளன. புதிய அம்சத்தின் படி இந்த ஐகான்களை க்ளிக் செய்து சம்பந்தப்பட்ட ஆப்ஷனை இயக்க முடியும்.
தற்போது இந்த அம்சத்திற்கான சோதனை துவங்கி இருக்கிறது. அந்த வகையில், இந்த அம்சம் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா டெஸ்டர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். எதிர்காலத்தில் மேலும் அதிக பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படும். வாட்ஸ்அப்-இன் ஸ்டேபில் வெர்ஷனில் இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.
Photo Courtesy: WABetaInfo
- சோனி கேமிங் கன்சோலுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி பெற முடியும்.
அமேசான் கிரேட் சம்மர் சேல் துவங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், டேப்லட் என்று பல்வேறு பிரிவுகளில் மின்சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 5 கன்சோலுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அமேசான் தளத்தில் பிளே ஸ்டேஷன் 5 கன்சோல் ஸ்டாண்டர்டு எடிஷன் தற்போது ரூ. 49 ஆயிரத்து 999 விலையிலும், டிஜிட்டல் எடிஷன் ரூ. 39 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இரு மாடல்களுக்கும் ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் சோனி கேமிங் கன்சோலுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும் ஐசிஐசிஐ மற்றும் கோடக் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் உடனடி தள்ளுபடி, அதிகபட்சம் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 250 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
பிளே ஸ்டேஷன் 5 கன்சோல் வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவி மாடல்களை வாங்கும் போது ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பெற பயனர்கள் பிளே ஸ்டேஷன் 5 வாங்கி அதன் டெலிவரிக்காக காத்திருக்க வேண்டும். சாதனம் டெலிவவரி செய்யப்பட்டதும், பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட டிவி பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவி மாடலை தேர்வு செய்து ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி பெற முடியும்.
- நத்திங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் தர அம்சங்களை கொண்டிருக்கும்.
- புதிய நத்திங் போன் (2) மாடலின் வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது.
நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை ஸ்மார்ட்போன் மாடல் இந்த ஆண்டு கோடை (அமெரிக்காவில் ஜூன் மாதம்) காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மூன்றாவது காலாண்டு வாக்கில் போன் (2) மாடலை அறிமுகம் செய்ய நத்திங் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
எனினும், புதிய நத்திங் ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. மாறாக இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. நத்திங் போன் (2) வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கும் நத்திங் நிறுவனம் பயனர்கள் ஸ்மார்ட்போன் பற்றிய அப்டேட்களை சைன்-அப் செய்து அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
புதிய மாடலுக்கான டீசரில் 'பிரீமியம்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. முந்தைய நத்திங் போன் (1) மாடல் மிட்-ரேஞ்ச் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மிட்-ரேஞ்ச்-இல் இருந்து ஃபிளாக்ஷிப் பிரிவுக்கு கியரை மாற்றுவதாக நத்திங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி புதிய நத்திங் போன் (2) மாடல் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என்று உறுதியாகி இருக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை நத்திங் போன் (2) மாடலிலும் க்ளிம்ஃப் இண்டர்ஃபேஸ்- பின்புறம் பல்வேறு எல்இடி லைட்களுடன் டிரான்ஸ்பேரண்ட் கேஸ் வழங்கப்படும் என்றே தெரிகிறது. புதிய மாடலில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு, கூடுதலாக மியூட் ஸ்விட்ச் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன் இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.
- ஐபோன்களின் வேகத்தை ஆப்பிள் நிறுவனம் வேண்டுமென்றே குறைத்தது.
- குறைபாடு கொண்ட யூனிட்களில் ஆப்பிள் நிறுவனம் பேட்டரிகளை இலவசமாக மாற்றிக் கொடுக்கிறது.
ஆப்பிள் ஐபோன் திராட்லிங் பிரச்சினை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. ஆப்பிள் நிறுவனம் 2 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 16 ஆயிரத்து 358 கோடி) இழப்பீடு வழங்க இங்கிலாந்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னதாக பழைய ஐபோன்களின் வேகத்தை ஆப்பிள் நிறுவனம் வேண்டுமென்றே குறைத்ததை ஒப்புக் கொண்டு அதற்கு இழப்பீடு வழங்குவதாக தெரிவித்து இருந்தது.
இந்த சம்பவங்கள் நடந்து சிலகாலம் ஆகிவிட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் மீண்டும் இதேபோன்ற சிக்கலில் சிக்கியுள்ளது. இந்தமுறை ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் பாழாகிப் போன பேட்டரிகளை மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கை ஜஸ்டின் குட்மன் என்ற நபர் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தொடர்ந்து இருக்கிறார்.

ஆப்பிள் நிறுவனம் பேட்டரிகளில் உள்ள குறையை மறைத்து, மென்பொருள் அப்டேட்களின் மூலம் ஐபோன் வேகத்தை குறைத்து இருக்கிறது. இந்த குற்றச்சாட்டை மறுத்து இருக்கும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 6s மாடல்களின் குறைந்த எண்ணிக்கையிலான யூனிட்ககளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறைபாடு கொண்ட யூனிட்களில் ஆப்பிள் நிறுவனம் பேட்டரிகளை இலவசமாக மாற்றிக் கொடுக்கிறது. இந்த முறையும் ஐபோன்களை திராட்டில் செய்வதை ஒப்புக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 6 மாடல்களின் செயல்திறனை பத்து சதவீதம் வரை குறைத்ததாக தெரிவித்து இருக்கிறது.






