என் மலர்
தொழில்நுட்பம்
- கூகுள் நிறுவனம் நேற்று நடத்திய I/O 2023 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.
- கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
கூகுள் நிறுவனத்தின் I/O 2023 நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகளில் ஒன்று ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ். ஆனால் இதை பற்றி கூகுள் பெரிதாக எதையும் கூறவில்லை. மாறாக புதிய ஒஎஸ் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என்று மட்டும் அறிவித்தது. இதோடு ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் வழங்கப்பட இருக்கும் சில அம்சங்கள் பற்றி அறிவித்தது. புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனுக்கான டெவலப்பர் பிரீவியூ கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.
பின் ஏப்ரல் மாதம் இந்த ஒஎஸ்-இன் முதல் பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டது. தற்போது தகுதியுடைய ஸ்மார்ட்போன்களில் இதனை பயனர்கள் டவுன்லோடு செய்துகொள்ளலாம். அந்த வகையில் ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் வழங்கப்பட இருக்கும் சில அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம். மேலும் எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் இது வழங்கப்படும் என்றும் பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு 14 அம்சங்கள்:
மேஜிக் கம்போஸ்: மெசேஞஸ் பை கூகுள் செயலியில் வழங்கப்படும் புதிய அம்சம் இது. இதனை பயன்படுத்தி பயனர்கள், தங்களது உரையாடல்களை அழகாக்க முடியும். பயனர் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு ஏற்ற பதில்களை இந்த அம்சம் பரிந்துரை செய்யும். மேலும் மேஜிக் போன்று அவற்றை மாற்றவும் செய்யும்.
ஃபைண்ட் மை டிவைஸ்: ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட் செய்யப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது. இதை கொண்டு ஹெட்போன்கள், டேப்லட்கள் மற்றும் பல்வேறு சாதனங்களை கண்டறிய வைக்க முடிவு செய்துள்ளது. இதை கொண்டு பயனர்கள் பல்வேறு சாதனங்களை டிராக் செய்வதோடு, அவற்றை பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும். வேறு யாரும் டிராக் செய்தாலும், எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த அம்சம் அப்டேட் செய்யப்படுகிறது.
லாக் ஸ்கிரீன் கஸ்டமைசேஷன்: ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் பயனர்கள் தங்களது லாக் ஸ்கிரீனை புதிய ஷாட்கட்கள் மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட கடிகாரங்களை கொண்டு கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் தங்களின் கைப்பேசியை சுவாரஸ்யமானதாக மாற்றலாம். இத்துடன் பயனர்கள் மோனோக்ரோமடிக் கலர் பயன்படுத்தி பார்க்கலாம். இதனை விரும்புவோர் போனின் இண்டர்ஃபேஸ் முழுக்க செட் செய்துகொள்ளலாம்.
எமோஜி: எமோஜி வால்பேப்பர் கொண்டு அதிகபட்சம் 14 வித்தியாசமான எமோஜி, ஏராளமான பேட்டன்கள் மற்றும் நிறங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் தனித்துவம் மிக்க வால்பேப்பரை ஹோம் மற்றும் லாக் ஸ்கிரீனில் செட் செய்து கொள்ளலாம். இதில் பயன்படுத்தப்படும் எமோஜிக்களை தொடும் போது அவை பாவணைகளை வெளிப்படுத்தும்.
சினிமேடிக் வால்பேப்பர்கள்: சினிமேடிக் வால்பேப்பர் அம்சம் கொண்டு பயனர்கள் எவ்வித போட்டோக்களையும் 3டி படமாக மாற்றி, மோஷன் எஃபெக்ட்களை வழங்க முடியும். பின் இவற்றை பேக்கிரவுண்டாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஸ்பார்கில் ஐகான் பட்டனை க்ளிக் செய்து பாரலாக்ஸ் எஃபெக்ட்-ஐ புகைப்படங்களுக்கு கொடுக்கலாம்.
ஆண்ட்ராய்டு 14 பீட்டா பில்டுகளை பெற இருக்கும் ஸ்மார்ட்போன்கள்:
சியோமி 12T, சியோமி 13, சியோமி 13 ப்ரோ, சியோமி பேட் 6
விவோ X90 ப்ரோ
டெக்னோ கேமான் 20 சீரிஸ்
ரியல்மி
ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப்
ஒன்பிளஸ் 11
நத்திங் போன் 1
லெனோவோ டேப் எக்ஸ்ட்ரீம்
ஐகூ 11
- இந்த விவகாரம் தொடர்பாக ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் ஆதாரமாக வெளியிட்டிருந்தார்.
- இதைத் தொடர்ந்து டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க், 'யாரையும் நம்பாதீர்கள்' என்று டுவிட் செய்திருந்தார்.
வாட்ஸ்அப் செயலி பயனர்களின் ஸ்மார்ட்போன் மைக்ரோபோனினை இயக்கியதாக எழுந்த சர்ச்சையில் அரசு விசாரணை நடத்தும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பயனர் தனியுரிமை விவகாரத்தில் இதுபோன்ற செயலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார். தனியுரிமை மீறப்பட்ட விவகாரத்தை அரசு முழுமையாக ஆய்வு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
"தனியுரிமை விவகாரத்தில் இது ஏற்றுக் கொள்ள முடியாத விதிமீறல் ஆகும். டிஜிட்டல் தனியுரிமை தரவு பாதுகாப்பு மசோதா தயாரிக்கப்பட்டு வரும் போதிலும், இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து ஆய்வு செய்து விதிமீறல் உறுதியாகும்பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுப்போம்," என்று மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் டுவிட்டர் பிதிவில் தெரிவித்து இருக்கிறார்.

முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனம் பயனர் அனுமதியின்றி அவர்களது ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனை இயக்கியதாக டுவிட்டர் பொறியாளர் ஒருத்தர் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் ஆதாரமாக வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க், 'யாரையும் நம்பாதீர்கள்' என்று டுவிட் செய்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளித்த வாட்ஸ்அப், "பிக்சல் போன் மற்றும் வாட்ஸ்அப் இடையே குறைபாடு இருப்பதை சுட்டிக் காட்டி குற்றச்சாட்டு தெரிவித்த டுவிட்டர் பொறியாளருடன் கடந்த 24 மணி நேரமாக பேசி வருகிறோம். இது ஆண்ட்ராய்டு பிழையாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கூகுளை கேட்டுக் கொண்டிருக்கிறோம்," என்று தெரிவித்தது.
இது தொடர்பாக தொடர்ந்து விளக்கம் அளித்த வாட்ஸ்அப், "அனுமதி அளிக்கப்பட்டால், பயனர் அழைப்புகளை மேற்கொள்ளும் போது, வாய்ஸ் நோட் அல்லது வீடியோ பதிவிடும் போது மட்டுமே வாட்ஸ்அப் சம்பந்தப்பட்ட ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனை இயக்கும். அப்போதும் கூட இந்த தகவல் பரிமாற்றங்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு விடும். இதனால் வாட்ஸ்அப் சார்பில் கூட யாராலும் அவற்றை கேட்கவே முடியாது," என்று தெரிவித்து இருக்கிறது.
- புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டு இருக்கிறது.
- பிக்சல் ஃபோல்டு மாடலில் மூன்று கேமரா சென்சார்களுடன் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் டீசர்கள் வெளியாகி இருந்ததை தொடர்ந்து புதிய மாடல் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வில் அறிமுகமானது. புதிய பிக்சல் ஃபோல்டு மாடலிலும் கூகுள் டென்சார் G2 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 7.6 இன்ச் ஃபோல்டபில் ஸ்கிரீன், 5.8 இன்ச் வெளிப்புற ஸ்கிரீன், இரண்டிலும் OLED பேனல் மற்றும், 120Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. பிக்சல் ஃபோல்டு மாடலில் உள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீர் ஹிஞ்ச் அதிக உறுதியாகவும், எளிதில் ஸ்கிராட்ச் ஆகாத வகையிலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IPX8 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டு இருக்கிறது. இதையே செல்ஃபி கேமராவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் 10.8MP அல்ட்ரா வைடு கேமரா, 10.8MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. கேமரா சென்சார்களுடன் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ் உள்ளது.
கூகுள் பிக்சல் ஃபோல்டு அம்சங்கள்:
7.6 இன்ச் 1840x2208 பிக்சல் OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
5.8 இன்ச் 1080x2092 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
கூகுள் டென்சார் G2 பிராசஸர்
டைட்டன் M2 செக்யுரிட்டி சிப்
12 ஜிபி ரேம்
256 ஜிபி, 512 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13
டூயல் சிம் ஸ்லாட்
48MP பிரைமரி கேமரா, OIS
10.8MP அல்ட்ரா வைடு கேமரா
10.8MP டெலிபோட்டோ கேமரா
9.5MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
வாட்டர் ரெசிஸ்டண்ட் IPX8
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை 6E, ப்ளூடூத் 5.2LE
யுஎஸ்பி டைப் சி 3.2 ஜென் 2
4821 எம்ஏஹெச் பேட்டரி
30 வாட் வயர்டு சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் போர்சிலைன் மற்றும் அப்சிடியன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 410 என்று துவங்குகிறது. இதன் 512 ஜிபி மெமரி மாடல் விலை 1919 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 57 ஆயிரத்து 240 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு துவங்க இருக்கிறது.
- ரிடிசைன் செய்யப்பட்ட கூகுள் ஹோம் ஆப் மற்றும் புதிய ஹப் மோட் கொண்டு ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தலாம்.
- பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் கொண்ட முதல் டேப்லட் இது என்று கூகுள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் முதல் டேப்லட் சாதனம் பிக்சல் டேப்லட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த மாடலுக்கான டீசர் கடந்த ஆண்டு நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் வெளியிடப்பட்டு இருந்தது. புதிய பிக்சல் டேப்லட் மாடலில் 10.95 இன்ச் WQXGA ஸ்கிரீன், சார்ஜிங் ஸ்பீக்கர் டாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டேப்லட்-இல் குவாட் ஸ்பீக்கர்கள் மற்றும் நானோ செராமிக் கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது.
பிக்சல் டேப்லட்-ஐ அதில் வைத்ததும் அது ஹேண்ட்-ஃபிரீ அசிஸ்டண்ட் அல்லது போட்டோ ஃபிரேம் போன்று செயல்படும். மேலும் ரிடிசைன் செய்யப்பட்ட கூகுள் ஹோம் ஆப் மற்றும் புதிய ஹப் மோட் கொண்டு ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும். இந்த டாக்-இல் காந்தங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக டேப்லட்-ஐ எளிதில் வைக்கவும், எடுத்துக் கொள்ளவும் முடியும்.
புதிய பிக்சல் டேப்லட் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது. கூகுள் டென்சார் G2 பிராசஸர், 8MP செல்ஃபி மற்றும் பிரைமரி கேமரா, பவர் பட்டனில் கைரேகை சென்சார், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் கொண்ட முதல் டேப்லட் இது என்று கூகுள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
கூகுள் பிக்சல் டேப்லட் அம்சங்கள்:
10.95 இன்ச் 2560x1600 WQXGA டிஸ்ப்ளே
கூகுள் டென்சார் G2 பிராசஸர்
டைட்டன் M2 செக்யுரிட்டி சிப்
8ஜிபி ரேம்
128 ஜிபி, 256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13
8MP பிரைமரி கேமரா
8MP செல்ஃபி கேமரா
குவாட் ஸ்பீக்கர்கள், 3 மைக்ரோபோன்கள்
கைரேகை சென்சார்
வைபை 6, ப்ளூடுத் 5.2
யுஎஸ்பி டைப் சி 3.2 ஜென் 1
மேக்னடிக் டாக்
27 வாட் ஹவர் பேட்டரி
15 வாட் சார்ஜிங் வசதி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
கூகுள் பிக்சல் டேப்லட் மாடல் ஹசெல், போர்சிலைன் மற்றும் ரோஸ் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 40 ஆயிரத்து 880 என்று துவங்குகிறது. இதன் 256 ஜிபி மெமரி மாடல் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 49 ஆயிரத்து 075 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பிக்சல் டேப்லட் மாடலுக்கான முன்பதிவு துவங்கிவிட்டது. விற்பனை ஜூன் 20 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
- கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் டைட்டன் M2 செக்யுரிட்டி சிப், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
- புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெற இருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 7a ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.1 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், கூகுள் டென்சார் G2 பிராசஸர், டைட்டன் M2 செக்யுரிட்டி சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் பிக்சல் 7a மூன்று ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட்களையும், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என்று கூகுள் அறிவித்துள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 13MP செல்ஃபி கேமரா உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4385 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
கூகுள் பிக்சல் 7a அம்சங்கள்:
6.1 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ OLED HDR டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
கூகுள் டென்சார் G2 பிராசஸர்
டைட்டன் M2 செக்யுரிட்டி சிப்
8 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13
டூயல் சிம் ஸ்லாட்
64MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், OIS
13MP அல்ட்ரா வைடு கேமரா
13MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் IP67
யுஎஸ்பி டைப் சி ஆடியோ , ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி ஜென் 2, என்எஃப்சி
4385 எம்ஏஹெச் பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் சார்கோல், சீ மற்றும் ஸ்னோ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 43 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறுகிறது.
- அறிமுக சலுகையாக ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டு மூலம் வட்டியில்லா மாத தவணை முறை வசதியை பயன்படுத்தும் போது ரூ. 4 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- ஏதேனும் பிக்சல் சாதனம், தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- புதிய பிக்சல் 7a வாங்கும் போதே கூகுள் ஃபிட்பிட் இன்ஸ்பயர் 2 மாடலை ரூ. 3 ஆயிரத்து 999-க்கும் பிக்சல் பட்ஸ் A மாடலை ரூ. 3 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.
- ஒரு ஆண்டிற்கு இலவச ஸ்கிரீன் டேமேஞ்ச் ப்ரோடெக்ஷன் வழங்கப்படுகிறது.
- ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP சாம்சங் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
- ரியல்மி 11 சீரிஸ் மாடல்களில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 1 டிபி வரையிலான மெமர உள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரியல்மி 11, ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் என்று மூன்று ஸ்மார்ட்போன்கள் இதில் உள்ளன.
இவற்றில் ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல்களில் டிமென்சிட்டி 7050 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 1 டிபி வரையிலான மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6.7 இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் COP அல்ட்ரா தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா உள்ளது.
ரியல்மி 11 ப்ரோ மற்றும் 11 ப்ரோ பிளஸ் மாடல்களில் 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இத்துடன் முறையே 67 வாட் மற்றும் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி 11 ப்ரோ மற்றும் 11 ப்ரோ பிளஸ் அம்சங்கள்:
6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FUll HD+ வளைந்த AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர்
மாலி G68 MC4 GPU
8 ஜிபி, 12 ஜிபி ரேம்
256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி மெமரி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ 4.0
ரியல்மி 11 ப்ரோ - 108MP பிரைமரி கேமரா, OIS
2MP மேக்ரோ லென்ஸ், எல்இடி ஃபிளாஷ்
ரியல்மி 11ப்ரோ பிளஸ் - 200MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா, எல்இடி ஃபிளாஷ்
ரியல்மி 11 ப்ரோ - 16MP செல்ஃபி கேமரா
ரியல்மி 11 ப்ரோ பிளஸ் - 32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
ரியல்மி 11 ப்ரோ 67 வாட் சார்ஜிங்
ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 100 வாட் சார்ஜிங்
விலை விவரங்கள்:
ரியல்மி 11 ப்ரோ மாடலின் விலை 1799 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 21 ஆயிரத்து 310 என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 2299 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 27 ஆயிரத்து 245 ஆகும். ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலின் விலை 2 ஆயிரத்து 099 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 24 ஆயிரத்து 875 என்று துவங்கி, இதன் டாப் எண்ட் மாடல் விலை 2 ஆயிரத்து 799 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 33 ஆயிரத்து 170 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் போக்கோ F5 ஸ்மார்ட்போன் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
- போக்கோ F5 மாடல் 2 ஒஎஸ் அப்டேட்கள், 3 ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களை பெற இருக்கிறது.
போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ F5 ஸ்மார்ட்போனினை நேற்று (மே 9) அறிமுகம் செய்தது. போக்கோ நிறுவனத்தின் புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த F4 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய போக்கோ F5 மாடலில் 6.67 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, டால்பி விஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை போக்கோ F5 பெற்றுள்ளது. புகைப்படங்களை எடுக்க போக்கோ F5 மாடலில் 64MP பிரைமரி கேமரா, OIS, 2x இன் சென்சார் லாஸ்லெஸ் ஜூம், 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் போக்கோ F5 ஸ்மார்ட்போன் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 ஒஎஸ் அப்டேட்கள், 3 ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என்று போக்கோ அறிவித்து இருக்கிறது.
போக்கோ F5 அம்சங்கள்:
6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் OLED டிஸ்ப்ளே, 30/60/90/120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ 725 580MHz GPU
8 ஜிபி / 12 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் MIUI4
டூயல் சிம் ஸ்லாட்
64MP பிரைமரி கேமரா, OIS
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ லென்ஸ்
16MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் IP53
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6
ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
போக்கோ F5 ஸ்மார்ட்போன் கார்பன் பிளாக், சேண்ட்ஸ்டார்ம் வைட் மற்றும் எலெக்டரிக் புளூ என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 16 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
- ரியல்மி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் டீசரை வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
- நார்சோ N53 ஸ்மார்ட்போன் இரண்டுவித நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் மிகமெல்லிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது நார்சோ சீரிசில் புதிய ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய நார்சோ ஸ்மார்ட்போன் N53 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
அமேசான் மட்டுமின்றி ரியல்மி நிறுவனமும் புதிய ஸ்மார்ட்போன் டீசரை தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. ரியல்மி நார்சோ N53 மாடலில் அதிகபட்சம் 16 ஜிபி டைனமிக் ரேம், 33 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த விவரங்கள் நார்சோ N53 என்ற இணைய தேடலில் தெரியவந்துள்ளது.

நார்சோ N53 மாடலின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதற்கான டீசர் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
ரியல்மி நார்சோ N53 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
புதிய நார்சோ ஸ்மார்ட்போனிற்கான முதற்கட்ட டீசர்களில் அம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. இந்த மாடலில் 6.72 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G88 பிராஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 2MP பிளாக் அண்ட் வைட் லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
எனினும் பட்ஜெட் ரக மாடல் என்ற வகையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதில் வழங்கப்படும் 16 ஜிபி டைனமிக் ரேம் தேவைக்கு ஏற்ப ஸ்மார்ட்போனின் ரோம் -(ரேண்டம் அக்சஸ் மெமரி) ரேம் போன்று பயன்படுத்தப்படும். புதிய ரியல்மி நார்சோ N53 ஸ்மார்ட்போன் ஃபெதர் பிளாக் மற்றும் ஃபெதர் கோல்டு என இரண்டுவிதமான நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
- புதிய அறிவிப்பின் மூலம் டுவிட்டர் தளத்தில் ஃபாலோயர்கள் எண்ணிக்கை குறையும்.
- 30 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும் என்று டுவிட்டர் கொள்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டுவிட்டரில் நீண்டகாலம் பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுண்ட்களை நீக்க முடிவு செய்திருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் கடந்த சில ஆண்டுகள் வரை பயன்படுத்தாமல் இருக்கும் டுவிட்டர் அக்கவுண்ட்கள் நீக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
"கடந்த சில ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் இல்லாத அக்கவுண்ட்களை நீக்க இருக்கிறோம். இதன் காரணமாக ஃபாலோயர்கள் எண்ணிக்கை குறைவதை கவனிக்க முடியும்," என்று எலான் மஸ்க் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்-இன் புதிய அறிவிப்பின் மூலம் டுவிட்டர் தளத்தில் பயனர்களின் ஃபாலோயர்கள் எண்ணிக்கை குறையும். பயனர்கள் தங்களது அக்கவுண்ட் நீக்கப்படாமல் இருக்க ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒரு முறை பயன்படுத்த வேண்டும் என்று டுவிட்டர் கொள்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நிர்வாகம் மற்றும் சப்போர்ட் குழுக்களை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
- பிப்ரவரி மாதத்தில் லின்க்டுஇன் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் லின்க்டுஇன் தளம் மக்கள் வேலை தேட உதவி வருகிறது. மற்றவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்க உதவும் லின்க்டுஇன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
இந்த முறை விற்பனை, நிர்வாகம் மற்றும் சப்போர்ட் குழுக்களை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். முன்னதாக பிப்ரவரி மாதத்தில் லின்க்டுஇன் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பணியமர்த்தும் குழுவை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

லின்க்டுஇன் நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த இரண்டு காலாண்டுகளாக வருவாய் அதிகரித்து வரும் நிலையிலும், லின்க்டுஇன் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையில் மும்முரம் காட்டி வருகிறது.
பணிநீக்க நடவடிக்கை மூலம் நிறுவனத்தின் நிர்வாக சீர்திருத்தம் செய்து, ஊழியர்கள் படிநிலையை குறைத்து அதிவேகமாக முடிவுகளை எடுக்க உதவும் என்று லின்க்டுஇன் தலைமை செயல் அதிகாரி ரியான் ரோஸ்லன்ஸ்கி தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்து இருக்கிறார், என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
லின்க்டுஇன் நிறுவனத்தில் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், பணிநீக்க நடவடிக்கை மூலம் பாதிக்கப்படுவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போன் இரண்டு விதமான மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் LCD, Full HD+ ஸ்கிரீன் உள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 11 மாடல் தற்போது தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
தற்போது விலை குறைப்பை தொடர்ந்து ரெட்மி 11 பிரைம் மாடல் ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கிறது. ரெட்மி 11 பிரைம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என்று இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.

சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூடுதலாக Mi ஸ்டோரில் ஐசிஐசிஐ வங்கி கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 1500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 1250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதலாக ரூ. 2500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போனை ரூ. 8 ஆயிரத்து 499 விலையிலேயே வாங்கிட முடியும்.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் LCD ஸ்கிரீன், Full HD+ ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், P2i கோட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இவைதவிர மெமரி கார்டு ஸ்லாட், ஐஆர் பிலாஸ்டர், 3.5mm ஹெட்போன் ஜாக், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13 வழங்கப்பட்டு இருக்கிறது.
- கூகுள் பிக்சல் டேப்லட் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
- அமேசான் ஸ்கிரீன்ஷாட்களின் படி பிக்சல் டேப்லட் மாடல் இரு நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
கூகுள் பிக்சல் டேப்லட் மாடல் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதே நிகழ்வில் பிக்சல் 7a, பிக்சல் ஃபோல்டு மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ் சார்ந்த அறிவிப்புகளும் வெளியாக இருக்கின்றன. கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற I/O 2022 நிகழ்வில் டேப்லட் மாடலின் டிசைன் விவரங்களை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து கூகுள் பிக்சல் டேப்லட் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. புதிய டேப்லட் விலை பற்றிய தகவல்கள் ரகசியமாக இருந்து வந்தது. புதிய டேப்லட் மாடல் ஆப்பிள், சாம்சங் மற்றும் பல்வேறு மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்த இருக்கிறது. இந்த நிலையில், கூகுள் பிக்சல் டேப்லட் விலை விவரங்கள் அமேசான் ஜப்பான் வலைதளத்தில் தவறுதலாக லீக் ஆகியுள்ளன.
அமேசான் வலைதள ஸ்கிரீன்ஷாட்களின் படி பிக்சல் டேப்லட் மாடல் ஜப்பான் நாட்டில் ஹசல் மற்றும் போர்சிலைன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இதன் விலை 79 ஆயிரத்து 800 யென்கள் இந்திய மதிப்பில் ரூ. 48 ஆயிரத்து 331 என்று நிர்ணயம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் பிக்சல் டேப்லட் மாடல் குறைந்த விலை பிரிவில் இருக்காது என்று தெரியவந்துள்ளது. அமேசான் வலைதள ஸ்கிரீன்ஷாட்டில் இந்த பிக்சல் டேப்லட் மாடல் ஜூன் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிக்சல் டேப்லட் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
10.9 இன்ச் 1600x2560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே
கூகுள் டென்சார் 2 சிப்செட்
8 ஜிபி ரேம்
128 ஜிபி, 256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ்
7000 எம்ஏஹெச் பேட்டரி
அமேசான் ஜப்பான் வலைதளத்தில் பிக்சல் டேப்லட் உடன் சார்ஜிங் ஸ்பீக்கர் டாக் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இது பிக்சல் டேப்லட்-ஐ ஸ்மார்ட் டிஸ்ப்ளேவாக மாற்றுகிறது. இதுபற்றிய விவரங்கள் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.






